புதன், 30 ஜூலை, 2008

மவுசு அதிகரிப்பால் 10 ரூபாய் பத்திரம் தட்டுப்பாடு.

சிறுபான்மையோருக்கான மத்திய அரசு அறிவித்துள்ள கல்வி உதவித் தொகை பெறுவதற்கு சாதிச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் பெற சில விதிகளை தளர்த்துள்ளது அரசு. அதன்படி, மேற்படி சான்றிதழ்களை சுயமாக 10 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்து கையெழுத்து போட்டு கொடுத்தாலே போதும் என்கிற நிலையில் பரங்கிப்பேட்டையில் இந்த பத்திரத்திற்கு மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சில பெற்றோர்கள் சிதம்பரம், சேத்தியாத்தோப்பு வரை சென்று பத்திரம் வாங்கி வருகின்றனர்.

மின் பற்றாக்குறையிலும் இரவு-பகல் சேவை.


மின் பற்றாக்குறை காரணத்தால் தமிழக அரசு அறிவித்துள்ள மின்வெட்டு மற்றும் அறிவிக்கப்படாத மின் வெட்டு செய்யப்படும் மின்வாரியத்தின் பொற் காலத்தில், மின்வாரியத்தின் அலட்சியப்போக்கால் நேற்று பகல் 12 மணி வரையிலும் பரங்கிப்பேட்டை சாலைகளில் உள்ள மின் கம்பங்களில் உள்ள மின் விளக்குகள் அணைக்கப்படமாலேயே இருந்தது.

களைகட்டும் கச்சேரி தெரு - பரங்கிப்பேட்டையின் முதல் நடைமேடை.


லேட்டாக முடிந்தாலும் லேட்டஸ்டாக முடிந்துள்ளது கச்சேரி தெருவின் நடைமேடையின் கூடிய புதிய தார்சாலை. கடந்த ஜனவரி மாதம் திட்ட பணிகள் ஆரம்பித்து மழை மற்றும் இதர காரணஙகளால் இழுத்தடிக்கப்பட்ட இத்திட்டப் பணி தற்போது முழுமையடைந்துள்ளது. சாலையின் இரு ஓரங்களிலும் நடைமேடை போடப்பட்டு கச்சேரி தெரு களைகட்டுகிறது. இது பரங்கிப்பேட்டையில் அமைந்துள்ள முதல் நடைமேடை என்கிற பெருமையை பெறுகிறது.

ஞாயிறு, 27 ஜூலை, 2008

மிகச் சிறந்த விஞ்ஞானியாக வர ஆசை - பரங்கிப்பேட்டையின் இளம் எழுத்தாளர்கள் விருப்பம்.

எங்கேயும் எப்போதும் சிந்தித்தவர்களாகவே காணப்படுகின்றார்கள் எட்டாம் வகுப்பு படிக்கும் முஸ்தாக் சமீர், முஹமது அஸ்லம் என்கிற இரு சிறுவர்கள். இந்த சிறு வயதில் பல சிறுகதைகளை எழுதியிருக்கும் இவர்களின் விருப்பம், நோக்கம் எல்லாமே "மிகச் சிறந்த விஞ்ஞானியாக வரவேண்டுமென்பதே" என்று உறுதிபடக் கூறுகிறார்கள் கோரஸாக.

"குள்ள மனிதர்கள், மர்ம மாளிகை, மஞ்சள் நிலவின் மர்மங்கள்" என்று மர்மக் கதைகளை அதிகமாக எழுதிவரும் முஸ்தாக் சமீர், தன்னுடைய படைப்புகளில் கேடயக் குறிப்பாக (Disclaimer) "இவ்வுலகில் பேய் என்று எதுவுமில்லை, ரசிக்கத்தக்கவை என்பதற்காக மட்டுமே இப்பேய்கதை" என்று அடிகுறிப்பு இடுகிறார்.

புத்திசாலி நண்பர்கள், கண்ணன் ஆசைப்பட்ட சைக்கிள், The Thief (ஆங்கிலம்) என்று தன்னுடைய சிந்தனைகள கதைகளாக தருகிறார் முஹமது அஸ்லம். இவர் தன்னுடைய உற்ற நண்பனான முஸ்தாக் சமீரீனால் உந்தப்பட்டதாக (Inspired) குறிப்பிடுகிறார். இருவரும் சேர்ந்து நரியின் தந்திரம் என்கிற தலைப்பில் ஒரு கதை எழுதியிருக்கிறார்கள்.

சனி, 26 ஜூலை, 2008

தொடரும் அவலங்கள்

பரங்கிப்பேட்டையில் அரசியல்வாதிகளின் அலட்சியத்தால் பணி முடிந்தும் திறக்கப்படாமல் இருக்கும் அரசு மருத்துவமனை மற்றும் பெண்கள் உயர்நிலைப்பள்ளி வரிசையில் இன்னுமொரு அரசு அலுவலகம்.


பரங்கிப்பேட்டையில் சார்பதிவாளர் அலுவலகம் ரூ.3 லட்சம் மதிப்பில் புதுப்பித்து பல மாதங்களாகியும் இது வரை திறக்காததால் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர். பரங்கிப்பேட்டை கச்சேரி தெருவில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பரங்கிப் பேட்டை, கிள்ளை, புதுச்சத்திரம் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ளவர்கள் பல்வேறு பணிகளுக்கு வந்து செல்கின்றனர். சார்பதிவாளர் அலுவலகம் கட்டி பல ஆண்டுகள் ஆனதால் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டது. மழை காலங்களில் காங்கிரீட் காரையில் இருந்து தண்ணீர் கீழே கொட்டியதால் முக்கிய ஆவணங்கள் நனைந்தன. மேலும் அலுவலகத் திற்கு வந்து சென்ற பொதுமக்களும் பாதித்தனர்.

இந்நிலையில் பொதுப்பணித்துறை மூலம் சார்பதிவாளர் அலுவலகத்தை ரூ. 3 லட்சம் மதிப்பில் புதுப்பிக்க ஆறு மாதத்திற்கு முன் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கின. இதனால் சார்பதிவாளர் அலுவலகம் பரங்கிப் பேட்டை பெரிய மதகு அருகே வாடகை கட்டடத்தில் இயங்குகிறது. தற்போது பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் இது வரை சார்பதிவாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யாததால் மக்கள் பெரிதும் பாதிக்கிப்படுகின்றனர். இந்த பகுதியில் பத்திரம், ஜெராக்ஸ், சாப்பாடு வசதி போன்ற எந்த வசதியும் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். இதனால் கால விரயம் ஏற்படுவதுடன், செலவும் அதிகமாக ஏற்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி உடன் சார்பதிவாளர் அலுவலகத்தை திறக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி: தின-மலர்

வெள்ளி, 25 ஜூலை, 2008

அதிரடி மழையால் பரங்கிப்பேட்டை சிலு சிலு.

பரங்கிப்பேட்டையில் நிலவி வந்த வெப்பத்தை தணிக்கும் வகையில் நேற்று இரவு அதிரடியாக நல்ல மழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த இந்த மழையினால் இன்று காலை வெப்பம் குறைந்து சிலுசிலுவென உள்ளது. நேற்று இரவு மழை பெய்தபோது மினசாராம் சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது.

புதன், 23 ஜூலை, 2008

ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் ITJ சார்பாக இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி


ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ) சார்பாக இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி ITJ நகர செயலாளர் P.M. அப்துல்ஹமீது தலைமையில் S.M.J. அப்பார்ட்மண்ட் வளாகத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை பல்கலைகழகம் பேராசிரியர் DR. S. அஜ்மல் கான் அவர்கள் கலந்துக்கொண்டு இலவச நோட்டு புத்தகம் வழங்கினார். மற்றும் ஆலீமா ஹமீதுன்னிசா அவர்கள் சமூக தீமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தலைவர் A.கலீமுல்லாஹ், நகரத்தலைவர் I . ஹபீப் முஹம்மது மற்றும் கிளை நிர்வாகிகள், பொது அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர். இறுதியாக அப்துல் அலீம் நன்றியுறையாற்றினார்.

திங்கள், 21 ஜூலை, 2008

பரங்கிப்பேட்டை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிவிப்பு

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தினசரி மின்வெட்டை முன்னிட்டு பரங்கிப்பேட்டை பகுதியில் கீழ்கண்ட நேரங்களில் மின்சாரம் நிறுத்தப்படும்.

முன்னர் அறிவிக்கப்பட்ட செவ்வாய், வெள்ளி கிழமைகளில் 6 மணி நேரம் மின் வெட்டு திரும்பப் பெறப்படுகிறது.

திங்கள் - காலை 8 முதல் 10 மணி வரை
செவ்வாய் - காலை 10 முதல் 12 மணி வரை
புதன் - பகல் 12 மணி முதல் 2 மணி வரை
வியாழன் - மாலை 2 முதல் 4 மணிவரை
வெள்ளி - மாலை 4 முதல் 6 மணி வரை
சனி, ஞாயிறு - காலை 6 முதல் 8 மணி வரை

ஞாயிறு, 20 ஜூலை, 2008

மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் கடலூர் மாவட்டம் (பரங்கிப்பேட்டை மாணவர்) இரண்டாவது இடம்

மாநிலம் தழுவிய கராத்தே போட்டியில் கடலூர் மவாட்டம் சார்பாக பரங்கிப்பேட்டை மாணவர் தமிழரசன் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளார். சலங்குகாரத் தெருவைச் சார்ந்த இந்த மாணவர் தமிழரசன். 11-வது படிக்கும் இம்மாணவர் தன்னுடைய சுயஆர்வத்தினால் இப்போட்டியில் பங்கு பெற்று இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் தமிழக முதல்வர் கருணாநிதியிடமிருந்து இதற்கான பரிசையும் பாராட்டையும் இம்மாணவர் பெற்றார்.

I.O.B. சலாவுதீன் காலமானார்

வல்லத் தம்பி மரைக்காயர் தெருவவில். மர்ஹூம் சையது அஹமது சாஹிப் அவர்களின் மூத்த மகனாரும், மீர் காசிம், ஜூல்ஃபிகார் அலி, அஹமது, ஜமால் இவர்களுடைய தகப்பனாரும் I.O.B. பெரோஸ் அவர்களின் சகோதரர் I.O.B. சலாவுதீன் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இவரது நல்லடக்கம் இன்று இரவு 8 மணிக்கு புதுபள்ளியில.

வெள்ளி, 18 ஜூலை, 2008

பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவருக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் பாராட்டு.

தமிழ்நாடு அரசு செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பரஙகிப்பேட்டை பேரூராட்சித் தலைவர் முஹமது யூனுஸ் அவர்களின் சிறப்பான செயல்பாட்டினை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார் உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின். தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் நான்கு பேரூராட்சித் தலைவர்களில் யூனுஸ் அவர்களை குறிப்பிட்டு பாராட்டுக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சுனாமி பாதித்த 19 பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வாழ்வாதார செயல்பாடுகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயல்பாடுகள் குறித்த இரு புத்தகங்களை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இப்புத்தகங்களை பரங்கிப்பேட்டை, கிள்ளை, மரக்காணம், கோட்டகுப்பம், மாமல்லபுரம் மற்றும் சோழிங்கநல்லூர் பேரூராட்சி தலைவர்கள் பெற்றுக் கொண்டனர்.

தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி

பரங்கிப்பேட்டையில் ஏற்படும் அறிவிக்கப்படாத தொடர் மின் நிறுத்தத்தினால் பொதுமக்கள் மிகவும் அவதிபடுகின்றனர். நகரில் தினமும் சுமார் 2 மணிநேரத்திற்கு இரவிலும், பகலிலும் மின்வெட்டு ஏற்படுகின்றது. இதுமட்டுமின்றி இன்றும் (வெள்ளி) கடந்த செவ்வாய் அன்றும் 6 மணிநேரம் மின்சாரம் அறிவிப்பு இல்லாமல் நிறுத்தப்பட்டது. இது குறித்து மின்வாரியத்தை கேட்டபோது, "இனி பிரதி செவ்வாய் கிழமைகளில் பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், வெள்ளி கிழமைகளில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது. இது தவிர தமிழ்நாடு முழுவதும் மின்உற்பத்தி தட்டுப்பாட்டினால் தினமும் 2 மணிநேரம் மின்னிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரிய அமைச்சகம் இன்று செய்தி வெளியிட்டுள்'ளது.

வியாழன், 17 ஜூலை, 2008

முக்கிய வேண்டுகோள்!

பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம் (mypno blog) வலைப்பூவில் கருத்துக்களை (Comments) போஸ்ட் செய்பவர்களின் கவனத்திற்கு!
இதில் பதிவிடப்படும் செய்திகள் மற்றும் கருத்துக்களை மையமாக வைத்து மட்டுமே தங்கள் கருத்துக்களை போஸ்ட் செய்யவும். செய்திக்கு சம்மந்தமில்லாத வகையில் தனிநபர் தாக்குதல்களை உங்கள் கருத்துகளாக பதிவிடவேண்டாம். நன்றி.

விரும்பிய பாடப்பிரிவுகள் கொடுக்காததால் பள்ளி மாணவர்கள் தவிப்பு

பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில்
படிக்கும் மாணவர்களுக்கு பிளஸ் 1 சேர்க்கையில் விரும்பும் பாடப்பிரிவுகள் கிடைக்காததால் மாணவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்று பிளஸ் 1-ல் சேருபவர்களுக்கு விரும்பிய பாடப் பிரிவுகள் கொடுக்காமல் சில பிரிவுகளை மட்டும் முடிவு செய்து அதில் சேர கட்டாயப்படுத்தி சேர்த்து விடுகின்றனர். இதனால் மாணவர்கள் விரும்பிய பாடப் பிரிவுகள் கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளனர். மதிப்பெண்களுக்கு ஏற்ப மாணவர்கள் விரும்பும் பாடப் பிரிவுகள் கொடுக்க வேண்டும் என அரசு விதிமுறை இருந்தும் சில பிரிவுகளில் மட்டும் வற்புறுத்தி சேர்ப்பது மாணவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதுகுறித்து மாணவர்கள் பெற்றோர் ஆசிரிய கழக பொருளாளர் ஜெகநாதனிடம் புகார் செய்துள்ளனர். கடந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் குறைந்தளவு சதவீதமே பெற்ற நிலையில் மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகளை கொடுக்காமல் இருந்தால் தேர்ச்சி சதவீதம் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர்.

நன்றி - தின மலர்

செவ்வாய், 15 ஜூலை, 2008

இறப்புச் செய்தி

மீன்கடைத்தெரு, மர்ஹூம் காஜா மக்தூம் அவர்களின் மூத்த மகனாரும், பாஷா மரைக்காயர் அவர்களின் சகோதரரும், சுல்தான் மரைக்காயர், ஹமீது கவுஸ் (கல்விக்குழு), ஜமீல் (கல்விக்குழு) இவர்களின் தந்தையுமான ஹம்ஜா மரைக்காயர் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்ஷாஅல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.

இறப்புச் செய்தி

ஹக்கா சாஹிப் தெரு, மர்ஹூம் அப்துல் கரீம் அவர்களின் மனைவியும A.K. முஹமது அலி அவர்களின் தயாரும், முஹமது கவுஸ், ஜாக்கிர் (VANS), பாபு இவர்களின் பாட்டியாருமாகிய அஜ்மத் பீவி அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்ஷாஅல்லாஹ் இவரது நல்லடக்கம் இன்று (செவ்வாய்) காலை 10 மணிக்கு காதிரியா பள்ளியில்.

திங்கள், 14 ஜூலை, 2008

குடிநீர்: பரங்கிப்பேட்டை அருகே மக்கள் அவதி




குடிநீர் தட்டுப்பாடு! பரங்கிப்பேட்டை அருகே மஞ்சக்குழி கிராமத்தில் பணிமுடிக்கப்பட்டும் திறக்காததால் மக்கள் அவதி



பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே ரூ.5 லட்சம் மதிப்பில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் திறக்காததால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்டது மஞ்சக்குழி கிராமம். இங்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த மூன்று ஆண்டு காலமாக குடிநீர் கிடைக்காமல் தொடர்ந்து அவதியடைந்து வருகின்றனர்.


கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் இக் கிராமத்திலிருந்த மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டது. இதனால் குடிநீர் தொட்டிக்கு ஏற்றப்படும் குடிநீர் கீழே கொட்டியது. அத்துடன் மேல்நிலைத்தொட்டி எப்போது விழுமோ என்கிற அச்சம் கிராம மக்களை அச்சுறுத்தி வந்தது. அதன் காரணமாக மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மேல் குடிநீர் ஏற்றப்படாமல் நேரடியாக அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் போர்வெல் மற்றும் பைப்லைன் பழுது அடைந்தது. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடி வந்தனர். வசதி படைத்தவர்கள் புதியதாக கைப்பம்பு போட்டு அதன் மூலம் குடிநீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். ஏழை, எளிய மக்கள் வேறுவழியின்றி குடிநீருக்காக பல தொலைவிலுள்ள இடங்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுகுறித்து மஞ்சக்குழி கிராம மக்கள் சம்மந்தப்பட்ட துறைக்கு புகார் செய்தனர்.


இந்நிலையில் கடந்த ஆண்டு தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. அத்துடன் பழுதான பைப் லைன் சரி செய்து கொடுக்கப்பட்டது. அனைத்து பணிகளும் முடிக்கப் பட்டு பல மாதங்களாகியும் இன்னும் குடிநீர் தொட்டி திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் தொடர்ந்து அல்லல்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி கலெக்டர் உடனடியாக புதிய குடிநீர் தொட்டியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர் பார்க்கின்றனர். (தினமலர்)
தகவல்: அபு ஃபாஹிம்...

புதன், 9 ஜூலை, 2008

மக்கள் புரட்சியே வழி.

மக்கள் புரட்சியே வழி.

மருத்துவமனையின் அவசியத்தையும், கல்விச்சாலையின் அவசியத்தையும் உணராத அரசியல்வாதிகளுக்காக காத்துகிடப்பதென்பது மருத்துவத்துக்கும் - கல்விக்கும் நாம் செய்யும் மிகப் பெரிய அநீதியாகும்.

இதே நிலை தொடர்ந்தால் உயிர்காக்க கட்டப்பட்ட மருத்துவமனை நாளை பிணக்கிடங்காகத்தான் மாறும்.

கண்டனங்கள், ஆர்பாட்டங்கள், மனுக்கள், அரசியல்வாதிகளின் சந்திப்புகள் போன்றவற்றால் சாதிக்க முடியாதவைகளை மக்கள் புரட்சி சாதித்துக் காட்டும்.

உள்ளுரில் இருக்கும் அனைத்து சமுதாய முக்கிய பிரமுகர்கள் அவரவர்கள் பகுதி மக்களை நிலைமையை எடுத்துக் கூறி திரட்டட்டும். அரசியல் ஆதாயங்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் நலனில் அக்கறைக் கொண்டவர்கள் ஒன்று திரண்டு மக்களை தட்டி எழுப்பினால் - மக்கள் ஒன்று திரண்டு முட்லூர் நெடுஞ்சாலையை முற்றுகையிட்டால் - சில மணிநேர பஸ் போக்குவரத்து தடைப்பட்டால் - மக்கள் அவதியின் கோலங்கள் அரசு அதிகாரத்தை தட்டினால் - வெகு விரைவில் இதற்கு தீர்வு கிடைக்கும்.

இறப்புச் செய்தி

ஆரியநாட்டு சலங்குகாரத் தெருவில், மர்ஹும் இஸாக் மரைக்காயர் அவர்களின் மகனாரும், பாபு என்கிற ஷாகுல் ஹமீத், பக்ருத்தீன் ஆகியோரின் தகப்பனாருமான ஜமாலுத்தீன் மரைக்காயர் இன்று காலை மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்ஷாஅல்லாஹ் நாளை காலை 9 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.

செவ்வாய், 8 ஜூலை, 2008

சாலைப் பணி முடக்கம்: பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதி.

எந்த ஆட்சிக் காலத்திலும் சபிக்கப்பட்ட சாலையாக பரங்கிப்பேட்டையில் மிக மோசமாக விளங்குவது பெரியத் தெரு நெடுஞ்சாலையே. இதன் விடிவெள்ளியாக தற்போது ஆலப்பாக்கத்திலிருந்து மெயின் ரோடு வரை புதிய சாலைப் போடும் பணிகள் ஓரளவு துவங்கியிருப்பது ஆறுதல் அளிக்கிறது. அதே வேளையில் பெரியத் தெருவில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் கால்வாய் போடும் திட்டத்திற்காக சாலையின் இரு ஓரங்களிலும் பள்ளம் வெட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும், மோசமான நிலை காரணமாகவும் இந்த சாலை வழியாக செல்லும் பேருந்துகள் நகுதா மரைக்காயர் தெரு வழியாக திருப்பப்படுகிறது.

ஆனால் ஒரு சில பேருந்துகள் (அதுவும் சில நேரங்களில்) மட்டுமே வாத்தியாப்பள்ளி, புதுகுப்பம் வரை நகுதா மரைக்காயர் தெரு வழியாக சென்று வருகிறது. பெரும்பாலான பேருந்துகள் பெரியத் தெரு முனையிலேயே திரும்பி விடுகின்றன. இதன் காரணத்தால் பொதுமக்கள் மட்டுமின்றி மாணவ-மாணவிகள் குறிப்பாக வெளியூர் சென்று பயிலும் மாணவர்கள் பெரும் அவதிகுள்ளாகி நிற்கின்றனர். வாத்தியாப்பள்ளி பகுதி மற்றும் சலங்குகாரத்தெரு பகுதி மாணவர்கள் இதனால் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஒரு டவுன் பஸ் திருப்பப்பட்டு நகுதாமரைக்காயர் தெரு வழியாக சென்றபோது, ஹபீப் தோட்டம் அருகில் இருக்கும் புதரின் காரணமாக இப்பேருந்து அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது. இதனால் மின்கம்பம் மிகவும் சேதமடைந்தது மட்டுமின்றி, மின்சாரமும் அப்பகுதியில் துண்டிக்கப்பட்டது. இப்பேருந்து ஓட்டுநர் மின்வாரியத்திற்கு 18000 ரூபாய் கொடுத்து விசயத்தை பெரிதுபடுத்தாமல் இருக்க கோரியுள்ளாராம். ஏனென்றால் இன்னும் சில மாதங்களில் பணிநிரந்தரம் பெற உள்ளதால் எங்கே விசயம் தெரிந்தால் தன்னுடைய வேலைக்கு வேட்டு ஏற்பட்டுவிடமோ என்கிற அச்சம்தான் என்கிறது நம்பத்தகுந்த வட்டாரம்.

திங்கள், 7 ஜூலை, 2008

இதுவும் கடந்து போகும்...! இன்னும் எத்துனை மாதங்களுக்கு?

இராஜஸ்தான் நிதியுதவிடன் கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஆண்டிலிருந்தே காத்துக் கிடக்கின்றன அரசு மருத்துவமனையும், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும். இதோ! இதோ வருகிறோம்!! இதோ வந்துட்டோம் என்று மாதம் மாதம் ஒரு தேதியை அறிவிக்கிறார்கள் சம்மந்தப்பட்ட அமைச்சர் பெருமக்கள்(?). இரண்டு கட்டிடங்களுமே அத்தியாவசிய பணிகளான மருத்துவம் மற்றும் கல்விக்கென தெரிந்திருந்தும் கூட இவர்கள் இத்தனை இழுத்தடிப்பு செய்கிறார்கள் என்று புரியாத புதிராக இருந்தாலும் இந்த ஏமாற்றங்கள் எல்லாம் வாடிக்கையான விசயமாய் ஆகிவிட்டது வெகுஜன மக்களுக்கு.

போதிய படுக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகள் இன்றி மிகவும் துன்பத்திற்கு ஆளாகி நிற்கும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வேதனைமிக்க ஆர்வத்தோடு பூட்டியிருக்கும் புதிய மருத்துவமனை கட்டிடத்தை தரிசித்து மட்டுமே செல்கிறார்கள்.

தற்போது வண்டிகாரத் தெருவில் இயங்கி வரும் பெண்கள் பள்ளியில் சில வருடங்களாக தமிழைத் தொடர்ந்து ஆங்கிலவழிக் கல்வியும் நடைபெற்று வருகிறது. இதனால் ஆண்டுதோரும் மாணவிகளின் சேர்க்கை கூடி கொண்டு செல்கிறது. மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் மாணவிகள் போதிய வகுப்பறைகளின்றி வராண்டாவில் (வெயிலில்) உட்கார வைக்கப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் போதிய கழிவறை வசதியில்லாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். சில மாணவிகள் வெட்கத்தை விட்டு பேரூராட்சித் தலைவருக்கு போன் செய்து இந்த சிரமத்தை சொல்லியிருக்கின்றனர். பேரூராட்சித் தலைவரும் பொறுமையிழந்து மீண்டும் மீண்டும் முயற்சிகள் எடுத்தாலும் அரசியல் கலந்த மர்மாகவே நீடிக்கின்றது இந்த திறப்பு விழாக்கள்.
இந்த பிரச்சினையை முன்னிறுத்தி கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும் அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகின்றனர். பரங்கிப்பேட்டை கூகிள் குழுமம் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மின்னஞ்சல் மற்றும் ஃபாக்ஸ் செய்தி அனுப்பப்பட்டது. இதை மாவட்ட ஆட்சித் தலைவரும் உறுதிப்படுத்தியுள்ளார். மீண்டும் மீண்டும் இவருக்கு பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்து வருவதால் பொறுமையிழந்து, பேரூராட்சித் தலைவரை போனில் தொடர்பு கொண்டு, 'நீங்களே இதை திறந்து விடுங்களேன்' என சொன்னதாக தகவல்.
இதுகுறித்து ஜமாஅத்தின் முக்கிய நிர்வாகி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, எத்தனை கோரிக்கைகள் வைத்தாலும் இவர்கள் இப்படித்தான் இழுத்தடிப்பார்கள். பொதுமக்கள் நேரடியாக களத்தில் இறங்கி போரடினால்தான் இது முதலமைச்சர் செல்லிற்கு போகும் என்று தன்னுடைய கருத்தை கூறினார்.

வெள்ளி, 4 ஜூலை, 2008

கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி நிலையத்திற்கு பரங்கிப்பேட்டையின் பங்கு



அண்ணாமலை பல்கலைகழகத்தின் கடல்வாழ் உயிரின ஆராய்சி நிலையம் (Marine Biologocal Station) பரங்கிப்பேட்டையில் இயங்கி வருகிறது. இந்த ஆராய்சி நிறுவனம் பரங்கிப்பேட்டையின் ஒரு முத்திரை பதித்த அடையாளமாக விளங்கி வருகிறது.


முதுகலை மற்றும் ஆராய்சி படிப்புகளை மேற்கொள்வதற்கு மாணவ-மாணவியர்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்து கல்வி கற்றாலும், பரங்கிப்பேட்டை மாணவர்கள் (மண்ணின் மைந்தர்கள்) இந்த கல்வி கற்பதோ ஆராய்சி மேற்கொள்வதோ என்பதோ என்பது மிக மிக குறைவு.


கடந்த ஒரு சில வருடங்களாகத்தான் சுமார் 8 பரங்கிப்பேட்டை மாணவர்கள் இதில் முதுகலை படிப்பு மேற்படிப்பு மேற்கொண்டு வருகிறார்கள். மதிப்பு வாய்ந்த இந்த ஆராய்சி கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்விகுழு சார்பாக இங்கு பயிலும் பரங்கிப்பேட்டை மாணவர் அக்பர் ஜான் என்பவர் ஆராய்சி கட்டுரையை (Thesis Report) மிகவும் திறம்பட தயாரித்து அண்ணாமலைப் பல்கலைகழக துணைவேந்தரிடம் சமர்பித்துள்ளார்.
இதற்காக சிறப்பு நினைவு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் துணைவேந்தரிடமிருந்து பெற்றுள்ளார்.


இது குறித்து மாணவர் அக்பர் ஜானிடம் கேட்டபோது, கல்விகுழு சார்பாக நான் தயாரித்த இந்த ஆராய்சி கட்டுரை மூலம் இக்கல்வி குறித்து நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இவ்வாராய்சி நிலையத்திற்கு பரங்கிப்பேட்டையின் பங்களிப்பை விளக்கவும் செய்துள்ளேன். இதற்காக கல்விக்குழுவிற்கு நன்றி கூறுகிறேன். எனக் கூறினார்.

கடலூர் கலெக்டர் நடத்திய பாடம்!


சில மேனிலைப்பள்ளிகளில் 100-க்கு 88 மாணவர்கள் ஃபெயில். 50 விழுக்காடு தேர்ச்சி பெற்றவை ஒரு சில பள்ளிகள் தான். இப்படி கல்வியில் தாழ்ந்து தலைகுனிந்து நிற்கும் கடலூர் மாவட்டத்தில் மாணவர்களில் தரத்தை உயர்த்துவது எப்படி? மாவட்டத்திலுள்ள 42 மேனிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையும் அழைத்துக்கூட்டம் போட்டார் கலெக்டர் ராஜேந்திர ரத்னூ!

"நமது கவனம் சிதையக்கூடாது. ஆகவே முதலில் நமது செல்ஃபோன்களை ஆஃப் செய்து விடுவோம்". என்ற அறிவிப்போடு பேச்சைத் தொடங்கினார்.
இடையில் ஒரு செல்ஃபோன் இடைவிடாமல் அலற, சத்தம் வந்த திசை நோக்கி நடந்தார் கலெக்டர்.... அலறியது சேத்தியாதோப்பு பெண்கள் மேன்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியை சந்திராவின் செல்போன் என்பதைக்கண்டறிந்தார்.

"ஏம்மா ஆஃப் பண்ணலை?" கொஞ்சம் கோபமாகக் கேட்டார். ஆசிரியை கண்கள் கலங்கி விட்டன. "எனக்கு ஆஃப் பண்ணத்தெரியலை சார்!" உண்மையைச் சொன்னார் ஆசிரியை.

"ஒரு தலைமை ஆசிரியை இது கூடத் தெரியாமல் இருக்கலாமா?" தலையில் அடித்துக் கொண்ட கலெக்டர், மற்ற தலைமையாசிரியர்களைப் பார்த்து "நான் பேசியதை எல்லாம் குறிப்பெடுத்துக்கொண்டீர்களா?" என்றார். "இல்லீங்க சார்!" எல்லாரும் தலையாட்டினார்கள். "சரி போகட்டும்... நான் என்ன சொன்னேன்னு சொல்லுங்க பார்ப்போம்", கீரப்பாளையம், கருப்பேரி பள்ளித் தலைமையாசிரியர்களைப் பார்த்துக்கேட்டார்.

கடைசி பெஞ்ச் மாணவர்களைப் போல திருதிருவென விழித்தார்கள் அந்த ஆசிரியர்கள். இவர்களை வைத்துக்கொண்டு கடலூர் மாவட்டத்தின் கல்வித்தரத்தை எப்படி மேம்படுத்துவது?
நன்றி: நக்கீரன் (05-07-2008)

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...