புதன், 27 ஆகஸ்ட், 2008

அபுதாபி PNO Welfare Committee யின் அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் !

வரும் வெள்ளிக்கிழமை (29/08/2008) மாலை 4:30 மணிக்கு (அஸர் தொழுகைக்குப் பிறகு), நமதூர் நலன் குறித்த கலந்துரையாடலும் அத்துடன் Pno Welfare Committee யின் நிர்வாக தேர்ந்தெடுப்பும் ஏற்பாடு செய்துள்ளோம். அன்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொண்டு நமதூருக்கான தங்களது பங்களிப்பை நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நடைபெரும் இடம்:

அலாவுத்தீன்

வீட்டு எண்: 201ஃபுஜைரா உணவகம் அருகில்,

எல்டோராடோ தியேட்டர் எதிர்புறம்,

எலக்ட்ரா சாலை, அபுதாபி.

தொடர்புக்கு: அபுல் ஹசன்: 050-7723097, 055-7723097

அப்துல் ஹமீது: 050-6898044

உமர்: 0559019721

-- அன்புடன்,
Pno Welfare Committee

தகவல்: சகோ. இப்ராஹிம் சாகுல் ஹமீது (பாஷா)

திங்கள், 25 ஆகஸ்ட், 2008

சவூதி ஓஜருக்கு ஆட்கள் தேவை!!

இன்ஷாஅல்லாஹ் வரும் 26 & 27 தேதிகளில் சென்னையில் சவுதி ஒஜர் கம்பெனிக்கு நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. 400 க்கும் மேற்பட்ட நபர்கள் தேவை (அனைத்து துறையிலும்). சென்னை என்பதனால் சுலபமாக சென்று முயற்சி செய்து பார்க்கலாம்.
முகவரி:-
Asiapower Overseas Employment Services
(Government Approved Recruiting Agent)
28, Aarti Arcade,
86, Dr. Radhakrishna Road,
Mylapore,Chennai - 600 004.
INDIA.
Tel : ( 0091 - 44 ) 2811 4437
Fax : ( 0091 - 44 ) 2811 1390
E-mail : chennai@asiapoweroverseas.com

அன்புடன் (தகவலுக்கு நன்றி)
Jamal - saudioger ltd. ரியாத்
மற்றும் அபூ சுஹைலாஹ் (முஸ்தஃபா)

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2008

இறப்புச் செய்தி

பரங்கிப்பேட்டை அப்பாபள்ளித்தெருவில்,மர்ஹூம் முஹம்மது அலி கவுஸ் மரைக்காயர் அவர்களின் மகளாரும்,மர்ஹூம் D.ஜெய்னுல் ஆபிதீன் மரைக்காயர் அவர்களின் மருமகளாரும்,D.J.ஷாஹுல் ஹமீத் அவர்களின் மனைவியுமான முஹம்மது ஆயிஷா பீவி மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்று மாலை நல்லடக்கம் மீராப்பள்ளியில்..


தகவலுக்கு நன்றி: ஜனாப் M.E. அன்சாரி

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2008

பரங்கிப்பேட்டை பாலத்தில் வாகனவரி வசூலிப்பை நிறுத்த கோரிக்கை.




பரங்கிப்பேட்டை பக்கிம்காங் கால்வாய் குறுக்கே இருக்கும் பாலத்திற்கு அதன் ஒப்பந்த காலம் முடிந்தும் வாகனவரி வசூல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி தனியார் வாகனங்கள் மற்றும் வெளியூர் ஆட்களும் சிரமப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தனியார் வாகனங்கள் ஊர் உள்ளே வருவதற்கு அதிகம் தயக்கம் காட்டுகின்றனர்.

பலருக்கும் இடைஞ்சலாக இருக்கும் இந்த வரம்பு மீறிய வாகனவரியை நிறுத்தகோரி கிரஸண்ட் நல்வாழ்வு சங்கம் (C.W.O.) சார்பில் மவாட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

'நீரின்றி அமையாது உலகு': திருமணங்களில் வீணடிக்கப்படும் குடிநீர்.

எத்தனை வகை வகையாக விருந்தளித்தாலும் அவற்றுடன் குடிக்க தண்ணீர் இல்லையென்றால் விருந்து ருசிக்காது. அந்த வகையில் இன்றைய விருந்துகளில் குடிநீராக பயனபடுவதும் பரிமாறப்படுவதும் பாக்கெட் தண்ணீர் எனப்படும் பிளாஸ்டிக் உறையில் அடைக்கப்பட்ட தண்ணீர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்ற பெயரில் வரும் இவ்வகையான பாக்கெட் தண்ணீரில் ஒரு வகையான (பிளாஸ்டிக்) நாற்றம் சேர்ந்து வருவதால் இதனை தற்போது யாரும் விரும்பி அருந்துவதில்லை. திருமண நிகழ்ச்சியின்போது உணவு உண்டபின் கை கழுவுவதற்கே அதிகம் பயன்படும் இந்த பாக்கெட் தண்ணீர் அவசரத்திற்கு மட்டும் (தொண்டையில் உணவு அடைபடும் தருணங்களில்) சிலர் அருந்துகின்றனர். மற்றபடி இதனை அதிகப்படியாக உபயோகிப்பது (குடிப்பதற்கும் சரி, விளையாடுவதற்கும் சரி) குழந்தைகள் மற்றும் சிறுவர்-சிறுமியர்களே.

கெமிக்கல் கலந்த இன்கினால் பிரிண்ட் செய்யப்படும் தயரிப்பு தேதிகூட (சாப்பாட்டு தட்டின் மீது வைத்து தருவதால் அந்த தேதியும்) மறைந்து அழிந்து சற்று இளஞ்சூடாக தண்ணீர் இருப்பதால் இது பல வியாதிகளுக்கு காரணமாக அமைகிறது என்கிறார் ஒரு சமூக ஆர்வளர்.

எக்ஸ்ட்ரா தகவல்:
'நீரின்றி அமையாது உலகு'. ஆனால், இந்த காலகட்டத்தில், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் என்று கூறி, கலப்பட தண்ணீரினை கேன்களில் அடைத்து விற்கும் கும்பல் ஒன்று சென்னையில் ஆங்காங்கே அலைகிறது. அசுத்தமான தண்ணீர் பாக்கெட் மினரல் வாட்டர் என்று விற்ற காலம் போய், இப்போது போலி ஐ.எஸ்.ஐ. முத்திரைகளுடன் கேன்களும் விற்பனை செய்யப்படுகின்றன. சென்ற வாரமும், தாம்பரம் பகுதியில் நிக்ரா மினரல் வாட்டர் நிறுவனம் நிக்ரா, மானட்சா, கிளாஸ், ஜாய், இமேஜ் என்னும் பெயர்களில் போலி ஐ. எஸ். ஐ. முத்திரைகளுடன் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, 1986 ஆண்டு இந்திய தர நிர்ணய சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரூபாய் அம்பதாயிரம் அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் (ஏதேனும் ஒன்றோ அல்லது இரண்டுமோ) விதிக்கப்படலாம்.

இது போன்ற போலிகள் பற்றி நாம் வேறெங்கிலும் காண்போமேயானால், கீழ்க்காணும் முகவரிகளில் புகார் தெரிவிக்கலாம்:
இந்திய தர நிர்ணய நிறுவனம்,
தென் மண்டல அலுவலகம்,
சி. ஐ. டி. வளாகம்,
4வது குறுக்கு சாலை,
தரமணி, சென்னை – 113.
தொ. பே.: 10914422541087,
மின்னஞ்சல் : sro@bis.org.in

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2008

சுனாமி குடியிருப்புகள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம்!

பரங்கிப்பேட்டையில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டு நிறுவனம் மூலம் கட்டப்பட்ட குடியிருப்புகள் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. பரங்கிப்பேட்டை கருணாநிதி சாலை கடந்த சுனாமியின்போது கடுமையாக பாதிக்கப்பட்டது. பாதிக்கப் பட்டவர்களுக்கு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் பல்வேறு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட 63 பேருக்கு புதுச்சத்திரம் பிளஸ் தொண்டு சார்பில் ரூ. தலா ரூ. ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நிரந்தர குடியிருப்புகள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் தற்போது சுமார் 29 குடியிருப்புகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பாதியளவு வேலைகள் முடிந்துள்ளது. பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இன்னும் ஆரம்ப கட்ட வேலைக்கூட நடைபெறாமல் உள்ளது. இந்நிலையில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட 29 குடியிருப்புகளில் 5க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதுகுறித்து சம்மந்தப் பட்ட தொண்டு நிறுவனம் மற்றும் அதிகாரிகளிடம் குடியிருப்புக்கு சொந்தமானவர்கள் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் புலம்புகின்றனர்.

நன்றி :- தின மலர்

சனி, 16 ஆகஸ்ட், 2008

பரங்கிப்பேட்டையில் சுதந்திரதின விழா நிகழ்ச்சிகள்

62-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு பரங்கிப்பேட்டையில் பல்வேறு இடங்களில் இந்திய தேசிய கொடி ஏற்றப்படடடது. காலை 9 மணிக்கு பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சித் தலைவர் முஹமது யூனுஸ் தேசிய கொடியை ஏற்றினார். அனைத்துப் பள்ளிகூடங்களிலும் சுதந்திர தின விழா நிகழ்ச்சிக் நடைபெற்றது.


கிரஸண்ட் நல்வாழ்வு சங்கம் (CWO) சார்பாக அதன் நடைபெற்ற விழாவிலும் அதனை தொடர்ந்து அரிமா சங்கம் (Lions Club) சார்பில் மீராப்பள்ளி அருகிலும் சட்டமன்ற உறுப்பினர் திருமதி செல்வி ராமஜெயம் பங்கு கொண்டு இந்திய கொடியை ஏற்றி வைத்தார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்கிற கருத்தை மையமாக கொண்டு சிறப்பு கண்காட்சி மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பல அரிய தகவல் துணுக்குகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது பயனுள்ள தகவல் தரும் விசயமாக அமைந்திருந்தது. இதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு சிறப்புக் சொற்பொழிவும் நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு சின்னக் கடைமுனையில் ஜமாஅத்துல் உலமா சார்பில் சுதந்திர சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தளபதி ஷஃபிக்குர்ரஹ்மான் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். சிறப்பு அழைப்பாளராக ஆஸ்திரேலியன் பள்ளி முதல்வர் பாண்டியன் கரந்துக்கொண்டார். இவ்விழாவில் இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு, இஸ்லாம் கூறும் மனிதநேயம் குறித்து சிறப்புரை வழங்கப்பட்டது.

புதன், 13 ஆகஸ்ட், 2008

சத்தியமார்க்கம் தளத்தின் கட்டுரைப் போட்டி!

சத்தியமார்க்கம்.காம் தமிழின் முதன்மையான இஸ்லாமிய இணையத்தளங்களுள் ஒன்றாகும். வாசகர்களிடையே நல்லதொரு எழுத்தார்வத்தைத் தூண்டும் வகையில் கடந்த வருடம் (2007 - 2008) கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்தியது. அதற்குக் கிடைத்த அமோக வரவேற்பு இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்களின் ஆர்வத்தைப் புலப்படுத்த, இந்த வருடமும் சத்தியமார்க்கம் தளம் கட்டுரைப்போட்டி ஒன்றை ஆக்கப்பூர்வமாக நடத்துகிறது.

இதுபற்றிய முழுவிபரங்களை அறிய : http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=988&Itemid=352 . யாரும் பங்குபெறலாம்.

கட்டுரைகள் சென்று சேரவேண்டிய கடைசி நாள்: 31 அக்டோபர் 2008.

நமதூர் எழுத்தாள அன்பர்கள், ஆர்வலர்கள் அவசியம் கலந்துகொள்ளும்படி mypno. வலைப்பூ சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2008

இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரிசு.

சீதக்காதி அறக்கட்டளை ஆண்டுதோறும் ஷெய்கு சதக்கத்துல்லாஹ்அப்பா நினைவு இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரிசு வழங்கி வருகிறது.

2009 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப் பெறும் சிறந்த நூலுக்கு ரூ. 30,000/-பரிசு வழங்கப் பெறும்.

இப்பரிசுக்காக இவ்வாண்டு ‘இந்தியாவில் இஸ்லாம் பரவிய வரலாறு - தமிழகம்ஒரு சிறப்புப் பார்வை' எனும் தலைப்பில் நூல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

நூல்கள் A4 அளவில் கணினி அச்சில், இடம் விட்டு 200 பக்கங்களுக்குக்குறையாமல் இருத்தல் வேண்டும். ( இது புத்தகமாக அச்சிட்டால் 22 செமீ x 14செமீ - டெம்மி புத்தக அளவு 200 பக்கங்களுக்கு குறையாமலும் இருக்கவேண்டும்) தாளில் ஒரு புறம் மட்டும் தட்டச்சு செய்தோ அச்சடித்தோ அனுப்பப்பெறுதல் வேண்டும்.

தட்டச்சு செய்த நூலாயினும், அச்சிட்ட நூலாயினும் தேர்வுக்கு ஐந்துபடிகள் அனுப்பப் பெறுதல் வேண்டும்.

தேர்வுக்குரிய நூல்கள் 31.03.2009 க்குள் சீதக்காதி அறக்கட்டளைக்குவந்து சேர வேண்டும்

நடுவர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் நூலுக்குப் பரிசு ரூ. 30,000வழங்கப்படும்.

தேர்வில் சமநிலை ஏற்படுமாயின் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படும்.

தேர்வுக்கு வரும் நூல்கள் எதுவும் நடுவர் குழுவினரால் தேர்ந்தெடுக்கமுடியாத நிலையில் அமையுமானால் அப்பரிசுத் தொகையை பழம்பெரும் தமிழ்எழுத்தாளர் ஒருவருக்கு வழங்க ஆட்சிக்குழு முடிவெடுக்கலாம்.

தேர்வுக்கு வரும் படிகள் திருப்பி அனுப்ப இயலாது.

2009 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 21 ஆம் தேதி நடைபெறும் ஷெய்குசதக்கத்துல்லாஹ் அப்பா நினைவு விழாவில் பரிசு வழங்கப்பெறும்

விவரமான விதிமுறைகளுக்கு எழுதவும்.
செயலாளர்
சீதக்காதி அறக்கட்டளை
இஸ்லாமிய ஆய்வுப் பண்பாட்டு நிலையம்
சீதக்காதி மணிமாடம்
272 ( 688 ) அண்ணா சாலை
சென்னை 600 006

நன்றி : சமரசம் 16 - 31 ஜுலை 2008 ( பக்கம் 36 )
http://www.samarasam.com/

திங்கள், 11 ஆகஸ்ட், 2008

திடக்கழிவு மேலாண்மை திட்ட பயிற்சி முகாம்

பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றம் மற்றும் எக்ஸ்நோரா தன்னார்வ அமைப்பினரால் நடத்தப்பட்ட வியாபார சங்க பிரதிநிதிகளுக்கான திடக்கழிவு மேலாண்மை திட்ட பயிற்சி முகாம் கச்சேரித்தெரு ஹெச். எம். ஹெச். மண்டபத்தில் 09.08.08 மாலை 5 மணியளவில் நடைபெற்றது. சமீப காலமாக பெருகி வரும் குப்பை கழிவுகள குறைப்பது, அதனை எங்ஙணம் மறுசுழற்சிக்குட்படுத்தி கையாளுதல் குறித்த விளக்கங்களுடன் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஜனாப். எம்.எஸ். முஹம்மது யூனுஸ் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
கனிணி கொண்டு சிறப்பான விளக்கப்படங்கள் ஒளிபெருக்கி (ப்ரொஜக்டர்) மூலம் மக்கும் குப்பை மக்காத குப்பை, பிளாஸ்டிக் உபயோக தவிர்ப்பு, முடிந்தளவு வளங்கள முறையாக கையாளுதல் போன்றவையும் அரசு இதுவிஷயமாக எடுத்துவரும் நடவடிக்கைள் பற்றியும் விளக்கப்பட்டது. கூட்டத்திற்கு சொற்பமான நபர்கள வந்திருந்தது சுற்றுப்புற சூழல் எனும் எரியும் விஷயத்தில் வியாபார சகோதரர்கள் கொண்டுள்ள அக்கறையின் அளவை காட்டியது. சைனாவில், மக்கள் கடைகளுக்கு செல்லும்போது கண்டிப்பாக பைகள எடுத்துச்செல்ல அரசாங்கமே உத்திரவிட்டிருப்பது போல, அரசு இதுவிஷயத்தில் இன்னும் சில கூர்மையான நடவடிக்கைகள எடுப்பதை சுற்றுப்புற ஆர்வலர்கள் எதிர்நோக்குகின்றார்கள்.

செயல்வழிக் கல்வி முறை - பரங்கிப்பேட்டையில் வரவேற்பு

கடந்த ஆண்டு முதல் தொடக்க நிலை கல்வியில் ஏ.பி.எல் எனப்படும் செயல்வழிக் கற்றல் முறை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது இந்த கல்வி முறை தேவையில்லை என்றும், தேவை என்றும் வாதங்கள் தொடங்கியுள்ளன. ஆனால் பெற்றோர், குழந்தைகள் இந்த கல்வி முறையை வரவேற்கின்றனர்.

பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான முறையில் ஆசிரியர்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்வழிக்கற்றல் முறையில் பயிற்சி அளித்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் உயர்நிலைப்பள்ளிகளில் 6-ம் வகுப்பில் சேர வரும் பல மாணவர்களுக்கு தமிழ் கூட எழுதப் படிக்கத் தெரியாத நிலை காணப்பட்டது.
ஆனால் தற்போது இம்முறையில் ஒவ்வொரு மாணவனும் அனைத்துப் பாடங்களையும் எழுதப் படிக்கத் தெரிந்தவராக உருவாக்கப்படுகிறார்.

மாணவர்களின் தன்னம்பிக்கையையும், ஆளுமைத் திறனையும் வளர்ப்பதற்கு செயல்வழிக்கற்றல் முறையில் பல வாய்ப்புகள் உள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

ஆரோக்கிய சக்கரத்தில் குறித்துள்ளவாறு மாணவன் தன்சுத்தம் பேணுகிறான். தினமும் அன்றைய கால நிலையைக் குறிக்கிறான். தன் வருகையைத் தானே பதிவு செய்கிறான்.

தாழ்நிலைக் கரும்பலகையில் தான் படித்ததை தானே எழுதிப் பழகுகிறான். தான் கற்றதை பிறருக்கும் சொல்லிக் கொடுக்கிறான் என்பதை கண்கூடாக காணமுடிகிறது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் செயல் வழிக்கற்றல் திட்டத்திற்கு அரசு நிறைய செலவிடுகிறது. பல பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பள்ளிக்கும் இத் திட்டத்தின் கீழ் தொலைக்காட்சி பெட்டி மற்றும் டிவிடி பிளேயர் வழங்கப்படுகிறது. பாடஅட்டைகள், குழு அட்டைகள், ஏணிப் படிகள் என பல வண்ணங்களில் குழந்தைகளைக் கவரும் வகையில் அட்டைகள் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு குழந்தையினுடைய அடைவுத் திறனை(Accessing Capacity)யும் ஆசிரியர் குறித்து வைத்துக் கொள்வதால் தனிக்கவனம் செலுத்த முடிகிறது.

மேலும் இத்திட்டத்தின் மூலம் பள்ளிகளில் இடைநிற்றல் குறைந்துள்ளது. பல பள்ளிகளில் கூடுதலாக குழந்தைகள் சேர்ந்துள்ளனர்.

குழந்தைகளுக்கு புத்தகச் சுமையும், தேர்வு பயமும் நீங்கியுள்ளது. இந்த கற்றல் முறையில் திறமையான மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த பல வாய்ப்புகள் உள்ளன என சில பெற்றோர் கருத்து தெரிவிக்கின்றனர்.

பழைய கல்வி முறையில் எதிர்பார்த்த பலன் இல்லை என்பதாலேயே இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் நிலை மேம்பாடு அடைந்து
வரும் இத்தருணத்தில், இதை செயல்படுத்துவதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் அவற்றை சரி செய்து கொள்ள முயல வேண்டும் என தலைமையாசிரியர்களில் ஒரு பிரிவினர் கூறுகின்றனர்.

மொத்தத்தில் மாநில திட்ட இயக்குநர் எம்.பி.விஜயகுமார் கொண்டு வந்த இந்த செயல் வழிக்கற்றல் திட்டத்தோடு குழந்தைகள் ஒன்றிவிட்டார்கள் என அத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் பரங்கிப்பேட்டை வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆ.கலைச்செல்வன் தெரிவித்தார்.

படிப்பிலும் குழந்தைகளுக்கு ஈடுபாட்டை அதிகப்படுத்துகிறது என பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த பெற்றோரான ந.ராணி தெரிவித்துள்ளார்.

செயல்வழிக்கற்றல் திட்டம் ஆந்திராவில் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்காக கொண்டு வரப்பட்ட திட்டம். அங்கு தோல்வியுற்ற திட்டத்தை இங்கு புகுத்தியுள்ளார்கள் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கருத்து தெரிவித்துள்ளன.

இந்த திட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த முடியவில்லை என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் அப்துல்மஜீத் கூறுகிறார்.

செயல்வழியில் கற்பதால் மாணவர்களுக்கு எழுதத்தெரியவில்லை என ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.

தினமணி

சனி, 2 ஆகஸ்ட், 2008

வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம்


பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றம் சார்பாக வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம் 01.08.2008 வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை பீத்தர் தெரு, எஸ்.ஜி.எம். திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் ஜனாப். எம்.எஸ். முஹம்மது யூனுஸ் அவர்கள் இந்நிகழ்ச்சியினை துவங்கி வைத்தார். முகாமில் இரத்தஅழுத்தம் நோய், நீரிழிவு நோய், இருதய நோய், புற்று நோய், மகப்பேறு மருத்துவம் மற்றும் பொது மருத்துவம் குறித்த சிகிச்சைகள் வழங்கப்பட்டன. மற்றும் இரத்தம், சிறுநீர் பரிசோதனைகள், ஈ.சி.ஜி., ஸ்கேன் மற்றும் கண்புரை பரிசோதனைகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் 7 கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவகால உதவித்தொகை வழங்கப்பட்டது. மக்களுக்கு மிகவும் பயனளித்த இந்த முகாம் பரங்கிப்பேட்டை பேரூராட்சியின் சார்பாக இந்த ஆண்டு நடந்த 4வது முகாமாகும்.

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2008

பெரியத்தெரு மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணியால் சாலை போக்குவரத்து பாதிப்பு.


பரங்கிப்பேட்டை பெரியத்தெருவில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் ஒரு மாதத்திற்கு மேலாக இவ்வழியாக போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. தற்போது பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் பெரியத்தெரு - மீராப்பள்ளி தெரு இணையும் இடத்தில் சிறிய (குறுக்கு) தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இவ்வழியே போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பணி விரைவில் முடிக்கப்பட்டு, அடுத்தகட்டமாக புதிய சாலை போடும் பணி ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்கிருந்தாலும் சமூகசேவை ஆற்றுவேன் - சுல்தான் பாஷா உறுதி.

பரங்கிப்பேட்டை வீடுகளில் இறப்பு என ஏற்படும்போது, அவரவர்களின் உற்றார்-உறவினர்களுக்கு சொல்லி அனுப்புவதைவிட முதலில் தகவல் தெரிவிப்பது பரங்கிப்பேட்டையில் முன்மாதிரி இளைஞராக இருக்கும் சுல்தான் பாஷாவிற்குத்தான். அந்த அளவிற்கு சமூக சேவையில் ஆர்வமிக்கவராய் இறந்தவர்களின் உடலை குளிப்பாட்டுவது முதல் அடக்கம் செய்யப்படும் வரை எல்லா வேலைகளிலும் எந்தவித தயக்கமின்றி எந்த பலனுமின்றி சேவை செய்து வந்த இவர், தன் பொருளாதார தேடல் கருதி நேற்று சவூதி அரேபியாவுக்கு பயணமனார்.

அனைத்து தரப்பினருக்கும் செல்லப் பிள்ளையாக இருக்கும் இவர், பணத்திற்கோ (அ) பொருளுக்கோ ஆசைப்படமால் இறைவனுக்காக பரங்கிப்பேட்டையில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் சமுதாய-சமூக சேவை புரிந்துள்ளார். மேலும் சில பள்ளிவாசல்களில் நிறைய பொருப்புகளை கவனித்தும் வந்துள்ளார். இச்சேவவையை குறிப்பாக வைத்து பக்கீம்ஜாத் எனப்படும் மக்தூம் அப்பாப் பள்ளியில் ஆடிட்டர் இல்யாஸ் அவர்களின் ஏற்பாட்டில் பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டு சுல்தான் பாஷாவின் சேவையை கௌரவிக்கப்பட்டது.

மேலும் இவரை கௌரவிக்கும் வகையில் MYPNO வலைப்பூ ஏற்பாடுசெய்த விருந்திலும் கலந்துக் கொண்டார். 'எனது பொருளாதார தேவை குறித்து நான் வெளிநாட்டிற்கு சென்றாலும், இறைவனுக்காக நான் அங்கேயும் என்னால் முடிந்த அளவிற்கு சமூகப் பணிகளில் இறைவனின் நாட்டத்தோடு ஈடுபடுவேன் என உறுதிபட தெரிவித்தார்.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...