வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

இறப்புச் செய்தி

முத்தைய முதலியார் தெருவில் மர்ஹும் கருப்பு மஸ்தான் அவர்களின் மகளாரும், முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மனைவியும், தம்பி என்கிற அப்துல் ஹமீத் அவர்களின் தாயாருமாகிய அம்மா பொண்ணு என்கிற மீரா ஹுசைன் பீ மர்ஹும் ஆகிவிட்டார்கள் இன்ஷா அல்லாஹ் நாளை (29-08-2009) காலை 10-00 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.

ன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

தகவல்: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்

புதன், 26 ஆகஸ்ட், 2009

தேசிய போட்டியில் பங்கேற்கிறார் ஹமீது கவுஸ்


மாநில அளவிலான தொழிற்முறை குத்துச்சண்டை போட்டியில் (Professional Boxing) 63 - 65 kg வெல்டர் வெயிட் ( Welder Weight ) பிரிவில் மாநில வாகையர் (Champion) பட்டத்தை நமதூரை சேர்ந்த சகோதரர். ஹ.ஹமீது கவுஸ் அவர்கள் வென்றெடுத்து சாதனை படைத்த தகவலை முன்பே வெளியிட்டுள்ளோம்.இந்நிலையில் வருகின்ற அக்டோபர் மாதம் நடைப்பெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க WESTERN UNION PAUL MERCHANTS என்ற நிறுவனம் ஆதரவு வழங்கியுள்ளது. mypno இணைய இதழ் சார்பாக சகோதரர் ஹமீது கவுஸ் அவர்களை வாழ்த்துகிறோம்.

பள்ளி, மாநில மற்றும் தேசிய அளவிலான வர்ணம் தீட்டும் போட்டி


Source: Dailythanthi

திங்கள், 24 ஆகஸ்ட், 2009

குடிநீர் தொட்டி கட்ட பூமி பூஜை


Source: Dinamalar

புகார் பெட்டி

Source: Dinamalar

கலிமா பள்ளி மாணவர்களுக்கு தங்கக் காசு


Source: Dinamalar

சுய உதவி குழுக்களுக்கு வங்கிக்கடன்


Source: Dinamalar

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

மதுக்கடையை இடம் மாற்றம் செய்யவேண்டும் - அரசுக்கு கோரிக்கை


பரங்கிப்பேட்டை பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும் என்று கிரஸண்ட் நல்வாழ்வு சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர், இந்நிலையில் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தினர் அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் கடந்த திங்களன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து இதற்கான மனுவை அளித்துள்ளதாக தினமணி நாளேடு இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வழி தவறிய மூதாட்டி

நன்றி: தினமலர்

வக்ஃபு சொத்துக்களை மீட்க வேண்டும் - முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம், கோரிக்கை

முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக செயல்வீரர்கள் கூட்டம் பரங்கிப்பேட்டையில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமை தாங்கினார். கொள்கை பரப்பு செயலாளர் பக்ருதீன், மாவட்ட தலைவர் முஸ்தபா கமால் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் சாஹுல் ஹமீது வரவேற்றார். கூட்டத்தில் புதிய நகர தலைவராக அன்வர் அலி கான், செயலாளராக பாபா பக்ருதீன், துணை செயலாளராக செய்யது அப்பாஸ், முஹம்மது இர்பான், பொருளாளராக கமருதீன், இளைஞரணி தலைவர் செய்யது ஆலம், செயலாளர் செய்யது முஸ்தபா, மற்றும் நிர்வாகிகளாக அஹமது மரைக்காயர்,அப்துல் மாலிக் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் பரங்கிப்பேட்டையில் உள்ள வக்ஃபு சொத்துக்களை வக்ஃபு வாரியம் மீட்க வேண்டும், அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்று தினமலர் நாளேடு (இ-பேப்பரில்) சில தினங்களுக்கு முன் செய்தி வெளியிட்டுள்ளது

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

மின்வாரிய அலுவலக இன்டர்நெட் பழுது: கட்டணம் செலுத்த முடியாமல் மக்கள் அவதி


பரங்கிப்பேட்டை:

பரங்கிப்பேட்டை மின் வாரிய அலுவலகத்தில் இன்டர்நெட் பழுதால் கட்டணம் செலுத்த முடியாமல் மக்கள் அவதியடைந்தனர்.

பரங்கிப்பேட்டை பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின்சார கட்டணம் செலுத்தி வருகின்றனர்.

மின்சார கட்டணம் 5ம் தேதியில் இருந்து 15ம் தேதி வரை அபராதமின்றி செலுத்தலாம்.

கடந்த 15ம் தேதி சுதந்திர தினம் என்பதால் அரசு விடுமுறையானது.

மறுநாள் (16ம் தேதி) ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறையானது.

இதனால் நேற்று காலை மின் கட்டணம் செலுத்த கடைசி நாள் என்பதால் பரங்கிப்பேட்டை பகுதி மின் நுகர்வோர்கள் மின் வாரிய அலுவலகத்தில் அதிக அளவில் கூடினர்.

மழையையும் பொருட்படுத்தால் நீண்ட வரிசையில் நின்று பணம் செலுத்தினர்.

இந்நிலையில் மின்துறை அலுவலக இன்டர்நெட் பழுதானதால் மின் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டது.

நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகமாகவே கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அலுவலகமே பரபரப்பாக காணப்பட்டது.

அதைதொடர்ந்து ஒருவழியாக இன்டர்நெட் பழுது நீக்கிய பின் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

திங்கள், 17 ஆகஸ்ட், 2009

பொது இடத்தில் புகைத்தால்....

பரங்கிப்பேட்டையில் பொது இடங்களில் புகை பிடித்த 25 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கடலூர் மாவட்ட சுகாதார பணிகளின் துணை இயக்குநர் உத்தரவின் பேரில் பரங்கிப்பேட்டை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமதாஸ், பரங்கிப்பேட்டை காவல்துறை ஆய்வாளர் புகழேந்தி, சுகாதார ஆய்வாளர்கள் நல்லதம்பி, இளங்கோவன் ஆகியோர் பஸ் நிலையம், அரசு மருத்துவமனை, கோர்ட் வளாகம், ஆகிய இடங்களில் புகைப்பிடித்த 25 பேரை பிடித்து தலா ரூ.150 அபராதம் விதித்ததாக தினமலர் நாளேடு (இ-பேப்பர்) நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

சுதந்திர தினம்



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்... என அஸர் தொழுகை முடிந்த சிறிது நேரத்திற்கு பின்னர் ஹலோ மைக் டெஸ்டிங்.. மைக் டெஸ்டிங் என்ற ஒலி நம் காதுகளில் விழ ஒலி வந்த திசையை நோக்கி நாம் சென்றால் அது நகர ஜமாஅத்துல் உலமா பேரவை மற்றும் பிரண்ட்ஸ் PNO இணைந்து சின்னக்கடை தெருவில் நடத்தும் 63-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி.

நிகழ்ச்சிக்கு நகர ஜமாஅத்துல் உலமா பேரவை தலைவர் M.S.காஜா முயீனுத்தீன் மிஸ்பாஹி தலைமை தாங்க A.லியாகத் அலி மன்பஈ இறைவசனம் (கிராஅத்) ஓதி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். B.நூருல்லாஹ் பாஜில் பாகவி வரவேற்புரை நிகழ்த்த பரங்கிப்பேட்டை நண்பர்கள் அமைப்பின் (Friends PNO) தலைவர் M.K.நிசார் அஹ்மத் வாழ்த்துரை வழங்கினார்.

பரங்கிப்பேட்டை மஹ்மூதியா அரபிக் கல்லூரி முதல்வர் A.சித்திக் அலி பாகவி, மூனா பள்ளியின் முதல்வர் M.பாண்டியன், K.M.மீரான் முஹ்யித்தீன் ரஷாதி ஆகியோர் தங்களது உரையில் இந்திய விடுதலை போரில் இஸ்லாமியர்களின் பங்களிப்பினையும்-தியாகத்தையும் பற்றி விரிவாக பேசினார்கள் (மக்ரிப் தொழுகைக்காக நேரம் விடப்பட்டு-பின் கூட்டம் தொடர்ந்து நடந்தது) நிகழ்ச்சியினை M.முஹம்மத் ஷேக் ஆதம் தொகுத்து வழங்கினார். இறுதியாக A.லியாகத் அலி மன்பஈ நன்றியுரை ஆற்றினார். இஷா தொழுகைக்கு பாங்கு சொல்லவே நாம் விட்டோம் ஜூட்.....!

கட்டுரை & படம்: நமது நிருபர் - சுஹைல்

போட்டாச்சு ரோடு


யாதவாள் தெரு-தீத்தாமுதலியார் தெரு சந்திப்பான இந்த இடத்தில் தான் கடந்த ஆண்டு மழை-வெள்ளத்தின் போது, தண்ணீர் பல நாட்கள் தேங்கி நின்று மக்களுக்கு பெரும் சிரமத்தை கொடுத்தது , இப்போது தீத்தாமுதலியார் முழுவதும் சிமெண்ட் ரோடு போடப்பட்டுள்ளது.

படம்: நமது நிருபர் - சுஹைல்

மீண்டும் R.R.C

பரங்கிப்பேட்டையின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றான பூப்பந்தாட்டத்திற்கான பயிற்சி களங்களில் முதன்மை இடம் வகிக்கும் BMD-கிளப்பிற்கு அடுத்தபடியாக சற்றேறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக உச்சரிக்கப்பட்ட பெயர் RRC (Royal Recreation Club), ராயல் தெரு,வல்லதம்பி மரைக்காயர் தெரு, பெரிய ஆசராகாணத்தெருக்களை சேர்ந்த மர்ஹும் அப்துல் ஹமீது அவர்களின் தலைமையில் மர்ஹும் சலாஹுத்தின், பிரோஜ் முஹம்மது, ஹஸன் அலி, ஹாஜா மெய்தின், பஷீர் அஹமது, கஜ்ஜாலி, இஸ்மாயில் இப்படி பல நபர்கள் பூப்பந்தாட்டத்தின் மீதுள்ள அக்கறையின் காரணமாக தாங்களாகவே முன்வந்து நல்கிய ஒத்துழைப்பின் மூலம் கூட்டு முயற்சியில் உருவான இந்த பயிற்சி களம் காலப்போக்கில் இடம் இல்லாத காரணத்தாலும் (அப்பகுதியில் வீடு கட்டப்பட்டதால்) இன்னபிற காரணத்தாலும் அப்படியே செயலிழந்து போனது, இப்போது ஆர்வமுள்ள சிலரின் ஒத்துழைப்பின் மூலம் கலிமா நகர் செல்லும் வழியில் (அம்மாஸ் தைக்கால் இறுதியில்) மீண்டும் மைதானம் அமைக்கப்பட்டு, நாள்தோறும் பலரும் விளையாடி வருகின்றனர்.

படம்: நமது நிருபர் - சுஹைல்

சனி, 15 ஆகஸ்ட், 2009

தலையங்கம்: "பார்-க்குள்ளே நல்ல நாடு"



"வரலாறு காணாத பாதுகாப்பு" என்ற அடைமொழியுடன் ஒவ்வொரு வருடமும், தனது முந்தைய வருடத்தின் வரலாற்று சாதனையை (?!) முறியடித்து கொண்டிருக்கும் சுதந்திர தினம் வந்தது இந்த ஆண்டும் பலத்த பாதுகாப்புடன்., அதனையொட்டி பரங்கிப்பேட்டையிலும் இந்த விடுதலை நாள் பல்வேறு அமைப்புகளால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

"ஏதோ நீங்களா பாத்து செய்ங்க" என்று இளித்து கொண்டே சொல்வதில் தொடங்கி "இந்த வேலைக்கு இவ்வளவு ரூபாய் என்று கட்டணமாகவே (?!) நிர்ணயிக்கப்பட்டுவிட்ட இலஞ்சம்."

சமுதாயத்தில் நடுத்தர /அடித்தட்டு மக்களுக்கு தனது கடுமையான முகத்தையும் வசதி படைத்தவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இன்முகத்தையும் காட்டும் சட்ட அமுலாக்கத்தின் பாரபட்சம்.

சாதியின் பெயரால் நடந்த "திண்ணியம் சம்பவம்." இப்படி பட்டியல் இட்டால் நீண்டு கொண்டே போகும், தேசத்தை சீரழிக்கும் பல்வேறு அட்டூழியங்களிருந்தும் விடுதலை கிடைக்காத வரை சுதந்திர தினம் என்பது "ஹைய்யா, இன்னைக்கி ஸ்கூலுக்கு போனா சாக்லெட் கெடக்கோம்" என்று மழலையர்களுக்கு (மட்டும்) உற்சாகம் தரும் ஒரு சாதாரண நாளாகவும் ஒரு விடுமுறை நாளாகவும் தான் நீடிக்கும்.

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

இறப்புச் செய்தி

பொன்னந்திட்டு சின்ன தைக்கால் ரசுல்கான் அவர்களின் இளைய மகனாரும், பரங்கிப்பேட்டை டில்லி சாஹிப் தர்கா (புது நகர்) பாஷாபாய் அவர்களின் இளைய மருமகனுமாகிய அக்பர் அலி மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்று வியாழன் (13-08-2009) மாலை கிலுர் நபி பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

தகவல்: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்

நம்மை நாமறிவோம்

பரங்கிப்பேட்டையின் கல்வி வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்-தின் கல்விப் பிரிவான "கல்விக்குழு" வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (16-08-2009) காலை 8.30 மணிக்கு மஹ்மூதியா ஷாதி மஹாலில் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவர்கள் மட்டும் பங்கு பெறும் வகையில், நம்மை நாமறிவோம் என்ற தலைப்பில் கட்டுரை மற்றும் திறனறி போட்டி என இரு வகை போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

இதில் முதல் வகையாக, பாடப்பிரிவுகள், பொது அறிவு, உலக நடப்பு போன்றவற்றிலிருந்து சுமார் 50 கேள்விகளை உள்ளடக்கிய கேள்வி தாள் கொள்குறி வகையில் (objective type) இருக்கும், மேலும் "சமுதாயத்தில் உங்களை மிகவும் பாதிக்கும் அவலம் எது? நீங்கள் என்ன படித்து, எந்த பதவிக்கு வந்து அதனை நீக்க எவ்விதம் பாடுபடுவீர்கள்? என்ற தலைப்பில் ஒரு கட்டுரை ஒன்றையும் வரைய வேண்டும்.

இரண்டாவது வகையாக, மாணவர்களிடையே மறைந்திருக்கும் அவர்களின் தனித்திறமைக்கு மெருகூட்டும் வகையில் அவற்றை அடையாளப்படுத்தி ஊக்கப்படுத்திட ஏதுவாக "தனித்திறமை" போட்டி ஒன்றும் நடத்தப்படுகின்றது. போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள், தாங்கள் பள்ளி ஆசிரியர்களையோ அல்லது இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அலுவலகத்தையோ அணுகி பெயரினை பதிவு செய்திட வேண்டுமென்று கல்விக்குழு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

புதன், 12 ஆகஸ்ட், 2009

பரங்கிப்பேட்டையில் சுனாமி பீதி

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை கடலோரப் பகுதி கிராமங்களில் செவ்வாய்க்கிழமை சுனாமி முன்னெச்சரிக்கையால் இப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு அருகில் திங்கள்கிழமை நள்ளிரவு கடலுக்கடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையொட்டி மத்திய அரசால் இந்தியாவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சுனாமி முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனையொட்டி சிதம்பரத்தை அடுத்த கிள்ளை, பரங்கிப்பேட்டை பகுதியில் பில்லுமேடு, எம்ஜிஆர் திட்டு உள்ளிட்டப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை சங்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை ஊதப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டதால் கிள்ளை, பரங்கிப்பேட்டை பகுதிகள் மீண்டும் வழக்கமான நிலைக்கு திரும்பின, என்று இன்றைய தினமணி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.


செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

இறப்புச் செய்தி

வல்லத்தம்பி மரைக்காயர் தெருவில் மர்ஹும் ஹசனா மரைக்காயர் அவர்களின் மகனாரும், பெரிய தம்பி என்கிற ஹாஜி முஹம்மது அலி அவர்களின் சகோதரரும், ஜாக்கிர் உசேன், ஜாபர் அலி, இலியாஸ் இவர்களின் தகப்பனாருமாகிய சின்னத்தம்பி என்கிற அப்துல் காதர் மர்ஹும் ஆகிவிட்டார்கள் . இன்ஷா அல்லாஹ் இன்று (11-8-2009) மாலை 4 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
தகவல்: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்

சனி, 8 ஆகஸ்ட், 2009

பரங்கிபேட்டை ஒரு பணக்கார பேட்டை - கவிக்கோ




பரங்கிபேட்டை தௌலத்துன்னிசா மகளிர் அரபிக்கல்லூரி இரண்டாவது ஆண்டு முபல்லிகா பட்டமளிப்பு விழா (சனது வழங்கும் விழா) 07.08.2009 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.
காலை ஒன்பது மணிக்கு துவங்கிய நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் பேரூராட்ச்சி மன்றத்தின் தலைவர் முஹம்மது யூனுஸ் தலைமை தாங்கினார். மீராபள்ளியின் முத்தவல்லி அப்துல் சமத் ரஷாதி கிராத் ஓதி துவங்கி வைத்தார். அரபிக்கல்லூரியின் முதல்வர் அப்துல் காதர் மரைக்காயர் உமரி வரவேற்புரை நிகழ்த்தினார்.
மீராபள்ளியின் நிர்வாகி கலிமா ஷேக் அப்துல் காதர் மரைக்காயர், சிங்கப்பூர் தொழிலதிபர் அப்துல் ஜலீல், அல்ஹாஸ் அறக்கட்டளையின் தலைவர் ஷேக் அலாவுதீன், அதன் நிர்வாகி காதர் ஹசனா மரைக்காயர், முதலிய பலர் முன்னிலை வகித்தனர். திருச்சி ஜாமியா அன்வாருல் உலூம் துணை முதல்வர் ரூஹுல் ஹக், அல்ஹரமைன் அறக்கட்டளை செயலாளர் முஹம்மது ரபிக், அல்ஹரமைன் அறக்கட்டளை பொருளாளர் முஹம்மது இபுராஹீம், நிஸ்வான் மேலாளர் அப்துல் காதர் , நிஸ்வான் பொருளாளர் சுல்தான், அப்துல் காதர் மதனி உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
மதியம் ஜும்ஆ தொழுகை அழைப்பிற்கு முன் நிகழ்ச்சியின் முதலாம் அமர்வு நிறைவடைந்து, மதியம் சுமார் மூன்று மணிக்கு இரண்டாம் அமர்வு துவங்கியது. முதலில் பேசிய ஷேக் அலாவுதீன், நிஸ்வான் மூலம் பரங்கிப்பேட்டையில் ஏற்பட்டுவரும் மற்றும் எதிர்பார்க்கும் மாற்றங்களை பற்றியும் பெற்றோர்களின் கடமைகள் குறித்தும்பேசினார். நிஸ்வான் கல்விமுறை செயல்பாடு மற்றும் அது குறித்த விஷயங்களில் தவறு இருப்பதாக கருதுபவர்கள் சுட்டிக்காட்டினால் அது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார். ரத்தின சுருக்கமாக பேசிய அப்துல் ஜலீல், இறைவனை பற்றிய அச்சம் நம்மிடம் இருக்கிறதா என்று நம்மை நாமே பரிசோதனை செய்து கொள்வது எப்படி என்று பேசினார். ஒரு வக்த் தொழுகையை விட்டுவிட்டால் அடுத்த தொழுகைக்கு நிற்கும் போது நம் மனம் உறுத்தினால் அது தான் இறைவனை பற்றிய அச்சத்தின் சிறு அடையாளம் என்று கூறினார்.
பிறகு இஸ்மாயில் நாஜி, நூருல் அமீன், காஜா முயினுத்தீன், சித்திக் அலி, ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களில் ஒருவரும், இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளருமான ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் தனது இடியுரையில் ஆலிமாக்களை உருவாக்கி கொண்டு வருவதின் பயன் என்ன என்று கேள்வி எழுப்பினார். இந்தியாவில் தவிர உலகின் இதர அனைத்து பகுதிகளிலும் பெண்கள் பள்ளிவாசல்களில் அனுமதிக்கபடுகின்றார்கள். இஸ்லாம் அனுமதிக்காத முறையில் பெண்களை வீட்டில் சிறை வைப்பது போல் வைத்திருந்து அவர்களை பள்ளிவாயில்களுக்கு அனுமதிக்காமல் வைத்தே இருந்தால் அவர்களே அவர்களுக்கான தொழும் கூடங்களை நிர்மாணிக்கும் வேலை வந்து விடும் என்றார்.
பிறகு சிறப்புரை ஆற்றிய தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் வக்ப் நிலங்கள் வீணாய் போய்கொண்டு இருப்பதை கவலையுடன் குறிப்பிட்டார். வக்ப் நிலங்கள் நமது முன்னோர்கள் நமக்கு நல்ல பல செயல்கள் செய்வதற்கு விட்டுச்சென்றவை.. வெறுமனே பாதுகாத்து வைப்பதர்க்கல்ல என்றார். பெரும்பாலான முத்தவல்லிகள் அனைவரும், பதவிக்கு ஆசைப்பட்டு வக்ப் நிலங்களை அபகரிக்கிறார்கள் என்ற ரீதியில் விமர்சித்த கவிக்கோ அவர்களுக்கிடையே எப்போதும் பதவி போராட்டம் இருப்பதை கண்டித்தார். கல்வி நிலையங்கள் குறிப்பாக பெண்களுக்கான கல்லூரிகள் மற்றும் தொழில்பயிர்ச்சிக் கூடங்கள் கட்டவும், வக்ப் நிலங்களை தர வக்ப் போர்டு எப்போதும் தயாராக இருப்பதாக அறிவித்தார். நமது சமுதாயத்திர்க்கென்று ஓர் மருத்துவ கல்லூரி இல்லை என்று கவலையை வெளிப்படுத்திய கவிக்கோ மேடையில் அமர்ந்து இருந்த சிங்கப்பூர் தொழிலதிபர் அப்துல் ஜலீல் அவர்களை ஒரு மருத்துவ கல்லூரிக்கான முயற்சியினை துவங்குமாறு கேட்டுக்கொண்டார். அப்துல் ஜலீல் மட்டுமே அதற்காக முயற்சிப்பார் என்று அனைவரும் சும்மா அமர்ந்து விடாதீர்கள். எனக்கு தெரியும் பரங்கிபேட்டை ஒரு பணக்கார பேட்டை. ஊரில் உள்ள நலம் விரும்பிகள் ஒரு ட்ரஸ்ட் அல்லது ஒரு குழு ஏற்படுத்தியாவது இதற்கான முயற்சியினை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த கால சூழ்லில் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்கள் பெண்களே அதுவும் குறிப்பாக முஸ்லிம் பெண்களே என்றார். மார்க்கம் அனுமதிக்கும் வழிகளில் அவர்களை பள்ளிவாசல் போன்ற இடங்களுக்கு அனுமதிக்காததின் விளைவு தான் இன்று அவர்கள் சீரியல்களில் விழுந்து யாருக்காகவோ அழுது கொண்டுள்ளார்கள் என்றார். பெண்கள் கல்விக்கு நமது மார்க்கம் அளித்திருக்கும் முக்கியத்துவத்தினை அழகிய முறையில் விளக்கி பெண் கல்விக்கு நாம் அளிக்க வேண்டிய முக்கியத்துவத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். இது போன்ற நல்ல பல நிகழ்ச்ச்கள் மாதம் ஒரு முறையேனும் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறிய கவிக்கோ இது போன்ற நல்ல விஷயங்களுக்காக பெண்களை வெளியில் வர வேண்டும் என்றார்.
பிறகு முஹம்மது யூனுஸ் அவர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி தெரிவித்து பேச துவங்குகையில் தங்களுக்கு மிகவும் குறுகிய நேரமே உள்ளது என்று இரண்டு சிறப்பு விருந்தினர்கள் உடனே நன்றி தெரிவித்து விட்டு கிளம்பினார்கள் முஹம்மது யூனுஸ் அவர்களை வழியனுப்பி வைத்தார்.
விழாவில் மிக அதிகமான பேர் குறிப்பாக பெண்கள் கலந்து கொண்டனர். பிறகு மாணவிகளுக்கு சனது வழங்கப்பட்டது. விழா இனிதே நிறைவுற்றது.

P.I.A. - ரியாத் புதிய நிர்வாகிகள் தேர்வு

ரியாத் மாநகர் வாழ், பரங்கிப்பேட்டை இஸ்லாமியர்களின் அமைப்பான P.I.A பொதுக்குழு கூட்டம் கடந்த வியாழன் அன்று இரவு நடைப்பெற்றது. கூட்டத்திற்கு நியாஸ் தலைமையேற்க, சாஹுல் ஹமீது இறை வசனம் (கிராஅத்) ஓத கூட்டம் இனிதே தொடங்கியது. பொருளாளர் தமீஜுதீன், கடந்த ஆண்டின் வரவு-செலவு மற்றும் நிதிநிலை அறிக்கையினை சமர்ப்பித்தார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள், ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


புதிய நிர்வாகிகள்

தலைவர் : M.S. சாஹுல் ஹமீது
துணை தலைவர் : H. மன்சூர்
துணை தலைவர் : M. முஹம்மது ஜாபர்
செயலாளர் : Z.முஹம்மது நியாஸ்
துணை செயலாளர் : Z. முபாரக்
பொருளாளர் : R. தமிஜுதீன்
துணை பொருளாளர் : N.M.அலி ஃபைசல்
ஆலோசகர்கள் : A.பாரூக் அலி, H.பக்ருதீன், O.சாதலி
மக்கள் தொடர்பாளர் : H.G.முஹம்மது ஹுசைன்
இறுதியில் தமீஜுதீன் நன்றியுரையாற்றினார். கூட்டத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துக் கொண்டனர்.

புதியதாக பொறுப்பேற்றிருக்கும் நிர்வாகக்குழுவிற்கு, mypno.com, mypno.blogspot.com சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


தகவல்: அபு ரய்யான் (PRO, PIA)

இறப்புச் செய்தி

ஆத்தங்கரை தெருவில், மர்ஹும் முஹம்மது அபூபக்கர் அவர்களின் மனைவியும், சாஹுல் ஹமீது (ஆரிப்) அவர்களின் மாமியாரும், லியாக்கத் அலி, அபூபக்கர், ஹஸன் அலி, சேக் அப்துல் காதர் ஆகியோர்களின் பாட்டியாருமாகிய முஹம்மது நாச்சியார் மர்ஹும் ஆகிவிட்டார்கள். கடந்த 06-08-2009 (வியாழன்) அன்று மாலை 5 மணிக்கு மீராப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

வியாழன், 6 ஆகஸ்ட், 2009

பரங்கிப்பேட்டையில் மகளிர் கல்லூரி - பேரூராட்சி தலைவர் கோரிக்கை

பரங்கிப்பேட்டை நகரில் பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்று, இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவரும் , பேரூராட்சி மன்ற தலைவருமாகிய முஹம்மது யூனுஸ், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்திற்கு அனுப்பியுள்ள மனுவில், பரங்கிப்பேட்டை நகரில் மகளிர் கல்லூரி அமைத்திடவும், அரசு மருத்துவமனையில் படுக்கை, எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருந்தும் போதிய மருத்துவர்கள் இல்லாத நிலை இருப்பதால், அங்கு கூடுதல் மருத்துவர்களை நியமிக்கவேண்டும் என்றும், படகு குழாமில் தடுப்புச்சுவர் அமைத்திட வேண்டுமென்றும், கடலூரில் இருந்து கரிக்குப்பம் வழியாக பரங்கிப்பேட்டைக்கு அரசு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரியுள்ளதாக, தினமலர் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

தெரு முனை பிரச்சாரக் கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பரங்கிப்பேட்டை கிளை சார்பில் தெரு முனை பிரச்சாரக் கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் யூசுப் அலி , "மனிதன் எப்படி நன்றி மறந்தவனாக இருக்கின்றான், படைத்த இறைவனை எப்படி மறக்கின்றான் என்பனவற்றை விளக்கி "நன்றி மறந்தவர்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். கூட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

படங்கள்: tntj.net







திங்கள், 3 ஆகஸ்ட், 2009

இறப்புச் செய்தி

தோணித்துறை தெரு, மர்ஹூம் யூசுப் அவர்களின் மனைவியும் அஜீஸ்மியான் அவர்களின் தாயாரும் யூசுப் அலி அவர்களின் பாட்டியாருமாகிய செய்யது பீவி அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

தெளலதுன்னிசா மகளிர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா

பரங்கிப்பேட்டை தெளலதுன்னிசா மகளிர் அரபிக்கல்லூரி 2-வது ஆண்டு முபல்லிகா பட்டமளிப்பு விழா இறைவன் நாடினால் வருகின்ற 07-08-2009 வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடைப்பெற இருக்கின்றது. இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவரும், பேரூராட்சி மன்ற தலைவருமாகிய முஹம்மது யூனுஸ் தலைமையில் நடைப்பெறும் இந்த விழாவில் மீராப்பள்ளி முத்தவல்லி அப்துல் சமது ரஷாதி கிராஅத் ஓதுகிறார், தெளலத்துன்னிசா மகளிர் அரபிக்கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் மரைக்காயர் உமரி வரவேற்புரையாற்றுகின்றார். மீராப்பள்ளி நிர்வாகி ஷேக் அப்துல் காதர் மரைக்காயர், சிங்கப்பூர் தொழிலதிபர் அப்துல் ஜலீல், அல்ஹாஸ் அறக்கட்டளை தலைவர் ஷேக் அலாவுதீன், நிர்வாகி காதர் ஹஸனா மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

திருச்சி ஜாமிஆ அன்வாருல் உலூம் துணை முதல்வர், ரூஹூல் ஹக் பாகவி ரஷாதி, பரங்கிப்பேட்டை அல்ஹஸனாத் பெண்கள் அரபிக்கல்லூரி முதல்வர் அப்துல் காதர் மதனி ஆகியோர்கள் சிறப்புரை ஆற்றுகின்றனர். விழாவில் தமிழ்நாடு வஃக்ப் வாரிய தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான், இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளர் ஹிதாயத்துல்லாஹ், ரேடியன்ட் I.A.S அகடாமி கள்ளக்குறிச்சி இயக்குநர் ரஹ்மத்துல்லாஹ், லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் முதல்வர் நூருல் அமீன் ஹஜ்ரத், சிதம்பரம் அல்மதரஸதுல் ஆலியா தலைவர் இஸ்மாயில் நாஜி, நகர ஜமாஅத்துல் உலமா பேரவை தலைவர் காஜா முயினுதீன் மிஸ்பாஹி, அல்மதரஸதுல் மஹ்மூதியா முதல்வர் சித்திக் அலி பாகவீ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

பட்டமளிப்பு விழாவினையொட்டி பெண்களுக்காக கிராஅத் போட்டி, பட்டம் பெறும் மாணவிகளின் மார்க்க சொற்பொழிவு ஆகியவை பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடைப்பெறுகிறது. கடந்த ஆண்டு உள்ளுர் மாணவிகள் 8 பேர் மட்டுமே முபல்லிகா பட்டம் பெற்றனர், இந்த ஆண்டு பட்டம் பெறும் உள்ளூர் மாணவிகளின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை அல்ஹாஸ் அறக்கட்டளை செயலாளர் செய்யது ஆரிப் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

எலும்பு வலிமை இலவச பரிசோதனை முகாம்

பரங்கிப்பேட்டை அரிமா சங்கம் சார்பில் எலும்பு வலிமை இலவச பரிசோதனை முகாம் மேட்டுத்தெருவில் நடைப்பெற்றது. அரிமா சங்க தலைவர் பாவாஜான் தலைமை தாங்கினார். இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவரும், பேரூராட்சி மன்ற தலைவருமான முஹம்மது யூனுஸ் முன்னிலை வகித்தார். எலும்பு வலிமை பரிசோதனை முகாமை இன்ஸ்பெக்டர் புகழேந்தி துவக்கி வைத்தார். ஆர்த்தோ டாக்டர் பாரதிசெல்வன் தலைமையில் டாக்டர்கள் குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் அரிமா சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் அன்சாரி, முன்னாள் தலைவர் கவுஸ ஹமீது, கமால், ராஜவேல், ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர்

நன்றி: தினமலர்

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...