ஞாயிறு, 30 ஜனவரி, 2011

அனல் மின் நிலைய வேலி பிரச்னை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு

பரங்கிப்பேட்டை : அனல் மின் நிலையத்திற்கு வேலி அமைப்பது குறித்து டி.ஆர்.ஓ., தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

பரங்கிப்பேட்டை அடுத்த பஞ்சங்குப்பம் கிராமத்தில் கடந்த 20ம் தேதி ஐ.எல்.எப்.எஸ்., தனியார் அனல்மின் நிலையத்தினர் வாங்கிய இடத்தில் வேலி அமைத்ததை கிராமத்தினர் தடுத்து நிறுத்தினர். ஆர்.டி.ஓ., இந்துமதி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு ஏற்படாததால் பிப்ரவரி 5ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று மீண்டும் ஆர்.டி.ஓ., இந்துமதி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. டி.எஸ்.பி., மோகன், இன்ஸ்பெக்டர் புகழேந்தி, கிராமத்தினர் தரப்பில் விவசாய சங்கத் தலைவர் சண்முகம், பரமானந்தம், விவசாய சங்க மாவட்ட செயலர் சேகர், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலர் சேகர், கம்பெனி தரப்பில் மோனீஷ் அகுஜா, பொதுமேலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஐந்து மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவுக்கு வராததால் மீண்டும் டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

Source: Dinamalar

பரங்கிப்பேட்டை அருகே தனியார் மின்நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் 11-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே தனியார் மின்நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் அடுத்த மாதம் 11-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள புதுக்குப்பம் கிராமத்தில் தனியார் மின் உற்பத்தி நிலையம் அமைக்க சுமார் 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலத்தை அந்த நிறுவனம் குறைந்த விலைக்கு விற்பனை செய்துவிட்டதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த மின் உற்பத்தி நிலையம் வந்தால் தங்களுடைய மீன்பிடி தொழில், விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக சிதம்பரம் ஆர்.டி.ஓ. இந்துமதி தலைமையில் நடந்து வந்த பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் நேற்று புதுக்குப்பம், கரிக்குப்பம், பஞ்சங்குப்பம் உள்பட கிராம விவசாயிகள், அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் ஆகிய கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பி.முட்லூரில் நடந்தது. கூட்டத்துக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அருண் மொழிதேவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வி ராமஜெயம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணி வாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நுகர்வோர் பேரவை மாவட்ட செயலாளர் நிஜாமுதீன் கலந்து கொண்டு பரங்கிப்பேட்டை பகுதியில் மின் உற்பத்தி நிலையம் அமைந்தால் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பாதிக்கப்படும் நிலை குறித்து பேசினார்.

கூட்டத்தில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமலிங்கம், ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், பாண்டியன், ஒன்றிய பேரவை செயலாளர் ராசாங்கம், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜ், அ.தி.மு.க. மாவட்ட மாணவரணி உமாமகேஸ்வரன், நகர செயலாளர் செல்வக்குமார் மற்றும் கரிக்குப்பம் சண்முகம், பரமானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பரங்கிப்பேட்டை அருகே உள்ள புதுக்குப்பம் கிராமத்தில் மின்உற்பத்தி நிலையம் அமைத்தால் மீனவர்கள், விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். ஆகவே இதை கண்டித்து அடுத்த மாதம் 11-ந் தேதி சிதம்பரம் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

Source: Daily Thanthi

இறப்புச் செய்தி

பரங்கிப்பேட்டை தெற்கு தெரு வண்ணாரப்பாளையத்தில், கதிரவன், கலைச்செல்வன் ஆகியோர்களின் தந்தையும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற, K.S. Sir என்றழைக்கப்படும் புலவர் கு.செல்வராஜ் (வயது 75) அவர்கள் நேற்று (29-01.2011) மாலை மரணம் அடைந்தார். அன்னாரின் இறுதிச் சடங்கு நாளை (31-01-2011) நடக்கின்றது.

வெள்ளி, 28 ஜனவரி, 2011

இறப்புச் செய்தி


கவுஸ் பள்ளி தெருவில், மலேஷியா டிராவல்ஸ் நிறுவனரும், அப்துஸ் ஸலாம், அப்துல் குத்தூஸ், அப்துல் லத்தீப், அப்துஸ் ஸமத், அப்துல் அஹத், அப்துல் மாலிக் இவர்களின் தகப்பனாருமாகிய M.A.ரவூப் சாஹிப் அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை (29-01-2011) மாலை 4 மணிக்கு நல்லடக்கம் ஹக்கா சாஹிப் தர்கா அடக்கஸ்தலத்தில்.      

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

வியாழன், 27 ஜனவரி, 2011

ஜெத்தாவில் கடும் மழை வெள்ளம்

ஜெத்தாவில் கடும் மழை வெள்ளம் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். கடந்த 2009 இறுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கில் நூற்றுக்கணக்கான உயிர்சேதமும் கோடிக்கணக்கான பொருட் சேதமும் ஏற்பட்டிருந்தது அறிந்ததே. பல மில்லியன் ரியால்கள் இழப்பீடாகவும் வழங்கப்பட்டன. இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்யும் மழை காரணமாக மேலும் கடும் வெள்ளம் ஜெத்தாவைச் சூழ்ந்துள்ளது. அரசு தரப்பு அதிகாரிகள் செய்வதறியாது தவிக்கின்றனர், வார்த்தைகளை விடவும் எளிதாக விளக்கும் வகையில் வீடியோ படம் இணைத்துள்ளோம். காண்க.

புதன், 26 ஜனவரி, 2011

ஊரெங்கும் கொண்டாட்டம்...!










பரங்கிப்பேட்டையில் 62-வது குடியரசுதின விழா கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. இன்று காலை 8 மணிக்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் அதன் தலைவர் முஹம்மது யூனுஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளர் புகழேந்தி கொடியேற்றி அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மருத்துவமனை, மின்சார வாரியம், சுங்க அலுவலகம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் தேசிய கொடியேற்றப்பட்டது.

கிரசன்ட் நல்வாழ்வு சங்கத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பி.எம். இஸ்ஹாக் மரைக்காயர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நகர இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற குடியரசுதின விழாவில் நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் செய்யது அலி கொடியேற்றி வைத்ததார்.

படங்கள்: ஹம்துன் அப்பாஸ், முத்துராஜா

சனி, 22 ஜனவரி, 2011

பரங்கிப்பேட்டை அருகே தனியார் மின் உற்பத்தி நிலையத்திற்காக வேலி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதால் விவசாயிகள், போலீசாரிடையே தள்ளு-முள்ளு!

பரங்கிப்பேட்டை அருகே தனியார் மின் உற்பத்தி நிலையத்திற்காக வேலி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதால் விவசாயிகள்- போலீசாரிடையே தள்ளு,முள்ளு ஏற்பட்டது. இதற்கிடையே வேலி அமைக்கும் ஊழியர்கள் கூட்டத்தை பார்த்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த புதுக்குப்பம் பகுதியில் தனியார் மின் உற்பத்தி நிலையம் அமைக்க சுமார் 500 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.இதில் பஞ்சங்குப்பம் சுடுகாடு பகுதியில் அந்த தனியார் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் கருங்கற்கள் மூலம் நேற்று வேலி அமைத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த தனியார் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஒன்று சேர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.பின்னர் தனியார் நிறுவன ஊழியர்கள் வேலி அமைப்பதை தடுத்து நிறுத்த முயன்றனர் இதற்கிடையில் தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயி களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது நிலம் கொடுத்த விவசாயிகள் தங்களிடம் குறைவாக பணம் கொடுத்து விட்டு விலைக்கு வாங்கி விட்டனர். மேலும் இந்த நிறுவனம் வந்தால் நாங்கள் மணிலா போன்ற பயிர்களை இங்கு உற்பத்தி செய்ய முடியாது. ஆகவே இந்த மின் நிலையம் இங்கு தேவையில்லை என்று கூறினர்.

இதை கேட்ட போலீசார் உரிய அதிகாரிகள் வந்ததும் அவர்களிடம் பேசி முடிவு செய்யலாம் என்று சமாதானம் செய்து கொண்டிருந்தனர்.

அதற்குள் சிலர் தனியார் நிறுவன ஊழியர்களை வேலி அமைக்க விடாமல் தடுத்தனர். இவர்கள் கூட்டமாக வருவதை பார்த்ததும் தனியார் நிறுவன ஊழியர்கள் தப்பி நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.

இதை பார்த்த போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்த முயன்றனர்.அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. பின்னர் விவசாயிகள் அனைவரும் நெற்பயிர்கள் முளைத்துள்ள நிலங்களில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் விளை நிலங்களில் மின் உற்பத்தி நிலையம் அமைக்க விடமாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது பற்றி அறிந்ததும் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Source: Daily Thanthi

வெள்ளி, 21 ஜனவரி, 2011

"ம்ம்....இந்தியேன்டா..."



விபரீதம் புரியாமல் எதையாவது செய்து விட்டு பிறகு ஐயோ அம்மா என்று புலம்புவது நம் அனைவருக்கும் அவ்வபோது நேரும். அப்படி இந்த வாரம் நான் செய்த ஒரு மிகப்பெரிய தீரச்செயல் : வியாழக்கிழமை சந்தைக்கு சென்றது.

பத்திரிக்கைகளில் வெங்காயம் பற்றிய ஜோக்கை படிக்கும் போது நான் கொஞ்சம் சீரியசாக படித்திருக்க வேண்டும். ஏதோ கருணாநிதி குடும்ப அங்கத்தினன் போல் கவலையில்லாமல் படித்து விட்டு சந்தைக்கு சென்றது என் தவறுதான்.

சந்தையை நெருங்கும்போதே எதிரில் வரும் சிலர் எச்சரித்தனர். அல்ட்சியபடுத்திவிட்டு சந்தையில் நுழைந்து முதலில் நான் விலை கேட்ட தக்காளி கிலோ நாற்பது ரூபாய். தக்காளிக்கு தங்கத்தில் கோட்டிங் கொடுத்துள்ளார்களா என்று பார்த்தேன். இல்லை நார்மல் தக்காளிதான்.

சரி முள்ளங்கி எவ்ளோன்னே... முப்பது. உருளை நாற்பது. தைரியத்தை வலிய வரவழைத்துக்கொண்டு வெங்காயம் விலை கேட்டேன். கிலோ ஐம்பது ருபாய். ஹ்ம்ம் ஒன்றை கிலோ பத்து ரூபாய் வாங்கிய வெங்காயம் என்னை பார்த்து சிரிப்பது போல் இருந்தது.

என்னன்னே... ஷோ கேஸ்ல வெக்க வேண்டிய வெங்காயத்தை போய் இப்படிதரயில கொட்டி வெச்சிருக்கிங்க என்று கேட்டேன். "எத்தன பேர பாத்துட்டோம்...வாங்கறதுன்ன வாங்கு இல்ல இடத்த காலி பண்ணு ராசா" என்ற மாதிரி பார்வையை வீசினார் அவர்.
கால் கிலோ அஞ்சி ரூபாக்கு கிடைத்த பச்ச மிளகாவை ஏனோ எனக்கு ரொம்ப பிடித்து விட்டது.

சந்தைக்கு ரொம்ப பேர் சுருக்கு பையை விட சற்று பெரிய பையை மட்டுமே கொண்டு வந்திருந்தனர். (இன்னும் கொஞ்ச நாளில் சுருக்கு கயிறுதான் சரியாக இருக்கும் போல.) ஹை ... நான் ரெண்டு பிளாஸ்டிக் பை. போகும்போது அதுல ஒன்னு காலிங்க்றது வேற விஷயம்)

பல பேர் முகத்தில் இன்னும் அதிர்ச்சி இருந்தது. நிறைய பேர் கருணாநிதியின் மண்டையோட்டின் முன்பகுதி பற்றி ஆர்வத்துடன் பேசிகொண்டார்கள்.
ஒரு கத்திரி இருபது ரூபாயாம், கேரட்ன்னு சொல்லாதிங்க காசி கேட்டுற போறாங்க என்று சகட்டு மேனிக்கு நம் மக்கள் ஜோக் என்ற பேரில் ஏதோ அடித்து கொண்டு இருந்தார்கள்.
ஹ்ம்ம். இடுக்கனிலும் நகைப்பு..

பாவம் இத்தனை தூரத்தில் இருந்து வந்து இப்படி வெயிலில் கஷ்டப்படுகிறார்களே என்று நான் முன்பு பரிதாபப்பட்ட காய்கறி வியாபாரிகள் தற்போது ஜோஸ் அலுக்காஸ் கேஷ் கவுண்டர் மிஸ்டர் பள பளா போல் தெரிந்தனர். குறிப்பாக, வெங்காய வியாபாரியின் தலைக்கு பின்னே ஒரு ஒளிவட்டம் இருக்கிறதா என்று பார்த்தேன். லேசாக தெரிந்தது.

பிறகு எல்லாவற்றிலும் கிராம் கணக்கில் வாங்கி கொண்டு ஏக்கத்துடன் சந்தையை விட்டு கிளம்பினேன். எண்ணி வைக்க கூடிய அளவில் இருந்த காய்கறிகளை வீட்டில் பிரித்து கொட்டி அல்ல, காட்டி விட்டு செலவை கணக்கு பண்ணினால் தலை சுற்றியது இரநூற்றி ஐம்பது ரூபாய்கள்..

வீட்டு கண்ணாடி முன் வந்து நின்று பார்த்தேன். என்னை பார்க்க கொஞ்சம் பாவமாக இருந்தது. " டேய்...நீ இந்தியண்டா ம்ம்ம்ம் " என்று பாஸ் படத்தில் ஆர்யா இரு கட்டை விரலையும் உயர்த்தி செய்வது போல் (நன்பேண்டா...) செய்து கொண்டு வெளியே வந்தேன்.

செவ்வாய், 18 ஜனவரி, 2011

நீடுர் முஸ்லிம் மருத்துவக் கல்லூரி : வஃக்ப் வாரியத் தலைவர் விளக்கவுரை




நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா - வக்ப் வாரியம் கூட்டு முயற்சியில் தொடங்கப்பட உள்ள மருத்துவ கல்லூரி பற்றிய கடலூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று(17-ஜனவரி-2011) பத்து மணியளவில் சிதம்பரம் M.Y.M. பைசல் மஹாலில் நடைபெற்றது.

நீடூரில் நடைபெற்ற முதல் கூட்டத்தை தொடர்ந்து தமிழகத்தின் பல பிரதான ஊர்களில் ஆலோசனைக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. அவ்வகையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட சிதம்பரம் கூட்டத்தில் வக்ப் வாரியத் தலைவர் டாக்டர் கவிக்கோ அப்துல் ரஹ்மான், இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளர் ஹிதாயத்துல்லாஹ், ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் முகம்மது யூனுஸ், சிக்கந்தர், சிதம்பரம் தாலுகா இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் இஸ்மாயில் நாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான்:
கேரளாவில் ஏழு, ஆந்திராவில் நான்கு கர்நாடகாவில் நான்கு என முஸ்லிம்கள் மருத்துவக் கல்லூரிகளை நடத்திவரும் நிலையில் தமிழகத்தில் ஒன்று கூட இல்லாத இழி நிலையை போக்க வேண்டும் என்ற குறிக்கோளில் இந்த முயற்சி துவங்கப்பட்டுள்ளதாக கூறினார். தொழில் புரட்சியின் போது வாளாவிருந்து உலக முன்னேற்றத்தில் தங்கள் பங்கை இழந்த முஸ்லிம்கள் தற்போது நடைபெற்று வரும் தொழில்நுட்பப் புரட்சியிலும் சோம்பி இருந்தால் வரலாறு அவர்களை புறந்தள்ளி விடும் என்று எச்சரித்தார்.

பல்வேறு முஸ்லிம் தனியார் நிறுவனங்கள் வக்ப் இடத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க அனுமதி கேட்டு வந்த போதும் தான் அதனை சமுதாய நலனுக்காக மறுத்து விட்டதாகவும் தற்போது பொதுநலன் மற்றும் பொதுத்தளத்தில் நின்று இந்த முயற்சி துவங்கப்பட்டுள்ளது எனவும் கவிக்கோ கூறினார். இதனை ஒரு மருத்துவக் கல்லூரியாக மட்டுமின்றி மருத்துவம் சம்பந்தப்பட்ட அனைத்து கூறுகளும் உள்ளடக்கிய ஒரு மருத்துவப் பல்கலைகழகமாக நிர்மாணிப்பதற்கே தான் விரும்பவதாகவும் தெரிவித்தார். மருத்துவக் கல்லூரி பற்றிய ஒரு பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் ஒளி ஒலி காட்சி ப்ரஜக்டர் மூலம் போட்டு காண்பிக்கப்பட்டது. அதில் மருத்துவகல்லூரியின் ஒவ்வொரு ஆண்டு நிலை, எதிர்பார்ப்பு, வளர்ச்சி திட்டம் போன்ற அனைத்து அம்சங்களும் விளக்கப்பட்டிருந்தன.

முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் 160 கோடி தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் பல்வேறு தனி நபர்கள், ஜமாஅத் மற்றும் அமைப்புக்கள் போன்றவற்றிலிருந்தும் பங்குகள் வந்துகொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

பிறகு இது குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,
MECCA (Muslim Educational Charitable with Care and Aid) Trust என்று ஒன்று உருவாக்கப்பட்டு அந்த டிரஸ்ட்டே (50 உறுப்பினர்கள் கொண்டது) இந்த மருத்துவ கல்லூரியை நிர்வகிக்கும் என்றும் அந்த ட்ரஸ்ட்டில் மிஸ்பாஹுல் ஹுதாவை சார்ந்த ஒரு நபரும் வக்ஃப் சார்பில் ஒரு நபரும் இருப்பர் மீதமுள்ள நாற்பத்திஎட்டு பேரும் இதற்காக பொருளுதவி செய்தவர்களிலிருந்தே தேர்வு செய்யப்படுவர் என்றார் கவிக்கோ. இதனை மிஸ்பாஹுல் ஹுதாவும் வக்ஃபும் இணைந்து செய்கின்றன என்பது இவ்விதமே என்று விளக்கினார். ஆட்சி மாற்றம் எந்த விதத்திலும் இதனைப் பாதிக்காது என்றும் விளக்கி கூறினார்.

ஹிதாயத்துல்லாஹ் பேசுகையில் ஸதகத்துல் ஜாரியா வகையில் வரும் இந்த உயரிய நற்செயலுக்குப் பொருளும் ஆதாரமும் வழங்குவதில் உள்ள மறுமைப் பலன்கள் குறித்து விளக்கிப் பேசினார். இறுதியாக, பலர் தங்களது பங்களிப்பினை கவிக்கோ அவர்களிடம் செலுத்தினார்கள்.
பிறகு உணவு உபசரிப்புடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

கூட்ட அரங்கிலிருந்து Hameed Maricar
photos - இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் குழுமம்


திங்கள், 17 ஜனவரி, 2011

இறப்புச் செய்தி

ஹக்கா சாஹிப் தர்கா தெருவில் மர்ஹூம் நூருல்லாஹ் சாஹிப் அவர்களின் மகளாரும், மர்ஹூம் அப்துல் வதூத் சாஹிப் அவர்களின் மனைவியும், முஹைய்யதீன் சாஹிப் அவர்களின் தாயாருமாகிய ஹைருன்னிஸா அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம், ஹக்கா சாஹிப் தர்கா அடக்கஸ்தலத்தில்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

பரங்கிப்பேட்டை எஸ்.ஐ. உட்பட 24 சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்!

கடலூர் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி உட்பட 24 சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் 24 சப் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உத்தரவிட்டார். அதன்படி கடலூர் புதுநகரில் இருந்த துர்கா நெய்வேலி டவுன்ஷிப்பிற்கும், கடலூர் மகளிர் காவல் நிலைய சித்ரா சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்திற்கும், கடலூர் மகளிர் காவல் நிலைய கலாவதி பரங்கிப்பேட்டைக்கும், புதுப்பேட்டை திருவேங்கடம் திருப்பாதிரிப்புலியூருக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.

நடுவீரப்பட்டு வாசுதேவன் சிதம்பரம் அண்ணாமலை நகருக்கும், சிதம்பரம் (டவுன்) வனஜா விருத்தாசலத்திற்கும், சிதம்பரம் (தாலுகா) மணிவாசகம் குமராட்சிக்கும், சிதம்பரம் மகளிர் காவல் நிலைய வசந்தகுமாரி சேத்தியாத்தோப்பு மகளிர் காவல் நிலையத்திற்கும், சிதம்பரம் மகளிர் காவல் நிலைய மணமல்லி கடலூர் மகளிர் காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

சேத்தியாத்தோப்பு குமார் ஆவினங்குடிக்கும், சேத்தியாத்தோப்பு மகளிர் காவல் நிலையம் பாண்டிச்செல்வி சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்திற்கும், காட்டுமன்னார்கோவில் மணி புவனகிரிக்கும், சோழதரம் சக்தி காட்டுமன்னார்கோவிலுக்கும், திருப்பாதிரிப்புலியூர் ஆனந்தபாபு பண்ருட்டிக்கும், கடலூர் துறைமுகம் கவிதா காடாம்புலியூருக்கும், கடலூர் மகளிர் காவல் நிலைய லூசி சிதம்பரம் தாலுகாவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

பண்ருட்டி திருமேனி விருத்தாசலத்திற்கும், நெல்லிக்குப்பம் எழிலரசி குள்ளஞ்சாவடிக்கும், பண்ருட்டி மகளிர் காவல் நிலைய பவானி நெய்வேலி தர்மலுக்கும், புத்தூர் முத்துக்குமரன் நடுவீரப்பட்டிற்கும், பரங்கிப்பேட்டை மகேஸ்வரி பெண்ணாடத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

நெய்வேலி தர்மல் கிருபாலட்சுமி ரெட்டிச்சாவடிக்கும், கம்மாபுரம் அமல்ராஜ் காடாம்புலியூருக்கும், கடலூர் மகளிர் காவல் நிலைய லட்சுமி புதுப்பேட்டைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

Source: Dinamalar

வியாழன், 13 ஜனவரி, 2011

தேர்தல் 2011 :"வாங்க, பேசலாம்"- கம்யூ.க்களிடம் ஜெ.


எதிர்வரவிருக்கும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள், இயக்கங்கள், பொதுமக்கள் தயாராகி வரும் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கின்றன. இதன்பொருட்டு ஹேஷ்யங்களும் ஹாஸ்யங்களுமாக அரசியல் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.
முதற்கட்டமாக, அதிமுகவும் தேமுதிகவும் கூட்டணி சேரக்கூடும் என்று யூகங்கள் கொடி கட்டிப் பறந்த நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா தமது பொதுக்குழுவில் "கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார். சொல்லிவைத்தாற்போல அதே வார்த்தைகளையே சேலத்தில் நடைபெற்ற தம்கட்சியின் "உரிமை மீட்பு மாநாட்டில்" உச்சரித்திருந்தார் விஜயகாந்த். "கூட்டணி பற்றி என்னிடம் விட்டுவிடுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்".
கடந்த டிசம்பர் 30-ம் தேதி நடந்த அ.தி.மு.க.​ பொதுக்​கு​ழுக் கூட்​டத்​தில் கூட,​​ சில கட்​சி​க​ளு​டன் பேச்​சு​வார்த்தை நடந்து வரு​வ​தாக ஜெயல​லிதா கூறி​னாரே தவிர,​​ ஏற்​கெ​னவே கூட்​ட​ணி​யில் உள்​ள​தா​கக் கூறப்​ப​டும் கம்​யூ​னிஸ்ட் கட்​சி​கள்,​​ ம.தி.மு.க.வுடன் பேச்சு நடத்​து​வது பற்றி எது​வும் கூற​வில்லை.​ ​
​ நடி​கர் விஜ​ய​காந்த் தலை​மை​யி​லான தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க.​ தீவிர பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​வ​தா​க​வும்,​​ ஆனால்,​​ கம்​யூ​னிஸ்ட் கட்​சி​கள்,​​ ம.தி.மு.க.வுடன் உட​ன​டி​யாக பேசு​வதை அ.தி.மு.க.​ தவிர்ப்​ப​தா​க​வும் அப்​போது பேச்சு எழுந்​தது.​ ​
​ இந்​நி​லை​யில்,​​ சென்னை வந்த பிர​த​மர் மன்​மோ​கன் சிங்,​​ தி.மு.க.​ -​ காங்​கி​ரஸ் கூட்​டணி உறு​தி​யாக இருப்​ப​தாக அறி​வித்து விட்​டுச் சென்​றார்.​ தி.மு.க.​ -​ காங்​கி​ரஸ் கட்​சி​கள் இடை​யே​யான கூட்​டணி முறிய எவ்​வித வாய்ப்​பும் இல்லை என்​பதை இரு கட்​சி​க​ளும் உறு​தி​யாக தெரி​வித்து விட்​டன.​
​ இந்த சூழ​லில்,​​ மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட்,​​ ​ இந்​திய கம்​யூ​னிஸ்ட் ஆகிய இரு கட்​சி​க​ளை​யும் கூட்​டணி பற்றி பேச வரு​மாறு அ.தி.மு.க.​ பொதுச் செய​லா​ளர் ஜெயல​லிதா அழைப்பு விடுத்​துள்​ளார்.​ இதை மார்க்​சிஸ்ட் கட்சி பொதுச் செய​லா​ளர் பிர​காஷ் காரத்,​​ சென்​னை​யில் திங்​கள்​கி​ழமை உறுதி செய்​தார்.​ ​
​ ​ தமி​ழ​கத்​தில் தி.மு.க.​ -​ காங்​கி​ரஸ் அணிக்கு எதி​ராக ஒரு உறு​தி​யான அணியை நாமெல்​லாம் சேர்ந்து அமைக்க வேண்​டும் என்று தன்​னி​டம் தொலை​பேசி மூலம் ஜெயல​லிதா கூறி​ய​தாக பிர​காஷ் காரத் தெரி​வித்​தார்.​ ​
இதே​போல் இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்​சித் தலை​வர்​க​ளை​யும் ஜெயல​லிதா தொலை​பே​சி​யில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்​தார் என்று இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்சி நிர்​வா​கி​கள் தெரி​விக்​கின்​ற​னர்.​
இந்​நி​லை​யில் தமி​ழக சட்​டப்​பே​ரவை தேர்​தல் மற்​றும் கூட்​டணி பற்றி முடிவு செய்​வ​தற்​காக இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்​சி​யின் மாநி​லக் குழுக் கூட்​டம் ஜன​வரி 21,​ 22 ஆகிய தேதி​க​ளில் நெல்லை மாவட்​டம்,​​ பாப​நா​சத்​தில் நடை​பெ​று​கி​றது.மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்​சி​யின் மாநி​லக் குழுக் கூட்​டம் ஜன​வரி 24,​ 25 ஆகிய தேதி​க​ளில் சென்​னை​யில் நடை​பெ​று​கி​றது.​இந்​தக் கூட்​டங்​க​ளில் மாநி​லக் குழு உறுப்​பி​னர்​கள்,​​ கட்​சி​யின் மாநில நிர்​வா​கி​க​ளோடு,​​ அகில இந்​திய தலை​வர்​க​ளும் கலந்து கொள்​கின்​​றனர்.
அடுத்த சில நாள்​க​ளில் அ.தி.மு.க.​ பொதுச் செய​லா​ளர் ஜெயல​லி​தாவை,​​ இரு கம்​யூ​னிஸ்ட் கட்​சி​க​ளின் தலை​வர்​க​ளும் தனித்​த​னி​யாக சந்​தித்​துப் பேசு​வார்​கள் என்று அரசியல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி நமது சென்னை நிருபர் தெரிவிக்கிறார்.​ ​

;நன்றி;இந்நேரம்.காம்

புதன், 12 ஜனவரி, 2011

LKG படிப்புக்கு என்ட்ரன்ஸா? - கல்வித்துறை 'தடா' போட்டது


எல்.கே.ஜி எனப்படும் பாலர் கீழ்நிலைக்கல்விக்கும் தமிழகத்தில் சில பள்ளிகள் நுழைவுத்தேர்வையும் நன்கொடையையும் மேற்கொள்வதாக தெரியவருகிறது. 


இந்நிலையில் இது குறித்து கல்வித்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


கல்வித்துறை அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறுகையில்,

ஜுலை 1-ந்தேதி 3 வயது நிரம்பிய குழந்தைகள் எல்.கே.ஜி.யில் சேர தகுதி உடையவர்கள். அவர்களை எல்.கே.ஜி.யில் சேர்க்க எந்த வித நுழைவுத்தேர்வும் நடத்தக்கூடாது. அவர்களின் பெற்றோர் படித்திருக்கிறார்களா என்று கேட்கக்கூடாது. விண்ணப்ப கட்டணம் ரூ.50க்கு மேல் இருக்கக்கூடாது. மாணவர்சேர்க்கைக்காக நன்கொடை வசூலிக்கக்கூடாது. பள்ளிக்கூடங்களில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு புகையிலைபொருட்கள் விற்கக்கூடாது. புகை பிடிக்கவும் கூடாது. பள்ளிகளை சுகாதாரமாக வைத்துக்கொள்ளவேண்டும். 



பாலக மாணவர்களுக்கு  நுழைவுத்தேர்வு நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களை ஆசிரியர்கள் வேலை ஏவவோ, . அடிக்கவோ கூடாது. நான் இங்கு கூறியவற்றை ஏற்கனவே பல முறை பள்ளிகளுக்கு கல்வி அதிகாரிகள் மூலம் தெரிவித்துள்ளோம்.   
என்று தெரிவித்துள்ளார். 


6 வயது முதல் 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவச கல்வி அளிக்கப்படவேண்டியது அரசின் அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதும், சர்வ சிக்சா அபியான் என்ற அந்தத் திட்டத்துக்கு நிதியுதவி குறிக்கத்த்க்கது

சிதம்பரம்-கடலூர் சாலையில் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு






வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி, கடந்த இருவாரங்களுக்கு முன், பரங்கிப்பேட்டை பு.முட்லூரில்   கடலூர் - சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படும் வகையில் பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்ற போது அனைவருக்கும் நிவாரணம் வழங்குவோம் என வருவாய்த் துறையினர் உறுதியளித்திருந்தது தெரிந்ததே. 


 இதைத் தொடர்ந்து நிவாரணம் வழங்க வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பு.முட்லூர், மஞ்சக்குழி பகுதிகளில் கணக்கெடுத்தும் கணக்கெடுத்ததை விட குறைவான நபர்களுக்கு வழங்கப்பட்டதாக முறையீடுகள் வந்தன.

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

மூனா கல்வி நிறுவனத்தில் இலவச கணிணி பயிற்சி வகுப்புகள் துவக்கம்



பரங்கிப்பேட்டை: முனா கல்வி நிறுவனம் சார்பில், அதன் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச கணிணி சிறப்பு பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டது. அனைத்து தரப்பு மாணவ-மாணவிகளுக்கும் கணிணி அறிவை வளர்க்கும் நோக்கில் துவங்கப்ட்ட இப்பயிற்சி வகுப்பு திட்டத்திற்கு க்ளிக் வேர்ல்டு க்ளிக் ("Click-World-Click") என்று பெயரிடப்பட்டுள்ளது. மூனா ஆஸ்திரேலியன் பள்ளியின் முதல்வர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சி திட்டத்தினை எம்.ஜீ.ஃபக்ருத்தீன் துவக்கி வைத்தார்.

இப்பள்ளியில் போதிய கணிணி ஆய்வுகூடம் வசதியுடன் இருப்பதாலும், தொடர் கண்காணிப்பு அடிப்படையிலான செயல்திட்டம் இருப்பதினாலும் அடிப்படை கணிணி பயிற்சி மட்டுமின்றி இதர மென்பொருள் வகுப்புகளுக்கும் தொடர்ந்து இலவச பயிற்சியுடன் சான்றிதழ்களும் அளிப்போம் என்று பள்ளி முதல்வர் தெரிவித்தார்.



சாதனை விளக்க தெருமுனைக்கூட்டம்

பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.கழகம் சார்பில் சாதனை விளக்க தெருமுனைக்கூட்டம் நேற்று மாலை சஞ்சீவிராயர் கோயில் தெருவில் நடைப்பெற்றது.  கூட்டத்திற்கு நகர அவைத்தலைவர் வழக்கறிஞர் தங்கவேல் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனுஸ் முன்னிலை வகித்து உரையாற்றினார்.

சிறப்புரையாற்றிய தலைமைக்கழக பேச்சாளர் நெய்வேலி விக்கிரமன், தனது உரையில் தி.மு.கழக அரசின் பல்வேறு சாதனைகளை விளக்கினார், தொடர்ந்து பேசுகையில் தமிழகத்தின் முன்னணி நாளேடுகள், வார இதழ்கள் தி.மு,க-விற்கு எதிரான நிலையினை கொண்டிருப்பதாக குறிப்பிட்டு தனது அதிருப்தியை கடுமையாக வெளிப்படுத்தினார்.

இக்கூட்டத்தில், தி.மு.க ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவருமான முத்து.பெருமாள், புவனகிரி பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் வழக்கறிஞர் செல்வராஜ், மாவட்ட தி.மு.க பிரதிநிதியும், நகர இளைஞர் அணி அமைப்பாளருமான முனவர் உசேன், மாவட்ட பிரதிநிதி காண்டீபன், நகர செயலாளர் பாண்டியன், கோமு, ராஜீ, ஆரிபுல்லாஹ், பேரூராட்சி மன்ற துணை தலைவர் செழியன், சண்முகம், மாரிமுத்து ஆகியோர் கலந்துக் கொண்டனர்

வியாழன், 6 ஜனவரி, 2011

இறப்புச் செய்தி

மர்ஹூம் சுல்தான்ஷா மரைக்காயர் அவர்களின் மகனும் S.கவுஸ் ஹமீது, ராயல் தெரு S.செய்யது மரைக்காயர் ஆகியோர்களின் மூத்த சகோதரரும், G.ஷேக் மரைக்காயர், ராயல் தெரு S.ரஜ்ஜாக் மரைக்காயர் ஆகியோர்களின் பெரிய தகப்பனாருமான S.முஹம்மது அப்துல் காதர் அவர்கள் சிங்கப்பூரில் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 3.30 மணிக்கு நல்லடக்கம் சிங்கப்பூரில். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

தெருமுனை கண்டன பிரச்சாரக் கூட்டம்

பரங்கிப்பேட்டை ஒன்றிய அ.இ.அ.தி.மு.கழகம் சார்பில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும் தெருமுனை கண்டன பிரச்சாரக் கூட்டம் குமாரப்பேட்டை, புதுப்பேட்டை, புதுக்குப்பம்,கிள்ளை ஆகிய இடங்களை தொடர்ந்து இன்று மாலை பரங்கிப்பேட்டை சஞ்சீவிராயர் கோயில் தெருவில் நடைப்பெற்றது. 



 MGR இளைஞர் அணி நகர செயலாளர் சங்கர் தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வி ராமஜெயம், தான் பேரூராட்சி மன்ற தலைவியாக பதவி வகித்த போது செய்த பணிகள் குறித்து பட்டியலிட்டார், தொடர்ந்து பேசுகையில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும் குறிப்பிட்டார்.  கூட்டத்தில் இராசாங்கம், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரமேஷ், தலைமைக்கழக பேச்சாளர் கோ.ஜெயவேல் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். கூட்டத்தில் மலை.மோகன், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன்,ஷாஜஹான், வீராசாமி,இக்பால்,ஜெய்சங்கர், மாரிமுத்து, காமில், சுல்தான்,மாலிமார், யூசுப் அலி,ரமேஷ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

சனி, 1 ஜனவரி, 2011

மக்தப் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்

கடலூர் மாவட்ட ஐக்கிய நல கூட்டமைப்பு மற்றும் சென்னை அன்வாருஸ் ஸுஃப்பா மக்தப், இணைந்து நடத்தும் மக்தப் ஆசிரியர்களுக்கான இரு நாள் பயிற்சி முகாம், இறைவன் நாடினால் வருகின்ற ஜனவரி 10, 11 தேதிகளில் பரங்கிப்பேட்டை மஹ்மூதிய்யா ஷாதி மஹாலில் நடைப்பெற இருக்கின்றது. முதல் நாளான ஜனவரி 10 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.30 வரை நடைப்பெறும் கலந்தாய்வுக்கூட்டத்தில், உலமா பெருமக்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர், இரண்டாம் நாளான ஜனவரி 11 அன்று காலை 9 மனி முதல் "மக்தப் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்" நடைப்பெற இருக்கின்றது, இம்முகாமில், மும்பை, பெங்களூரு-உள்ளிட்ட நகரங்களிலிருந்து சுமார் 400 உலமாக்கள் பங்கேற்க இருக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட ஐக்கிய நல கூட்டமைப்பு நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...