
நன்றி;
நன்றி;
இன்று நடைபெற்று வரும், ஜமாஅத் பொதுத் தேர்தலில் ஏகப்பட்ட கெடுபிடிகளுக்கிடையே... நீண்ட வரிசைகள், பலத்த போலீஸ் பாதுகாப்புகள், முடியாத நிலையிலும் முதியவர்கள்-ஊனமுற்றவர்கள் என்று மிகுந்த பரபரப்புகளுடன் ஓட்டு பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்கள் வாக்கு பதிவினை செலுத்தி வருகின்றனர். சட்டமன்ற-பாராளுமன்ற தேர்தலை மிஞ்சிவிடும் அளவிற்கு பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது. தேர்தல் நடைபெற்று வரும் ஷாதி மஹால் வளாகத்தின் வெளியே எங்கு நோக்கினும் இளைஞர் கூட்டம் அலை மோதுகிறது.
மதுரையில், தினமலர் நாளிதழ், வேலம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி ஆகியவை இணைந்து, பிப். 14 ல் பிளஸ் 2 மாணவர்களுக்கான குவிஸ் போட்டியை நடத்த உள்ளன.
அறிவியல், விளையாட்டு, வரலாறு, கலை, கலாசாரம், பொழுதுபோக்கு பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். போட்டியில் ஒரு பள்ளியில் இருந்து மேல்நிலை வகுப்பு மாணவர்கள் 2 பேர் தலைமை ஆசிரியரிடம் சான்றிதழ் பெற்று கலந்து கொள்ளலாம். பங்கேற்க விரும்புவோர் அவரவர் பள்ளியில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
பங்கேற்கும் மாணவர்களுக்கு பயணப்படி கிடையாது. தொலைதூர மாணவர்கள் தங்க வசதி செய்து தரப்படும். போட்டியில் வெல்லும் மாணவர்களுக்கு முதல்பரிசு 10 ஆயிரம் ரூபாய், 2ம் பரிசு 7 ஆயிரம், 3ம் பரிசு 5 ஆயிரம் வழங்கப்படும். பள்ளிகளுக்கு கேடயம், பார்வையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
குவிஸ் போட்டிகளை திருச்சி ‘தி குவிஸ் சோசியேட்’ நிறுவனம் நடத்துகிறது. மேலும் விவரங்களுக்கு, ‘ஒருங்கிணைப்பாளர் பி.நெல்சன்ராஜா (98432 79083), எம்.ஜெயராஜ் (99432 06996) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை கல்லூரி தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம், முதல்வர் சுரேஷ்குமார் தெரிவித்தனர்.
செய்தி: http://www.kalvimalar.com/tamil/ScrollNewsDetails.asp?id=1207
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அடுத்த மாதம் பிளஸ் 2 தேர்வு எழுத, அரசு தேர்வுகள் இயக்ககத்தால் நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதி வரை விண்ணப்பிக்காமல், தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடம் இருந்து ‘சிறப்பு அனுமதி’ (தத்கல்) திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தனித்தேர்வர்கள், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு ஆதாரமாக, இத்துறையால் அனுப்பப்பட்ட குறிப்பாணையை விண்ணப்ப மனுவுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள், பிப். 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை சென்னை கல்லூரி சாலையில் உள்ள அரசுத்தேர்வுகள் இயக்ககம், அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து அரசுத்தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், புதுச்சேரியில் உள்ள இணை இயக்குனர் அலுவலகம், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் லுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
செய்தி: http://www.kalvimalar.com/tamil/ScrollNewsDetails.asp?id=1210