திங்கள், 30 ஜூன், 2008

நோட்டு புத்தகங்கள், சீருடை பெற மாணவ-மாணவியர் ஆர்வ மிகுதியில் கூட்டத்தில் முட்டி மோதினர்.


பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சமூக நலவாழ்வு சங்கம் (சிங்கப்பூர்) நிதியுதவியுடன் 8-வது ஆண்டாக பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில் நேற்று (29-06-2008) நடைபெற்ற விழாவானது திருவிழா போன்று காட்சியளித்தது.


இலவச நோட்டு புத்தகங்கள்-சீருடைகள் 1 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தனித்தனி பகுதிகளாக பிரிக்கப்பட்டு வழங்கினாலும் மாணவ-மாணவியரின் ஆர்வ மிகுதியால் கூட்ட நெரிசலில் முட்டி மோதினர். இவற்றை விநியோகிப்பதற்காக கிரஸண்ட் சங்க (CWO) , கல்விக்குழு உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் நியமிக்கப்பட்டு 750 மாணவ-மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டது.

பரங்கிப்பேட்டை மாணவர்களுக்கு சேர்க்கையில் சிறப்பு கவனம் அளிக்க கோரியதை அங்கீகரித்தார் துணைவேந்தர்.


பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சமூக நலவாழ்வு சங்கம் (சிங்கப்பூர்) நிதியுதவியுடன் 8-வது ஆண்டாக பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில் நேற்று (29-06-2008) நடைபெற்ற விழாவில் இஸ்லாமிய ஐக்கிய ஜமஅத் தலைவரும் பேரூராட்சி மன்ற தலைவருமான எம்.எஸ். முஹமது யூனுஸ் உரையாற்றும் போது, பரங்கிப்பேட்டை கல்வியில் பின்தங்கியிருப்பதையும் சுனாமி பாதித்த பகுதியாக இருப்பதையும் கருத்தில் கொண்டு அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் விண்ணப்பிக்கும் பரங்கப்பேட்டை மாணவர்களுக்கு சேர்க்கையில் சிறப்பு கவனம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து பேசிய பல்கலைகழக துணைவேந்தர் இந்த கோரிக்கை ஏற்பதாக உறுதியளித்து பேசியதில் அரங்கம் அதிர கரகோசத்தைப் பெற்றார்.

மாணவ-மாணவியருக்கு பதக்கங்கள், இலவச சீருடைகள்-நோட்டு புத்தகங்கள் வழங்கி சாதனை.

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சமூக நலவாழ்வு சங்கம் (சிங்கப்பூர்) நிதியுதவியுடன் 8-வது ஆண்டாக பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில் மாணவ-மாணவியருக்கு இலவச சீருடை மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
நேற்று (29-06-2008) சந்தைதோப்பு அருகில் இருக்கும் எஸ்.ஜி.எம். திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழா நடைபெற்றது. ஹாபிழ் அப்துல் சமது ரஷாதி அவர்களின் கிராஅத்துடன் துவங்கிய இவ்விழாவிற்கு கலிமா ஷேக் அப்துல் காதர் மரைக்காயர், காதர் ஹசனா மரைக்காயர், அப்துல் காதர் உமரி மற்றும் ஐ. இஸ்மாயில் மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவிற்கு இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் எம்.எஸ். முஹமது யூனுஸ் தலைமை வகித்தார். கல்விக்குழு தலைவர் லி.ஹமீது மரைக்காயர் வரவேற்புரையாற்றினார். ஹாபிழ் அப்துல் சமது ரஷாதி அவர்களின் கிராஅத்துடன் துவங்கிய இவ்விழாவிற்கு கலிமா ஷேக் அப்துல் காதர், காதர் ஹசனா மரைக்காயர், அப்துல் காதர் உமரி மற்றும் ஐ. இஸ்மாயில் மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக அண்ணாமலை பல்கலைகழக துணைவேந்தர் டாக்டர் எம். இராமநாதன் சிறப்பு விருந்தினராக பங்குப்பெற்று 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 50 மாணவ-மாணவியருக்கு பதக்கங்கள் வழங்கினார். இவ்விழாவில் சுமார் 130 மாணவ-மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் 750 பேருக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் சீறுடை வழங்கப்பட்டது.

இவ்விழாவில் பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின ஆராய்சி மைய்ய இயக்குநர் பாரசுப்ரமணியன், முன்னால் துணை கல்வி இயக்குநர் உபைதுல்லா சாஹிப் மற்றும் பேராசிரியர் கதிரேசன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

சனி, 28 ஜூன், 2008

உயர்கல்வியை நோக்கி பயணியுங்கள்.

நம் சமுதாயம் எல்லா துறைகளிலும் முன்னேற வேண்டுமென்றால் உயர்கல்வியை கற்றால் மட்டுமே சாத்தியம் என்று நேற்று (27-06-2008) பரங்கிப்பேட்டை டி.என்.டி.ஜே. (TNTJ) மர்கஸ் ஜூம்ஆ குத்பாவில் உரை நிகழ்த்தினார் அதன் மாணவரணி தலைவர் சித்தீக் அவர்கள்.

பொதுவாகவே, ஜூம்ஆ பேருரைகளில் இதுபோன்று சமுதாயத்திற்கு அவசியமான பேச்சுகளை கேட்பதென்பது சாத்தியமற்று போயிருக்கும் நிலையில் சித்தீக் அவர்களின் உயர்கல்வி குறித்த உரை அங்கு வந்திருந்த மாணவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்களிடேயே மிகுந்த வரவேற்பேற்பைப் பெற்றது.

ஜூம்ஆ தொழுகைக்குப் பிறகு ஏழைப் பெண்களுக்கு இலவல தையல் எந்திரம் வழங்கப்பட்டது. இதனை பெண்கள் சார்பர்க கிளை நிர்வாகிகள் பெற்றுக் கொண்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

வியாழன், 26 ஜூன், 2008

பரங்கிப்பேட்டையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தொலைபேசி ஓயர்கள் திருட்டு: 2 பேர் கைது

பரங்கிப்பேட்டையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தொலை பேசி ஒயர்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பி.எஸ். என்.எல். தொலை பேசி நிலையத்தில் ஏராளமான தொலை பேசி காப்பர் ஒயர்கள் திருடு போய் வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் குமர கோவில் தெருவை சேர்ந்த செல்லையா (வயது 40) என்பவர் தொலைபேசி நிலை யத்திற்குள் புகுந்து ஒயர் களை திருடினார்.

இதனை அங்கு காவ லாளியாக இருந்த மகிழ்நாதன் பார்த்து கையும், களவுமாக அவரைÛ பிடித்தார். பின்னர் செல்லையா போலீசில் ஒப்படைக் கப்பட்டார். இது பற்றி உதவி பொறியாளர் முகமது உஸ்மான் பரங்கிப்பேட்டை போலீ சில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம பாண்டியன் வழக்குப்பதிவு செய்து செல்லையாவிடம் விசாரணை செய்தார்.

விசாரணையில், செல்லையா 200 கிலோ தொலைபேசி ஒயர்களை திருடி ,அதை சிதம்பரத்தில் உள்ள இரும்பு கடைக்காரர் சையது மூசாவிடம் விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டார். அதன் பேரில் போலீசார் செல் லையா, சையது மூசா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ஒயர்கள் கைப்பற்றப் பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

திங்கள், 23 ஜூன், 2008

லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா


பரங்கிப்பேட்டை லயன்ஸ் கிளப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று மாலை 7 மணிக்கு அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் கடல்வாழ் உயிரின ஆராய்சி மையத்தில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் பதவியேற்றதுடன், ஏழை மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட் புத்தகங்கள் வழங்கப்பட்டது. மேலும் லயன்ஸ் கிளப்பின் புதிய செயல் திட்டங்களும் அறிவுப்பு செய்யப்பட்டது.

புதிய நிர்வாகிகள் விபரம்:
தலைவர் : எம். கவுஸ் ஹமீது (ராஜா)
செயளாளர் : எம்.எஸ. சுல்தான் சேட்டு
பொருளாளர் : எம். இராதாகிருஷ்ணன்
து. தலைவர்கள் : ஓ.ஏ.டபிள்யூ. பாவாஜான், பி.அருள்வாசகம், கே. அரசு
து. செயளாளர்: டி. ஜெயராமன்

ஞாயிறு, 22 ஜூன், 2008

மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா



பரங்கிப்பேட்டை ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ) மற்றும் பரங்கிப்பேட்டை தவ்ஹீத் ஜமாஅத் (PTJ), ஜித்தா இணைந்து மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நிகழ்ச்சியை இன்று மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடத்தினர்.

ITJ-ன் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் மவ்லவி ஸதக்கத்துல்லா உமரி மற்றும் ஆலிமா சுமையா மாண-மாணவிகளுக்கு பரிசளித்து சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழச்சியில் மாவட்டத் தலைவர் கலிமுல்லாஹ் உட்பட பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

சனி, 21 ஜூன், 2008

கண்டன ஆர்ப்பாட்டம்

பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை அருகில் இன்று (21-06-2008) சனி மாலை 6 மணியளவில் பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு மருத்துவமனை கட்டிமுடித்து ஓராண்டாகியும் இதுவரை திறக்கப்படாமலேயே இருப்பதை கண்டித்தும், அரவு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததை கண்டித்தும், புதுப்பேட்டை அரசு ஆரம்ப பள்ளியில் நேற்று 37 மாணவர்கள் வாந்தி-மயக்கம், வயிற்றுவலி ஏற்பட்டதற்கான சுகாதார சீர்கேட்டை கண்டித்தும், போதிய மருத்துவர்கள் இல்லாததால் இரவு நேர அவசர-ஆபத்து நேரங்களில் மக்கள் அவதிபடும் அவலநிலையைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு மருத்துவமனையை விரைவில் திறக்கமால் வைத்திருந்தால் அதை உடைத்தாவது நாங்கள் திறப்போம் என்று எச்சரிக்கை விடுத்தார் சிதம்பரம் வட்ட செயலாளர்.

இறப்புச் செய்தி

பெரிய ஆசரகாணாத் தெரு மர்ஹூம் ஷேக் தாவூத் அவர்களின் மகனார் "நகைக்கடை பாவா" என்கிற S.M. ஷெரீஃப் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்று காலை 11 மணியளவில் புதுப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வெள்ளி, 20 ஜூன், 2008

பள்ளி மாணவர்கள் திடீர் வாந்தி மயக்கம்


இன்று காலை (வெள்ளிக்கிழமை) 10 மணியளவில் புதுப்பேட்டை அரசு ஆரம்ப பள்ளியில் குடிதண்ணீரை குடித்த 37 மாணவ மாணவியர்கள் வாந்தி மற்றும் மயக்கமடைந்ததால் அவர்கள் உடனடியாக பரங்கிப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டனர்.

மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் பெரும்பாலான கவுன்சிலர்கள், ஆர்.டி.ஓ. மற்றும் முக்கிய சுகாதாரத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் உடனடியாக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்டவர்கள நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்கள நாம் நேரில் கேட்டதில் அவர்கள் குடித்த தண்ணீரில் பெண்களின் லிப்ஸ்டிக் (உதட்டுச்சாயம்) போல் ஏதோ கிடந்தது என்று கூறினார்கள். அங்கிருந்த மருத்துவர்கள கேட்டதில் மாணவர்களின் நலக்குறைவுக்கு காரணம் இன்னும் துல்லியமாக தெரியவில்லை. மாணவர்கள் குடித்ததாக சொல்லப்படும் தண்ணீரை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அனைவரும் தற்போது நலமாக உள்ளனர் . யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்தனர்.

பல மாணவர்கள் பள்ளிக்கு காலை உணவு சாப்பிடாமல் வந்திருந்ததும் நமது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தால் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம் காலை முதல் பரபரப்பாக காணப்பட்டது.

'முத்திரை' சமுதாயம்...!

நம் சமுதாயத்தில் காணப்படும் ஓர் ஆபத்தான போக்கு மிகுந்த கவலை அளிக்கிறது.



'கைரே உம்மத்' - சிறந்த சமுதாயம் எனும் உயர்நிலையிலிருந்து தடம் புரண்டு முத்திரை குத்தும் சமுதாயமாக மாறிவிட்டோமோ என்கிற திகில் மனதை வாட்டுகிறது.


ஏகத்துவக் கொள்கையைக் கொஞ்சம் அழுத்தமாக ஒருவர் எடுத்துரைத்தால் உடனே முத்திரை குத்தப்படுகிறது - 'தவ்ஹீத்வாதி'


மறுமையை நினைவுகூரும் வகையில் மண்ணறைக்குச் சென்று ஸியாரத் செய்வது கூடும் என்று ஒருவர் பேசினால் உடனே முத்திரை குத்தப்படுகிறது - 'தர்கா பார்ட்டி அல்லது 'குராஃபி'


தர்காக்களில் நடைபெறும் அநாச்சாரங்களைக் கண்டித்து ஒருவர் பேசினால் அவர் மீது விழும் முத்திரை - 'வஹ்ஹாபி'


நேர்வழியில் சென்ற முன்னோர்கள் வழியில்தான் நடைபோட வேண்டுமென்று ஒருவர் எடுத்துரைத்தால் பாய்ந்து வருகிறது முத்திரை - 'ஸலஃபி'


பிரிவுப் பெயர்களின் அடிப்படையில் செயலாற்றுவது தவறு என்று பிரச்சாரம் செய்தால் அவருக்குக் குத்தப்படும் முத்திரை - 'நஜாத்துக்காரர்'


கண்ணை மூடிக்கொண்டு இமாம்களையோ, மத்ஹபுகளையோ பின்பற்றாதீர்கள் என்று ஒருவர் அறிவுப்பூர்வமாகப் பேசினால் கூட அவருக்கும் முத்திரை குத்தப்படும் - 'அஹ்லே ஹதீஸ்'


இறைவன் நமக்களித்த முத்திரையான 'முஸ்லிம்' என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்??????



கருத்துதவி : 'சமரசம்' இதழ் -சின்னச் சின்ன மின்னல்கள்



இறப்புச் செய்தி

ஜெய்லாஷாதர்கா என்ற இடத்தில்வசித்துவந்த மர்ஹீம்செய்யதுஅஹ்மது அவர்களின்மனைவியும், யுசுப்,அன்சாரி, ஜெய்லானி, கவுஸ் ஆகியோரின் தாயாருமாகிய மைமுன்பீவி அவர்கள் 18.6.08ல். மர்ஹூமாகி விட்டார்கள். அவர்களின் மறுஉலக நல் வாழ்விற்கு நாம்அனைவரும் துஆ செய்வோம்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்: அப்துஸ் ஸமது

புதன், 18 ஜூன், 2008

அகப்பட்டான் மொபைல் திருடன்.

கடந்த மாதம் பரங்கிப்பேட்டையில் மூன்று கடைகளில் (சவூதியா டைம்ஸ் & மொபைல்ஸ், பேமிலி கார்னர் மற்றும் கிளாசிக் மொபைல்ஸ்) கைவரிசையை காட்டிய திருடன் சிதம்பரம் அருகே பிடிபட்டான். இவன் விழுப்புரம் மாவட்டம் வளவனூரைச் சார்ந்தவன் என்றும், தற்பொழுது கிள்ளை அருகே வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இவன் பொதுவாகவே மொபைல் கடைகளில்தான் அதிகமாக தன்னுடைய கைவரிசையை காட்டுவானாம். மேலும் இவன் பரஙகிப்பேட்டையில் 3 இடங்களில் திருடிய பிறகு, சிதம்பரம் பகுதியில் பல மொபைல் கடைகளில் திருடியிருப்பது விசாரனையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக சஞ்சீவிராயர் கோயில் அருகில் இருக்கும் கிளாசிக் மொபைல் ஷாப்பில் திருடிய கட்டிங் பிளேயரை வைத்துதான் சிதம்பரம் பகுதியில் பல கடைகளில் பூட்டை உடைத்திருக்கிறானாம்.

தற்போது பிடிபட்ட பொருட்கள் அனைத்தும் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் பாதுகாப்பாக இருகக்கிறது. இவையனைத்தும் கோர்ட் வழியாக அடுத்த வாரத்தில் கடை உரிமையாளர்களிடம் முறையாக ஒப்படைக்கப்படும் என்று பரங்கிப்பேட்டை காவல் நிலையம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 15 ஜூன், 2008

இறைவனிடம் இறைஞ்சுவோம்.

மர்ஹும். பாவாஜான் அவர்களின் மகளாரும், மர்ஹும். M.Y. முஹம்மது காசிம் (முன்னாள் ஏர் இந்தியா அலுவலர்) அவர்களின் மனைவியுமான ஜனாபா. நூருன்னிசா அவர்கள் பம்பாயில் மர்ஹும் ஆகிவிட்டார்கள். அன்னாரின் மறுஉலக நலன்களுக்காக இறைவனிடம் இறைஞ்சுவோம்.

வியாழன், 12 ஜூன், 2008

இலவச பயிற்சிக்காக விண்ணப்பிக்கலாம்!

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் சென்னையில் இலவச பயிற்சிக்காக விண்ணப்பிக்கலாம் என்று மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் சைதை துரைசாமி நிறுவியுள்ள மனிதநேய அறக்கட்டளை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு எழுதும் மாணவர்களுக்காக இலவச பயிற்சி அ‌ளி‌த்து வருகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உணவு, உறைவிடம், பாட நூல்கள், யோகா பயிற்சி வகுப்புகள், சீருடைகள், போக்குவரத்து வசதிகள் என அனை‌த்து‌ம் இலவசமாக வழங்கப்படுகின்றன.
கட‌ந்த ஆ‌ண்டு இ‌ந்த அமை‌ப்‌பி‌ல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு 100 மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் 12 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு தேர்வாணையக்குழு நடத்தும் துணை மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர், காவ‌ல்துறை துணை சூப்பிரண்டு போன்ற குரூப்1 பணிகளுக்கான முதல்நிலை தேர்விலும் 22 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த மே மாதம் இந்த மையத்தின் சார்பில் 90 மாணவர்கள் முதல் நிலை தேர்வு எழுதியுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் வெளியாகிறது. இவர்களுக்கான முதன்மை தேர்வு பயிற்சி வகுப்புகள் ஜூலை முதல்வாரத்தில் தொடங்கப்படுகிறது.

2009ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல்நிலை தேர்வுக்காக புதிய மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இந்த மையம் சார்பில் இலவச பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இதற்காக 8 மாதம் தொடர்ந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த இலவச பயிற்சியில் சேருவதற்கு குறைந்தபட்ச வயது 21 ஆகும். ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் சிறந்து விளங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த பயிற்சியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு சென்னை, மதுரை, நாகர்கோவில், வேலூர், கரூர், ஈரோடு, திருச்சி ஆகிய இடங்களில் நடத்தப்படும்.

நேர்முகத்தேர்வு சென்னையில் நடைபெறும். இந்த நுழைவுத்தேர்வு ஜூலை மாதமும், பயிற்சியின் தொடக்கம் ஆகஸ்டு மாதமும் நடைபெறும்.

நுழைவுத்தேர்வு 2 தாள்கள் கொண்டதாக இருக்கும். முதல்தாளில் தேர்ந்தெடுத்து குறிக்கும் வினாக்களும், 2வது தாளில் கட்டுரை வடிவிலான வினாக்களும் இடம்பெறும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு வினா கொடுக்கப்படும்.

இதில் பொதுஅறிவு, இந்திய வரலாறு, புவியியல், அரசியல், பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், பொருளாதாரம், பொது ஆங்கிலம், தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பயிற்சி மையம், 28, ஒன்றாவது முதன்மைச் சாலை, சி.ஐ.டி.நகர், சென்னை600035 என்கிற முகவரியில் நேரடியாகவோ அல்லது இ‌ந்த அற‌க்க‌ட்டளை‌யி‌ன் இணையதள முகவரியிலோ பிரதியெடுத்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை மாதம் 4ந்தேதிக்குள்ளாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், சாதிச்சான்றிதழ் நகல், பட்டச்சான்றிதழ் நகல், சுய முகவரி எழுதப்பட்ட 3 தபால் உறைகள் ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த தகவலை மனித நேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

திங்கள், 9 ஜூன், 2008

கல்விச்சாலை

CONVERGENCE SCHEME FOR EMPOWERMENTINDRIA GANDHI NATIONAL OPEN UNVERSITY (IGNOU)&ISLAMIAH COLLEGE, VANIYAMBADI - 635752
(Partner Institution)

OFFER THE FOLLOWING COURSES

1) M.C.A.
2) M.B.A.
3) M.Sc. (DFSM)
4) M.A.(English)
5) M.A.(Economics)
6) B.C.A.
7) Post Graduate Diploma in Higher Education
8) Post Graduate Diploma in Journalism & Mass Communication
9) Diploma in Tourism
10) Certificate Course in Laboratory Techniques
11) Certificate Course in Computing
12) Certificate in Shoe Upper Cutting
13) Certificate in Shoe Upper Stitching
14) Certificate in Shoe Lasting and Finishing
15) Ph.D. (Maths, Commerce, History & Economics)

SPECIAL FEATURES
1) a) Regular classroom teaching (b) Regular Practicals
2) Convenient Timings
3) Lowest and affordable fee structure
4) Excellent Course material supplied by IGNOU
5) Approved by AICTE & UGC
6) Sponsored by HRD Ministry, Government of India
7) Highly Qualified and accomplished faculty members
8) State - of - the - art laboratories
9) Multimedia classrooms
10) Golden opportunity for employed people to pursue higher education
11) Regular college students can enroll for additional course simultaneously
12) Classes and examinations to suit the convenience of students


Admissions open in May & June 2008, Regular Classes commence from July 2008

For further details contact :

The Principal, Islamiah College,New Town, Vaniyambadi - 635752,
Ph: 04174 - 235436, 235206

தகவலுக்காக

ஊரில் நேற்றிரவு இடி மின்னலுடன் கூடிய கனத்த மழைப் பெய்துள்ளது. மின் வசதி துண்டிக்கப்பட்டு விட்டதால் வழக்கம் போல மக்களுக்கு அவதி.

வெள்ளி, 6 ஜூன், 2008

பிளஸ்2 தோல்வியா, பரவாயில்லை, சிறப்பு துணைத் தேர்வுக்கு தயாராகுங்கள்.

(கேடயக்குறிப்பு:பலரும் இச்செய்தியினை அறிந்திருக்கலாம்; செயற்பட்டிருக்கலாம், எனினும் அறியாதவர்களை கருத்தில் கொண்டே இங்கு தகவலாக வெளியிடப்படுகிறது)

பிளஸ் 2 தேர்‌வி‌ல் தோ‌‌ல்‌வி அடை‌ந்த மாணவர்களுக்கு அவர்கள் இந்த ஆ‌ண்டு கல்வியை தொடரும் வகையில் சிறப்பு துணைத்தேர்வு நடைபெற உள்ளது.அதற்கான விண்ணப்பங்கள் வரு‌ம் 16ஆ‌‌ம் தே‌தி முத‌ல் 21ஆ‌ம் தேதி வரை வழங்கப்பட உள்ளன.பள்ளி மாணவராக தேர்வு எழுதியவர்கள் அவரவர் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையம் மூலமாகவும் விண்ணப்பங்களை பெறலாம். பிறகு பூர்த்தி செய்து அந்த பள்ளிகளிலேயே ஒப்படைக்க வேண்டும்.

கடந்த மார்ச் 2008ல் தேர்வு எழுதாமல் முந்தைய பருவங்களில் தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள் சிறப்பு துணைத்தேர்வு எழுத விரும்பினால் அரசு தேர்வு இயக்குனர் அலுவலகம், மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள், ஆகியவற்றில் விண்ணப்பங்களை பெறலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அங்கேயே சமர்ப்பிக்க வேண்டும்.

சிறப்பு துணைத்தேர்வு ஜூ‌ன் 23ஆ‌ம் தேதி முதல் ஜூலை 3ஆ‌ம் தேதி வரை நடக்கிறது.

தேர்வு அட்டவணை விவரம் :23ஆம் தேதி காலை தமிழ் முதல் தாள்.
24ஆ‌ம் தேதி காலை தமிழ் 2-வது தாள்.
25ஆ‌ம் தேதி காலை ஆங்கிலம் முதல் தாள்.
26‌ஆ‌ம் தேதி காலை ஆங்கிலம் 2-வது தாள்.
27ஆ‌ம் தேதி காலை இயற்பியல், வணிகவியல்.
மாலை உளவியல், தமிழ் மற்றும் ஆங்கிலம்சுருக்கெழுத்து.
28ஆ‌ம் தேதி காலை வேதியியல், பொருளாதாரம்.
30ஆ‌ம் தேதி காலை கணிதம், அக்கவுண்டன்சி, விலங்கியல்.
மாலை அடிப்படை அறிவியல், புவியியல்.
ஜூலை 1ஆ‌ம் தேதி காலை உயிரியியல், வரலாறு, தாவரவியல்.
மாலை தொழில் பாடங்கள்.
2ஆ‌ம் தேதி காலை உயிரி வேதியியல், கம்ப்யூட்டர் அறிவியல், அரசியல் அறிவியல்.
மாலை மைக்ரோ பயாலஜி, சிறப்பு தமிழ்
3ஆ‌ம் தேதி காலை வர்த்தக கணிதம், இந்திய கலாசாரம், நர்சிங் (பொது), நியூட்ரிசியன் மற்றும் டயட்டிக்ஸ்.
மாலை கம்யூனிகேட்டிவ் இங்கிலீஸ், மனை அறிவியல், புள்ளியியல், தட்டச்சு (தமிழ் மற்றும் ஆங்கிலம்).

"Our greatest glory is not in never falling; but in raising every time we fall"
-Oliver Goldsmith

பிளஸ்-2 சேர அரசு நிதியுதவி.

பிளஸ்-2 முதலாமாண்டு வகுப்பில் சேர அரசு நிதி உதவி
அரசுப் பள்ளிகளில் 10-வது படித்தவர்கள் சிறந்த பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பில் சேர அரசு நிதி உதவி சிறந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிற்படுத்தப்பட்ட, சீர்மரபின மாணவர்கள், சிறந்த பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பு பயில அரசு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ரூ.56 ஆயிரம் நிதி உதவி

ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசுப் பள்ளிகளில் பயின்று 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட / சீர்மரபினர் வகுப்பை சார்ந்த திறன்மிக்க மாணவ, மாணவியர்கள் தமிழகத்தின் தலைசிறந்த பள்ளிகளில் பிளஸ்-1 வகுப்பு பயில அரசு நிதியுதவி வழங்கும் திட்டம், 2007-2008-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.இத்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயின்று 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த 3 மாணவர்கள், 3 மாணவிகள் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட / சீர்மரபினர் வகுப்பை சார்ந்த 2 மாணவர்கள் 2 மாணவிகள் ஆக மொத்தம் 10 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் விரும்பும் தமிழகத்தில் உள்ள தலைசிறந்த தனியார் பள்ளிகளில் சேர்ந்து பிளஸ் 1 பயில ஆண்டொன்றுக்கு ரூபாய் 28,000-த்துக்கு மிகாமல் இரண்டாண்டுகளுக்கு மொத்தம் ரூ.56,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.

ரூ.1 லட்சம் ஆண்டு வருமானம்

இத்திட்டத்தின் கீழ் உதவி பெற தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவியர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தலைசிறந்த பள்ளிகளில் சேர்ந்து பயில்வதன் மூலம் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவம், பொறியியல் போன்ற தொழில் படிப்புகளில் சேர்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்களும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவராவர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வந்துள்ள நிலையில், பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று பயன் பெறலாம்.

கல்வி உதவித்தொகை அறிவிப்பு

கல்வி உதவித்தொகை அறிவிப்பு

(B.S. ABDUR RAHMAN ZAKAAT FUND FOUNDATION )கல்வி உதவித்தொகை அறிவிப்பு
பி.எஸ். அப்துல் ரஹ்மான் ஜக்காத் ஃபண்ட் பவுண்டேஷன்

நோக்கம்: சிறந்த மதிப்பெண் பெற்று, ஜகாத் பெறக்கூடிய குடும்ப சூழலில் படிப்பைத் தொடர முடியாத மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல்.

தகுதி: நடந்து முடிந்துள்ள இறுதித் தேர்வில் குறைந்தது முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். பெற்றோர்களின் குறைந்த வருமானம் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாதவர்களாய் இருத்தல் வேண்டும்.

விதிமுறைகள்: ஜகாத் தொகை பெறுவதற்கு தகுதியுடைவர்களாக இருத்தல் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். தேர்வில் தவறினால் உதவித் தொகை நிறுத்தப்படும். படிப்பு முடியும் வரை ஒவ்வொரு வருடமும் மதிப்பெண் பட்டியலை சமர்பித்தல் வேண்டும். படிக்கின்ற போதும், படிப்பிற்கு பிறகும் ஒழுக்க நடைமுறைகளை / இஸ்லாமிய நடைமுறைகளை பின்பற்றுதல் வேண்டும்.

விண்ணப்பங்கள் பெற மதிப்பெண் விவரத்துடன் கோரிக்கை மனு அனுப்பவும்.அல்லது விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட இணையத்தளத்தில் இருந்தும் பெறலாம்
http://www.bsazakaat.org/

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள் செப்டம்பர் 30, 2008
( முதலாம் ஆண்டு தொழில் நுட்ப படிப்புகள் ) ஜுலை 31,2008 ( முதலாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் படிப்புகள் ) ஜூலை 15,2008 ( முதல் ஆண்டு தவிர )

B.S. ABDUR RAHMAN ZAKAAT FUND FOUNDATION
BUHARI BUILDING
NO 4 MOORES ROAD,
CHENNAI 600 006
PHONE : 044 4226 1100
FAX : 044 2823 1950
http://www.bsazakaat.ஒர்க்/
E mail : admin@bsazakaat.org,
bsazakaat@gmail.com
தகவல் மூலம் : சமரசம் உள்ளிட்ட சமுதாய பத்திரிக்கைகள்.

(நன்றாகப் படிக்கும் ஏழை மாணவர்களுக்குப் பயனுள்ள தகவல் என்பதாலும், பணம் வைத்துக்கொண்டு புண்ணியம் தேடிக்கொண்டிருக்கிற செல்வந்தர்களுக்கு வழிகாட்டும் என்பதாலும் இத்தகவல் வெளியிடப்படுகிறது. மேல் விபரங்களுக்கு நமதூர் கல்விக்குழுவை அணுகவும்)

வியாழன், 5 ஜூன், 2008

பரங்கிப்பேட்டையில் நள்ளிரவில் காதல்ஜோடிக்கு திருமணம்கட்டாய தாலி கட்ட வைத்து விட்டதாக போலீசில் புகார்

பரங்கிப்பேட்டை, ஜுன்.5-
பரங்கிப்பேட்டையில் நள்ளிரவில் காதல்ஜோடிக்கு திருமணம் பொதுமக்கள் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.தனக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து விட்ட தாக வாலிபர் போலீ சில் புகார் செய்தார்.

நெருங்கி பழகினர்:
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள பஞ்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி.இவரது மகள் தனலட்சுமி (வயது 18).இவரும் அதே ஊரை சேர்ந்த கண்ணன் மகன் பிரபாகரன்(19) என்ப வரும் நெருங்கி பழகி வந்ததாக தெரிகிறது.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் ஊரில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் பிரபா கரன், தனலட்சுமி ஆகிய 2 பேரும் பேசிக் கொண்டிருந்தனர்.இதனை பார்த்த ஊரில் உள்ளவர்கள் அனைவரும் கையும்,களவுமாக 2 பேரையும் பிடித்தனர்.

கட்டாய திருமணம்:
பின்னர் நள்ளிரவிலேயே அந்த ஊரில் உள்ள கோவி லில் 2 பேருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.இந்நிலையில் பிரபாகரன் நேற்று பரங்கிப்பேட்டை போலீசில் புகார் மனு கொடுத்தார்.அதில், நானும்,தனலட்சுமியும் இரவு பேசிக்கொண்டிருந் தோம், அப்போது ஊர் மக்கள் எனக்கு தனலட் சுமியை கட்டாய திருமணம் செய்து வைத்து விட்டனர்.எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை.இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந் தார்.
ஆனால் தனலட்சுமி வாழ்ந்தால் பிரபாகரன் கூடதான் வாழ்வேன் என் றார்.அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமபாண் டியன் விசாரணை நடத்தி வருகிறார்.
நன்றி: தினத்தந்தி

புதன், 4 ஜூன், 2008

பரிசளிப்பு விழா

பரங்கிப்பேட்டை நண்பர்கள் (Friends PNO) காதிரியா மஸ்ஜிதில் கடந்த மாதம் நடத்திய தீனியாத் பயிற்சி வகுப்புகளை தொடர்ந்து நேற்று முன்தினம், இவ்வகுப்புகளில் பங்கேற்ற மாணவ-மாணவியருக்கு பரிசளிப்பு விழா அதே காதிரியா மஸ்ஜிதில் நடைபெற்றது.

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் முஹமது யூனுஸ் தலைமயில் நடைபெற்ற இந்த எளிய விழாவில் பொதுமக்கள் உட்பட காதிரியா பள்ளி முத்தவல்லி சையத் ஆரிப், அப்துஸ் ஸமது ரஷாதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சிறுபான்மையினர் மாணவர்களுக்கான உதவி தொகை

1 முதல் 10ஆம் வகுப்பு வரை அரசு, தனியார் மற்றும் உறைவிடப் பள்ளி மாணவர்கள் 50% குறைவில்லாது மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டுவருமானம் 1லட்சம் மிகாமல் இருக்க வேண்டும்.

11 ஆம் வகுப்பு முதல் உயர் கல்வி வரை பயிலும் மாணவர்களுக்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சம் மிகாமல் இருக்க வேண்டும்.

இளங்கலை, முதுகலை, தொழில்நுட்பம் படிப்புகளுக்கு ஆண்டு வருமானம் 2.50லட்சம் மிகாமல் இருக்க வேண்டும்.

மேலும் விபரம் அறிய: http://www.minorityaffairs.gov.in/

தகவல்: M.E.S. அன்சாரி

மர்ஹூம் ஆகிவிட்டார்கள்.

கிதர்சா மரைக்காயர் தெருவில் கே. என். காதர் அவர்களின் மகனார் அலி அக்பர் அவர்கள் இன்று (03-06-08) மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்று பரங்கிப்பேட்டையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...