வியாழன், 19 பிப்ரவரி, 2009

IAS ஏழை முஸ்லிம்களுக்கு இலவசபயிற்சி!

பொருளாதார வசதியற்ற, படிப்பில் தகுதி பெற்ற முஸ்லிம் மாணவர்கள் ஐ.ஏ.எஸ். (IAS), ஐ.பி.எஸ். (IPS), ஐ.எஃப்.எஸ். (IFS) போன்ற தேர்வுகளை எழுதி வெற்றிபெற சென்னையில் இலவச தங்குமிடம், உணவு மற்றும் சிறந்த பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளித்து உதவ தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் முன்வந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சே.மு. முஹம்மதலி வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது-

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஆர்வமுடைய முஸ்லிம் மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ். (IAS), ஐ.பி.எஸ். (IPS), ஐ.எஃப்.எஸ். (IFS) போன்ற தேர்வுகளை எழுதி வெற்றிபெற வழிகாட்டும் வகையில் இத்திட்டத்தினை துவக்கியுள்ளோம்.

இத்திட்டத்தின் கீழ் ஐ.ஏ.எஸ். முதல் நிலைத் தேர்வு எழுத இருப்பவர்கள் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வுக்குத் தயார் செய்து கொண்டிருப்பவர்கள் பயன் பெறலாம்.

விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் நேர்காணல் செய்து, தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக் கப்படும் மாணவர்களுக்கு சென்னையில் தங்குமிடம், உணவு, சிறந்த மையத்தின் மூலம் பயிற்சி, நூலக வசதி முதலியன முற்றிலும் இலவசமாக செய்து தரப்படும்.

ஆர்வமுள்ள மாணவர்கள் எஸ்.எஸ்.எல்சி., (10-ம் வகுப்பு), பிளஸ் 2, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு முதலான மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களோடும், ஜமாஅத் தலைவர் சான்றிதழோடும் சுய விவரக் குறிப்பினை உடனடியாக அனுப்பி விண்ணப் பிக்கலாம்.

முகவரி:
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்,
118/13, வேப்பேரி நெடுஞ்சாலை,
பெரியமேடு,
சென்னை - 3.
அலைபேசி (பொதுச் செயலாளர்): 9444165153

நன்றி :
தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலைத்தளம் - http://www.muslimleaguetn.com/news.asp?id=640

புதன், 18 பிப்ரவரி, 2009

இறப்புச் செய்தி

ரேவ் மெயின் ரோடு தோனித்துறை மர்ஹூம்.முஹம்மது கெளஸ் அவர்களின் மனைவியும்,மர்ஹூம். இப்றாஹிம் மரைக்காயர் அவர்களின் தாயாரும், ஜனாப். Y.அஜிஸ்மியான்(முன்னால் தாசில்தார்)அவர்களின் மாமியாரும், யூசுப் அலி,முஹம்மது கெளஸ், இவர்களின் பாட்டியாருமாகிய

செய்யது பீவி அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள் இன்ஷா அல்லா இவர்களின் நல்லடக்கம் இன்று மாலை 4.00,மணிக்கு மீராப்பள்ளியில்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

திங்கள், 16 பிப்ரவரி, 2009

மருத்துவ சேவைகளில் கவனம்!


ஜமாஅத் தலைவருக்கான தேர்தலில் வெற்றியை நழுவவிட்ட ஆப்பிள் சின்னத்தின் வேட்பாளர் டாக்டர் நூர் முஹம்மது 785 வாக்குகள் பெற்றார். இது குறித்து அவரிடம் நாம் கேட்ட போது, நான் வெற்றிப் பெற்றிருந்தால் சமுதாயப் பணிகளுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுத்து சேவை செய்வேன் என்கிற நிலையிருந்து மருத்துவ சேவைகளில் இன்னும் அதிகம் கவனம் செலுத்துவேன் என்று கூறியதோடு தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியினை தெரிவித்தார்.


மேலதிகமாக பரங்கிப்பேட்டை கூகிள் குழுமத்திற்கு அளித்த டெலிபோன் பேட்டியை வாசகர்களின் பார்வைக்காக கீழே:....


தேர்தல் முடிவு குறித்து உங்கள் கருத்து?

குறைந்த அளவு ஓட்டுகளே கிடைக்கும் என்று பலர் எதிர்பார்த்த நிலையில் கிட்டத்தட்ட 800 ஓட்டுகள் கிடைத்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். பெண்களுக்கும் ஓட்டுரிமை இருந்திருந்தால் நான் வெற்றிப் பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்திருக்கும்.

டாக்டர் நூர் முஹம்மத் அவர்களின் ஆலோசனையையும் பெற்று ஜமாஅத்தை நடத்துவேன் என்று யூனுஸ்நானா தனது நன்றியுரையில் கூறியுள்ளாரே?

அது அவரது பெருந்தன்மையின் அடையாளம்.

பெண்களுக்கு ஓட்டுரிமை பற்றி குறிப்பிட்டதால் ஒரு கேள்வி. சமீபத்தில் பெண்களுக்கான ஒரு அமைப்பு என்ற தகவல் குழுமத்தில் வைக்கப்பட்டதே..அது குறித்து...?

அந்த அமைப்பில் எனக்கு உடன்பாடில்லை. அது முழுக்க யூனுஸுக்கு எதிராக துவங்கப்பட்டது போன்றுதான் தெரிகின்றது. வெறும் அரசியல் அவ்வளவுதான்.

NRIகளுக்கு கருத்து சொல்ல விரும்புகிறீர்களா?

வெளிநாட்டு பரங்கிப்பேட்டை மக்களுக்கு (முஸ்லிம்களுக்கு) ஓட்டுரிமை வழங்கப்பட வேண்டும்.