புதன், 30 மார்ச், 2011
பரங்கிப்பேட்டையில் அ.தி.மு.க. கூட்டணியின் தேர்தல் அலுவலகம் திறப்பு!
கூட்டணி கட்சிகள் சார்பில், நகர அ.தி.மு.க. நிர்வாகிகள், கம்யூனிஸ்ட் நிர்வாகிகள், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள், தே.மு.தி.க. நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துக் கொண்டர். அருண்மொழித்தேவன் உரையாற்றினார்.
தேர்தல் பணியில் காங்கிரஸ்..!
ஓட்டு கேட்டார் வாண்டையார்...!
செவ்வாய், 29 மார்ச், 2011
சிதம்பரம் தொகுதியில் 10 வேட்புமனுக்கள் தள்ளுபடி
கடலூர் மாவட்டத்தில் 1-ம் தேதி முதல் வாக்காளர் சீட்டு
News: Dinamani
மகளிர் தின விழாவில் பணம் பட்டுவாடா! அதிகாரிகள் விசாரணையால் பரபரப்பு!!
திங்கள், 28 மார்ச், 2011
ஹல்வா கொடுத்தார் M.K.பைசல்...!
இறப்புச் செய்தி
தொடங்கியது 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்!
அரசு ஆண்கள் பள்ளியில் பரங்கிப்பேட்டை பள்ளிகள் மட்டுமல்லாது சாமியார்பேட்டை உள்ளிட்ட பள்ளி மாணவர்களும் தேர்வு எழுதினர். மாணவர்களின் தேர்வை கண்காணிக்க வழக்கமான மேற்பார்வை பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.
ஓட்டு பதிவு இயந்திர செயல்முறை விளக்கம்!
சின்னக் கடை முனை, சஞ்சிவீராயர் கோயில் தெரு போன்ற பொது மக்கள் கூடும் இடங்களில் இந்த செயல்முறை விளக்கம் நடைபெற்றது. தேர்தலில் வாக்கு பதிவின்போது எப்படி இந்த இயந்திரத்தின் வாயிலாக ஓட்டு போடுவது, மற்றும் ஓட்டு எண்ணிக்கை முறை பற்றியும் பொது மக்கள் முன்பு விளக்கி கூறப்பட்டது.
மூ.மு.க., வேட்பாளர் மீது பரங்கிப்பேட்டை இளைஞர் காங்.,கினர் அதிருப்தி
ஞாயிறு, 27 மார்ச், 2011
ஸ்ரீதர் வாண்டையார் சொத்து விவரம்
சனி, 26 மார்ச், 2011
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தி.மு.க-வுக்கு ஆதரவு!
தமிழக சட்டமன்றதுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பல சமுதாய அமைப்புகளும்,இயக்கங்களும் அவரவர் சமுதாய சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுக் கொண்டிருந்தன. அந்த வகையில் முஸ்லீம் சமுதாய அமைப்பான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், முஸ்லிம்களுக்கான 3.5% இட ஒதுக்கீட்டை 5 சதவீதம் உயர்த்த வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக வைத்து, இதை நிறைவேற்றுவதாக தேர்தல் வாக்குறுதி அளிக்கும் கட்சிக்குக்கு மட்டுமே ஆதரவு அளிக்கப்படும் என கடந்த ஜனவரி மாதம் இறுதியில் நடந்த பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர்.
தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளின் தேர்தல் அறிக்கை வெளியாகி விட்ட நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேற்கண்ட கோரிக்கையை எந்த அரசியல் கட்சியும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தி.மு.க வின் தேர்தல் அறிக்கையில் “சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை மேலும் உயர்த்த பரிசீலிப்போம்.” என குறிப்பிடப்பட்டுள்ளதால் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து இன்று கூடிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் சேலத்தில் நடந்த பொதுக் குழுவில் தி.மு.க குறித்து, ''தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வராத நிலையில் அதற்கு இன்னும் நாட்கள் இருக்கின்ற நிலையில் 5% இடஒதுக்கீட்டை நீங்கள் உடனே அறிவித்து விட வேண்டும். நாங்கள் அடுத்து ஆட்சிக்கு வந்தால் தருவோம் என்று சொல்லக் கூடாது'' எனக் குறிப்பிட்டு தீர்மானம் இயற்றி இருந்தும், தி.மு.க அவ்வாறு ஏதும் சொல்லாத நிலையிலும் தற்போது தி.மு.கவை ஆதரிக்க முடிவெடுத்திருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.
இறப்புச் செய்தி
வெள்ளி, 25 மார்ச், 2011
பரங்கிப்பேட்டையில் ஸ்ரீதர் வாண்டையார்
புதன், 23 மார்ச், 2011
பரங்கிப்பேட்டையில் பாலகிருஷ்ணன்
பரங்கிப்பேட்டை ஹல்வா-வால் பரபரப்பு...!
இறப்புச் செய்தி
கலைஞர் வருகை, களைக்கட்டியது முட்லூர்...!!!
சிதம்பரம் சட்டமன்ற தொகுதி - ஒரு பார்வை
தொகுதி எண் : 158
தற்போதைய எம்.எல்.ஏ. : அருண்மொழித் தேவன் (அ.தி.மு.க.)
தொகுதி மறுசீரமைப்பு : தொகுதி மறுசீரமைப்பில் சிதம்பரம் தொகுதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொகுதியின் எல்லைகளில்தான் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டன.
எல்லை : தற்போது சீரமைக்கப்பட்டுள்ள சிதம்பரம் தொகுதியில் ஏற்கெனவே புவனகிரி தொகுதியில் இருந்த கிள்ளை பேரூராட்சி மற்றும் பரங்கிப்பேட்டை ஒன்றியம் முழுவதும் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே சிதம்பரம் தொகுதியில் இருந்த திருமுட்டம் பேரூராட்சி காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது சிதம்பரம் பேரவைத் தொகுதியில், சிதம்பரம் நகராட்சியும், அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை, கிள்ளை ஆகிய 3 பேரூராட்சிகளும், பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 41 ஊராட்சிகள், குமராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள், மேலபுவனகிரி ஒன்றியத்தில் 7 ஊராட்சிகள் உள்ளிட்ட 69 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி இத்தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
நகராட்சி : சிதம்பரம் நகராட்சி - 33 வார்டுகள்
பேரூராட்சிகள் : (1) கிள்ளை பேரூராட்சி -15 வார்டுகள் (2) பரங்கிப்பேட்டை பேரூராட்சி - 18 வார்டுகள் (3) அண்ணாமலை நகர் பேரூராட்சி - 15 வார்டுகள்
கிராம ஊராட்சிகள் : 69
மேல்புவனகிரி ஒன்றியம் (7) : சி.முட்லூர், கீழமூங்கிலடி, மேலமூங்கிலடி, மேல்அனுவம்பட்டு, தீத்தாம்பாளையம், தில்லைநாயகபுரம், லால்புரம்.
குமராட்சி ஒன்றியம் (21) : அகரநல்லூர், சிதம்பரம் நான்-முனிசிபல், இளநாங்கூர், ஜெயங்கொண்டப்பட்டினம், கடவாச்சேரி, காட்டுக்கூடலூர், கீழகுண்டலப்பாடி, கூத்தன்கோயில், நாஞ்சலூர், பெராம்பட்டு, பூலாமேடு, சாலியந்தோப்பு, சிவபுரி, சிவாயம், சி.தண்டேஸ்வரநல்லூர், தவர்த்தாம்பட்டு, உசூப்பூர், வையூர், சி.வாக்காரமாரி, வல்லம்படுகை, வரகூர்.
பரங்கிப்பேட்டை ஒன்றியம் (41) : மணிக்கொல்லை, பெரியப்பட்டு, சிலம்பிமங்கலம், வில்லியநல்லூர், வேளங்கிப்பட்டு, பூவாலை, வயலாமூர், சேந்திரக்கிள்ளை, கொத்தட்டை, சி.புதுப்பேட்டை, அரியகோஷ்டி, பெரியகுமட்டி, சின்னகுமட்டி, தச்சக்காடு, கீழமணக்குடி, பு.அருண்மொழிதேவன், குரியாமங்கலம், ஆயிபுரம், பு.ஆதிவராகநல்லூர், மஞ்சக்குழி, பு.முட்லூர், நஞ்சைமகத்துவாழ்க்கை, கீழ்அனுவம்பட்டு, தில்லைவிடங்கள், பின்னத்தூர், கோவிலாம்பூண்டி, பள்ளிப்படை, சி.கொத்தங்குடி, மீதிகுடி, நக்கரவந்தன்குடி, உத்தமசோழமங்கலம், குமாரமங்கலம், கணக்கரப்பட்டு, மேலதிருக்கழிப்பாலை, கவரப்பட்டு, வசப்புத்தூர், பிச்சாவரம், டி.எஸ்.பேட்டை, கீழத்திருக்கழிப்பாலை, கீழப்பெரம்பை, பு.மடுவங்கரை.
வாக்காளர்கள் : ஆண் - 94,192, பெண் - 92,427 மொத்தம் - 1,86,619
வாக்குச்சாவடிகள் : மொத்தம் 215
தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண் : கோட்டாட்சியர் எம்.இந்துமதி : 94450 00425
இதுவரை வெற்றிகள்:
தேர்தல் நடந்தது: 13 முறை
காங்கிரஸ்: 5+2 முறை வெற்றி*
தி.மு.க.: 4 முறை வெற்றி
அ.தி.மு.க.: 3 முறை வெற்றி
த.மா.கா.: 1 முறை வெற்றி
*1952, 1957 தேர்தல்களில் இரட்டை உறுப்பினர் தொகுதியாக இருந்தது.
குறிப்புகள்:
*1952ம் ஆண்டு தேர்தலில்தான் சிதம்பரம் தொகுதி உருவாக்கப்பட்டது.
*கடலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது இந்த தொகுதி.
*சிதம்பரம் எம்.பி. தொகுதிக்குள்தான் சிதம்பரம் சட்டசபை தொகுதி உள்ளடங்கி இருக்கிறது.
*சிதம்பரம் தொகுதியில் காங்கிரஸ்தான் அதிக முறை வெற்றி பெற்றிருக்கிறது.
*மூப்பானாரின் தமிழ் மாநில காங்கிரஸ் இங்கே ஒரு முறை வெற்றி பெற்றிருக்கிறது.
*தற்போது காங்கிரஸ் எம்.பி.யாக இருக்கும் கே.எஸ். அழகிரி, 1991, 1996 சட்டசபைத் தேர்தல்களில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை எம்.எல்.ஏ. ஆனார்.
*அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் 1991 தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
வேட்பாளர்கள் பயோடேட்டா:
2006 தேர்தல் முடிவு:
(அ.தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,47,220
பதிவானவை: 1,11,066
வாக்கு வித்தியாசம்: 16,810
வேட்பாளர்களின் எண்ணிக்கை: 18
வாக்குப்பதிவு சதவீதம்: 75.44
அருண்மொழிதேவன் (அ.தி.மு.க.): 56,327
பாலகிருஷ்ணன் (சி.பி.எம்): 39,517
ராஜமன்னன் (தே.மு.தி.க.): 10,303
சீனுவாசன் (பி.ஜே.பி.): 1,054
இதுவரை எம்.எல்.ஏ.கள்:
2006 அருள்மொழிதேவன் (அ.தி.மு.க.)
2001 சரவணன் துரை (தி.மு.க.)
1996 கே.எஸ்.அழகிரி (த.மா.கா)
1991 கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்)
1989 கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க.)
1984 கனபதி (அ.தி.மு.க.)
1980 கனபதி (அ.தி.மு.க.)
1977 கலியமூர்த்தி (தி.மு.க.)
1971 சொக்கலிங்கம் (தி.மு.க.)
1967 ஆர்.கனகசபை பிள்ளை (காங்கிரஸ்)
1962 சிவசுப்பிரமணியன் (காங்கிரஸ்)
1957 வாகீசன் பிள்ளை (காங்கிரஸ்), சுவாமி சகஜானந்தா (காங்கிரஸ்)
1952 வாகீசன் பிள்ளை (காங்கிரஸ்), சுவாமி சகஜானந்தா (காங்கிரஸ்)
கடந்த கால தேர்தல் முடிவுகள்:
2001 (தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,67,006
பதிவானவை: 1,03,738
சரவணன் துரை (தி.மு.க.): 54,647
அறிவுச்செல்வன் (பா.ம.க.): 42,732
1996 (தமிழ் மாநில காங்கிரஸ் வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,51,992
பதிவானவை: 1,08,429
கே.எஸ்.அழகிரி (த.மா.கா): 52,066
ராதாகிருஷ்ணன் (காங்கிரஸ்): 23,050
1991 (காங்கிரஸ் வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,42,369
பதிவானவை: 98,437
கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்) 48,767
எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் (தி.மு.க.): 29,114
1989 (தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,27,893
பதிவானவை: 86,451
கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க.): 35,738
ராதாகிருஷ்ணன் (காங்கிரஸ்): 19,018
1984 (அ.தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,14,114
பதிவானவை: 90,376
கணபதி (அ.தி.மு.க.): 47,067
சுப்பிரமணியன் (தி.மு.க.): 37,824
1980 (அ.தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,12,269
பதிவானவை: 81,763
கணபதி (அ.தி.மு.க.): 41,728
கலியமூர்த்தி துரை (தி.மு.க.): 38,461
1977 (தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 1,09,561
பதிவானவை: 74,156
கலியமூர்த்தி துரை (தி.மு.க.): 22,917
முத்து கோவிந்தராஜன் (அ.தி.மு.க.): 19,586
1971 (தி.மு.க. வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 95,620
பதிவானவை: 73,245
சொக்கலிங்கம் (தி.மு.க.): 35,750
கோபால கிருஷ்ணன் (ஸ்தாபன காங்கிரஸ்): 34,071
1967 (காங்கிரஸ் வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 90,560
பதிவானவை: 73,772
கனகசபை பிள்ளை (காங்கிரஸ்): 34,911
சொக்கலிங்கம் (தி.மு.க.): 33,356
1962 (காங்கிரஸ் வெற்றி)
மொத்த வாக்காளர்கள்: 98,172
பதிவானவை: 65,117
சிவசுப்பிரமணியன் (காங்கிரஸ்): 33,438
ஆறுமுகம் (தி.மு.க.): 23,837
1957 (காங்கிரஸ், காங்கிரஸ் வெற்றி)*
மொத்த வாக்காளர்கள்: 1,65,203
பதிவானவை: 1,63,787
வாகீசன் பிள்ளை (காங்கிரஸ்): 37,255
சுவாமி சகஜானந்தா (காங்கிரஸ்): 37,089
சொக்கலிங்கம் (சுயேட்சை): 30,345
சிவசுப்பிரமணியம் (சுயேட்சை): 26,489
*இரட்டை உறுப்பினர் தொகுதியாக இருந்தது.
1952 (காங்கிரஸ், காங்கிரஸ் வெற்றி)*
மொத்த வாக்காளர்கள்: 1,31,550
பதிவானவை: 1,44,680
சுவாமி சகஜானந்தா (காங்கிரஸ்): 39,509
வாகீசன் பிள்ளை (காங்கிரஸ்): 33,427
சுவாமி கண்ணு (தமிழ்நாடு டெய்லர்ஸ் கட்சி): 30,517
சிவசுப்பிரமணியன் (தமிழ்நாடு டெய்லர்ஸ் கட்சி): 25,760
*இரட்டை உறுப்பினர் தொகுதியாக இருந்தது.
இது பார்வையாளர்களுக்கு...
தொகுதியின் பிரச்னைகள், கோரிக்கைகள், வெற்றி வாய்ப்பு யாருக்கு? என்பதையெல்லாம் பின்னூட்டத்தில் நீங்கள் எழுதுங்களேன்.
செவ்வாய், 22 மார்ச், 2011
தி.மு.க. கூட்டணியை எதிர்த்து மோதும் மா.கம்யூனிஸ்ட்!
இன்று மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்ட்டுள்ள நிலையில், இதன் வேட்பாளாரக பாலகிருட்டிணன் வாண்டையாரை எதிர்த்து போட்டியிடகிறார். மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துடன் மா.கம்யூனிஸ்ட் மோதும் இச்சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சார வேலைகள் சூடு பிடித்துள்ளது.
ஏப்ரல் 1-ந் தேதி முதல், மாதம் முழுவதும் வேலை நாட்களில் மின் கட்டணம் வசூல் செய்யும் புதிய முறை அமுல்
இதுபற்றி சிதம்பரம் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குறைந்த மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு மின் கட்டண கணக்கீடு மற்றும் வசூல் செய்வதில் தற்போதுள்ள நடைமுறையில் மாற்றம் செய்து மாதம் முழுவதும் வேலை நாட்களில் பணம் செலுத்தும் வகையில் கடலூர் மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் புதிய திட்டத்தை அமுல்படுத்திட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உத்தேசித்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள பிரதிமாதம் 16-ந் தேதி முதல் கணக்கீடு செய்தல் பிரதி மாதம் 1-ந் தேதி முதல் வசூல் செய்யும் முறையை இனி வரும் காலங்களில் 1-ந் தேதி முதல் கடைசி வரை மின் கணக்கீடு முடிந்த 2-ம் நாளில் இருந்து மாதம் முழுவதும் வேலை நாட்களில் பணம் செலுத்தும் முறை அமுல்படுத்தப்பட உள்ளது.
இந்த புதிய முறை அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய முறையின் மூலம் நீண்ட நேரம் காத்திருப்பது தவிர்க்கப்பட்டு எளிதில் மின் கட்டணம் செலுத்த ஏதுவாக இருக்கும். இந்த புதிய திட்டத்தில் மின் நுகர்வோர்கள் தங்களது மின் கட்டணத்தை கணக்கீடு செய்த நாளில் இருந்து 20 நாட்களுக்குள் மின்கட்டணம் செலுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டாக கணக்கெடுப்பு பதிவு செய்த நாள் 7-ந் தேதி எனில் மின் கட்டணத்தை 26-ந் தேதிக்குள் கட்ட வேண்டும். தவறினால் 27-ந் தேதி மின் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் அபராத தொகை வசூலிக்கப்படும். முன்பு இருந்தது போலவே இரு மாதத்திற்கு ஒரு முறை கணக்கீடு செய்யும்முறை தான் இந்த புதிய முறையில் பின்பற்றப்படும். ஆனால் கணக்கெடுப்பு 16-ந்தேதிக்கு பதிலாக 1-ந் தேதியே தொடங்கும். மின் நுகர்வோர்கள் தங்களது மின் கட்டண அட்டையை மீட்டருக்கு அருகில் வைக்குமாறும், பணம் செலுத்த வரும் போது மின் கட்டண அட்டையை கொண்டு வருமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எனவே, மாதம் முழுவதும் வேலை நாட்களில் பணம் செலுத்தும் வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இந்த புதிய திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறும் மின் நுகர்வோர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தவிர இணைய தளம் மூலம் தாழ்வழுத்த மின் கட்டணம் www.tneb.in என்ற முகவரியில் செலுத்தவும் கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு மின்துறை செயற்பொறியாளர் செல்வ சேகர் தெரிவித்துள்ளார். Source: Daily Thanthi
பரங்கிப்பேட்டையில் தி.மு.க., கூட்டணிக் கட்சி தேர்தல் அலவலகம் திறப்பு
பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செழியன், பா.ம.க., செயலர் முருகன் முன்னிலை வகித்தனர். தி.மு.க., நகர செயலர் பாண்டியன் வரவேற்றார். சேர்மன் முத்து பெருமாள் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
விழாவில் கவுன்சிலர் ஹாஜா கமால், தி.மு.க., காண்டீபன், உசேன், தங்கவேல், காங்., அப்துல் லத்தீப், வி.சி., எழில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர செயலர் அலி அக்பர் உட்பட பலர் பங்கேற்றனர். Source: Dinamalar
திங்கள், 21 மார்ச், 2011
"சிட்டிங் MLA" செல்வி இராமஜெயம் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!
ஏற்கனவே அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஒரு சில தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அ.தி.மு.க., வேட்பாளர்கள் புதிய பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் புதிய பட்டியலில் புவனகிரி தொகுதி MLA திருமதி இராமஜெயம் அவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
புதிய பட்டியல்:
- ஸ்ரீரங்கம்- ஜெயலலிதா,
- அண்ணாநகர்- கோகுல இந்திரா,
- தியாகராய நகர்- வி.பி. கலைராஜன்,
- வாலாஜாபாத்- ப.கணேசன்,
- வேளச்சேரி- எம்.கே.அசோக்,
- செய்யூர் (தனி) - வி.எஸ்.ராஜி,
- பொன்னேரி (தனி) - பொன்ராஜா,
- அம்பத்தூர்- எஸ்.வேதாச்சலம்,
- வில்லிவாக்கம்- பிரபாகர்,
- ராயபுரம் - டி.ஜெயக்குமார்,
- மயிலாப்பூர் - ராஜலட்சுமி,
- சோழிங்கநல்லூர்-கே.பி.கந்தன்,
- ஆவடி- எஸ்.அப்துல் ரஹிம்,
- மாதவரம்- வி.மூர்த்தி,
- கொளத்தூர் -சைதை துரைசாமி,
- திருவொற்றியூர் - கே.குப்பன்,
- ஆயிரம் விளக்கு- ப.வளர்மதி,
- துறைமுகம்- பழ.கருப்பையா,
- போளூர் - எஸ்.ஜெயசுதா லட்சுமிகாந்தன்,
- வந்தவாசி (தனி) - செய்யாமூர் .வெ. குணசீலன்,
- டாக்டர் ராதா கிருஷ்ணன் நகர் - பி.வெற்றிவேலு,
- திண்டிவனம்- டாக்டர் த.அரிதாஸ்,
- விழுப்புரம் - சி.வி.சண்முகம்,
- உளுந்தூர்பேட்டை-ரா.குமரகுரு.
- சங்கராபுரம்-ப.மோகன்,
- கள்ளக்குறிச்சி (தனி). ப.அழகுவேல்,
- ஆத்தூர் (தனி) எஸ்.மாதேஸ்வரன்,
- ஏற்காடு-பெருமாள்,
- ஓமலூர்-பல்பாக்கி ஸ்ரீகிருஷ்ணன்,
- சேலம் மேற்கு- ஜி.வெங்கடாச்சலம்,
- எடப்பாடி-பழநிச்சாமி,
- சங்ககிரி- விஜயலட்சுமி,
- சேலம் தெற்கு- எம்.கே.செல்வராஜ்.
- வீரபாண்டி-எஸ்.கே.செல்வம்,
- ராசிபுரம் (தனி) ப.தனபால்,
- நாமக்கல்-கே.பி.பி.பாஸ்கர்,
- ஈரோடு மேற்கு - கே.வி.ராமலிங்கம்,
- குமாரபாளையம்-பி.தங்கமணி,
- மொடக்குறிச்சி- ஆர்.எம்.கிட்டுச்சாமி.
- தாராபுரம் (தனி) - கே.பொன்னுசாமி,
- காங்கேயம்-என்.எஸ்.என்.நடராஜ்,
- அந்தியூர்-எஸ்.எஸ்.ரமணிதரன்,
- பவானி-பி.ஜி.நாராயணன்,
- கோபிச்செட்டிபாளையம்-கே,ஏ.செங்கோட்டையன்,
- உதகமண்டலம்- புத்தி சந்திரன்,
- மேட்டுப்பாளையம்-ஓ.கே.சின்னராஜ்,
- அவிநாசி (தனி)-ஏ.ஏ.கருப்பசாமி,
- திருப்பூர் வடக்கு- எம்.எஸ்.என்.ஆனந்தன்,
- பல்லடம்-கே.பி.பரமசிவம்,
- கவுண்டம்பாளையம்-வி.சி.ஆறுகுட்டி,
- கோயம்புத்தூர் வடக்கு- த.மலரவன்,
- தொண்டாமுத்தூர்- எஸ்.பி.வேலுமணி,
- சிங்காநல்லூர்- ஆர்.சின்னசாமி,
- கிணத்துக்கடவு-சே.தாமோதரன்,
- பொள்ளாச்சி-எம்.கே.முத்துக்கருப்பண்ணசாமி,
- உடுமலைப்பேட்டை- பொள்ளாச்சி வி ஜெயராமன்,
- மடத்துக்குளம்- சி.சண்முக வேலு,
- பழநி- கே.எஸ்.என்.வேணுகோபாலு,
- ஒட்டன்சத்திரம்- பி.பாலசுப்ரமணி,
- குளித்தலை-ஏ.பாப்பாசுந்தரம்,
- மணப்பாறை-ஆர்.சந்திரசேகர்,
- நத்தம்-ரா.விஸ்வநாதன்,
- திருச்சி மேற்கு-என்.மரியம் பிச்சை,
- திருச்சி கிழக்கு- ஆர்.மனோகரன்,
- மணச்சநல்லூர்-டி.பி.பூனாட்சி,
- முசிறி-என்.ஆர்.சிவபதி,
- வேடசந்தூர்- பழனிச்சாமி,
- அரவக்குறிச்சி- வி.செந்தில்நாதன்,
- துறையூர் (தனி) - டி.இந்திராகாந்தி,
- பெரம்பலூர் (தனி) - இளம்பை ரா.தமிழச்செல்வன்,
- அரியலூர்- துரை மணிவேல்,
- நெய்வேல்- எம்.பி.எஸ்.சிவசுப்ரமணியம்,
- புவனகிரி- செல்வி ராமஜெயம்,
- குறிஞ்சிப்பாடி- சொரத்தூர் ரா. ராஜேந்திரன்,
- கடலூர். எம்.சி.சம்பத்,
- காட்டுமன்னார்கோயில் (தனி)- என்.முருகமாறன்,
- சீர்காழி (தனி) ம.சக்தி,
- கோயம்பத்தூர் தெற்கு- சேலஞ்சர் துரை என்ற துரைசாமி,
- பூம்புகார்- எஸ்.பவுன்ராஜ,
- வேதாரண்யம்- என்.வி.காமராஜ்,
- மன்னார்குடி - சிவா ராஜமாணிக்கம்,
- திருவாரூர்- குடவாசல் எம். ராஜேந்திரன்,
- நன்னிலம்- ஆர்.காமராஜ்,
- திருவிடைமருதூர் (தனி) - டி.பாண்டியராஜன்,
- கும்பகோணம்- ராமநாதன்,
- பாபநாசம்- ர.துரைக்கண்ணு,
- திருவையாறு- ரத்தினசாமி,
- தஞ்சாவூர் - எம். ரங்கசாமி,
- ஒரத்தநாடு- ஆர்.வைத்திலிங்கம்,
- அறந்தாங்கி-மு.ராஜநாயகம்,
- காரைக்குடி- சோழ சித பழனிச்சாமி,
- விராலிமலை - சி.விஜயபாஸ்கர்,
- திருப்பத்தூர் - ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்,
- மானாமதுரை (தனி) - ம. குணசேகரன்,
- மேலூர்- ஆர்.சாமி,
- மதுரை கிழக்கு- கே.தமிழரசன்,
- சோழவந்தான் (தனி) - எம்.வி.கருப்பையா,
- மதுரை வடக்கு- ஏ.கே.போஸ்,
- மதுரை மேற்கு- செல்லூர் ராஜூ,
- திருமங்கலம் - முத்துராமலலிங்கம்,
- ஆண்டிப்பட்டி- தங்கத்தமிழ்ச்செல்வன்,
- போடி நாயக்கனூர் - ஓ.பன்னீர்செல்வம்,
- ராஜபாளையம்- கே.கோபால்சாமி,
- சாத்தூர்- ஆர்.பி.உதயகுமார்,
- சிவகாசி-கே.டி.ராஜேந்திர பாலாஜி,
- அருப்புக்கோட்டை- வைகை செல்வன்,
- பரமக்குடி (தனி) - எஸ். சுந்தர்ராஜன்,
- முதுகுளத்தூர் - மு.முருகன்,
- விளாத்திகுளம்- வி.வி.மார்க்கண்டேயன்,
- தூத்துக்குடி - ஏ.பால்,
- திருச்செந்தூர் - பி.ஆர். மனோகரன்,
- ஸ்ரீவைகுண்டம் - எஸ்.பி.சண்முகநாதன்,
- கோவில்பட்டி - கடம்பூர் சே. ராஜூ,
- சங்கரன்கோயில் (தனி)- சொ. கருப்பசாமி,
- வாசுதேவநல்லூர் (தனி) - எஸ்.துரையப்பன்,
- கடையநல்லூர்- பி.செந்தூர் பாண்டியன்,
- ஆலங்குளம் - பி.ஜி. ராஜேந்திரன்,
- திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்,
- அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா,
- கன்னியாகுமரி - கே.டி.பச்சைமால்,
- நாகர்கோவில்- நாஞ்சில் நா. முருகேசன்,
- குளச்சல் - லாரன்ஸ்,
- கிள்ளியூர்- ஆர்.ஜார்ஜ்,
- சைதாபேட்டை - ஜி.செந்தமிழன்,
- ஜெயங்கொண்டான்- பா.இளவழகன்,
- பூவிருந்தவல்லி- என்.எஸ்.ஏ. ரா.மணிமாறன்,
- மதுராந்தகம் (தனி) - கணிதா சம்பத்,
- உத்திரமேரூர் - பா.கணேசன்,
- காட்பாடி - அப்பு என்ற ராதாகிருஷ்ணன்,
- ராணிப்பேட்டை- முகமது ஜான்,
- வாணியம்பாடி - சம்பத் குமார்,
- ஆற்காடு- ஆர். ஸ்ரீநிவாசன்,
- வேலூர்- வி.எஸ்.விஜய்,
- ஜோலார்பேட்டை - சி.வீரமணி,
- திருப்புதூர்- ரமேஷ்,
- பர்கூர்- கிருஷ்ணமூர்த்தி,
- கிருஷ்ணகிரி- முனுசாமி,
- பாலக்கோடு-கே.பி.அன்பழகன்,
- ஊத்தங்கரை- மனோரஞ்சிதம் காமராஜ்,
- கலசப்பாக்கம்- அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி,
- பாப்பிரெட்டிப்பட்டி - பழநியப்பன்,
- திருவண்ணாமலை- ராச்சந்திரன்,
- கீழ்பென்னாத்தூர்- அருங்கநாதன்,
- செய்யாறு- முக்கூர் சுப்ரமணியம்,
- மைலம்- நாகராஜன்,
- வானூர்- ஜானகிராமன்,
- பல்லாவரம்- தன்சிங்,
- அரக்கோணம் ( தனி) - ரவி
சிதம்பரம், புவனகிரி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
சிதம்பரம் கோட்டாட்சியரும் தேர்தல் அலுவலருமான இந்துமதி, மாவட்ட வழங்கல் அதிகாரியும் புவனகிரி தேர்தல் அலுவலருமான கல்யாணம் ஆகியோர் கலந்துகொண்டு வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாள்வது குறித்து பயிற்சியளித்தனர்.
உதவி தேர்தல் அலுவலர்கள் ராஜேந்திரன், தனசிங், தேர்தல் துணைத் தாசில்தார் ராஜாராமன் உள்ளளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் சிதம்பரம், புவனகிரியை சேர்ந்த மண்டல தேர்தல் அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Source: Dinakaran
பரங்கிப்பேட்டையில் மூமுக வேட்பாளர் ஆதரவு திரட்டினார்
இதையடுத்து மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் தலைவரும், வேட்பாளருமான ஸ்ரீதர் வாண்டையார் நேற்று அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமை யில், பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இன்று சிதம்பரம் நகரம், குமராட்சி ஒன்றியம், பரங்கிப்பேட்டை ஒன்றியம் ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டணி கட்சியின் முக்கிய நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறேன். இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்வது குறித்து அமைச்சர் பன்னீர் செல்வத்திடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார்.
திமுக ஒன்றிய செயலாளர்கள் முத்து பெருமாள், பூபாலன், ஜெயராமன், பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ், திமுக நிர்வாகிகள் பாண்டியன், காண்டீபன், பாமக நிர்வாகிகள் முடிவண்ணன், முருகன், கோபு, மூமுக மாநில நிர்வாகிகள் ரவிச்சந்திர வாண்டையார், கேப்டன் நடராஜன், கோகுல் வாண்டையார், செல்வராஜ், காங்கிரஸ் நிர்வாகிகள் சேதுமாதவன், ராஜேந்திரன், ஜெயச்சந்திரன், அஸ்கர் அலி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் எழில் வேந்தன், தமிழ் வளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Source: Dinakaran
சட்டசபை தேர்தலை முன்னிட்டு கடலூர் - விழுப்புரம் துறைமுக பகுதிகள் கடலோர காவல் படையினர் ரோந்து
வருகின்ற ஏப்ரல் மாதம் 13-ந் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தது. மாவட்ட வருவாய் அதிகாரிகள் தேர்தல் சிறப்பு கண்காணிப்பளார்களாக நியமிக்கப்பட்டனர்.
வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பொருள்கள் எடுத்து செல்கிறார்களா என தீவிர வாகன சோதனை தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் தமிழகம் முழுவதில் இருந்து ரூ.17 கோடி சிக்கியுள்ளது. இந்த சோதனை ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களிலும் நடைபெற்று வருகிறது.
தற்போது கடலூர் - விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதியான மரக்காணத்தில் இருந்து கிள்ளை வரையிலான 68 கிராமங்களை கொண்ட 130 கி.மீ. தூரத்தை கடலோர காவல் படையினர் இரண்டு அதிநவீன படகுகள் மூலம் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரோந்து பணி கடலோர காவல் படையின் இன்ஸ்பெக்டர் வசந்தன் தலைமையில் வருகின்ற ஏப்ரல் மாதம் 13-ந் தேதி வரை நடைபெறும். ஒவ்வொரு படகிலும் 5 போலீசார் இருப்பார்கள் என கடலோர காவல் படை அதிகாரி ஒருவர் கூறினார். Source: Daily Thanthi
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...