புதன், 9 ஜூலை, 2008
இறப்புச் செய்தி
ஆரியநாட்டு சலங்குகாரத் தெருவில், மர்ஹும் இஸாக் மரைக்காயர் அவர்களின் மகனாரும், பாபு என்கிற ஷாகுல் ஹமீத், பக்ருத்தீன் ஆகியோரின் தகப்பனாருமான ஜமாலுத்தீன் மரைக்காயர் இன்று காலை மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்ஷாஅல்லாஹ் நாளை காலை 9 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.
செவ்வாய், 8 ஜூலை, 2008
சாலைப் பணி முடக்கம்: பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதி.
எந்த ஆட்சிக் காலத்திலும் சபிக்கப்பட்ட சாலையாக பரங்கிப்பேட்டையில் மிக மோசமாக விளங்குவது பெரியத் தெரு நெடுஞ்சாலையே. இதன் விடிவெள்ளியாக தற்போது ஆலப்பாக்கத்திலிருந்து மெயின் ரோடு வரை புதிய சாலைப் போடும் பணிகள் ஓரளவு துவங்கியிருப்பது ஆறுதல் அளிக்கிறது. அதே வேளையில் பெரியத் தெருவில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் கால்வாய் போடும் திட்டத்திற்காக சாலையின் இரு ஓரங்களிலும் பள்ளம் வெட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும், மோசமான நிலை காரணமாகவும் இந்த சாலை வழியாக செல்லும் பேருந்துகள் நகுதா மரைக்காயர் தெரு வழியாக திருப்பப்படுகிறது.
ஆனால் ஒரு சில பேருந்துகள் (அதுவும் சில நேரங்களில்) மட்டுமே வாத்தியாப்பள்ளி, புதுகுப்பம் வரை நகுதா மரைக்காயர் தெரு வழியாக சென்று வருகிறது. பெரும்பாலான பேருந்துகள் பெரியத் தெரு முனையிலேயே திரும்பி விடுகின்றன. இதன் காரணத்தால் பொதுமக்கள் மட்டுமின்றி மாணவ-மாணவிகள் குறிப்பாக வெளியூர் சென்று பயிலும் மாணவர்கள் பெரும் அவதிகுள்ளாகி நிற்கின்றனர். வாத்தியாப்பள்ளி பகுதி மற்றும் சலங்குகாரத்தெரு பகுதி மாணவர்கள் இதனால் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஒரு டவுன் பஸ் திருப்பப்பட்டு நகுதாமரைக்காயர் தெரு வழியாக சென்றபோது, ஹபீப் தோட்டம் அருகில் இருக்கும் புதரின் காரணமாக இப்பேருந்து அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது. இதனால் மின்கம்பம் மிகவும் சேதமடைந்தது மட்டுமின்றி, மின்சாரமும் அப்பகுதியில் துண்டிக்கப்பட்டது. இப்பேருந்து ஓட்டுநர் மின்வாரியத்திற்கு 18000 ரூபாய் கொடுத்து விசயத்தை பெரிதுபடுத்தாமல் இருக்க கோரியுள்ளாராம். ஏனென்றால் இன்னும் சில மாதங்களில் பணிநிரந்தரம் பெற உள்ளதால் எங்கே விசயம் தெரிந்தால் தன்னுடைய வேலைக்கு வேட்டு ஏற்பட்டுவிடமோ என்கிற அச்சம்தான் என்கிறது நம்பத்தகுந்த வட்டாரம்.

திங்கள், 7 ஜூலை, 2008
இதுவும் கடந்து போகும்...! இன்னும் எத்துனை மாதங்களுக்கு?
இராஜஸ்தான் நிதியுதவிடன் கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஆண்டிலிருந்தே காத்துக் கிடக்கின்றன அரசு மருத்துவமனையும், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும். இதோ! இதோ வருகிறோம்!! இதோ வந்துட்டோம் என்று மாதம் மாதம் ஒரு தேதியை அறிவிக்கிறார்கள் சம்மந்தப்பட்ட அமைச்சர் பெருமக்கள்(?). இரண்டு கட்டிடங்களுமே அத்தியாவசிய பணிகளான மருத்துவம் மற்றும் கல்விக்கென தெரிந்திருந்தும் கூட இவர்கள் இத்தனை இழுத்தடிப்பு செய்கிறார்கள் என்று புரியாத புதிராக இருந்தாலும் இந்த ஏமாற்றங்கள் எல்லாம் வாடிக்கையான விசயமாய் ஆகிவிட்டது வெகுஜன மக்களுக்கு.
போதிய படுக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகள் இன்றி மிகவும் துன்பத்திற்கு ஆளாகி நிற்கும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வேதனைமிக்க ஆர்வத்தோடு பூட்டியிருக்கும் புதிய மருத்துவமனை கட்டிடத்தை தரிசித்து மட்டுமே செல்கிறார்கள்.
தற்போது வண்டிகாரத் தெருவில் இயங்கி வரும் பெண்கள் பள்ளியில் சில வருடங்களாக தமிழைத் தொடர்ந்து ஆங்கிலவழிக் கல்வியும் நடைபெற்று வருகிறது. இதனால் ஆண்டுதோரும் மாணவிகளின் சேர்க்கை கூடி கொண்டு செல்கிறது. மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் மாணவிகள் போதிய வகுப்பறைகளின்றி வராண்டாவில் (வெயிலில்) உட்கார வைக்கப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் போதிய கழிவறை வசதியில்லாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். சில மாணவிகள் வெட்கத்தை விட்டு பேரூராட்சித் தலைவருக்கு போன் செய்து இந்த சிரமத்தை சொல்லியிருக்கின்றனர். பேரூராட்சித் தலைவரும் பொறுமையிழந்து மீண்டும் மீண்டும் முயற்சிகள் எடுத்தாலும் அரசியல் கலந்த மர்மாகவே நீடிக்கின்றது இந்த திறப்பு விழாக்கள்.
போதிய படுக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகள் இன்றி மிகவும் துன்பத்திற்கு ஆளாகி நிற்கும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வேதனைமிக்க ஆர்வத்தோடு பூட்டியிருக்கும் புதிய மருத்துவமனை கட்டிடத்தை தரிசித்து மட்டுமே செல்கிறார்கள்.
தற்போது வண்டிகாரத் தெருவில் இயங்கி வரும் பெண்கள் பள்ளியில் சில வருடங்களாக தமிழைத் தொடர்ந்து ஆங்கிலவழிக் கல்வியும் நடைபெற்று வருகிறது. இதனால் ஆண்டுதோரும் மாணவிகளின் சேர்க்கை கூடி கொண்டு செல்கிறது. மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் மாணவிகள் போதிய வகுப்பறைகளின்றி வராண்டாவில் (வெயிலில்) உட்கார வைக்கப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் போதிய கழிவறை வசதியில்லாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். சில மாணவிகள் வெட்கத்தை விட்டு பேரூராட்சித் தலைவருக்கு போன் செய்து இந்த சிரமத்தை சொல்லியிருக்கின்றனர். பேரூராட்சித் தலைவரும் பொறுமையிழந்து மீண்டும் மீண்டும் முயற்சிகள் எடுத்தாலும் அரசியல் கலந்த மர்மாகவே நீடிக்கின்றது இந்த திறப்பு விழாக்கள்.இந்த பிரச்சினையை முன்னிறுத்தி கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும் அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகின்றனர். பரங்கிப்பேட்டை கூகிள் குழுமம் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மின்னஞ்சல் மற்றும் ஃபாக்ஸ் செய்தி அனுப்பப்பட்டது. இதை மாவட்ட ஆட்சித் தலைவரும் உறுதிப்படுத்தியுள்ளார். மீண்டும் மீண்டும் இவருக்கு பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்து வருவதால் பொறுமையிழந்து, பேரூராட்சித் தலைவரை போனில் தொடர்பு கொண்டு, 'நீங்களே இதை திறந்து விடுங்களேன்' என சொன்னதாக தகவல்.
இதுகுறித்து ஜமாஅத்தின் முக்கிய நிர்வாகி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, எத்தனை கோரிக்கைகள் வைத்தாலும் இவர்கள் இப்படித்தான் இழுத்தடிப்பார்கள். பொதுமக்கள் நேரடியாக களத்தில் இறங்கி போரடினால்தான் இது முதலமைச்சர் செல்லிற்கு போகும் என்று தன்னுடைய கருத்தை கூறினார்.
Labels:
அரசு மருத்துவமனை,
கல்வி,
செய்தி,
பெண்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
சற்று முன் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் பரங்கிப்பேட்டை அளவில் பள்ளிகளின் தேர்ச்சி விவரம் சதவிகிதத்தில்: சேவாமந்திர் பள்ளி...