செவ்வாய், 31 மே, 2011

இறப்புச் செய்தி

தெசன் தைக்கால் தெருவில் மர்ஹும் முஹம்மது சுல்தான் மரைக்காயர் அவர்களின் மகனாரும், மர்ஹும் ஹசன் முஹம்மது அவர்களின் மருமகனாரும், முஹம்மது சுல்தான் மரைக்காயர் அவர்களின் தகப்பனாருமான முஹம்மது யூசுப் மரைக்காயர் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று செவ்வாய்கிழமை (31-05-2011) மாலை 4 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

இறப்புச் செய்தி

காஜியார் தெருவில் வசித்து வந்த , மர்ஹூம் அப்துல் காதர் சாஹிப் அவர்களின் மகனாரும் மர்ஹூம் முஹம்மது யூசுப் மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், மர்ஹூம் அமீர் அலி சாஹிப் மற்றும் ஷம்சுதீன் சாஹிப் ஆகியோர்களின் சகோதரரும், அப்துல் காதர், வஜ்ஹுதீன் ஆகியோர்களின் பெரிய தகப்பனாரும், முஹம்மது சாதிக், அப்துல் காதர் ஆகியோரின் தகப்பனாருமாகிய உபைதுல்லாஹ் சாஹிப் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். நேற்று திங்கள்கிழமை (30-05-2011) இரவு இசா தொழுகைக்கு பின்னர் மீராப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


ஞாயிறு, 29 மே, 2011

வரவேற்பு மழையில் செல்வி ராமஜெயம்!

பரங்கிப்பேட்டை: சமூகநலத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் செல்விராமஜெயம் முதல் முறையாக நேற்று தொகுதிக்கு வந்தார். அமைச்சருக்கு முட்லூரில் அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பேண்டு வாத்தியங்கள் முழங்க, பட்டாசு வெடிக்க உற்சாக வரவேற்பில் நனைந்தார் செல்வி ராமஜெயம். பின்பு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்ததுடன் அமைச்சருக்கு பொன்னாடைகள் போர்த்தினர். 




நிகழ்ச்சியில் மாவட்ட செயலர் அருண்மொழித்தேவன், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலர் சுப்ரமணியன், பரங்கிப்பேட்டை அ.தி.மு.க. நிர்வாகிகள் மாரிமுத்து, ஷாஜஹான்,  இக்பால், காமில், யூசுப் அலி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, புவனகிரி சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க புறப்பட்டர் அமைச்சர் செல்வி ராமஜெயம்.

மின்சாரம் நிறுத்தம்


பி.முட்லூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைப்பெற இருப்பதால் நாளை (30-05-2011) திங்கள்கிழமை பரங்கிப்பேட்டை உட்பட சிதம்பரம் தாலுக்காவில் உள்ள புவனகிரி, கிள்ளை, பிச்சாவரம், சாத்தபாடி, சாமியார்பேட்டை, புதுச்சத்திரம், பெரியப்பட்டு, கீரப்பாளையம் பு.முட்லூர், தீர்த்தாம் பாளையம், பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் செல்வசேகர் தெரிவித்துள்ளார்.

சவூதியில் விபத்து - 4 தமிழர்கள் உயிரிழப்பு

சவூதி ஜுபைல் பகுதியில் தமிழகத்தை சேர்ந்த அப்துல் ஹாலிக் என்பவர் சிறு கட்டிட காண்ட்ராக்ட்டராக தொழில் புரிந்து வருகிறார்.சமீபத்தில் அவரது மாமனார் மாமியார் ஆகியோரை விசிட் விசாவில் வரவழைத்து, கடந்த வாரம் உம்ராவுக்கு பயணமானார். கடந்த 26.05.2011 அன்று ரியாத்தை தாண்டி ஹுமைதியா என்ற பகுதியில் அவர்களது வாகனம் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவரது மனைவி ஃபாரின்னிசா, மாமனார் அபூசாலிஹ், மாமியார் லைலுன்னிசா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.  இவர்களுடன் கன்னூரைச் சேர்ந்த டிரைவர் அஷ்ரப் என்பவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்
.

அப்துல் ஹாலிக்கும் அவரது மூன்று பிள்ளைகளும் காயடைந்து தற்சமயம் ஹுமைதியாவில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று த.மு.மு.க சவூதி அரேபியா கிழக்கு மண்டல ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது

சனி, 28 மே, 2011

நன்றியுடன் பாலகிருஷ்ணன்!

பரங்கிப்பேட்டை: சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரங்கிப்பேட்டை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். சிதம்பரம் சட்டமன்றத்தில் மா.கம்யூனிஸ்ட் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.பாலகிருஷ்ணன் பரங்கிப்பேட்டையில் வீதிவீதியாக திறந்த ஜீப்பில் சென்றவாறு வாக்காளர்களிடம் நன்றி தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினருடன் கூட்டணிக் கட்சியினரான அ.தி.மு.க, மனிதநேய மக்கள் கட்சி, தே.மு.தி.க. நிர்வாகிகளும் சென்றனர்.

வெள்ளி, 27 மே, 2011

மதிப்"பெண்கள்"...!

சற்று முன் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் பரங்கிப்பேட்டை அளவில் பள்ளிகளின் தேர்ச்சி விவரம் சதவிகிதத்தில்:

சேவாமந்திர் பள்ளி - 99 %

அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி – 91 %

அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி – 78 %

மூனா ஆஸ்திரேலியன் பள்ளி – 76 %

கலிமா மெட்ரிக்குலேஷன் பள்ளி - 71 %

அவரவர் பள்ளி அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் விவரம்:

கலிமா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஃபைரோஸ் பானு 460, ஜொஹரா பானு 457, இந்துஜா 438 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்

அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செய்யது ராபியா பீவி 479, தீபா 470, கீர்த்தனா 466, நூர் சுல்தானா 463 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ராம் குமார் 477, நடனமுத்து 455 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மூனா ஆஸ்திரேலியன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஏஞ்சலினா மேரி 431, சனோஃபர் 429. சமீரா 420 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்

சேவாமந்திர் பள்ளி மாணவர் முஹம்மது கவுஸ் 455 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

மாணவ - மாணவிகளையும், உதவிப் புரிந்த ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் www.mypno.com ஆசிரியர் குழு சார்பாக வாழ்த்துகிறோம்.

மாணவிகள் அதிரடி..!

இன்று காலை வெளியான 10ம் வகுப்பு தேர்வில் எந்த முறையும் இல்லாத அளவிற்கு முதல் ராங்கை 5 பேர் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மாணவி‌களே. மொத்தம் 496 மார்க்குகள் பெற்றுள்ளனர்.இதில் மொத்தம் தேர்வு எழுதியதில் 7 லட்சத்து 1ஆயிரத்து 786 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் ‌தேர்ச்சி விகிதம் 85. 30 சதம் ஆகும். இதில் மாணவர்கள் 82. 30 சதம், மாணவிகள் 88.10 சதம் ஆகும். பரங்கிப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் செய்யது ராபியா பிவீ 479 மதிப்பெண்களும், தீபா 470 மதிப்பெண்களும், நூர் சுல்தானா 463 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மாணவிகள் தீபா, செய்யது ராபியா பீவி ஆகிய இருவரும் கணக்கு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக விவரங்கள் இறைவன் நாடினால் விரைவில்.

வியாழன், 26 மே, 2011

நாளை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள்: MYPNO.COM-ல் காணலாம்

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன. அதே போல மெட்ரிக் தேர்வு,ஆங்கிலோ-இந்தியன், ஓரியண்டல் தேர்வுகள் முடிவுகளும் நாளை வெளியிடப்படுகின்றன. இந்தத் தேர்வு முடிவுகளை MYPNOவில் (www.mypno.com) உடனுக்குடன் காணலாம்.

தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் இந்தத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன. தமிழ்நாடு, புதுச்சேரியில் 9.5 லட்சம் மாணவ- மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதியுள்ளனர். இந்தத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 11ம் தேதி வரை நடந்தன.

இந் நிலையில் பிளஸ்-2 தேர்வுகள் கடந்த 9ம் தேதியும், சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 22ம் தேதியும் வெளியாயின.

இந் நிலையில் எஸ்.எஸ்.எல்.சி, மெட்ரிக், ஆங்கிலோ- இந்தியன், ஓரியண்டல் பொதுத்தேர்வு முடிவுகள் 27ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு வெளியாகின்றன.

மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், MYPNO.COM மற்றும் அரசு இணையத் தளங்களிலும் உடனுக்குடன் அறியலாம். மேலும் மதிப்பெண் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

புதன், 25 மே, 2011

TNTJ கோடைகால பயிற்சி முகாம் பரிசளிப்பு நிகழ்ச்சி!

பரங்கிப்பேட்டை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளையில் கோடைகால பயிற்சி முகாம் 09.05.2011 ஆரம்பிக்கபட்டு 18.05.2011 நிறைவடைந்தது.  பத்து நாட்கள் நடைப்பெற்ற இந்த பயிற்சி முகாமில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.



இதற்கான பரிசளிப்பு நிகழ்ச்சி கடந்த  21.05.2011 சனிக்கிழமை அன்று மாவட்ட துனை செயலாளர் சகோ.தாஜூதீன் அவர்களின் தலைமையில் நகர தலைவர் சகோ.முத்துராஜா முன்னிலையில் "மஸ்ஜிதுத் தவ்ஹீத்" பள்ளியில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சிகள் பயிற்சி முகாமில் சிறப்பாக பயின்ற மூன்று மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் அளிக்கப்பட்டது. மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது..

source: tntj-pno

செவ்வாய், 24 மே, 2011

கட்டாயக் கல்விச் சட்டத்தை மீறும் தனியார் பள்ளிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

கட்டாய இலவசக் கல்வித் சட்டத்தை மீறிச் செயல்படும் கடலூர் மாவட்டத்  தனியார் பள்ளிகளை கண்டித்து தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

குழந்தைகள் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 என்ற மத்திய அரசின் சட்டம் 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி உரிமையை வழங்குகிறது.

இச் சட்டத்துக்கு முரணாக கடலூரில் கட்டாய நன்கொடை, மறைமுகக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. கட்டணங்களுக்கு ரசீது வழங்கப்படுவதில்லை,  ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் வறுமைக்

கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கீட்டை கடலூர் பள்ளிகளில் அளிக்கவில்லை.

சட்டவிரோதமாக நுழைவுத் தேர்வுகள், பெற்றோருக்கு அறிவுச்சோதனை போன்ற வடிகட்டும் தேர்வுகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. மெட்ரிக் பள்ளிகள் தனியாரிடம் இருந்து தரமற்ற பாடப் புத்தகங்களை வாங்கி மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் சுமைகளை ஏற்றுகின்றன என்றும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.  எனவே இத்தகைய விதிமீறல்களை செய்துவரும் கடலூர் மாவட்ட தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.

நகரில் உள்ள பல்வேறு பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் தலைமை வகித்தார்.

பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் வெண்புறா குமார்,  அருள்செல்வம், திருநாவுக்கரசு, லெனின், பி.பண்டரிநாதன், பாலசுப்பிரமணியன், கதிர் மணிவண்ணன், தெய்வகுரு, எஸ்.புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திங்கள், 23 மே, 2011

வாத்தியாப்பள்ளி கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார் பாலகிருஷ்ணன்!

 
பரங்கிப்பேட்டை: கோல்ட் ஸடார் கிரிக்கெட் கிளப் சார்பாக வாத்தியாப்பள்ளியில் கிரிக்கெட் போட்டிகள் நேற்று தொடங்கியது. இப்போட்டியை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மனிதநேயமக்கள் கட்சி நகர தலைவர் ஜாக்கீர், செயலாளர் பிலால் தலைமையில் நடைபெற்ற போட்டி துவக்கவிழாவில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கவுஸ் ஹமீது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
போட்டி குறித்து, சட்ட மன்ற உறுப்பினர் பேசுகையில், 'இளைஞர்கள் ஒழுக்கங்கெட்டு வீணாண விசயங்களில் ஈடுபடும் இந்த காலகட்டத்தில், அவற்றிலிருந்து திசை திரும்பும் விதமாக இது போன்ற விளையாட்டுப் போட்டிகள் அமைகிறது. அதுவும் இந்த கிரிக்கெட் போட்டியில்தான் டீம் ஸ்பிரிட் எனப்படும் குழு உணர்வு ஏற்படுகிறது' என்றார்.

கிராம வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்: ஐ.ஏ.எஸ். மாணவி அனுகிரகா பேட்டி!

பரங்கிப்பேட்டை ; "கடின உழைப்பு இருந்தால், எளிதாக சாதிக்க முடியும் என, ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற, அனுகிரகா கூறினார். பரங்கிப்பேட்டை ஐ.ஓ.பி., வங்கியில் மேலாளராக இருப்பவர் பாண்டியதுரை. இவருக்கு அனுகிரகா, கார்த்திகா ஆகிய இரண்டு மகள்களும், சரவணன் என்ற மகனும் உள்ளனர். அனுகிரகா, ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். கடலூர் செயின்ட் மேரிசில் பள்ளிப்படிப்பை முடித்தார். கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி., கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தார். ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத, கடந்த ஒரு ஆண்டாக புதுடில்லியில் தங்கி படித்து, முதல் தேர்விலேயே தேர்ச்சி பெற்றுள்ளார்.

இதுகுறித்து அனுகிரகா கூறியதாவது: கிராம பகுதியில் இருந்து ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். கிராமத்தில் படித்தவர்களுக்கு, அதிக திறமை உள்ளது. ஆனால், அவர்களுக்கு சரியான விழிப்புணர்வு இல்லாததால் சாதிக்க முடியவில்லை. யார் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்கு முயற்சி, விழிப்புணர்வு இருந்தால் வாழ்க்கையில் எளிதாக முன்னேறலாம். கடின உழைப்பு இருந்தால் எளிதாக சாதிக்க முடியும். கிராம வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றுவேன். கல்வி மற்றும் பெண்கள் மேம்பாட்டிற்கு பாடுபடுவேன்.இவ்வாறு அனுகிரகா கூறினார்.

ஞாயிறு, 22 மே, 2011

பரங்கிப்பேட்டையில் சிறப்பு கூட்டுக்குடிநீர் திட்டம்: சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் தகவல்!


பரங்கிப்பேட்டையை உள்ளடக்கிய சிதம்பரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:  சிதம்பரம் தொகுதியில் பாகுபாடின்றி அனைவருக்கும் அனத்து திட்ட பயன்களும் கிடைக்க பாடுபடுவேன். எம்.எல்.ஏ., அலுவலகத்தில் தகுதியான ஊழியர்கள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் இயங்குவதோடு மக்கள் குறைகளை எந்த நேரத்திலும் தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். மின் வெட்டு பிரச்னை தீர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

என்.எல்.சி., யில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 250 மெகா வாட் முதல் 300 மெகாவாட் வரை பெற்று மின் பற்றாக்குறையை முற்றிலும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக முதல்வர் ஜெயலலிதா, என்.எல்.சி., அதிகாரிகள், துறை சார்ந்த அமைச்சர் ஆகியோரிடம் பேசி தீர்வு காணப்படும். சிதம்பரம் நகரில் செயல்படுத்த முடியாமல் உள்ள பாதாள சாக்கடைத் திட்டம், 7 கோடி ரூபாயில் கொண்டு வரப்பட்ட புதிய குடிநீர் திட்டம் ஆகியவற்றை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதேப்போன்று பஸ் நிலையம், மீன் மார்க்கெட், அரசு மருத்துவமனையில் சுகாதார வசதிகள் என மக்கள் பணிகள் நிறைவேற்றித்தரப்படும்.

பரங்கிப்பேட்டை, குமராட்சி, கிள்ளை பகுதியில் சிறப்பு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். காவிரி டெல்டா பகுதியாக இருந்தும் சிதம்பரம் டெல்டா பகுதிக்கான எந்த சலுகையும் கொடுக்காமல் புறக்கணிக்கப்படுகிறது. அந்த நிலையை மாற்ற அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். சிதம்பரம் தொகுதிக்கு வரும் எந்த திட்டமாக இருந்தாலும், எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் செயல்படுத்தப்படும் பணிகளாக இருந்தாலும் கமிஷன், லஞ்சம் எதுவுமின்றி ஒதுக்கப்படும் நிதி முழுவதும் செலவழிக்கப்பட்டு நேர்மையான, வெளிப்படையாக நிர்வாகம் நடத்தப்படும். இவ்வாறு பாலகிருஷ்ணன்  கூறினார்.


சனி, 21 மே, 2011

பரங்கிப்பேட்டையில் பலத்த இடி..!


கடந்த சில நாட்களாகவே, பரங்கிப்பேட்டையில் கடும் வெயிலின் காரணமாக மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர்., இந்நிலையில் மாலை முதல் நிலவி வந்த மேகமூட்டத்தின் காரணமாக இரவு 7.30 மணியளவில் லேசான தூறலாக தொடங்கி, மிக பலத்த இடியோசையுடன் பலத்த மழையாக இரவு 8.20 வரை பெய்தது. தொடர்ச்சியாக 45 நிமிடத்திற்கும் மேலாக மின்னல் - இடியோசையின் ஆதிக்கம் மிகுந்திருந்த காரணத்தினால் நகரில் பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை பயத்துடனே காணப்பட்டனர். முன்னெச்சரிக்கையின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மின்சாரம் வினியோகம் மீண்டும் இரவு 9 மணிக்கு தொடங்கியது.

பரங்கிப்பேட்டை பகுதியில் வாக்களர்களை சந்தித்து நன்றி கூறுவதற்காக புதுக்குப்பம் - சின்னூர் - மாதக்கோயில் தெரு வழியாக பரங்கிப்பேட்டைக்கு வருகை தர திட்டமிட்டிருந்த சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் K.பாலகிருஷ்ணன் தனது சுற்றுப்பயணத்தை பலத்த மழை - இடி - மின்னல் காரணமாக மாதக்கோயில் பகுதியிலேயே நிறைவு செய்தார். பலத்த இடியின் காரணமாக பெரும்பாலோர் செல்போன் உள்ளிட்ட மின்னனு சாதனங்களை அந்நேரத்தில் உபயோகிக்கவில்லை, இருந்தபோதிலும் நகரிலுள்ள சில வர்த்தக நிறுவனங்களின் மின்னணு சாதனங்கள் பழுதுக்குள்ளாகியது.

மீண்டும் நள்ளிரவு சுமார் 2.30 முதல் பெய்யத்தொடங்கிய மழை பலத்த மழையாக உருவெடுத்து அதிகாலை வரை பெய்தது. இந்நேரத்தில் இடியோசை இல்லாமல் இருந்தது சற்று ஆறுதலாக இருந்தது. கோடையின் வெப்பத்தை தவிர்க்க இம்மழை பேருதவியாக இருந்தது என்றாலும் மிகக்கடுமையான இடியோசையின் காரணமாக மக்கள் மிரட்சியுடனே இருந்தனர்.

வெள்ளி, 20 மே, 2011

இந்த பதவி கிடைக்கும் என்று நான் சற்றும் எதிர்பார்க்க வில்லை: அமைச்சர் செல்வி ராமஜெயம் பேட்டி

அ.தி.மு.க. அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் பரங்கிப்பேட்டையைச் சார்ந்த சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் அளித்துள்ள பேட்டியில், '"நடுத்தர குடும்பத்தை சேர்ந்த எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை முதல்- அமைச்சர் ஜெயலலிதா கொடுத்திருப்பதற்கு காலமெல்லாம் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்" என்றார்.
 
அவர் மேலும் கூறியதாவது: இந்த பதவி எனக்கு கிடைக்கும் என்று நான் சற்றும் எதிர்பார்க்க வில்லை. கடந்த 10 வருடமாக  பஞ்சாயத்து தலைவராகவும், சட்டமன்ற உறுப்பிளராகவும் பணியாற்றினேன். இப்போது முதல்-அமைச்சர் எனக்கு அதை விட முக்கிய பொறுப்பை வழங்கி இருக்கிறார். அதற்கு நான் தகுதி உள்ளவராக செயலாற்றுவேன்.
 
3-வது முறையாக பொறுப்பேற்ற முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெண்களுக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார். பின்தங்கிய ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், முதியோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கி ஆணை பிறப்பித்துள்ளார்.
 
படித்த, ஏழை பெண்கள், பட்டதாரி, டிப்ளமோ படித்த பெண்கள் திருமண உதவித் தொகை ரூ.25 ஆயிரத்துடன் தாலிக்கு 4 கிராம் தங்கம், ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கம் போன்ற திட்டங்கள் சமூக நலத்துறையின் கீழ் பெண்களுக்கு முழுமையாக சென்றடைய பாடுபடுவேன்.சத்துணவு, அங்கன்வாடி ஊட்டச்சத்து துறை பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்படும்.  
 
முதல்-அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்திய தொட்டில் குழந்தை திட்டம் கடந்த ஆட்சியில் முறையாக செயல்படுத்தப் படவில்லை. அரசு மருத்துவமனைகளில் தொட்டில் குழந்தைகளை பாதுகாக்கவும், பின்னர் காப்பகங்களில் பராமரித்து வளர்க்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சேலம், தர்மபுரி, கிருஷ்ண கிரி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இத்திட்டத்திற்கு தேவையானவற்றை செய்து மேம்படுத்தப்படும்.
 
இவ்வாறு செல்வி ராமஜெயம் கூறினார்.

கடந்த வாரம் ரிசல்ட், இந்த வாரம் அரெஸ்ட்..!


ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கனிமொழி எம்.பி.யின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில், சம்மன் அனுப்பப்பட்டதால், கடந்த 6-ந் தேதி சி.பி.ஐ. கோர்ட்டில் கனிமொழி ஆஜரானார். அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு 20-ந் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, கனிமொழி முன்ஜாமீன் மனு மீது இன்று பிற்பகல் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று கோர்ட்டு அறிவித்தது. இந்தநிலையில் கனிமொழி ஜாமீன் மனு மீது பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மனு இன்று விசாரணைக்கு வந்தபோது கனிமொழியின் முன் ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

முன்னதாக கனிமொழி நிருபர்களிடம் கூறுகையில், "தீர்ப்புக்காக காத்து இருக்கிறேன். எது நடந்தாலும் எதிர்கொள்வேன்'' என்றார். கனிமொழி எம்.பி. முன் ஜாமீன் மனு மீது பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என்று சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி சைனி அறிவித்தார். அதன்படி 2.30 மணிக்கு நீதிபதி சைனி தீர்ப்பை வாசித்தார். கனிமொழி எம்.பி.க்கும், கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கும் முன்ஜாமீன் வழங்க இயலாது என்று தீர்ப்பளித்தார். 14 நாள் கோர்ட்டு காவலில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். முன்ஜாமீன் மறுக்கப்பட்ட காரணத்தால் கனிமொழி எம்.பி. உடனடியாக கைது செய்யப்பட்டார். சரத்குமாரும் கைது செய்யப்பட்டார். அவர்கள் இருவரையும் திகார் ஜெயிலில் அடைக்க சி.பி.ஐ. போலீசார் அழைத்துச் சென்றனர். ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நாளை மீண்டும் நடைபெற உள்ளதால் கனிமொழியை நாளை காலை 10 மணிக்கு கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி சைனி உத்தரவிட்டார்.

அடுத்தடுத்த வெள்ளிக்கிழமைகளி்ல் திமுகவிற்கு பின்னடைவு ஏற்பட்டு வருவதால், அக்கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை தமிழக சட்டசபை தேர்தல் மு‌டிவில், பொதுமக்கள் திமுகவை தோற்கடித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாக, இந்த வெள்ளிக்கிழமை, திமுக தலைவரின் மகள் கனிமொழி கைது செய்யப்பட்டுள்ளார். இதனால், அடுத்த வெள்ளிக்கிழமை என்ன ஆகும் என்‌று திமுகவினர் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

வியாழன், 19 மே, 2011

I .P.S. அதிகாரிகள் அதிரடியாக மாற்றம்


.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து, உள்துறை முதன்மைச் செயலாளர் ஷீலா ராணி சுங்கத் வெளியிட்ட உத்தரவு: (பழைய பதவி அடைப்புக் குறிக்குள்.)  சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.  

திமுக அரசில் முக்கியப் பொறுப்பு வகித்து வந்த .பி.எஸ். அதிகாரி ஜாபர் சேட், மண்டபம் அகதிகள் முகாமின் சிறப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 எஸ்.ஜார்ஜ் - சட்டம்-ஒழுங்கு .டி.ஜி.பி., - (மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் .டி.ஜி.பி.,)

 .ஜி.பொன் மாணிக்கவேல் - ரயில்வே டி..ஜி., - (விழுப்புரம் சரக டி..ஜி.,)

 அஸ்வின் எம்.கோட்னீஸ் - புளியந்தோப்பு துணை ஆணையர் (கடலூர் மாவட்ட  எஸ்.பி.,).

புதன், 18 மே, 2011

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்


10 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ள பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்பட்டு, தேர்வு முடிவுகள் தயாராக உள்ளன., மாணவ - மாணவிகளும், பெற்றோர்களும் தேர்வு முடிவை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இத்தேர்வு முடிவுகள், வரும் 24ம் தேதி வெளியாகிறது.கடந்த ஆண்டு S.S.L.C. தேர்வில் நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பள்ளி மாணவி ஜாஸ்மின், 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டைப் போலவே இவ்வாண்டும் உங்கள் MYPNO.COM இணையத் தளத்தில் தேர்வு முடிவுகள் வெளியாக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திங்கள், 16 மே, 2011

இறப்புச் செய்தி

கிதர்சா மரைக்காயர் தெருவில் மர்ஹும் மரக்கச்சி மரைக்காயரின் மகளாரும், மர்ஹும் மெக்தார் சாஹிப் அவர்களின் மனைவியும், மரக்கச்சி மரைக்காயர், கஜ்ஜாலி இவர்களின் தாயாருமான மைமுன் பீவி மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்று மாலை 4 மணிக்கு புதுப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.





தகவல்: sky news

செல்வி ராமஜெயம் என்கிற நான்.... (வீடியோ!)

தமிழக அமைச்சராக இன்று  சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் செல்வி ராமஜெயம் பதவியேற்றுக்கொண்டார்.  கவர்னர் பர்னாலா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

அப்போது செல்வி ராமஜெயம் ஏற்றுக்கொண்ட உறுதிமொழி: ‘’செல்வி ராமஜெயம் என்னும் நான் சட்டப்படி அமைக்கப்பட்ட  இந்திய அரசியல் அமைப்பின் பால் உண்மையான நம்பிக்கையும்,  மாறாப்பற்றும் கொண்டிருப்பேன் என்றும்,  இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும்,  ஒருமையையும் நிலைநிறுத்துவேன் என்றும்,

தமிழ்நாட்டு அரசின்
அமைச்சராக, உண்மையாகவும், உளச்சான்றின் படியும்,    என் கடமைகளை
நிறைவேற்றுவேன் என்றும்,  அரசியல் அமைப்பிற்கும், சட்டத்திற்கும் இணங்க,   அச்சமும், ஒருதலை சார்பும் இன்றி,  விருப்பு, வெறுப்பை விளக்கி,    பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும்,    நேர்மையானதை செய்வேன் என்றும்,    ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்.


வீடியோ: எஸ்.ஏ. ரியாஸ் அஹமத்.

ஞாயிறு, 15 மே, 2011

சமூக நலத்துறை அமைச்சராகிறார் செல்வி ராமஜெயம்!

புவனகிரி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டுள்ள பரங்கிப்பேட்டையை சார்ந்த செல்வி ராமஜெயம் அமையப் போகும் தமிழக அமைச்சரவையில் இடம்பெற உள்ளார். ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை பதவி ஏற்க இருக்கிறது. இதில் செல்வி ராமஜெயத்திற்கு சமூக நலத்துறை ஒதுக்கப்படுகிறது. இரண்டாவது முறையாக வெற்றியை தக்க வைத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. புவனகிரி தொகுதியிலிருந்து பரங்கிப்பேட்டை சிதம்பரம் தொகுதியில் இணைக்கப்ட்டுவிட்டாலும், பரங்கிப்பேட்டையில் இவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி பலரும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழக புதிய அமைச்சரவை- முழுப்பட்டியல்!



சென்னை: தமிழக சட்டசபை அ.தி.மு.க., தலைவராக பொதுசெயலர் ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் அவர் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து கவர்னரரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தொடர்ந்து கவர்னர் விடுத்த அழைப்பின்பேரில் நாளை ( 16 ம் தேதி ) முதல்வராக பதவியேற்கிறார்.

இதனிடையே, நாளை பதவியேற்கவுள்ள அமைச்சர்கள் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதா : முதலமைச்சர்

ஒ பன்னீர்செல்வம் : நிதித்துறை....

செங்கோட்டையன்: விவசாயம்

கே பி முனுசாமி: உள்ளாட்சி துறை

பி தங்கமணி : வருவாய்துறை

நத்தம் விஸ்வநாதன்: மின்சார துறை

வைத்தியலிங்கம் : வீட்டு வசதி துறை

சி வி சண்முகம்: பள்ளி கல்வி துறை

கே வி ராமலிங்கம்: பொதுப்பணித்துறை

கருப்பசாமி : கால்நடைத்துறை

செந்தில் பாலாஜி : போக்குவரத்துத்துறை

சுப்பையா : சட்டத்துறை

வி எஸ் விஜய் : மக்கள் நலவாழ்வுத்துறை

ஆர் பி உதயகுமார் : தகவல் தொழில்நுட்பம்

செல்லூர் ராஜு: கூட்டுறவுத்துறை

மரியம்பிச்சை : சுற்றுசூழல்துறை

சண்முகவேல்:தொழில்துறை

செல்வி ராமஜெயம்: சமுகநலம்

பச்சைமால் : வனத்துறை

சின்னையா : பிற்படுத்த பட்டோர் நலன்


என் சுப்ரமணியன் : ஆதிதிராவிடர் நலன்

கோகுல இந்திரா : வணிக வரித்துறை

பி வி ரமணா : கைத்தறித்துறை

என் ஆர் சிவபதி : விளையாட்டுத்துறை

அக்ரி கிருஸ்ணமூர்த்தி : உணவுத்துறை

பழனியப்பன் : உயர் கல்வி துறை

எஸ் பி சண்முகநாதன் : அறநிலையத்துறை

எம் சி சம்பத் : ஊரக தொழில்துறை

எஸ் பி வேலுமணி : சிறப்பு திட்ட அமலாக்கம்

ஜி செந்தமிழன் : செய்தித்துறை

ஜெயபால் : மீன்வளத்துறை

செல்லபாண்டியன் : தொழிலாளர் நலன்

புத்தி சந்திரன் : சுற்றுலாத்துறை

எடப்பாடி பழனிசாமி : நெடுஞ்சாலை துறை

சனி, 14 மே, 2011

பரங்கிப்பேட்டை மாணவிக்கு ரியாத் நிகழ்ச்சியில் வெற்றிப்பரிசளிப்பு

.
தஃபர்ரஜ் நற்பணி அமைப்பு நடத்திய பல்சுவை நிகழ்ச்சி கடந்த 13 - 05 - 2011 அன்று ரியாத்தில் நதா, முஹம்மதியா மகிழகங்களில் சிறப்புடன் நடைபெற்றது.

அவ்வமயம், கடந்த ஆண்டு ரியாத்தில் பன்னாட்டு இந்தியப்பள்ளியில் C B S E பத்தாம் வகுப்பில் தமிழில் முதல் நிலை பெற்ற மாணவ மாணவிகள் பாராட்டும் கேடயமும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர். நடந்து முடிந்த மேல்நிலைப் பள்ளித் தேர்வில் 1180 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் ஆறாவதாக வந்த மாணவர், பன்னாட்டு இந்தியப் பள்ளியின் முன்னாள் மாணவர் என்னும் பெருமிதங் கொண்டு அவருடைய தகப்பனார் ரிபாயி அவர்களிடம் பாராட்டும், வெகுமதியான பரிசிலும் வழங்கப்பட்டன.

கடந்த ஆண்டு CBSE பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழில் முதல் நிலை பெற்ற மாணவி ஹமீதா நஸ்லுன் சிதாரா பரங்கிப்பேட்டை மாணவியாவார். அவருடைய தகப்பனார் ஜாஃபர் அலி ரியாத்தில் பணி புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இப்னுஹம்துன் செயலாற்றினார்.

வெள்ளி, 13 மே, 2011

பாலகிருஷ்ணன் வெற்றி!


சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க.கூட்டணில் அங்கம் வகிக்கும் மா.கம்யூ வேட்பாளர் கே. பாலகிருஷ்ணன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட மூவேந்தர் முன்னேற்றக் கழக வேட்பாளர் வாண்டையாரை விட 2270 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். முன்னதாக வெற்றி அறிவிப்பு வெளியாவதில் காலதாமதம் ஏறபட்ட நிலையில் தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுமார் 74,600 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

மீண்டும் செல்வி ராமஜெயம் எம்.எல்.ஏ.: 13117 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!


பரங்கிப்பேட்டை: புவனகிரி தொகுதியில்இ அதிமுக வெற்றி பெற்றுள்ளது. புவனகிரி தொகுதியில், அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயம் 87413 ஓட்டுகளும், பாமக வேட்பாளர் அறிவுச்செல்வன் 74296 ஓட்டுகளும் பெற்றள்ளனர். இதன்மூலம், அதிமுக 13117 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இரண்டாவது முறையாக  சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டள்ள பரங்கிப்பேட்டையை சாந்த இவருக்க அமைச்சரவையில் பங்குபெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வெற்றிக் கொண்டாட்டத்தில் பரங்கிப்பேட்டை அ.தி.மு.க. கூட்டணியினர்!


 
பரங்கிப்பேட்டை: சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்த மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர் பாலகிருஷ்ணன் வெற்றி உறுதி என்றாலும் இதுவரை இவருடைய வெற்றியை இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் வெற்றி பெருவது உறுதி என்பதால், கூட்டணிக் கட்சியினர் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். ம.ம.க.வினர் மற்றும் அ.தி.மு.கவினர் இனிப்பு வழங்கி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். பெரியதெரு, சின்னக்கடை தெரு மற்றும் சஞ்சிவீராயர் கோயில் தெருவில் பட்டாசு வெடித்தனர்.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...