ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

இறப்பு செய்தி

டில்லி சாஹிப் தர்காவில் M.I. முஹம்மது கவுஸ் அவர்களின் மாமனாரும், முஹம்மது அலி, முஹம்மது சேட்டு இவர்களின் பாட்டனாருமாகிய ஹைதர் அலி அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இன்ஷா அல்லாஹ் இன்று (27.09.2009 - ஞாயிறு) மாலை 6 மணிக்கு நல்லடக்கம் கிலுர் நபி பள்ளியில்.

தகவல்: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்

இன்று உலக இருதய தினம் - இதயம் காப்போம்


உணவு கலப்பட தடுப்பு அதிகாரிகள் பரங்கிப்பேட்டையில் திடீர் ஆய்வு!



Source: Dinamalar - Photo: Daily Thanthi

தமிழக அரசின் வேலைவாய்ப்பு முகாம்

வியாழன், 24 செப்டம்பர், 2009

பரங்கிப்பேட்டையில் அனுமதியின்றி பெட்ரோல் விற்ற மூன்று பேர் கைது

Source: Dinamalar

பரங்கிப்பேட்டையில் சுனாமி குடியிருப்பு



Source: Dinamalar

ஐக்கிய ஜமாஅத் சார்பில் ஏழைகளுக்கு பொருட்கள்

Source: Dinamalar

புதன், 23 செப்டம்பர், 2009

அரசு வேலை வாய்ப்பு

பரங்கிப்பேட்டை அருகே வாகனம் மோதி தொழிலாளி சாவு

கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பிதழ் வடிவமைக்கும் போட்டி

மேல் நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கான வினாடி வினா போட்டி

செவ்வாய், 22 செப்டம்பர், 2009

பரங்கிப்பேட்டை அருகே பூட்டிய வீட்டில் நகைகள் திருட்டு

காலி சாக்குகள் டெண்டர் மற்றும் பொது ஏல அறிவிப்பு

ரோட்டரி சங்கங்களின் மண்டல கூட்டம்

பரங்கிப்பேட்டை அண்ணமாலை பல்கலைக்கழக ஊழியருக்கு நூலக புரவலர் விருது



Source: Dinamalar

திங்கள், 21 செப்டம்பர், 2009

யாருக்குப் பெருநாள்?

நன்றி: K-Tic பிறை செய்தி மடல், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

சிங்கை பரங்கியர்களின் பெருநாள் தொழுகை சந்திப்பு




இன்று (20.09.2009) காலை 8.30 மணிக்கு சிங்கபூர், மஸ்ஜித் அப்துல் கபூர், மஸ்ஜித் பென்கூலன், மற்றும் மஸ்ஜித் சூலியா பள்ளி வாயில்களில் நோன்பு பெருநாள் தொழகை வெகு சிறப்பாக நடை பெற்றது.

தொழுகைக்கு பிறகு நமதூர் சகோதரர்கள் அனைவரும் சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

மேலும், சிங்கை வாழ் பரங்கியர்களின் சார்பாக, உலகெங்கும் வாழும் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் மற்றும் அனைத்து முஸ்லிம்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

தகவல்: தாரிக், சிங்கபூர்.

புதன், 16 செப்டம்பர், 2009

நெய்வேலி NLCயில் தொழிற்பயிற்சி பெற ஓர் அறிய வாய்ப்பு

வேலை தேடி சென்ற பரங்கிப்பேட்டை வாலிபர் சென்னையில் மரணம்



சென்னை:

பரங்கிப்பேட்டை பண்டக சாலையை சேர்ந்தவர் சமீம் அஹமது (த.பெ.: மர்ஹூம் மாலிக் அஹமது) வயது சுமார் 38.

இவர் கடந்த 15 நாட்களாக சென்னையில் வேலை தேடி திரிந்த நிலையில் கடந்த வெள்ளி கிழமை அன்று அதிகாலையில் ஃபஜர் தொழுகை நேரத்தில் மண்ணடி, செம்புதாஸ் தெரு பள்ளிவாசல் வெளியில் உட்கார்ந்த நிலையில் மரணம் அடைந்துள்ளார்.

பி.காம் பட்டதாரியான இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கத்தார் நாட்டில் வேலை பார்த்திருக்கிறார். அங்கு ஏற்பட்ட பழக்கத்தில் இலங்கையை சார்ந்த ஒரு பெண்ணை இங்கு அழைத்து வந்து திருமணம் செய்து நல்ல முறையில் வாழ்க்கை நடத்தி வந்த நிலையில் இவருடைய தாயார் இறப்பிற்கு பிறகு மன-உளைச்சல் ஏற்பட்டு அதனை தொடர்ந்து வாத நோயால் பாதிக்கப்பட்டு முழு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார்.

இருந்தும் மன-உளைச்சல் காரணமாக மனைவியுடன் ஏற்பட்ட கசப்புணர்வு சந்தேகமாக மாறியதால் தனது இரு பிள்ளைகளுடன் இவரது மனைவி இலங்கைக்கு திரும்பி விட்டார்.

இதனால் மேலும் மனஉளைச்சலுக்கு ஆளாகிவிட்ட இவர் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு தனது உறவினர் மூலம் தனது மனைவி-பிள்ளைகளை மீண்டும் என்னிடம் திரும்பி வந்துவிடச் சொல்லுங்கள், வேலைக்கு சென்று ஒழுங்காக கவனித்து கொள்கிறேன் என்று முறையிட்டுள்ளார். ஆனால் யாரும் சரியான முயற்சி எடுக்காத நிலையில் சென்னைக்கு வேலை தேடி சென்றுள்ளார்.

மண்ணடி செம்புதாஸ் தெருவில் பள்ளிவாசலுக்கு வெளியில் பிளாட்பாரம் போன்ற ஒரு இடத்தில் தங்கி வந்திருக்கிறார். கடந்த வாரம் வியாழன் மாலை சற்று பலவீனமாக இருந்துள்ளதை அஸர் தொழுகையில் சிலர் பார்த்துள்ளனர். அன்று நோன்பு பிடித்திருந்ததாகவும் சிலர் கூறினர்.

இந்நிலையில் மறுநாள் காலை வெள்ளி பஜர் தொழுகை சமயத்தில் உட்கார்ந்த நிலையில் மரணம் அடைந்துள்ளார். தொழுகைக்கு வந்தவர்கள் இதனை பள்ளி நிர்வாகத்திற்கு உடனடியாக தெரிவித்து பரிசோதத்தில் இவருடைய பாஸ்போர்ட் காப்பி மற்று சான்றிதழ்கள் வைத்து இவர் பரங்கிப்பேட்டையை சார்ந்தவர் என்று அறிந்து, உடன் மண்ணடி பகுதியில் தங்கியிருந்த பரங்கிப்பேட்டை சகோதரர்களை தொடர்பு கொண்டு முறையாக உறுதி செய்யப்பட்டது.

அடையாளம் காட்டிய இந்த ஒரு சில சகோதரர்கள் இவரது உறவினருக்கு தெரிவித்ததுடன் ஜமாஅத் தலைவருக்கும் தகவல் அளித்தனர். பின்னர் பள்ளியில் குளுப்பாட்டி-சுத்தம் செய்து கபன் ஆடை அணிவித்து மருத்துவ சான்றிதழ் பெற்று அவசர ஊர்தியில் எடுத்து பரங்கிப்பேட்டை அண்ணா நகரில் வசிக்கும் இவரது மூத்த சகோதரர் நிசார் மற்றும் மைத்துனர் இல்யாஸ் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

பின்பு ஒரு சில மணிநேரத்திற்கு பின், மீராப்பள்ளியில் மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

வாசகர் வட்டம் சார்பில் கவிதை போட்டி

சிறந்த பேச்சாளராக விருப்பமா?

காஸ் சிலிண்டர் திருடியவர் கைது


Source: Dinamalar

சந்தேகத்திற்கிடமாக கார் நின்றதால் பரபரப்பு

Source: Dinamalar

சனி, 12 செப்டம்பர், 2009

தமிழ்நாடு அரசு மின்கம்பி உதவியாளர் தகுதிகாண் தேர்வு

சீர்பெறும் நீர்நிலை - செய்தியும் கோணமும்

வழக்கம் போல ஆக்கப்பணியில் மீராப்பள்ளி.
ஒழுங்காக பராமரிக்கப்படும் ஊரின் ஒன்றிரண்டு பொதுக்குளங்களில் முக்கியமானதான ஜாமியா மஸ்ஜித் மீராபள்ளியின் குளம் கடந்த பெருமழையின் போது கரை சரிந்து பொலிவிழந்து இருந்தது. தற்போது அந்த கரை ஓரம் உறுதியான செமெண்ட் காரைகள் கொண்டு பலப்படுத்தி கட்டப்பட்டு வருகிறது எனும் செய்தி, ஊரின் இயற்க்கை மற்றும் சூழல் வளங்கள் குறித்த அக்கறை கொண்டவர்களின் வயிற்றில் பால் வார்த்து உள்ளது.

கடந்த சில தசாப்தங்களாக பெருகிவரும் சிமென்ட் காடுகளினால் உள்ளூரின் மரங்களுக்கு மூச்சு முட்டுகிறதோ இல்லையோ, இயற்க்கை ஆர்வலர்களை நிச்சயம் கவலை கொள்ள செய்கிறது. நமது முன்னோர்கள் மிகுந்த பிரயாசையுடனும், வருங்கால சந்ததியினரின் வளவாழ்வினை கருத்தில் கொண்டும் ஏற்படுத்திவிட்டு சென்ற குளம், கிணறு, வாய்க்கால்கள் போன்ற நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு, தூர்ந்து போகச்செய்தல் என்று கண்மன் பாராமல் அழித்துவரும் நமது பொறுப்பற்ற செயலால் வெள்ளம் வறட்சி என்று அல்லல்படுகிறோம்.

இந்நிலையில் ஊரில் மீதி உள்ள பள்ளிவாயில் மற்றும் கோயில் குளம்களையாவது தூர் வாரி, ஊரின் நீர்நிலை அளவுகோலான குளங்களை காப்பாற்ற மக்களிடம் பொதுக்கருத்து உருவாகிட வேண்டும் என்பது இவர்களின் அவா.

ரெட் கிராஸ் மருத்துவ முகாம்



இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளை, கெனடியன் ரெட்க்ராஸ் உறுதுணையுடன் நடத்திய மருத்துவ முகாம் இன்று காலை ஒரு மணி வரை சலங்குகாரத்தெரு டாடா கம்யுனிட்டி ஹாலில் நடைபெற்றது. இதனை கடலூர் மாவட்ட ஐ.ஆர். சி. எஸ் கிளை ஒருங்கிணைத்து நடத்தியது. பொதுமக்கள் பலர் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. ரெட் கிராஸ் உள்ளூர் ஒருங்கிணப்பாளர் சுபாஷ் அவர்கள் நம்மிடம் ரெட் கிராஸ் செய்து வரும் மக்கள் நலப்பணிகள் குறித்து பகிர்ந்து கொண்டார். தற்போது தாய் செய் நலப்பணிகளை பிரதான நோக்கமாக கொண்டு ஒரு ப்ராஜக்ட் ஒன்றை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

வியாழன், 10 செப்டம்பர், 2009

கடலூரில் ஹாக்கி போட்டி

கடலூரில் அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி

சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசின் உதவி தொகைக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...