செவ்வாய், 31 மே, 2011
இறப்புச் செய்தி
இறப்புச் செய்தி
ஞாயிறு, 29 மே, 2011
வரவேற்பு மழையில் செல்வி ராமஜெயம்!
நிகழ்ச்சியில் மாவட்ட செயலர் அருண்மொழித்தேவன், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலர் சுப்ரமணியன், பரங்கிப்பேட்டை அ.தி.மு.க. நிர்வாகிகள் மாரிமுத்து, ஷாஜஹான், இக்பால், காமில், யூசுப் அலி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, புவனகிரி சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க புறப்பட்டர் அமைச்சர் செல்வி ராமஜெயம்.
மின்சாரம் நிறுத்தம்

சவூதியில் விபத்து - 4 தமிழர்கள் உயிரிழப்பு
சனி, 28 மே, 2011
நன்றியுடன் பாலகிருஷ்ணன்!
வெள்ளி, 27 மே, 2011
மதிப்"பெண்கள்"...!
சற்று முன் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் பரங்கிப்பேட்டை அளவில் பள்ளிகளின் தேர்ச்சி விவரம் சதவிகிதத்தில்:
சேவாமந்திர் பள்ளி               - 99 %
அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி – 91 %
அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி – 78 %
மூனா ஆஸ்திரேலியன் பள்ளி – 76 %
கலிமா மெட்ரிக்குலேஷன் பள்ளி - 71 %
அவரவர் பள்ளி அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் விவரம்:
கலிமா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஃபைரோஸ் பானு 460, ஜொஹரா பானு 457, இந்துஜா 438 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்
அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செய்யது ராபியா பீவி 479, தீபா 470, கீர்த்தனா 466, நூர் சுல்தானா 463 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ராம் குமார் 477, நடனமுத்து 455 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மூனா ஆஸ்திரேலியன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஏஞ்சலினா மேரி 431, சனோஃபர் 429. சமீரா 420 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்
சேவாமந்திர் பள்ளி மாணவர் முஹம்மது கவுஸ் 455 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மாணவ - மாணவிகளையும், உதவிப் புரிந்த ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் www.mypno.com ஆசிரியர் குழு சார்பாக வாழ்த்துகிறோம்.
மாணவிகள் அதிரடி..!
வியாழன், 26 மே, 2011
நாளை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள்: MYPNO.COM-ல் காணலாம்
தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் இந்தத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன. தமிழ்நாடு, புதுச்சேரியில் 9.5 லட்சம் மாணவ- மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதியுள்ளனர். இந்தத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 11ம் தேதி வரை நடந்தன.
இந் நிலையில் பிளஸ்-2 தேர்வுகள் கடந்த 9ம் தேதியும், சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 22ம் தேதியும் வெளியாயின.
இந் நிலையில் எஸ்.எஸ்.எல்.சி, மெட்ரிக், ஆங்கிலோ- இந்தியன், ஓரியண்டல் பொதுத்தேர்வு முடிவுகள் 27ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு வெளியாகின்றன.
மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், MYPNO.COM மற்றும் அரசு இணையத் தளங்களிலும் உடனுக்குடன் அறியலாம். மேலும் மதிப்பெண் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
புதன், 25 மே, 2011
TNTJ கோடைகால பயிற்சி முகாம் பரிசளிப்பு நிகழ்ச்சி!
இதற்கான பரிசளிப்பு நிகழ்ச்சி கடந்த 21.05.2011 சனிக்கிழமை அன்று மாவட்ட துனை செயலாளர் சகோ.தாஜூதீன் அவர்களின் தலைமையில் நகர தலைவர் சகோ.முத்துராஜா முன்னிலையில் "மஸ்ஜிதுத் தவ்ஹீத்" பள்ளியில் நடைப்பெற்றது.
செவ்வாய், 24 மே, 2011
கட்டாயக் கல்விச் சட்டத்தை மீறும் தனியார் பள்ளிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
குழந்தைகள் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 என்ற மத்திய அரசின் சட்டம் 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி உரிமையை வழங்குகிறது.
இச் சட்டத்துக்கு முரணாக கடலூரில் கட்டாய நன்கொடை, மறைமுகக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. கட்டணங்களுக்கு ரசீது வழங்கப்படுவதில்லை, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் வறுமைக்
கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கீட்டை கடலூர் பள்ளிகளில் அளிக்கவில்லை.
சட்டவிரோதமாக நுழைவுத் தேர்வுகள், பெற்றோருக்கு அறிவுச்சோதனை போன்ற வடிகட்டும் தேர்வுகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. மெட்ரிக் பள்ளிகள் தனியாரிடம் இருந்து தரமற்ற பாடப் புத்தகங்களை வாங்கி மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் சுமைகளை ஏற்றுகின்றன என்றும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. எனவே இத்தகைய விதிமீறல்களை செய்துவரும் கடலூர் மாவட்ட தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகரில் உள்ள பல்வேறு பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் தலைமை வகித்தார்.
பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் வெண்புறா குமார், அருள்செல்வம், திருநாவுக்கரசு, லெனின், பி.பண்டரிநாதன், பாலசுப்பிரமணியன், கதிர் மணிவண்ணன், தெய்வகுரு, எஸ்.புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திங்கள், 23 மே, 2011
வாத்தியாப்பள்ளி கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார் பாலகிருஷ்ணன்!
போட்டி குறித்து, சட்ட மன்ற உறுப்பினர் பேசுகையில், 'இளைஞர்கள் ஒழுக்கங்கெட்டு வீணாண விசயங்களில் ஈடுபடும் இந்த காலகட்டத்தில், அவற்றிலிருந்து திசை திரும்பும் விதமாக இது போன்ற விளையாட்டுப் போட்டிகள் அமைகிறது. அதுவும் இந்த கிரிக்கெட் போட்டியில்தான் டீம் ஸ்பிரிட் எனப்படும் குழு உணர்வு ஏற்படுகிறது' என்றார்.
கிராம வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்: ஐ.ஏ.எஸ். மாணவி அனுகிரகா பேட்டி!
இதுகுறித்து அனுகிரகா கூறியதாவது: கிராம பகுதியில் இருந்து ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். கிராமத்தில் படித்தவர்களுக்கு, அதிக திறமை உள்ளது. ஆனால், அவர்களுக்கு சரியான விழிப்புணர்வு இல்லாததால் சாதிக்க முடியவில்லை. யார் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்கு முயற்சி, விழிப்புணர்வு இருந்தால் வாழ்க்கையில் எளிதாக முன்னேறலாம். கடின உழைப்பு இருந்தால் எளிதாக சாதிக்க முடியும். கிராம வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றுவேன். கல்வி மற்றும் பெண்கள் மேம்பாட்டிற்கு பாடுபடுவேன்.இவ்வாறு அனுகிரகா கூறினார்.
ஞாயிறு, 22 மே, 2011
பரங்கிப்பேட்டையில் சிறப்பு கூட்டுக்குடிநீர் திட்டம்: சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் தகவல்!
என்.எல்.சி., யில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 250 மெகா வாட் முதல் 300 மெகாவாட் வரை பெற்று மின் பற்றாக்குறையை முற்றிலும் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக முதல்வர் ஜெயலலிதா, என்.எல்.சி., அதிகாரிகள், துறை சார்ந்த அமைச்சர் ஆகியோரிடம் பேசி தீர்வு காணப்படும். சிதம்பரம் நகரில் செயல்படுத்த முடியாமல் உள்ள பாதாள சாக்கடைத் திட்டம், 7 கோடி ரூபாயில் கொண்டு வரப்பட்ட புதிய குடிநீர் திட்டம் ஆகியவற்றை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதேப்போன்று பஸ் நிலையம், மீன் மார்க்கெட், அரசு மருத்துவமனையில் சுகாதார வசதிகள் என மக்கள் பணிகள் நிறைவேற்றித்தரப்படும்.
பரங்கிப்பேட்டை, குமராட்சி, கிள்ளை பகுதியில் சிறப்பு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். காவிரி டெல்டா பகுதியாக இருந்தும் சிதம்பரம் டெல்டா பகுதிக்கான எந்த சலுகையும் கொடுக்காமல் புறக்கணிக்கப்படுகிறது. அந்த நிலையை மாற்ற அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். சிதம்பரம் தொகுதிக்கு வரும் எந்த திட்டமாக இருந்தாலும், எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் செயல்படுத்தப்படும் பணிகளாக இருந்தாலும் கமிஷன், லஞ்சம் எதுவுமின்றி ஒதுக்கப்படும் நிதி முழுவதும் செலவழிக்கப்பட்டு நேர்மையான, வெளிப்படையாக நிர்வாகம் நடத்தப்படும். இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.
சனி, 21 மே, 2011
பரங்கிப்பேட்டையில் பலத்த இடி..!

வெள்ளி, 20 மே, 2011
இந்த பதவி கிடைக்கும் என்று நான் சற்றும் எதிர்பார்க்க வில்லை: அமைச்சர் செல்வி ராமஜெயம் பேட்டி
கடந்த வாரம் ரிசல்ட், இந்த வாரம் அரெஸ்ட்..!

வியாழன், 19 மே, 2011
I .P.S. அதிகாரிகள் அதிரடியாக மாற்றம்
புதன், 18 மே, 2011
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

திங்கள், 16 மே, 2011
இறப்புச் செய்தி
செல்வி ராமஜெயம் என்கிற நான்.... (வீடியோ!)
அப்போது செல்வி ராமஜெயம் ஏற்றுக்கொண்ட உறுதிமொழி: ‘’செல்வி ராமஜெயம் என்னும் நான் சட்டப்படி அமைக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்பின் பால் உண்மையான நம்பிக்கையும், மாறாப்பற்றும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும், ஒருமையையும் நிலைநிறுத்துவேன் என்றும்,
தமிழ்நாட்டு அரசின் அமைச்சராக, உண்மையாகவும், உளச்சான்றின் படியும், என் கடமைகளை
நிறைவேற்றுவேன் என்றும், அரசியல் அமைப்பிற்கும், சட்டத்திற்கும் இணங்க, அச்சமும், ஒருதலை சார்பும் இன்றி, விருப்பு, வெறுப்பை விளக்கி, பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும், நேர்மையானதை செய்வேன் என்றும், ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்.
வீடியோ: எஸ்.ஏ. ரியாஸ் அஹமத்.
ஞாயிறு, 15 மே, 2011
சமூக நலத்துறை அமைச்சராகிறார் செல்வி ராமஜெயம்!
தமிழக புதிய அமைச்சரவை- முழுப்பட்டியல்!
சென்னை: தமிழக சட்டசபை அ.தி.மு.க., தலைவராக பொதுசெயலர் ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் அவர் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து கவர்னரரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தொடர்ந்து கவர்னர் விடுத்த அழைப்பின்பேரில் நாளை ( 16 ம் தேதி ) முதல்வராக பதவியேற்கிறார்.
இதனிடையே, நாளை பதவியேற்கவுள்ள அமைச்சர்கள் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதா : முதலமைச்சர்
ஒ பன்னீர்செல்வம் : நிதித்துறை....
செங்கோட்டையன்: விவசாயம்
கே பி முனுசாமி: உள்ளாட்சி துறை
பி தங்கமணி : வருவாய்துறை
நத்தம் விஸ்வநாதன்: மின்சார துறை
வைத்தியலிங்கம் : வீட்டு வசதி துறை
சி வி சண்முகம்: பள்ளி கல்வி துறை
கே வி ராமலிங்கம்: பொதுப்பணித்துறை
கருப்பசாமி : கால்நடைத்துறை
செந்தில் பாலாஜி : போக்குவரத்துத்துறை
சுப்பையா : சட்டத்துறை
வி எஸ் விஜய் : மக்கள் நலவாழ்வுத்துறை
ஆர் பி உதயகுமார் : தகவல் தொழில்நுட்பம்
செல்லூர் ராஜு: கூட்டுறவுத்துறை
மரியம்பிச்சை : சுற்றுசூழல்துறை
சண்முகவேல்:தொழில்துறை
செல்வி ராமஜெயம்: சமுகநலம்
பச்சைமால் : வனத்துறை
சின்னையா : பிற்படுத்த பட்டோர் நலன்
என் சுப்ரமணியன் : ஆதிதிராவிடர் நலன்
கோகுல இந்திரா : வணிக வரித்துறை
பி வி ரமணா : கைத்தறித்துறை
என் ஆர் சிவபதி : விளையாட்டுத்துறை
அக்ரி கிருஸ்ணமூர்த்தி : உணவுத்துறை
பழனியப்பன் : உயர் கல்வி துறை
எஸ் பி சண்முகநாதன் : அறநிலையத்துறை
எம் சி சம்பத் : ஊரக தொழில்துறை
எஸ் பி வேலுமணி : சிறப்பு திட்ட அமலாக்கம்
ஜி செந்தமிழன் : செய்தித்துறை
ஜெயபால் : மீன்வளத்துறை
செல்லபாண்டியன் : தொழிலாளர் நலன்
புத்தி சந்திரன் : சுற்றுலாத்துறை
எடப்பாடி பழனிசாமி : நெடுஞ்சாலை துறை
சனி, 14 மே, 2011
பரங்கிப்பேட்டை மாணவிக்கு ரியாத் நிகழ்ச்சியில் வெற்றிப்பரிசளிப்பு
அவ்வமயம், கடந்த ஆண்டு ரியாத்தில் பன்னாட்டு இந்தியப்பள்ளியில் C B S E பத்தாம் வகுப்பில் தமிழில் முதல் நிலை பெற்ற மாணவ மாணவிகள் பாராட்டும் கேடயமும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர். நடந்து முடிந்த மேல்நிலைப் பள்ளித் தேர்வில் 1180 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் ஆறாவதாக வந்த மாணவர், பன்னாட்டு இந்தியப் பள்ளியின் முன்னாள் மாணவர் என்னும் பெருமிதங் கொண்டு அவருடைய தகப்பனார் ரிபாயி அவர்களிடம் பாராட்டும், வெகுமதியான பரிசிலும் வழங்கப்பட்டன.
கடந்த ஆண்டு CBSE பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழில் முதல் நிலை பெற்ற மாணவி ஹமீதா நஸ்லுன் சிதாரா பரங்கிப்பேட்டை மாணவியாவார். அவருடைய தகப்பனார் ஜாஃபர் அலி ரியாத்தில் பணி புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இப்னுஹம்துன் செயலாற்றினார்.
வெள்ளி, 13 மே, 2011
பாலகிருஷ்ணன் வெற்றி!
மீண்டும் செல்வி ராமஜெயம் எம்.எல்.ஏ.: 13117 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!
 பரங்கிப்பேட்டை:  புவனகிரி தொகுதியில்இ அதிமுக வெற்றி பெற்றுள்ளது. புவனகிரி தொகுதியில்,  அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயம் 87413 ஓட்டுகளும், பாமக வேட்பாளர்  அறிவுச்செல்வன் 74296 ஓட்டுகளும் பெற்றள்ளனர். இதன்மூலம், அதிமுக 13117  ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இரண்டாவது முறையாக   சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டள்ள பரங்கிப்பேட்டையை சாந்த  இவருக்க அமைச்சரவையில் பங்குபெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பரங்கிப்பேட்டை:  புவனகிரி தொகுதியில்இ அதிமுக வெற்றி பெற்றுள்ளது. புவனகிரி தொகுதியில்,  அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயம் 87413 ஓட்டுகளும், பாமக வேட்பாளர்  அறிவுச்செல்வன் 74296 ஓட்டுகளும் பெற்றள்ளனர். இதன்மூலம், அதிமுக 13117  ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இரண்டாவது முறையாக   சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டள்ள பரங்கிப்பேட்டையை சாந்த  இவருக்க அமைச்சரவையில் பங்குபெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.வெற்றிக் கொண்டாட்டத்தில் பரங்கிப்பேட்டை அ.தி.மு.க. கூட்டணியினர்!
- 
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
- 
கல் தோன்றி மண் தோன்றி கல்யாண மண்டபங்கள் தோன்றாத அந்த காலத்தில்., வீடுகளில் தான் (திருமண) விருந்து நடக்கும். இன்றைய காலத்தில் கடல் போல மண்டபம...
- 
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
 















 
 
