இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் மாதந்திர செயற்குழு கூட்டம் நேற்று மாலை அசர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.
1. கடந்த ரமலான் மாதத்தில் ஜகாத், பித்ரா வசூல் மற்றும் விநியோகம் குறித்த வரவு செலவு அறிக்கையை ஜனாப் இலியாஸ் நானா அவர்கள் வாசித்து அளித்து குழுவின் ஒப்புதல் பெறப்பட்டது.
2. கடலூர் மாவட்ட ஜமாத்கள் ஒருங்கிணைப்பு கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டு இருப்பதை ஜமாஅத் தலைவர் விபரமாக தெரிவித்தார்.
3. இந்த ஜமாத்தின் செயல் காலம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்துடன் முடிவடைய இருப்பதால் அடுத்த மாதம் பொதுக்குழு கூட்டி (ஒரு அட்வகேட் மூலம்) பொதுக்குழுவில் வைத்து தேர்தல் நடைமுறைகளை தெளிவு படுத்த இருப்பதாக தலைவர் கூறினார்.
பிறகு பொது விஷயங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. ஜாமத்தில் இளைஜர்களை அதிக அளவில் சேர்பது குறித்து ஜனாப் ஹாஜி மௌலவி சாஹிப் வலியுறுத்த அதற்கு பதிலளித்த ஜமாஅத் தலைவர் நூற்றி என்பது செயற்குழு உறிப்பினர்களில் என்பது பேர் இளைஞர்கள் என்றும் அவர்களில் பலர் அழைக்கப்பட்டும் வருவது கிடையாது என்று தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட ஜமாத்கள் ஒருங்கிணைப்பு கமிட்டியின் நோக்கம் என்ன என்று உறுப்பினர் ஜனாப் கலிக்குஜ் ஜமான் அவர்கள் கேள்வி எழுப்ப முஸ்லிம்களின் பொருளாதாரம், மாற்று சசமுதாயதினருடனான பிரச்சனைகள் மற்றும் அரசு நலத்திட்டங்களை பாமர மக்களுக்கு கொண்டு செல்லும் பொது நோக்கங்கள் என்று ஜமாத்கள் ஒருங்கிணைப்பு கமிட்டியின் நோக்கம் பற்றி ஜமாஅத் தலைவர் விவரித்தார்.
கடலூர் மாவட்டம் மட்டுமல்லாமல் மாநிலம் முழுதுமே, ஒரு ஜமாஅத் எப்படி செயல்படவேண்டும் என்பதற்கு பரங்கிபேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தை சிறந்த உதாரணமாக அனைவரும் காட்டுவதை பெருமிதத்துடன் தலைவர் அவர்கள் குறிப்பிட்டார். பிறகு செயற்குழு உறுப்பினர்கள் ஏற்புடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
திங்கள், 10 நவம்பர், 2008
ஞாயிறு, 9 நவம்பர், 2008
வருங்கால மருத்துவரை வாழ்த்துவோம்
கலைகழகம் நடத்திய கிராம அளவிலான போட்டிகளில், பேச்சு போட்டியில் முதலிடம் பிடித்த நமது பரங்கிபேட்டை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவி ஹபீபா ஜுலைக்கா ஜமாலுதீன் அவர்கள், சிதம்பரத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியிலும் முதல் பரிசை வென்றார். பள்ளியில் நடைபெறும் அனைத்து தேர்வு மற்றும் போட்டியிலும் (தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு போட்டி\ கட்டுரை போட்டி) பெரும்பாலும் முதலிடம் பிடிக்கும் இந்த மாணவி, பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்விலும் பள்ளி முதல் மாணவியாக வந்து நமது ஜமாஅத் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கைகளால் சிறப்பு பரிசு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்விலும் மாநிலத்திலேயே முதலிடம் பெற முயற்சித்து வருகிறேன் என்று நம்பிக்கையுடன் சொல்லும் இந்த சகோதரி ஒரு டாக்டர் ஆகி தன் சமூகத்திற்கு சேவை புரிவதை தனது லட்சியக்கனவாக கொண்டுள்ளார். (இன்ஷா அல்லாஹ்).கல்வி குழு சார்பாக நாம் பேட்டி எடுத்த எத்தனையோ சகோதரிகளிடம் மேற்கொண்டு படிக்கும் ஆர்வத்தையே அரிதாக நாம் காணும் நிலையில் இத்தனை உயர்ந்த லட்சியம் கொண்டு இயங்கும் இந்த சகோதரியின் பின்புலம் தான் என்ன என்று பார்க்க போனால் ..... அந்த சகோதரியை முழு அளவில் ஊக்கப்படுத்தி அவருக்காக தியாகங்கள் பல புரிந்து கனவு காணும் அவரின் அன்பு பெற்றோர்கள் தான்.
இவருக்காக நாம் செய்ய வேண்டியது அவரின் கனவு லட்சியத்திற்கு (சமுதாயத்தின் லட்சியமும் அதுதான்) நமது மதிப்பு மிக்க பிரார்த்தனைகளும் நல் வாழ்த்துக்களும் தான் இன்ஷா அல்லாஹ் .
செய்வோமா?
இறப்புச் செய்தி.
காஜியார் தெருவில் மர்ஹூம் முஹம்மது அலி அவர்களின் மகனாரும், மர்ஹூம் M.G.கவுஸ்மியான் அவர்களின் மருமகனாரும், முஹம்மது நெய்னா (சேட்டு), நிசார் அஹம்மது ஆகியோரின் தகப்பனாருமாகிய அஹம்மது ஹுசைன் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
சற்று முன் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் பரங்கிப்பேட்டை அளவில் பள்ளிகளின் தேர்ச்சி விவரம் சதவிகிதத்தில்: சேவாமந்திர் பள்ளி...