திங்கள், 28 ஜனவரி, 2008

விழுப்புரம்-திருச்சி அகலப்பாதை இரயில்பாதை பரங்கிப்பேட்டை வரை நிறைவுப்பெற்றுள்ளது ஆனால...?


விழுப்புரம்-திருச்சியிடைலான மீட்டர் கேஜ் அகற்றப்பட்டு பிராட்கேஜ் எனப்படும் அகலஇரயில்பாதை அமைக்கும் பணி விழுப்புரத்திலிருந்து துவங்கப்பட்டு தற்போது பரங்கிப்பேட்டை வரை நிறைவுப்பெற்றுள்ளது.
பாதை பரங்கிப்பேட்டை வரை போடப்படடும், பரங்கிப்பேட்டையில் இரயில் நிலையம் அமையுமா? அல்லது வெறும் சிக்னல் ஸ்டேசன்தானா? என்பது ஆரம்ப நிலையிலிருந்தே குழப்பம் நிறைந்ததாகவும் கேள்விகுறியாகவும் இருந்து வருகிறது. சில தரப்பிலிருந்து ஏற்கனவே இதை மறுத்து பரங்கிப்பேட்டையில் இரயில் நிலையம் அமையும் என்று விளக்கம் அளித்திருந்தாலும் அதற்காக எந்த ஆயத்தப்பணியும் நடைபெறுவதாக தெரியவில்லை. விரைவில் சம்பந்தப்ட்ட நிர்வாகத்திடமும் ஜமஅத், பேரூராட்சியிடமும் வலைப்பூ சார்பாக பேட்டி கண்டு முழு விபரத்தினை வெளியிட உள்ளோம்.

தடைகளைத் தாண்டி திட்டப்பணிகளில் மீராப்பள்ளி கபரஸ்தான்

தடைகளைத் தாண்டி திட்டப்பணிகளில் மீராப்பள்ளி கபரஸ்தான்.
அனைத்து பேரூராட்சி - அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மீராப்பள்ளியின் கபரஸ்தான் மேம்படுத்துதல் மற்றும் மின்விளக்குகள் அமைத்தல் என்கிற திட்டப்பணி தொடங்கியதுப்பற்றி ஜனவரி 8 அன்று வலைப்பூவில் குறிப்பிட்டிருந்தோம். அதன்பிற்கு ஆரம்ப பணி சிலரின் சூழ்ச்சியால் தடைப்பட்டு நின்றது. இந்த தடையை ஏற்படுத்த நினைத்தவர்கள் கோர்ட் வரை சென்று ஸ்டே கேட்டு மனு செய்திருந்தனர். ஆனால் அந்த ஸ்டே மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இதன் விளைவாக தற்போது இத்திட்டப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
படம்: காஜியார் தெரு, காஜியார் சந்தின் கேட்லிருந்து பாதை போடும் பணி

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்திற்கு நன்றி!

ஜனவரி 8, 2008 அன்று வலைப்பூவில் குறிப்பிட்டு எழுதியிருந்த 'நிறைய வசதிகளுடனும் நிறைவான கட்டிடங்களுடனும் பாதுகாப்பு சூழலற்ற அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி' என்கிற செய்தி இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டதின் விளைவாக, தற்போது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இது குறித்து ஜமாஅத் தனது முழுமுயற்சியுடன் அரசின் பார்வைக்கு எடுத்து சென்றும் இதற்கான நிதி ஒதுக்கும் ஆதாரம், திட்டம் எதுவும் இல்லாததினால் ஜமாஅத்தே இதை கையில் எடுத்து தற்போது தீர்வு கண்டுள்ளது. இதன்படி, பள்ளியின் உட்புறம் தெரியாதவாறு நுழைவு (கிரில்) கேட்டில்; அடைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான முழு செலவினை பரங்கிப்பேட்டை லயன்ஸ் கிளப் ஏற்றது. மேலும் பள்ளியின் வகுப்பறைகள் தெரியதாவறு தற்போதைய காம்பவுண்ட் சுவரினை உயரப்படுத்திதர சகோ. ஹபீபுர்ரஹ்மான் (ஹபீபிய்யா) ஒப்புக்கொண்டுள்ளார். இந்தப் பணி ஓரிரு நாட்களில் துவங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நற்பணிகளுக்காக முயற்சி எடுத்த ஜமாஅத்திற்கும், சகோ. ஹபீபுர்ரஹ்மானுக்கும், லயன்ஸ் கிளப்பிற்கும் பரங்கிப்பேட்டை மக்கள் சார்பாக இவ்வலைப்பூ நன்றிகளைத் தெரிவிக்கிறது.

சனி, 26 ஜனவரி, 2008

உழைக்கும் மைந்தர்கள்

அரேபியாவில் உப்புத் தொழில் செய்யும் பரங்கிப்பேட்டை சகோதரர்களைப் பேட்டிக் கண்டுள்ளோம். அதன் வீடியோ தொகுப்பு.

அரேபிய வாழ்க்கை சொல்லும் பாடம்


செவ்வாய், 22 ஜனவரி, 2008

சென்னையில் நடைபெற்ற PEACE மாநாடுபற்றி பரங்கிப்பேட்டை கல்விக்குழு தலைவர் பேட்டி


சென்னையில் நடைபெற்ற உலகலாவிய இஸ்லாமிய மாநாடு பற்றி அதில் கலந்து கொண்ட பரங்கிப்பேட்டை கல்விக்குழு தலைவர் பேட்டி

மாநாடு எப்படி இருந்தது?

மிகச்சிறப்பாக இருந்தது மாநாட்டு ஏற்பாடுகள், பேச்சாளர்கள், கலந்து கொண்ட மக்கள் கண்காட்சிகள், கலந்துரையாடல்கள், அனைத்தும் நிறைவாகவும் பெருமிதம் கொள்ளதக்க வகையிலும் இருந்தன.

மாநாட்டின் சிறப்பம்சமாக நீங்கள் கருதுவது...?

சமுதாயத்தில் இன்றைய நிலையில், இது போன்ற மாநாடு உணர்த்தும் கொள்கைகள் தாண்டிய சகோதரத்துவ ஒற்றுமை, பல்வேறு கொள்கைகள் சார்ந்த சகோதரர்கள், மூஃமின் என்ற அடிப்படையில் தங்கள் முகமூடிகளை கழற்றிவிட்டு அங்கு தேடலாக அலைந்தது நல்லவிஷயம். இதைதவிர அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சூடான் போன்ற நாடுகளிலிருந்து வந்திருந்த அறிஞர்கள் நடத்திய இஸ்லாமிய வகுப்புக்களும், பயிற்சி வகுப்புகளை(Workshop)யும் சொல்லலாம்.

பரங்கிப்பேட்டையிருந்து எத்தனை பேர் வந்தனர்?

தனிப்பட்ட முறையில் சகோதரர்கள் பலரும், அல்ஹஸனாத் மகளிர் கல்லூரி, மாணவிகளும் இதில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் பள்ளிவாசல் தோறும் அறிவிப்பு செய்யப்பட்டும், விளம்பரங்கள் செய்யப்பட்டும் பிரயோஜனமிக்க விஷயங்களில் கலந்துகொள்வது என்பது நமதூரிpல் இன்னும் பழக்கமாகவில்லை என்பதை குறையாக அல்லாமல் ஆதங்கமாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அருகில் நெய்வேலியில் புத்தக கண்காட்சி, கடலுரர் சிதம்பரம் போன்ற நகரங்;களி;ல் பல விழிப்புணர்வு கருத்தரங்கங்கள், ஏன் தற்போது சென்னை புத்தக கண்காட்சியில் கூட நாங்கள் கவனித்த வரை பெரிய அளவிளான பரங்கிமாமக்களின் பங்கேற்பு இல்லை என்பது வருத்தம்தான். இந்த மனப்போக்கை வரும் இளைய சமுதாயத்தினரிடம் மாற்ற கல்விகுழு இன்ஷh அல்லாஹ் முயலும். துஆ செய்யவும் கோருகிறோம்.

திங்கள், 21 ஜனவரி, 2008

அகலமாகிறது பரங்கிப்பேட்டை - புதுச்சத்திரம் நெடுஞ்சாலை


அகலமாகிறது பரங்கிப்பேட்டை - புதுச்சத்திரம் நெடுஞ்சாலை.
பெரியமதகிலிருருந்து புதுச்சத்திரம் வரையிலான 6 கி.மீ தூரமுள்ள நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இப்பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு மழை காரணமாக தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் தொடடரப்பட்டு 75 சதவீதத்தை தாண்டி வேகமாக நடைப்பெற்று வரும் இந்நெடுஞ்சாலைப் பணி விரைவில் முழுமடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நெடுஞ்சாலையில் முத்து நாடார் தோப்பு அருகே இருந்த சிறிய பாலம் ஒன்று மிக மோசமாக பழுதடைந்திருந்தது. இந்த நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிக்காக பழைய பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலமும் போடப்பட்டுவிட்டது.
இதே போன்று பரங்கிப்பேட்டை - முட்லூர் சாலையும் விரைவில் சரிசெய்யப்பட்டு புதிய சாலை போடும் பணி தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது தெரிகிறது. இப்பணி ஆரம்பித்தால் மட்டுமே, மிக மோசமான நிலையில் இருக்கும் பெரியத்தெருவின் சாலையும் சீரமையும்.

திங்கள், 14 ஜனவரி, 2008

கச்சேரி தெருவில்... பிளாட்ஃபார்முடன் புதிய தார் சாலை பணி ஆரம்பம்.


கச்சேரி தெருவில்... பிளாட்ஃபார்முடன் புதிய தார் சாலை பணி ஆரம்பம். பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவில் புதிய தார் சாலை போட்டு இரு ஓரங்களிலும் நடைபாதை (பிளாட்ஃபார்ம்) அமைக்க பேரூராட்சி திட்டத்தின் கீழ் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிளாட்ஃபார்ம் அமையப்பெறுவதற்காக ஏற்கனவே சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டன. தற்போது சாலை சற்று விரிவாக்கப்பட்டு புதிய தார் சாலை போடும் வேலை இன்று (14-01-2008) துவங்கிவிட்டது. இந்த வேலை நிறைவேறிய பிறகு கச்சேரி தெரு நிச்சயமாக எழில் பெறும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாது.

புதன், 9 ஜனவரி, 2008

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பயன்பெறும் மீராப்பள்ளி கபர்ஸ்தான்.


அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பயன்பெறும் மீராப்பள்ளி கபர்ஸ்தான்.
அனைத்து பேரூராட்சி - அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் மீராப்பள்ளி மயானம் (கபர்ஸ்தான்) மேம்படுத்துதல் மற்றும் மின் விளக்குகள் அமைத்தல் திட்டம் கடந்த அக்டோபர் மாதம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு தற்போது திட்டப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மதிப்பீடு ரூ. 1.75 லட்சம் ஆகும். இத்திட்டம் 45 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். எனவே இன்ஷாஅல்லாஹ் மார்ச் மாத இறுதிக்குள் இத்திட்டம் முழுமையடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் கிடைக்க பேரூராட்சி தலைவர் திரு. யூனுஸ் மற்றும் மீராப்பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்பும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

நிறைய வசதிகளுடனும் நிறைவான கட்டிடங்களுடனும் பாதுகாப்பு சூழலற்ற அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி!


நிறைய வசதிகளுடனும் நிறைவான கட்டிடங்களுடனும் பாதுகாப்பு சூழலற்ற அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி!
கடந்த ஆண்டு வரை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக இருந்த இடத்தில் இராஜஸ்தான் அரசு நிதியுதவியுடன் விரிவுப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தயார் நிலையில் உள்ளது. நிறைய வசதிகளுடனும் நிறைவான கட்டிடங்களுடனும் இப்பள்ளி அமையப் பெற்றிருந்தாலும் பாதுகாப்பு சூழல் இல்லாததாகவே உள்ளது.
பள்ளியைச் சுற்றி அமைந்துள்ள மதில் சுவர் பழைய நிலையிலேயே குட்டி சுவராகவே உள்ளது. இரு அடுக்குகளாக பள்ளி அமையப் பெற்றிருப்பதால் பள்ளியறைகள் அப்படியே வெட்ட வெளிச்சமாய் தெரிகிறது. இது மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலாகவே அமைந்துள்ளது. முக்கியமாக முஸ்லிம் மாணவிகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இப்புதிய பள்ளிக்கு வகுப்புகள் மாறுவதற்கு முன்பே பள்ளி நிர்வாகம், பேரூராட்சி மன்றம் மற்றும் ஜமாஅத் போன்ற அமைப்புகள் இதனை அக்கறை கொண்டு உடனடியாக அரசின் பார்வைக்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அனைவரின் விருப்பமாக உள்ளது.

செவ்வாய், 8 ஜனவரி, 2008

பரங்கிமாநகர் மக்களின் கனவு வெள்ளாற்றுப் பாலம் திட்டப் பணிகள் தொடங்கிவிட்டது.



பரங்கிமாநகர் மக்களின் கனவு வெள்ளாற்றுப் பாலம் திட்டப் பணிகள் தொடங்கிவிட்டது.
பரங்கிப்பேட்டை-கிள்ளையிடையே அமைந்துள்ள வெள்ளாற்றின் குறுக்கே பாலம் அமைய வேண்டும் பல ஆண்டுகளாக பொது மக்களும், பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வந்ததின் பலனாக தற்போது திட்டநிதி ஒதுக்கப்பட்டு திட்டப் பணிகள் தொடங்கியும் விட்டது.
இத்திட்டத்தின் பலனாக பாலம் அமையப்பட்டவுடன் இனி பரங்கிப்பேட்டை-சிதம்பரத்திற்கு 14 கி.மீ பயண தொலைவாக சாலைப் பயணம் அமையப்பெறும். இதன் மூலமாக பரங்கிப்பேட்டை, கிள்ளை மக்கள் பயனடைவது மட்டுமின்றி, ஊரின் வர்த்தகமும் முன்னேற்றமடையும் என்பதில் எவருக்கும் மாற்று கருத்து கிடையாது

மீராப்பள்ளி குளம் அதன் முழு கொள்ளளவை எட்டியது.

மீராப்பள்ளி குளம் அதன் முழு கொள்ளளவை எட்டியது.

ஊரில் கடந்த வாரம் வரை பெய்த பருவமழை காரமாக மீராப்பள்ளி குளம் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் தற்போது சிறுவர்கள் முதற்கொண்டு குளத்தில் குளிக்க நிறைய பேர் வருகின்றனர்.

நீச்சல் தெரிந்த சிறுவர்கள் தங்களின் திறமையை காண்பிக்க மீராப்பள்ளியின் கழிப்பறை கட்டிடத்தின்மீதேறி டைவ் ஷாட் நிகழ்ச்சியை அடிக்கடி நடத்துவதால் வழக்கம்போல் ஒரு சில நிர்வாகிகளின் குரல் அவ்வப்போது வலுக்கும். அதையெல்லாம் நம்ம பசங்க கண்டுகொள்வார்களா என்ன?

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...