பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள பழைய சுற்றுச் சுவரை அகற்றாமல் அதன் மேல் கான்கிரீட் அமைத்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பணியை தடுத்து நிறுத் தினர்.
சுற்றுச்சுவர்
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் கட்ட ராஜஸ்தான் அரசு ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் இந்த மருத்துவமனையின் சுற்றுச் சுவர் நீண்ட காலமாக சீரமைக்கப்படாமல் மிகவும் மோசமாக இருந்து வந்தது.
அதைதொடர்ந்து பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உலக வங்கி நிதி உதவியுடன் தமிழக அரசு ரூ.29 லட்சத்து 75 ஆயிரம் செலவில் புதிய சுற்றுச்சுவர், ஆம்புலன்ஸ் நிறுத்துமிடம், பழைய கட்டிடத்தை புதுப்பித்தல் போன்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி இதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
பணி தடுத்து நிறுத்தம்
நேற்று (09.02.2009) காலை மருத்துவமனையை சுற்றி சுற்றுச்சுவர் கட்ட வேலை ஆட்கள் வந்தனர். அவர்கள் ஏற்கனவே இருந்த பழைய சுவரை அகற் றாமலேயே, அதன்மேல் கான்கிரீட் பெல்ட் அமைத்து சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதை அறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து, பழைய சுவரை இடிக்காமல் அதன் மேலேயே சுவர் எழுப்புகிறீர்களே என்று தட்டிக் கேட் டனர். இருப்பினும் அங்கு வேலை செய்த ஊழியர்கள் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பணி செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சுற்றுசுவர் அமைக்கும் வேலையை தடுத்து நிறுத்தினர். இதனால் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தி: http://www.dailythanthi.com/article.asp?NewsID=468083&disdate=2/10/2009&advt=2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக