திங்கள், 28 பிப்ரவரி, 2011

இறப்புச் செய்தி

ஆத்தாங்கரை தெருவை சேர்ந்த, மர்ஹும் செய்யது நூர் அவர்களின் மகளாரும்,மர்ஹும் S.சேக் முஹம்மது அவர்களின் மனைவியும், S.M.ஜலீல் அவர்களின் தாயாருமாகிய ஹாஜியா.செய்யது நிஷா பீவி அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள் இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் சிங்கப்பூரில்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

போலியோ ‌சொட்டு மருந்து வழங்கப்படுகிறது

தமிழகம் முழுவதும் இன்று இரண்டாம் கட்ட போலியோ ‌சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. சுமார் 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் செட்டு மருந்து வழங்கப்படுகிறது

சனி, 26 பிப்ரவரி, 2011

விருப்ப மனு தாக்கல்

தமிழகத்தின் 14-வது சட்டமன்ற தேர்தலுக்காக பல்வேறு அரசியல் கட்சிகளும், கூட்டணி தொடர்பாக முனைப்பாக பணியாற்றி வருகின்றன.இந்நிலையில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் போட்டியிடும் தனது கட்சியினரிடமிருந்து விருப்ப மனுவினை நேற்று முதல் மார்ச் 7-வரை பெற திட்டமிட்டுள்ளது.


முதல் நாளான நேற்று சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்காக பரங்கிப்பேட்டையிலிருந்து கடலூர் மாவட்ட தி.மு,க பிரதிநிதியும், பரங்கிப்பேட்டை நகர இளைஞரணி அமைப்பாளருமான A.R.முனவர் ஹுசேன், பரங்கிப்பேட்டை ஒன்றிய பிரதிநிதியும், 10-வது வார்டு செயலாளருமான M.K. பைசல் யூசுப் அலி ஆகியோர் விருப்ப மனுவினை தி.மு.க தலைமைக்கழகமான அண்ணா அறிவாலயத்தில், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ஹஸன் முஹம்மது ஜின்னா உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகளிடம் சமர்ப்பித்தனர்.  A.R.முனவர் ஹுசேன் கடந்த முறை புவனகிரி தொகுதிக்காக விண்ணப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியின் போது நகர தி.மு.க செயலாளர் பாண்டியன், ஒன்றிய பிரதிநிதி கோமு, நகர இளைஞரணி துணை அமைப்பாளர் வேலவன், சேக் அப்துல் ரஹ்மான், ஹாஜா, நெய்னா, யாசீன், சலீம், அப்துல் காதர், ஆரிப், பக்ருதின், சாஹுல் ஹமீது உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர். 


--
அண்ணா அறிவாலய வளாகத்திலிருந்து mypno.com செய்திக்காக ஹம்துன் அப்பாஸ்.

பரங்கிப்பேட்டை அ.தி.மு.க.வினர் கொண்டாடிய ஜெயலலிதா பிறந்தநாள்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை நகர அ.தி.மு.க.சார்பில் ஜெய லலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு நகர செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார்.
விழாவில் புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வி ராமஜெயம் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார். விழாவில் நகர தலைவர் மலைமோகன், நகர இளைஞரணி செயலாளர் சங்கர், வார்டு செயலாளர்கள் சம்பந்தம், மாரியப்பன், மாவட்ட பிரதிநிதிகள் ஷாஜகான், குமார், இளைஞரணியை சேர்ந்த பிரபு, மணி, முகமது இக்பால், சக்ரவர்த்தி, அருள் ராஜன், மாலிமார், மாரியப்பன், குணசேகரன், ராமச்சந்திரன், முகமது காமில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரசு ஆண்கள் பள்ளியின் முப்பெரும் விழா

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் 94- வது ஆண்டு விழா, இலக்கிய மன்ற விழா மற்றும் விளையாட்டு போட்டி விழா நேற்று நடைபெற்றது. இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவரும் பேரூராட்சி மன்ற தலைவருமான முஹமது யூனுஸ் தலைமையில் தொடங்கிய இந்த ஆண்டுவிழாவில், பள்ளியின் தலைமையாசிரியர், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் செழியன் முன்னிலை வகித்தனர்.
பள்ளியின் 94-வதுஆண்டு விழா உடன் இலக்கிய மன்ற மற்றும் விளையாட்டுப் போட்டி விழாவினை உள்ளடக்கி முப்பெரும் விழாவாக நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கும் இலக்கிய மன்ற போட்டிகளில் பங்குபெற்ற மாணவர்களுக்கும் விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் பான்மல், த.மு.மு.க. நிர்வாகி ஆரிப், மலைமோகன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஜமாஅத் நிர்வாகிகள் உட்பட பள்ளி மாணவர்கள் பெரும்பாலோனோர் மற்றும் பெற்றோர்கள் கலந்துக் கொண்டனர்.


புகைப்படம்: நன்றி PNO.NEWS

ஜமாஅத்துடன் லயன்ஸ் கிளப் இணைந்து நடத்திய இலவச இரத்ததான முகாம்

பரங்கிப்பேட்டை: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்துடன் இணைந்து பரங்கிப்பேட்டை லயன்ஸ் சங்கம் சார்பில் இரத்ததான முகாம் ஹபீபுல்லாஹ் மரைக்காயர் நினைவு ஷாதி மஹாலில் நேற்று நடைபெற்றது. லயன்ஸ் சங்க நிர்வாகி இராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த இம்முகாமை பேரூராட்ச்சி மன்ற தலைவரும் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவருமான முஹமது யூனுஸ் துவக்கிவைத்தhர் கலிமா. சேக் அப்துல் காதர் மரைக்காயர், மரு. சரவணகுமார், காதர் அலி மரைக்காயர், வெங்கடேசன், புருஷோத்த்மன், மற்றும் பலர் இந்த இரத்ததான முகாம் துவக்க நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.


புகைப்படம்: C.W.O.

புதன், 23 பிப்ரவரி, 2011

வாத்தியாப்பள்ளி தெரு சாலை...!


நேற்று பெய்த திடீர் மழையின் காரணமாக தடைப்பட்டிருந்த வாத்தியாப்பள்ளி தெரு தார் சாலை அமைக்கும் பணி இன்று காலை முதல் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.



பரங்கிப்பேட்டையில் மார்க்கக் கல்வி பயிலும் பெண்களுக்கு உதவித் தொகை

தகவல் உதவி: ஜமாஅத் குழுமம்

பரங்கிப்பேட்டையில் இரத்ததான முகாம்


இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் பரங்கிப்பேட்டை லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்தும் இரத்ததான முகாம் நாளை (24-02-11)ல் B.M.ஹபீபுல்லாஹ் மரைக்காயர் நினைவு ஷாதி மஹாலில் நடைப்பெருகிறது.
Ln. Agri.M.இராதாகிருஷ்ணன் விழாவுக்கு தலைமைதாங்குகிறார்
,Ln.ஹாஜி.M.S.முஹம்மது யூனுஸ் (தலைவர் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்,மற்றும் பேரூராட்ச்சி மன்றம்) அவர்கள் முகாமை துவக்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார்.மற்றும் ஹாஜி. கலிமா.K.சேக் அப்துல் காதர் மரைக்காயர், Dr.P.சரவணகுமார், Ln.காதர் அலி மரைக்காயர், Ln.G.வெங்கடேசன், Ln. புருஷோத்த்மன். அகியோர் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பிக்கிறார்கள்

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

பள..பளக்கும் சிமெண்ட் சாலைகள்..!


பரங்கிப்பேட்டை நகரில் பல்வேறு இடங்களில் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைப்பெற்று முடிவடைந்து வருகிறது. காஜியார் தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை ஜமாஅத் - பேருராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் நேற்று பகல் பார்வையிட்டார். இதனிடையே வாத்தியாப்பள்ளி தெரு தார் சாலை பராமரிப்பு பணிகளுக்காக சாலையின் ஓரங்களில் இருந்த மணல் அள்ளப்பட்டு பணி துவங்க இருந்த நிலையில் இன்று காலை முதல் பெய்து வரும் மழையின் காரணமாக அப்பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


இறப்புச் செய்தி


  1. கோட்டாத்தாங்கரை சந்தில், மர்ஹும் நூர்தீன் மரைக்காயருடைய மகளாரும், மர்ஹும் ஹாஜா,   முஹம்மது சுல்தான், முஹம்மது கவுஸ் இவர்களின் தாயாரும்,  மர்ஹும் அமீர் வாத்தியாருடைய மனைவியுமான ஹலிமா பீவி மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷh அல்லாஹ் இன்று காலை 10 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்
 பரங்கிப்பேட்டை பாரக் வீடு மர்ஹும் ஹனீபா அவர்களின் மருமகனும், செய்யது அமீன் அவர்களின் தகப்பனாருமாகிய செய்யது உமர் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்சா அல்லாஹ் இன்று காலை 10 மணிக்கு நல்லடக்கம் சிதம்பரம் வண்டிகேட்டில்.

திங்கள், 21 பிப்ரவரி, 2011

கேன்சர்: அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டியவைகள்

நீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை
மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNS HOPKINS) சொல்கிறார். இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்திலுருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:

1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண
டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள
வேண்டும்.

2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.

3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர்
(tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.

4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து குறைபாடு (nutritional
deficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறை
காரணிகளாகிறது.

5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும்
குடல், கிட்னி, இதயம், மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது

7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள்,
திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது.

8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின் (tumor) அளவைக் குறைக்க செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை
கேன்சர் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவுவதில்லை.

9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு மூலம் நோய் எதிர்ப்பு
சக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது அழிக்கப் பட்துவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.

10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள் எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள் மற்ற இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது.

11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.

12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக நேரமும் எடுத்துக்
கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.

13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனது
சக்தியை கேன்சர் செல்லின் கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own killer cells) கேன்சர் செல்லை அழிக்க உதவியாகிறது.

14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs etc, போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body's own killer cells) மூலம் கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட, தேவையற்ற செல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது. (Other supplements like vitamin E are known to cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing of damaged, unwanted, or unneeded cells)

15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! நேர்மறையான,
ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது. எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும், ஆசுவாசப்படுத்திகொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!

16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.


உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்:-

1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை
தவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு தவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal, Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table Salt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg's amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல் (gastro-intestinal)
பகுதியில். சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.

3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான
உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது. எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவு சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது, இது மிகவும் ஆபத்தானது..

4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள்,
பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள
நொதிகளை அளிக்கிறது, இவை 15 நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது. ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes) 104 degrees F (40 degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.

5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்கு மாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர்
செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரை தவிர்த்து விடவும். Distilled water is acidic, avoid it.

நன்றி: ஜலீலா கமால்

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

நல்லா கௌப்புனாங்க பீதிய...!

நேற்று இரவு 8 மணி முதல் பரங்கிப்பேட்டை முழுதும் பரபரப்பான செய்தி பரவ, அனைவரும் வானத்தை நோக்கி முழுநிலவில் எதையோ தேடிக் கொண்டிருந்தார்கள். சிலர், 'அட! ஆமாங்க, தெரியுதுங்க!' என்கின்றனர். சிலர், 'எனக்கு ஒன்னுமே தெரியலயே...!' என்கிறன்றனர். 'அட நல்லா உத்து பாருங்க... கிளியரா தெரியுது' என்று வேறு சிலர்.

ஆண்களைவிட பெண்கள் முந்திக்கொண்டு, வீட்டு வாசல்களுக்கும் - மொட்டை மாடிக்கும் சென்று நிலாவுக்கு செல்லாமலேயே தங்கள் ஆராய்ச்சியை துவங்கிவிட்டனர்.

அவர்கள் நோக்கும் விசயம் தெரிகிறதோ இல்லையோ செய்தி மட்டும் மொபைல் போன் மூலமாக காட்டுத்தீ போல பரவுகிறது. இரவு 10 மணியை கடந்தும் சுமார் 11 மணிவரை இந்த நிலாவில் படம் பார்க்கும் படலம் நீடித்தது.

அப்படி என்னதான் என்று கேட்கின்றீர்களா? ஒன்னுமில்ல! 'இத்தனை காலமாக நிலாவில் பாட்டி வடை சுட்ட விசயத்தை விட்டு விட்டு நேற்று அந்த நிலாவில் அல்லாஹ்வின் பெயர் தெரிகிறது என்று யாரோ ஒரு வதந்தியை பரப்பி, பீதிய கௌப்பிட்டாங்க!

சனி, 19 பிப்ரவரி, 2011

அலைந்து திரிந்து வேலை செய்றது யாரு?

பரங்கிப்பேட்டை குட்டியாண்டவர் கோயில் அருகே நேற்று நிகழ்ந்த விபத்தில் மூவர் பலியானதுடன் 20க்கும் மேற்போட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை முதலுதவி சிகிச்சையக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டனர்.

பரப்பரப்பான அந்த நிமிடங்களில் ஜமாஅத் தலைவரும் பேரூராட்சித் தலைவருமான முஹமது யூனுஸ், த.மு.மு.கவினர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தினர், பொதுமக்கள் பலர் உடனே ஆஜராகிவிட்டனர். முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவர் பார்த்தசாரதியும் உடனே வந்துவிட்டார்.



அடுத்தகட்ட சிகிச்சைக்காக ஜமாஅத் ஆம்புலன்ஸூம் தயார் நிலையில் இருந்த போது, அவசரம் கருதி தன்னுடைய வாகனத்தையும் காயம்பட்டவர்களை வெளியூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தந்துவிட்டார் பேரூராட்சித் தலைவர். இந்த தருணத்தில், காயம் அடைந்தவர்களின் உறவினரான வெளியூர்காரர் ஒருவர் கேட்டார், 'யாருங்க அவர்? அங்கயும் இங்கயும் அலஞ்சி திரிஞ்சி வேல செய்யுறாரே??' என்று.

அதற்கு, மெயின்ரோடு பகுதியை சார்ந்த இன்னொருவர், 'அவர் எங்க ஊரு பஞ்சாயத்து போர்டு தலைவரு, முஸ்லிம்ட ஜமாத்து தலைவரும் அவர்தான்' என பதிலளித்தார்.

மீண்டும் அந்த வெளியூர்காரர், 'அட! அப்படியா!! பரவாயில்லயே!' என்று ஆச்சரியத்துடன் கூறியபோது, 'இந்த ஊர்ல நாங்க எல்லாரும் அண்ணன்-தம்பியாத்தான் ஒத்துமையுடன் பழகுறோம்' என்று பதில் கூறிய போது, அந்த உறவினர் பதில் ஏதும் கூறாமல் நெகிழ்ச்சி கலந்த புண்முறுவலுடன் 'அட அப்படியா என்பதுபோல் தலையசைத்து நகர்ந்தார்.

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

பரங்கிப்பேட்டையில் சாலைமறியல்..







பரங்கிப்பேட்டை அருகே இன்று நடைப்பெற்ற சாலைவிபத்தின் காரணமாக சஞ்சிவிராயர் கோயில் அருகே இன்று மாலை விடுதலைசிறுத்தைக்கட்சி சார்பாக சாலைமறியல் நடைப்பெற்றது.

அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாமல்இருப்பதை கண்டித்தும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்ககோரியும்,மருத்துவமனையில்,ஓன்றுக்கு மேற்பட்ட மருத்துவர்களை நியமிக்கசொல்லி விடுதலைசிறுத்தைக்கட்சியினர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.இதன்காரணமாக போக்குவரத்து சிறிதுநேரம் பாதிக்கப்பட்டது.காவல்துறையினர் சமாதானம் செய்ததை அடுத்து மறியல்கைவிடப்பட்டது.

பரங்கிப்பேட்டையில் விபத்து: இருவர் பலி; 25 பேர் காயம்

மாசிமக தீர்த்தவாரியை முன்னிட்டு புவனகிரி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்களை C.புதுப்பேட்டை கடற்கரைக்கு அழைத்துசென்ற தனியார் வாகனம் பரங்கிப்பேட்டை கடலூர் சாலையில் (குட்டியாண்டவர் கோயில்) அருகே விபத்துக்குள்ளானது. புதுப்பேட்டை கடற்கரையிலிருந்து ஊருக்கு திரும்பிசென்ற வேன் சாலையில் சென்றுக்கொண்டிருக்கும் போது சாலையை கடக்கமுயன்ற ஆட்டின் மீது மோதாமலிருக்க திருப்பும்போது அருகிலிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.


இந்தவாகனத்தில் அளவுக்கு அதிகமாக பயணிகளைஏற்றிய்யும்,வேகத்துடனும் சென்றதாக சம்பவஇடத்தில் இருந்தவர்கள் தெரிவித்தார்கள். இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.25க்கும்,மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.அவர்கள் அனைவரும் பரங்கிப்பேட்டை அரசுமருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டனர்.காயமடைந்தவர்களை கடலூர்க்கு கொண்டுச்செல்ல "இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் பேரூராட்சி தலைவர். M.S.முஹம்மது யூனுஸ் தனது வாகனத்தை தந்து உதவியதோடு ஜமாஅத் ஆம்புலன்ஸ், மற்றும் தனியார் வாகனங்களையும். ஏற்பாடுசெய்தார்.இந்த விபத்தின்போது காயமடைந்தவர்களை கடலூர் மருத்துவமனைக்குகொண்டுச்செல்லும் பணிகளில் நமது சமுதாய இயக்கங்கள் எப்போதும்போல் பாடுப்பட்டன. 

புதன், 16 பிப்ரவரி, 2011

இறப்புச் செய்தி

காயிதேமில்லத் நகர், மர்ஹும் ஹக்கீம் முத்து (எ) அப்துல் ரஜ்ஜாக் அவர்களின் பேரனும் மரைக்கார் என்கிற வாப்பாதுரை மரைக்காயர் அவர்களின் மகனாருமாகிய தஸ்தகீர் அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று (16-02-2011) மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் வாத்தியா பள்ளியில்.... இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வெளிநாட்டு வாழ் தமிழர் நலக் குழுமம் - மசோதா சட்டமன்றத்தில் தாக்கல்!


வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு உதவ புதிய குழுமம் ஒன்றை ஏற்படுத்த வகை செய்யும் சட்ட முன் வடிவு (Draft) சட்டமன்றத்தில் வியாழக்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் கருணாநிதி சார்பில் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:

"வரலாற்றின்படி தமிழர்கள் வணிகத்தின் பொருட்டும் படையெடுப்பின் பொருட்டும் குடியமர்வின் பொருட்டும் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர். பொருளாதார காரணங்களுக்காகவும் பொருளாதாரம் உலகமயமாக்கப்பட்டதன் காரணமாகவும் வேலை தேடி அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் அயல்நாடுகளுக்கும் தொடர்ந்து இடம் பெயர்ந்து சென்று கொண்டு இருக்கின்றனர்.

இதன் காரணமாக அவர்களின் உறவினர்கள் பல்வேறு தாக்கங்களுக்கு உள்ளாகின்றனர். தமிழ்நாட்டை வாழ்விடமாக அமைத்துக் கொள்ளாத, வேலையில் இருக்கும்போதும் அதற்கு பிறகும் தாயகத்திலும் வெளிநாட்டிலும் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் குறித்த பிரச்சினைகளையும், சட்ட பிரச்சினைகளையும் எதிர்கொள்கின்றனர்.

தமிழ்நாட்டில் குறைந்த வருவாய் பெற்று வந்து வெளிநாட்டில் வளமான எதிர்காலத்தை நோக்கி செல்ல தன்னைச் சார்ந்து இருப்பவர்களை தமிழ்நாட்டில் விட்டுவிட்டு வேலை தேடிச்செல்வோர் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். இதற்கு அவர்களால் தீர்வு காணவும் முடியவில்லை.

எனவே தமிழ்நாட்டை வாழ்விடமாக அமைக்காத தமிழர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் சமூகப் பாதுகாப்பு வழங்குவது முக்கிய கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகிறது.

வெளிநாட்டில் இறக்கும் தமிழர்களின் உடல்களைத் தாயகத்துக்குத் திருப்பி அனுப்ப தேவைப்படும் நிதிஉதவி வழங்குவதோடு, அதன்பின்னர் வழங்கப்பட வேண்டிய உரிமைகளைத் தீர்வு செய்தாலும் தமிழர்கள் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாகும். இந்தக் குறைகளைத் தீர்க்கவும், அவர்கள் தொடர்பு கொள்வதற்குத் தமிழக அரசின் கீழ் தனியாக ஒரு அமைப்பு இல்லாத பெரிய குறையாக உள்ளது.

எனவே வெளிநாடு, வெளிமாநிலத்தில் வசிக்கும் தமிழர்களின் நலனுக்காக ஒரு செயல் திட்டத்தை உருவாக்கி அதன்கீழ் ஒரு நலநிதியத்தை ஏற்படுத்தி அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி நிர்வகிக்க ஒரு குழுமத்தையும் நிறுவ உள்ளோம். இந்த நோக்கத்திற்காக அரசு ஒரு சட்டத்தைக் கொண்டு வருவது என முடிவு செய்துள்ளது."

இவ்வாறு சட்ட முன் வடிவில் கூறப்பட்டு உள்ளது.
நன்றி: இந்நேரம்.காம்

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

தெரு வலம்...

சில பத்து வருடத்திற்கு முன்னெல்லாம் பரங்கிபேட்டையில் பொதி மணல் தெருக்கள் தான். மழை காலங்களில் தெருக்களில் சாக்லேட் குளங்கள் நிறைய காணப்படும். நாம் எப்படியெல்லாம் ஜாக்கிரதையாக சென்றாலும் கரை நல்லது என்று நம்மேல் சேறு தெளித்து அழகு பார்க்கும்.

இப்போது எங்கு பார்த்தாலும் சிமென்ட் தெருக்கள்தான். அரை மாடி உயரம் உள்ளது, இரு பக்கங்களிலும் மணல் அடிக்கப்படவில்லை, போன்ற சில குறைகள் சொல்லப்பட்டாலும், நமதூர் பைக் பிள்ளைகள் அதில் வீலிங்கும் ரேசிங்கும் நன்றாகவே பழகினார்கள். (ஒரு தெருவுக்கு 428 ஸ்பீட் ப்ரேக் இருப்பது வேறு தனிக்கதை).

பல சிமென்ட் தெருக்கள் நன்றாக இருந்தாலும் கோட்டாத்தாங்கரை தெரு, நகுதா மரைக்காயர் தெரு உள்ளிட்ட பல தெரு சாலைகள் தங்களுக்காக வழங்கப்பட்ட கமிஷன்களுக்கு விசுவாசமாக நன்றாக பல்லிளித்து காட்டிக்கொண்டுள்ளன.

இந்நிலையில் சமீபத்திய மழை வந்து சிதைத்து விட்டு போன பல (சின்னத்தெரு, உள்ளிட்ட) தெருக்களில் சாலைகள் சீர் செய்யும் பணி கிட்டத்தட்ட முடிந்து விட்டது. அவை போட்டோக்களாய்...





மேலும், நெடுநாள் கழித்து ராயல் தெரு ( கிதர்சா மரைக்காயர் தெரு) புதிய சிமின்ட் சாலை போடப்பட்டு வருகிறது. இத்ரிஸ் நகர் மற்றும் அதை சார்ந்த தெருக்கள் புதிய தரமான சாலைகள் போடப்பட்டு மின்னுகின்றன.

காஜியார் தெருவில் மிச்சமிருக்கும் பகுதியில் சாலையின் மேல் படிந்துள்ள மணலை பொக்லைன் இயந்திரம் கொண்டு கோரி எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. என்ன செய்து என்ன? உலகிலேயே மிகவும் பிசியான, ஆனால் பொறுமைசாலியான மக்கள் நம் மக்கள்.

தெருக்களில் சிமண்ட் தரை போட்டு இன்னும் ஈரம் காயாத நிலையில் தங்கள் வாகன டயர்களின் அச்சுக்களை வரலாற்றின் பொன்னேடுகளில் பதித்து விடும் மும்முரத்தோடு புதிய சாலைகளில் ஓட்டி பழகப்போய் சாலைகளில் நெளிவும் சுளிவுமாய் கோடுகள் வாகன ஓட்டிகளை கீழ் சாய்க்கப்பார்க்கின்றன.

ஆக்கம்: L. ஹமீது மரைக்காயர்

இஸ்லாமிய பெண்களுக்கான மார்க்க விழிப்புணர்வு கூட்டம்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை மஹ்மூதியா ஷாதி மஹாலில் இஸ்லாமிய பெண்களுக்கான மார்க்க விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. ஹெச். லியாகத் அலி தலைமையிலும் எம். ஜெய்னுல்லாபுதீன் முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் மண்ணறை வாழ்க்கை என்கிற தலைப்பில் கோவை ஜாக்கிரும், நபித்தோழர்களின் வாழ்க்கை வரலாறு என்கிற தலைப்பில் திருச்சியை சார்ந்த மீரான் மெய்தீனும் சிறப்புரையாற்றினார்கள்.


பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சிக்கு ஆண்களுக்கும் தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. இதில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் முஹமது யூனுஸ் மற்றும் மீராப்பள்ளி நிர்வாகிகள் உட்பட ஆண்களும் பெண்களும் பலர் வருகை புரிந்தனர்.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சித்துறையினர் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இணைச் செயலர் செல்வராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சதீஷ்குமார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.இணைச் செயலர்கள் சீனுவாசன், இப்ராஹிம், மக்கள் நலப் பணியாளர் சங்கத் தலைவர் ராஜவேல், ஊராட்சி உதவியாளர் சங்கத் தலைவர் மதியழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

இறப்புச் செய்தி

ஹக்கா சாஹிப் தெரு, மர்ஹூம் ஹாஜி முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மகனாரும், மெய்தீன் அப்துல் காதர், கேப்டன் ஹமீது அப்துல் காதர், சுல்தான் அப்துல் காதர் இவர்களின் சகோதரரும், ஹாஜி (எ) முஹம்மது அப்துல் காதர், செல்லத்தம்பி (எ) அஹமது மெய்தீன் இவர்களின் தந்தையும், அபுல் ஹசன் (சாதலி)யின் மாமனாருமாகிய ஹாஜி. ஷேக் அப்துல் காதர் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு மீராப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

வியாழன், 3 பிப்ரவரி, 2011

கடலூர் மாவட்டத்தில் 9ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்குகிறது

மாவட்டம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி வரும் 9ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை நடக்கிறது. 4,161 கள பணியாளர்கள், 681 மேற்பார்வையாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.

நாடு முழுவதும் ஒழுங்குமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 1871ம் ஆண்டு முதல் துவங்கி, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடந்து வருகிறது.

கடந்த 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கடலூர் மாவட்டத்தில் 11 லட்சத்து 50 ஆயிரத்து 908 ஆண்களும், 11 லட்சத்து 34 ஆயிரத்து 487 பெண்களுமாக மொத்தம் 22 லட்சத்து 85 ஆயிரத்து 395 பேர் உள்ளனர்.

தற்போது 2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நாடு முழுவதும் வரும் 9ம் தேதி முதல் துவங்கி, 28ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் இப்பணிக்கு 4,161 களப்பணியாளர்களும், 681 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதல் கட்டமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் வீடுகள் கணக்கெடுக்கும் பணி முடிந்து, மாவட்டம் முழுவதும் 6 லட்சத்து 48 ஆயிரத்து 5 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்டமாக வரும் 6, 7, 8ம் தேதிகளில் கணக்கெடுப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட களப்பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் அவரவர்களுக்கு வழங்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு மக்கள் தொகையை கணக்கெடுப்பதற்கு ஏதுவான வரைபடம் தயார் செய்ய உள்ளனர்.

பின்னர் 9ம் தேதி முதல் 28ம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபடுவர். அதில் படிவத்தில் உள்ள 29 கேள்விகளின் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுவர். அப்போது ஏற்கனவே விடுபட்ட வீடுகளின் விவரங்களையும் சேர்த்து செக்ஷன் 3 படிவத்தில் பூர்த்தி செய்வர்.

28ம் தேதி இரவு பஸ் நிலையம், கோவில்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தங்கியுள்ளவர்களின் விவரம் குறித்து கணக்கெடுக்கப்படும். இதன் பிறகு மார்ச் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை மறு ஆய்வு செய்யப்பட்டு, முடிவுகள் மார்ச் 6ம் தேதி அனுப்பப்படும். அதன் பின்னர் மார்ச் 21ம் தேதி மக்கள் தொகை குறித்த முழு விவரம் நாடு முழுவதும் வெளியிடப்படும்.

சேகரிக்கும் விவரங்கள்... :

  1. பெயர்
  2. குடும்பத் தலைவருக்கு உறவுமுறை
  3. இனம்
  4. பிறந்த தேதி
  5. திருமண நிலை
  6. திருமணத்தின் போது வயது,
  7. மதம்
  8. எஸ்.சி., எஸ்.டி., பிரிவைச் சேர்ந்தவரா
  9. மாற்றுத் திறனாளியா
  10. தாய்மொழி
  11. அறிந்த பிறமொழிகள்
  12. எழுத்தறிவு நிலை
  13. கல்வி நிலையம் செல்பவரா
  14. அதிகபட்ச கல்வி
  15. கடந்தாண்டு வேலை செய்தவரா
  16. பொருளாதார நடவடிக்கை வகை
  17. தொழில்
  18. தொழில் (அ) வியாபார நிலை
  19. வேலை செய்பவரின் வகை
  20. பொருளீட்டா நடவடிக்கை
  21. வேலை தேடுகிறவரா (அ) வேலை செய்பவரா
  22. பணிக்கு பயணம் செய்யும் முறை
  23. பிறந்த இடம்
  24. கடைசியாக வசித்த இடம்
  25. இடப் பெயர்ச்சிக்கு காரணம்
  26. இடப் பெயர்ச்சிக்கு பின் வசிக்கும் காலம்
  27. உயிருடன் வாழும் குழந்தைகள்
  28. உயிருடன் பிறந்த குழந்தைகள்
  29. கடந்த ஆண்டில் உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை
உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

Source: Dinamalar

புதன், 2 பிப்ரவரி, 2011

கடலூர் மாவட்ட பேரூராட்சிகளில் "கான்கிரீட்" வீடு கணக்கெடுப்பு பணி துவக்கம்

கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்காக பேரூராட்சியில் கணக்கெடுப்புப் பணி துவங்கப்படவுள்ளது.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2011 முதல் 2016 வரையுள்ள 5 ஆண்டு காலங்களில் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பேரூராட்சிகளில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தினை செயல்முறைப்படுத்துவதற்காக, குடிசை வீடுகள் கணக்கு எடுக்கப்பட உள்ளது.

இம்மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் அமைந்துள்ள குடிசை வீடுகளின் சுவர்கள் எத்தகையதாக இருப்பினும், அனைத்து ஓலை கூரைகள் உள்ள குடிசை வீடுகளும் கணக்கெடுக்கப்படும்.

ஒவ்வொரு பேரூராட்சி பகுதியில் உள்ள குடிசை வீடுகளை கணக்கெடுக்கும் பணி அந்தந்த பேரூராட்சி செயல் அலுவலரின் மேற்பார்வையில் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் இன்று முதல் வரும் 10ம் தேதி வரை ஒவ்வொரு வார்டு வாரியாகவும், வார்டில் உள்ள தெருக்கள் வாரியாகவும் மேற்கொள்ளப்படும்.

இந்த விரைவான கணக்கெடுப்பு பணியினை மேற்கொள்ள பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி கணக்கெடுப்புப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடிசையின் உரிமையாளர், வசிப்பவர்கள் பின்னணியில் குடிசை உள்ளவாறு குடிசையையும் சேர்த்து கணக்கெடுப்பாளர்களால் புகைப்படம் எடுக்கப்படவுள்ளது.

கணக்கெடுக்கும் பேரூராட்சி பணியாளர்கள் தங்கள் பகுதிக்கு வருகை தரும்போது கணக்கெடுப்பு பணிக்கு தகவல்கள், ஆவணங்களை கொடுத்து கணக்கெடுப்பு முழு அளவில் நடைபெற ஒத்துழைப்பு நல்கிட பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source: Dinamalar - Photo: MYPNO

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

கடலூர் : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தம் செய்யவும் விண்ணப்பிக்கலாம்.

கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

எதிர்வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலை தொடர் சுருக்க முறை திருத்தப் பணி மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதனையொட்டி மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் பட்டியில் பெயர் விடுபட்டவர்கள், தொகுதி மாற்றம், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் உரிய படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

படிவங்களை அந்தந்த பகுதிகளில் உள்ள நகராட்சி மேலாளர், தாலுகா அலுவலகங்களில் தலைமையிட துணை தாசில்தார் அல்லது ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளர்களிடம் தேர்தல் அறிவிப்பு வெளியாகி, வேட்பு மனுத்தாக்கல் முடிவதற்கு 10 நாட்களுக்கு முன்பு வரை கொடுக்கலாம் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: Dinamalar

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...