திங்கள், 30 நவம்பர், 2009
பரங்கிப்பேட்டை - முட்லூர் வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்
லேபிள்கள்:
நாளேடுகளில் நமதூர்
பரங்கிப்பேட்டை விவசாயிகளுக்கு....
லேபிள்கள்:
நாளேடுகளில் நமதூர்
பரங்கிப்பேட்டையில் விதை விற்பனையாளர்கள் கூட்டம்
லேபிள்கள்:
நாளேடுகளில் நமதூர்
ஞாயிறு, 22 நவம்பர், 2009
சிறுபான்மை நலத்திட்ட விளக்க விழா
சிறுபான்மை இனத்தவரின் நலனுக்காக பிரதம மந்திரியின் புதிய 15 அம்ச நலத்திட்ட விளக்க விழா நேற்று மாலை நான்கு மணியளவில் பரங்கிபேட்டை மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடைபெற்றது.
முன்னதாக 3.30 மணியளவில் இதற்கான பேரணி ஒன்று நடைபெற்றது. அதில் ஏராளமான மக்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கிட்டத்தட்ட மொத்த மாவட்ட அரசு நிர்வாகிகளும் கலந்து கொண்டிருந்தனர். இதனை பயன்படுத்தி கொள்வது போல பல்வேறு முக்கியஸ்தர்களும் தங்களின் மாவட்ட நலன் சார்ந்த கோரிக்கைகளை மாவட்ட கலெக்டர் முன் வைத்தனர்.
மாவட்ட கலெக்டர் P. சீத்தாராமன் மிக சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் உரையாற்றியது விழாவின் சிறப்பம்சமாக இருந்தது. சிறுபான்மை இன மக்களுக்கு அரசு எவ்வாறெல்லாம் நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது என்பதை உதாரணங்களுடன் (உம் : உலமா ஓய்வூதியம் -அதன் பயன்கள்) குறிப்பிட்டு பேசிய கலக்டர், மக்கள் அதைபற்றிய விழிப்புணர்வு அற்று இருப்பதை பற்றி மிகவும் வருந்தி பேசினார். இது விஷயத்தில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாதினை பாராட்டிய அவர் இன்னும் சிறப்பாக மக்களுக்கு அரசின் திட்டங்களை பற்றி விளக்கி சொல்லும்படி ஜமாஅத் தலைவர் M.S.முஹம்மது யூனுசினை கேட்டுக்கொண்டார்.
இந்த மாவட்டத்தின் முந்தைய கலக்ட்டர்கள் ஜமாஅத் நிர்வாகத்துடன் மிகவும் பரிவுடன் இருந்து வந்ததை அறிந்திருந்த மக்கள் புதிய கலக்டர் கலந்து கொள்ளும் இந்த முதல் விழாவில் அவரை பற்றிய எதிர்பார்ப்புகளுடன் வந்திருப்பார்கள். புதிய கலக்ட்டார் அவர்களை ஏமாற்றவில்லை என்றே சொல்ல வேண்டும்.
அரசும், ஜமாத்தும் இத்தனை முயற்சிகள் எடுத்தும் மக்கள் தங்களுக்கான நலத்திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள முன்வருவார்களா அல்லது வழக்கம் போல தூங்க செல்ல போகிறார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வியாழன், 19 நவம்பர், 2009
சிறுபான்மை நலத்திட்ட விளக்க விழா
மய்யத் செய்தி
மேட்டுத் தெரு, மர்ஹூம் எஹ்யா மரைக்காயர் அவர்களின் மகனாரும், மர்ஹூம் எஸ்.ஒய். சாய மரைக்காயர் அவர்களின் தம்பியுமான எஸ்.ஒய். முஹம்மது உஸ்மான் மர்ஹூம் ஆகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இன்ஷா அல்லாஹ் இன்று (19-11-09 வியாழன்) மாலை 4 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இன்ஷா அல்லாஹ் இன்று (19-11-09 வியாழன்) மாலை 4 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்
லேபிள்கள்:
இறப்புச் செய்தி,
செய்தி,
மய்யத்,
மய்யத் செய்தி,
மரண செய்தி,
மரணம்
செவ்வாய், 17 நவம்பர், 2009
மய்யத் செய்தி
வடுகர் தெரு மர்ஹூம் ஹஜ்ஜி முஹம்மது அவர்களின் மகனும், ஹஜ்ஜி முஹம்மது, ஷேக் அலாவுதீன், கஜ்ஜாலி, இமாம் ஆகியோரின் தகப்பனாரும், ஷேக் இஸ்மாயில் அவர்களின் மாமனாருமாகிய முஹம்மது இப்ராஹீம் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில்.
லேபிள்கள்:
இறப்புச் செய்தி,
செய்தி,
மய்யத்,
மய்யத் செய்தி,
மரண செய்தி,
மரணம்
பரங்கிப்பேட்டையில் 21 மி.மீ மழை
லேபிள்கள்:
நாளேடுகளில் நமதூர்
ரயில்வே பாதுகாப்பு படையில் வேலை வாய்ப்பு
லேபிள்கள்:
படை,
பாதுகாப்பு,
ரயில்வே,
வாய்ப்பு,
வேலை
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்
திங்கள், 16 நவம்பர், 2009
பரங்கிப்பேட்டை ஒன்றிய புயல் பாதுகாப்பு மையங்களுக்கு அடிப்படை வசதி
லேபிள்கள்:
நாளேடுகளில் நமதூர்
சனி, 14 நவம்பர், 2009
8ம் வகுப்பு தேர்வு: தனித்தேர்வர்கள் நவம்பர் 16 முதல் விண்ணப்பிக்கலாம்
லேபிள்கள்:
அறிவிப்பு,
தனித் தேர்வர்,
தேர்வு,
நவம்பர்,
வகுப்பு,
விண்ணப்பம்
வெள்ளி, 13 நவம்பர், 2009
உபைதுல்லாஹ் சாஹிப் அறக்கட்டளை சார்பாக ஊக்கப்படுத்தும் பரிசளிப்பு
அறிவியல் கண்காட்சிகள் என்பது மாணவர்களின் புத்தக அறிவிற்கு மாற்றாக விசாலமான அறிவினை வழங்குகிறது. பரங்கிபேட்டை அரசு பெண்கள் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சியில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவியர்களை ஊக்கப்படுத்தும் முகமாக உபைதுல்லாஹ் சாஹிப் அறக்கட்டளை சார்பாக சான்றிதழும் புத்தகங்களும் வழங்கப்பட்டன.
நேற்று பள்ளி துவங்கிய போது இவற்றை நமதூர் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் பேரூராட்சி மன்றத் தலைவர் M.S.முஹம்மது யூனுஸ்வழங்கினார்கள். அப்போது பேசிய பள்ளியின் தலைமை ஆசிரியர் K. ஸ்ரீனிவாச ராகவன் சமீபத்தில் நோபல் விருது பெற்ற அறிவியலாளர் (வேதியியல்) வெங்கடராமன் ராமகிருஷ்ணன் நமது சிதம்பரத்தை சேர்ந்தவர் என்பதில் நமக்கு ஒரு செய்தி உள்ளது என்றார்.
பிறகு பேரூராட்சி தலைவர் அறிவியல் கண்காட்ச்சிகளின் முக்கியம், அரசு அளித்து வரும் ஆதரவு பற்றி மாணவிகளிடையே உரையாற்றினார். பள்ளியில் பல்வேறு நலத்திட்டங்களை நிகழ்த்த தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரிடம் பேசி உள்ளதாக தெரிவித்தார்.
மாணவிகளை ஊக்கப்படுத்தும் முறையில் உபைதுல்லாஹ் சாஹிப் அறக்கட்டளை சார்பில் சான்றிதழும் புத்தகங்களும் வழங்கி உபைதுல்லாஹ் சாஹிப் அறக்கட்டளை பற்றி பாராட்டி பேசிய அவர், இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் நடைபெறும் அறிவியல் கண்காட்ச்சியினை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி தர உபைதுல்லாஹ் சாஹிப் அறக்கட்டளையின், சகோதரர் நஜீர் உபைதுல்லாஹ் விருப்பத்துடன் முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மாணவிகளை ஊக்கப்படுத்தும் இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்ரீனிவாச ராகவன் அவர்களின் தனிப்பட்ட முயற்சியும், பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் அவர்களின் ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பும், நஜீர் உபைதுல்லாஹ் போன்றோர்களின் தொண்டுள்ளமும் இதில் கவனிக்கப்பட வேண்டியவை.
மேலும் தமிழக அரசின் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. கண்ணாடிகள் தரமானதாகவும் நளினமாகவும் இருந்தன. இதனையும் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் பேரூராட்சி மன்றத் தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் வழங்கினார்
நமது சமுதாயத்தில் அறக்கட்டளைகள் மூலம் மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் முறைமைகள் இன்னும் அவ்வளவாக பிரபலமாகவில்லை. இந்நிலையில், சகோதரர் நஜீர் உபைதுல்லாஹ் அவர்கள் தனதுஉபைதுல்லாஹ் சாஹிப் அறக்கட்டளையின் மூலம் இந்த நன்முயர்ச்சியினை துவங்கி இருப்பது நல்லதோர் முன்னுதாரணம்.
இதனால் ஈர்க்கப்பட்டோ என்னமோ தெரியவில்லை ஒரு மாணவியின் பெற்றோர் ரூபாய் பதினைந்தாயிரம் தலைமை ஆசிரியரிடம் கொடுத்து வருடம்தோறும் பத்தாம் வகுப்பில் முதலிடம் பேரும் மாணவிகளுக்கு பரிசு வழங்க கேட்டு கொண்டார் என்ற தகவலை தலைமை ஆசிரியர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பரங்கிப்பேட்டை பாபா பள்ளி நிர்வாகிக்கு ராஜ கலைஞன் விருது
லேபிள்கள்:
நாளேடுகளில் நமதூர்
பரங்கிப்பேட்டை வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
லேபிள்கள்:
நாளேடுகளில் நமதூர்
பரங்கிப்பேட்டையில் வழக்கு முடிந்த பொருட்கள் ஏலம்
லேபிள்கள்:
நாளேடுகளில் நமதூர்
வியாழன், 12 நவம்பர், 2009
சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு
நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நவம்பர் 23ல் தொடக்கம்
லேபிள்கள்:
தொடக்கம்,
நகை,
நவம்பர்,
பயிற்சி,
மதிப்பீட்டாளர்
பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் விழா
லேபிள்கள்:
நாளேடுகளில் நமதூர்
கடலூர் மாவட்ட அனைத்திந்திய கூட்டுறவு வார விழா - 13ந் தேதி கட்டுரை, பேச்சு போட்டி
முஸ்லிம் மக்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்!
புதன், 11 நவம்பர், 2009
பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் முகத்துவாரம பொக்லைன் மூலம் ஆழப்படுத்தும் பணி
லேபிள்கள்:
நாளேடுகளில் நமதூர்
10ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
லேபிள்கள்:
தனித்தேர்வு,
முடிவு,
வகுப்பு,
வெளியீடு,
SSLC
மருத்துவம், கல்விக்கு கருணாநிதி அறக்கட்டளை உதவி
லேபிள்கள்:
அறக்கட்டளை,
உதவி,
கருணாநிதி,
கல்வி,
திமுக,
மருத்துவம்
லஞ்சமா? எஸ்.எம்.எஸ் பண்ணுங்க 94440 49224
லஞ்சமா?-எஸ்.எம்.எஸ். மூலம் சிபிஐக்கு தகவல் தரலாம்
லஞ்சம் வாங்குவோர் குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தரலாம் என பொதுமக்களுக்கு சிபிஐ அறிவித்துள்ளது.சி.பி.ஐ. அதிகாரிகளின் லஞ்ச வேட்டையில் இந்த ஆண்டு 65 அரசு அதிகாரிகள் சிக்கி உள்ளனர். இவர்களில் 14 பேர் எஸ்.எம்.எஸ். மூலம் வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தி சிக்கியவர்கள். லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் பற்றி எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் சொல்லலாம் என்று அறிவித்த பின்பு மக்களிடம் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
முன்பெல்லாம் சென்னை , கோவை, மதுரை, திருச்சி போன்ற பெரு நகரங்களில்தான் புகார்கள் அதிகம் வரும். ஆனால் தற்போது உசிலம்பட்டி உள்ளிட்ட பின் தங்கிய பகுதிகளிலிருந்தும் கூட புகார்கள் வருகின்றனவாம். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 600 நிறுவனங்களில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகளை கண்காணித்து வருகிறோம். இதில் 25 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும், 5 இன்சூரன்ஸ் நிறு வனங்களும் பொது துறை நிறுவனங்களும் அடங்கும். இந்த துறை சம்பந்தப்பட்ட ஒரு சில அலுவலர்களே சி.பி.ஐ.க்கு தகவல் தரும் நபர்களாக உள்ளனர். ரகசிய கண்காணிப்பில் உள்ள அதிகாரிகளை தொடர்ந்து உற்று நோக்கி வருகிறோம். இதன் காரணமாக லஞ்சத்தை ஒழிக்க முடியும். எஸ். எம்.எஸ். தகவல்கள் லஞ்ச அதிகாரிகளை பிடிப்பதற்கு பெரும் துணையாக உள்ளது என்று சி.பி.ஐ. உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மத்திய அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் பற்றிய விவரத்தை 28255899 என்ற தொலைபேசி எண்ணிலோ 94440 49224 என்ற செல்போன் எண்ணில் எஸ்.எம்.எஸ். மூலமாகவோ பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
லஞ்சம் வாங்குவோர் குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தரலாம் என பொதுமக்களுக்கு சிபிஐ அறிவித்துள்ளது.சி.பி.ஐ. அதிகாரிகளின் லஞ்ச வேட்டையில் இந்த ஆண்டு 65 அரசு அதிகாரிகள் சிக்கி உள்ளனர். இவர்களில் 14 பேர் எஸ்.எம்.எஸ். மூலம் வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தி சிக்கியவர்கள். லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் பற்றி எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் சொல்லலாம் என்று அறிவித்த பின்பு மக்களிடம் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
முன்பெல்லாம் சென்னை , கோவை, மதுரை, திருச்சி போன்ற பெரு நகரங்களில்தான் புகார்கள் அதிகம் வரும். ஆனால் தற்போது உசிலம்பட்டி உள்ளிட்ட பின் தங்கிய பகுதிகளிலிருந்தும் கூட புகார்கள் வருகின்றனவாம். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 600 நிறுவனங்களில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகளை கண்காணித்து வருகிறோம். இதில் 25 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும், 5 இன்சூரன்ஸ் நிறு வனங்களும் பொது துறை நிறுவனங்களும் அடங்கும். இந்த துறை சம்பந்தப்பட்ட ஒரு சில அலுவலர்களே சி.பி.ஐ.க்கு தகவல் தரும் நபர்களாக உள்ளனர். ரகசிய கண்காணிப்பில் உள்ள அதிகாரிகளை தொடர்ந்து உற்று நோக்கி வருகிறோம். இதன் காரணமாக லஞ்சத்தை ஒழிக்க முடியும். எஸ். எம்.எஸ். தகவல்கள் லஞ்ச அதிகாரிகளை பிடிப்பதற்கு பெரும் துணையாக உள்ளது என்று சி.பி.ஐ. உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
செவ்வாய், 10 நவம்பர், 2009
I.A.S தேர்வு எழுத இலவச கருத்தரங்கு
லேபிள்கள்:
இலவசம்,
கருத்தரங்கம்,
கருத்தரங்கு,
தேர்வு,
I.A.S
எலக்ட்ரீசியன் சான்றிதழ் பயிற்சி
லேபிள்கள்:
எலக்ட்ரீசியன்,
கல்வி,
சான்றிதழ்,
படிப்பு,
பயிற்சி
சவூதியில் டாக்டர்களுக்கு வேலைவாய்ப்பு
பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் அடிப்படை ஆதார பயிற்சி முகாம்
லேபிள்கள்:
நாளேடுகளில் நமதூர்
நோக்கியா நிறுவனம் வெளியிடும் அறிக்கை
பஸ் மோதி பரங்கிப்பேட்டை வாலிபர் பலி
லேபிள்கள்:
நாளேடுகளில் நமதூர்
திங்கள், 9 நவம்பர், 2009
கலைஞர் காப்பீட்டுத் திட்டம் - கண்காணிப்புத் துறை அதிகாரிகளின் விபரங்கள்
லேபிள்கள்:
அதிகாரி,
கண்காணிப்பு,
கலைஞர்,
காப்பீட்டுத் திட்டம்,
துறை
பரங்கிப்பேட்டை நகர முஸ்லிம் மக்கள் கழக நிர்வாகிகள் கூட்டம்
லேபிள்கள்:
நாளேடுகளில் நமதூர்
+ 2 தனித்தேர்வர் அனுமதி அறிவிக்கை
லேபிள்கள்:
+ 2,
அரசு,
அறிவிக்கை,
அனுமதி,
தனித் தேர்வு,
தனித்தேர்வர்,
மேல்நிலை
ஞாயிறு, 8 நவம்பர், 2009
B.M.ஹபீபுல்லாஹ் மரைக்காயர் நினைவு ஷாதி மஹால் திறப்பு விழா
B.M.ஹபீபுல்லாஹ் மரைக்காயர் நினைவு ஷாதி மஹால் திறப்பு விழா இன்று மாலை அசர் தொழுகைக்கு பிறகு சிறப்பாக நடைபெற்றது. B.M. இஸ்ஹாக் மரைக்காயர் அவர்களால் இந்த புதிய மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.
கலிமா K ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவினில் ஜமாஅத் தலைவர் முகம்மது யூனுஸ், அப்துல் ஹமீது மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பேசிய ஜாமியா மஸ்ஜித் மற்றும் அல் மத்ரசத்துல் மஹமூதியா நிர்வாகி A. முஹம்மது ஆரிப் அவர்கள் ஜாமியா மஸ்ஜித்ற்கும், அல் மத்ரசத்துல் மஹமூதியாவிற்கும் ஜனாப் மர்ஹும் B.M.ஹபீபுல்லாஹ் மரைக்காயர் அவர்கள் எவ்வாறெல்லாம் கனவு கண்டு பெரும் பாடு பட்டு உழைத்தார்கள் என்பதை கூறி அவர்களின் பெயர் இந்த மண்டபத்திற்கு வைக்கப்பட்டிருப்பதை பொருத்தமாக விளக்கினார்.
இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் உரையாற்றுகையில், இத்தனை மகத்தான பள்ளியினையும், மதர்சாவினையும், இந்த இரு மண்டபங்களையும் மறுமையில் கூலி என்பதை தவிர எந்த எதிர்பார்புகளும் இன்றி இத்தனை திறம்பட நிர்வகித்து வரும் நிர்வாகிகளை மனமார பாராட்டினார். இவர்களை போன்றவர்களை பாராட்டாமல் போனாலும், தொந்தரவு கொடுப்போர்களை பற்றி தான் வருத்தப்படுவதாக கூறினார்.
பிறகு பேசிய கும்மத் பள்ளியின் இமாம் M.S. காஜா முயினுத்தீன் அவர்கள் எண்ணங்களை பொறுத்தே எந்த செயலும் அமையும் எனும் ஹதீஸை கூறி மண்டபத்தின் உருவாக்கத்தில் உள்ள அனைவரின் நல்எண்ணங்களால் தான் இத்தனை பெரிய மண்டபமும், துணை மண்டபமும், அதன் சரியான நிர்வாகமும் நல்ல முறையில் சாத்தியமாகின்றன என்று கூறினார்.
அல் மத்ரசத்துல் மஹமூதியா முதல்வர் A. சித்திக் அலி அவர்கள் பேசுகையில் எந்த காரியம் பிஸ்மில்லாஹ் (அல்லாஹுவின் பெயர் கொண்டு துவங்கப்படவில்லயோ அதில் அபிவிருத்தி இருக்காது. இந்த மண்டபம் அல்லாஹுவின் மாபெரும் கருணையால் அல்லாஹுவின் திருப்பெயர் கொண்டு திறக்கப்பட்டதுடன் இதில் முதலாக நடந்த நிகழ்ச்சி ஹாஜிகளுக்கான பயான் நிகழ்ச்சி என்பதையும் அல்லாஹும்ம லப்பைக் என்ற முழக்கமே இந்த மண்டபத்தில் முதன்முதலில் கேட்டது என்றும் நெகிழ்வுடன் குறிப்பிட்டார்.
அல் ஹசனாத் மகளிர் அரபிக்கல்லூரி முதல்வர் S.I. அப்துல் காதர் அவர்கள் தனது உரையில் எந்த நல்ல செயலுக்கும் அதை தொடர்ந்து நன்மைகள் அதை துவக்கியவருக்கு வந்து சேர்ந்து கொண்டிக்கும் என்று கூறிவிட்டு இந்த மதரசாவினை உருவாக்கியவர்கள் இந்த நல்ல காரியம் தொய்வில்லாமல் நடக்க வேண்டும் என்பதற்காக அதன் பொருளாதார நலன்களுக்காக ஷாதி மஹால் எனும் மண்டபத்தை வருமானம் தரும் வகையில் உருவாக்கியது தான் மிகபுத்திசாலித்தனமான காரியம் என்றார். இந்த மாணவரகள் பிற்காலத்தில் குரான் ஹதீஸை போதிக்கக்கூடிய சிறந்த ஆலிம்களாக பரிணமிக்க எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்.
தௌலத்துன்னிசா மகளிர் அரபிக்கல்லூரி முதல்வர் M. அப்துல் காதர் உமரி அவர்கள் மதரசாவின் முக்கியத்துவத்தை பற்றியும் பேசினார்.
நிர்வாகிகள் நிகழ்ச்சியை மிகவும் கச்சிதமாக அசர் முதல் மக்ரிப் வரை திட்டமிட்டு மிக சரியாக முடித்தது குறிப்பிடத்தக்கது. வந்திருந்தவர்களுக்கு இனிப்பு காரம் காபி வழங்கப்பட்டது. மக்ரிப் தொழுகை அழைப்பிற்கு சற்று முன்னதாகவே முத்தவல்லி பஷீர் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறியதுடன் விழா இனிதே நிறைவுற்றது.
அகல ரயில்பாதை திட்டத்தால் பரங்கிப்பேட்டை ரயில் நிலையம் ரத்து
லேபிள்கள்:
நாளேடுகளில் நமதூர்
பரங்கிப்பேட்டையில் ஊரக விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
லேபிள்கள்:
நாளேடுகளில் நமதூர்
பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் பயிற்சி மையங்களை கூடுதல் இயக்குநர் ஆய்வு
லேபிள்கள்:
நாளேடுகளில் நமதூர்
கருத்து சொல்லலாம் வாங்க - பரிசுப் போட்டி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...