மதுரையில், தினமலர் நாளிதழ், வேலம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி ஆகியவை இணைந்து, பிப். 14 ல் பிளஸ் 2 மாணவர்களுக்கான குவிஸ் போட்டியை நடத்த உள்ளன.
அறிவியல், விளையாட்டு, வரலாறு, கலை, கலாசாரம், பொழுதுபோக்கு பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். போட்டியில் ஒரு பள்ளியில் இருந்து மேல்நிலை வகுப்பு மாணவர்கள் 2 பேர் தலைமை ஆசிரியரிடம் சான்றிதழ் பெற்று கலந்து கொள்ளலாம். பங்கேற்க விரும்புவோர் அவரவர் பள்ளியில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
பங்கேற்கும் மாணவர்களுக்கு பயணப்படி கிடையாது. தொலைதூர மாணவர்கள் தங்க வசதி செய்து தரப்படும். போட்டியில் வெல்லும் மாணவர்களுக்கு முதல்பரிசு 10 ஆயிரம் ரூபாய், 2ம் பரிசு 7 ஆயிரம், 3ம் பரிசு 5 ஆயிரம் வழங்கப்படும். பள்ளிகளுக்கு கேடயம், பார்வையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
குவிஸ் போட்டிகளை திருச்சி ‘தி குவிஸ் சோசியேட்’ நிறுவனம் நடத்துகிறது. மேலும் விவரங்களுக்கு, ‘ஒருங்கிணைப்பாளர் பி.நெல்சன்ராஜா (98432 79083), எம்.ஜெயராஜ் (99432 06996) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை கல்லூரி தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம், முதல்வர் சுரேஷ்குமார் தெரிவித்தனர்.
செய்தி: http://www.kalvimalar.com/tamil/ScrollNewsDetails.asp?id=1207
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக