திங்கள், 29 ஜூன், 2009

பரங்கிப்பேட்டையில் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

பரங்கிப்பேட்டை:

பரங்கிப்பேட்டை அருகே வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ் துவக்கி வைத்தார்.

பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் அரசு உதவி பெறும் பள்ளியில் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.

பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார்.

புதுச்சத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் அமுதா வரவேற்றார்.

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமதாஸ், பரங்கிப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் சேவியர் அமலதாஸ் முன்னிலை வகித்தனர்.

முகாமில் சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, புற்றுநோய், இதயநோய், ஈ.சி.ஜி., ஸ்கேன் ஆகிய நோய்களுக்கு டாக்டர் ராமன் தலைமையில் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

முகாமில் தி.மு.க., நகர செயலாளர் பாண்டியன், கவுன்சிலர்கள் காஜா கமால், நடராஜன், ராமலிங்கம், வக்கீல் தங்கவேல், இளைஞரணி அமைப்பாளர் முனவர் உசேன் உட்பட பலர் பங்கேற்றனர்.

உணவு ஆய்வாளர் நல்ல தம்பி நன்றி கூறினார்.

பரங்கிப்பேட்டையில் 8ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளியில் இரு ஆசிரியர்கள் மட்டுமே பாடம் நடத்தும் அவலம்!

பரங்கிப்பேட்டை:

பரங்கிப்பேட்டை அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இரண்டு ஆசிரியர்களே மாணவர்களுக்கு பாடம் நடத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.

152 மாணவிகளும், 143 மாணவர்களும் படித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு பள்ளி துவங்கிய நாளில் இருந்து முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர்களே பாடம் நடத்தி வருகின்றனர்.

பள்ளியில் எட்டு ஆசிரியர்களுக்கு பணியிடம் இருந்தும் கடந்த ஆண்டு ஐந்து ஆசிரியர்கள் பணியில் இருந்தனர்.

முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் இருந்ததால் மாணவர்களுக்கு எந்த பிரச்னையும் இன்றி அனைத்து பாடங்களும் நடத்தி முடிக்கப்பட்டது.

தற்போது இரண்டு ஆசிரியர்களே உள்ளதால் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதைவிட மாணவர்களை கவனிக்கவே முடியாத நிலை உள்ளது.

இங்கிருந்த மூன்று ஆசிரியர்கள் இட மாற்றல் வாங்கி கொண்டு சென்றுவிட்டனர்.

அவர்களுக்கு பதிலாக இதுவரை புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

இங்கு மண்டபம், கொய்யாத்தோப்பு, குத்தாப்பாளையம், அரியகோஷ்டி சாலை ஆகிய பகுதியில் இருந்து ஏழை, எளிய மாணவர்கள் அதிகளவில் படிக்க வருகின்றனர்.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என புலம்புகின்றனர்.

கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஞாயிறு, 28 ஜூன், 2009

மற்றொரு மரம் சாய்ந்தது





கடந்த சில நாட்களுக்கு முன் மீராப்பள்ளி வளாகத்திலிருந்த ஒரு மரம் சாய்ந்தது (முதல் படம்)எல்லோரும் அறிந்ததே,இந்நிலையில் இன்று(28/06/09) இரவு 7.30 மணியளவில் ஓரியண்ட் நர்சரி பள்ளி வளாகத்தில்இருந்த பழமைவாய்ந்த மரம் ஒன்று திடீர் என்று சாய்ந்தது. இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அதன் பிறகு சாலை சீரமைக்கப்பட்டது.


படங்கள்: செய்யது, மற்றும் கிரஸண்ட்

பரங்கிப்பேட்டை அருகே தீயில் கருகி பெண் பலி! காப்பாற்ற சென்ற கணவன் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை

பரங்கிப்பேட்டை அருகே தீயில் கருகி பெண் பலியானார்.

அவரை காப்பாற்ற சென்ற கணவன் தீ விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள புதுச்சத்திரம் வேளங்கிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் (வயது 29).

விவசாயி.

இவரது மனைவி வளர்மதி (26).

இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது.

சம்பவத்தன்று வளர்மதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது.

அந்த தீ வேகமாக பரவி வளர்மதி உடல் முழுவதும் பற்றி எரிந்தது.
இதில் வளர்மதி அலறி துடித்தார்.

இந்த அலறல் சத்தம் கேட்ட மதியழகன் ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றார்.

இதில் மதியழகன் உடலிலும் தீ பரவியது.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீக்காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதில் வளர்மதி மேல்சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

பலத்த தீக்காய மடைந்த மதியழகன் கடலூர் அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இது பற்றி வளர்மதி அண்ணன் தியாகராஜன் புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாழன், 25 ஜூன், 2009

பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பூவாலை கிராம மக்கள் கலெக்டருக்கு கோரிக்கை

பரங்கிப்பேட்டை: விவசாயிகள் சமூக பாதுகாப்பு திட்ட உறுப்பினர் அட்டை வழங்குமாறு பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பூவாலை கிராம பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசின் சமூக பாதுகாப்பு திட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் மற்றும் சிறு, குறு விவசாயிகள் 18 வயது முதல் 65 வயது வரையுள்ளவர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு பயனடைந்து வருகின்றனர்.

திருமண உதவி தொகை, கர்ப்பிணி பெண்கள் உதவி தொகை, இயற்கை மற்றும் விபத்தினால் மரணமடைந்தால் உதவி தொகை உட்பட பல திட்டங்கள் கிடைக்க சமூக பாதுகாப்பு திட்ட உறுப்பினர் அட்டை தேவைப்படுகிறது.

ஆனால் பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பூவாலை கிழக்கு பகுதியில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இதுவரை சமூக பாதுகாப்பு திட்ட உறுப்பினர் அட்டை கிடைக்கவில்லை.

இதனால் அரசு வழங்கும் சலுகைகளை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இப்பகுதி மக்கள் தங்களுக்கு சமூக பாதுகாப்பு திட்ட உறுப்பினர் அட்டை வழங்க வேண்டுமென கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

இறப்புச் செய்தி


காஜியார் சந்தில், கோர்ட்டில் பணிபுரிந்தவரும், கலில் அகமதுவின் தகப்பனாருமான ஹமீது சாஹிப் அவர்கள் மர்ஹீம் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று(25-06-2009) மாலை நல்லடக்கம் மீராப் பள்ளியில்

புதன், 24 ஜூன், 2009

காலி சிலிண்டர்களை ஏற்றி சென்ற மினி லாரி தலைகுப்புற கவிழ்ந்தது

பரங்கிப்பேட்டை அருகே சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற மினிலாரி தலை குப்புற கவிழ்ந்தது.

மயிலாடுதுறையில் இருந்து புதுச்சேரிக்கு 50 ஆக்சிஜன் காலி சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு ஒரு மினிலாரி நேற்று புறப்பட்டுச் சென்றது.

பரங்கிப்பேட்டை அடுத்த சின்னகுமட்டி அருகே நேற்று காலை 8.30 மணியளவில் மினிலாரி முன்னாள் சென்ற பஸ்சை முந்திச் செல்ல முயன்றது.

அப்போது திடீரென எதிர்புறத்தில் பஸ் வந்ததால் டிரைவர் பிரேக் போட்டதால் மினிலாரி நிலைதடுமாறி சாலையோரத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்.

லாரியில் இருந்த சிலிண்டர்கள் சாலையில் சிதறி ஓடியதால் அப்பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.

சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.

நடை பாதையில் நடமாடும் வியாபாரிகள்


கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு போக்கு வரத்து நெரிச்சலை சமாளிபதர்காகவும் மக்கள் இடையூர் இன்றி நடபதர்க்காகவும் பரங்கிபேட்டை சந்சிவீராயர் கோவில் தெருவில் நடைபாதை அமைக்கப்பட்டது.

தற்போது அங்கு பல கடை, சர்பத் கடை, பாணிபுரி கடை மற்றும் இது போன்ற அன்றாட கடைகள் அவிடத்தை ஆக்கிரமிச்சி விட்டனர்.


பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், வேளைக்கு செல்பவர்கள் மற்றும் பலர் நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் கடும் அவதிக்கு உள்ளாகிவருகின்றனர்.


பேரூராச்சி மன்றம் நடவடிக்கை எடுக்குமா என்று பொருத்து இருந்து பார்ப்போம்!

நன்றி: கிரசண்ட நல்வாழ்வு சங்கம்

செவ்வாய், 23 ஜூன், 2009

பரங்கிப்பேட்டை படகு குழாம் பாதையில் பழுது

பரங்கிப்பேட்டை வரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த பகுதி என்ற நிலை மாறி தற்போது தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமாகவும் உருவெடுத்து வருகிறது.

ஹாஜி எம்.எஸ். முஹம்மது யூனுஸ் அவர்கள் தலைமையின் கீழ் செயல்படும் பரங்கிப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் இதற்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருவது பாராட்டுக்குரியதாகும்.

வங்க கடலிலிருந்து பிரிந்து நகரின் ஓரத்தில் அழகாக ஓடிக்கொண்டிருக்கும் வெள்ளாற்றை படகு குழாமாக ஏற்படுத்தியதும் அதில் ஒன்று.

இந்த படகு குழாம் பகுதிக்கு பரங்கிப்பேட்டை மட்டுமில்லாமல் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் குழந்தைகள், பெண்கள், முதியோர் உட்பட பொது மக்கள் பலரும் நூற்றுக்கணக்கில் தினந்தோறும் வந்து போகும் பொழுது போக்கு தளமாக மாறியுள்ளது.

இந்த படகு குழாம் பகுதியில் ஆற்றின் மத்திய பகுதி வரை மரப்பலகைகள் அமைத்து பாதை போடப்பட்டுள்ளது மக்களுக்கு வசதியாக உள்ளது.

அப்படி அமைந்துள்ள மரப்பலகை பாதையில் சில தினங்களுக்கு முன் ஓட்டை ஏற்பட்டு அங்கு நடந்து செல்லும் மக்கள் எந்நேரத்திலும் தடுக்கி விழ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அப்படி ஆபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்கு பேரூராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

பரங்கிப்பேட்டை படகு குழாமிலிருந்து நமது செய்தியாளர்

பரங்கிப்பேட்டை ஒன்றிய குழுவில் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி

பரங்கிப்பேட்டை:

கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கிய துணை முதல்வருக்கு பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழு கூட்டம் சேர்மன் முத்துப்பெருமாள் தலைமையில் நடந்தது.

ஆணையாளர்கள் நடராஜன், நீலகண்டன் முன்னிலை வகித்தனர்.

துணை சேர்மன் முடிவண்ணன், கவுன்சிலர்கள் மாரியப்பன், கலையரசன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் விவாதத்தில் பங்கேற்றனர்.

கிராம மக்களுக்கு நூறு நாட்கள் வேலை வழங்க நடவடிக்கை எடுப்பது குறித்தும், ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகள் பயன்பெறும் வகையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கிய துணை முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, கொத்தட்டை ஊராட்சி தோப்பிருப்பு கிராமத்தில் சமத்துவபுரம் கட்டுவதற்கு பரிந்துரை செய்த அமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தல் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மேலாளர் ராமச்சந்திரன், இன்ஜினியர் தரணி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

பரங்கிப்பேட்டை:

வேளங்கிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச் சுவர் அமைத்திட கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

பரங்கிப்பேட்டை ஒன்றியம் வேளங்கிப்பட்டு கிராம மக்கள் கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

வேளங்கிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் பூவாலை, சேந்திரக் கிள்ளை, அலமேலு மங்காபுரம், வில்லியநல்லூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

பள்ளியில் அனைத்து அடிப்படை வசதிகள் இருந்தும், சுற்று சுவர் இல்லாததால் ஆடு, மாடுகள் உள்ளே புகுந்து சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகின்றன.

பள்ளியை சுற்றி உள்ள புதர்களில் இருந்து விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மாணவர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

எனவே பள்ளிக்கு சுற்றுச் சுவர் அமைத்து தர வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பரங்கிப்பேட்டையில் திடீர் மழை! மகிழ்ச்சியில் மக்கள்!!

இன்று சரியாக 4 மணியளவில் திடிரென்று பலத்த இடியுடன் மழை பெய்தது.

கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் இந்த திடீர் மழை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மிதமான காற்றுடன் மழை பெய்து கொண்டு வருகிறது.

ஒரு சில இடங்களில் மின்சாரம் நிறுத்த பட்டது.

திங்கள், 22 ஜூன், 2009

குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை(KPIA)யின் 4ஆம் ஆண்டு துவக்க விழா! புதிய நிர்வாகிகள் தேர்வு!!

கடந்த 12.06.2009 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணியளவில் அஸர் தொழுகையைத் தொடர்ந்து குவைத், ஸால்மியா பகுதியில் உள்ள ஜனாப் எஸ். கவுஸ் அலீ இல்லத்தில் குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை(KPIA)யின் '4ஆம் ஆண்டு துவக்க விழா'வும், '2009-2010ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நிகழ்வு'ம் நடைபெற்றன. அல்ஹம்துலில்லாஹ்...

பேரவையின் தலைவர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ தலைவர் ஜனாப் ஜி. ஹஸன் அலீ முன்னிலை வகிக்க, மூத்த உறுப்பினர் ஜனாப் ஜனாப் ஏ.பி. அப்துல் நஜீர் இறைவசனங்கள் (கிராஅத்) ஓத நிகழ்ச்சிகள் இனிதே துவங்கின.

தலைவரின் தலைமையுரைக்கு பின், செயலாளர் ஹாஜி எம்.எஸ். குலாம் ஜெய்லானி மியான் ஆண்டறிக்கையை சமர்ப்பித்து, பேரவையின் நோக்கங்கள், செயற்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கினார்.

பொருளாளர் ஜனாப் இஜட். ஹபீபுல்லாஹ் மரைக்காயர் ஆண்டு வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார்.

3ஆம் ஆண்டு நிறைவு மற்றும் 4ம் ஆண்டு துவக்கம் குறித்து உறுப்பினர்களின் கலந்துரையாடலுக்கு பிறகு 2009-2010ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

கீழ்க்காணும் சகோதரர்கள் பேரவையின் புதிய நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

நிர்வாகக் குழு

  • தலைவர் : ஜனாப் ஜே. ஹஸன் அலி

  • துணைத் தலைவர் : ஜனாப் பி. முஹம்மது ஷரீஃப்

  • செயலாளர் : மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ

  • துணைச்செயலாளர் : ஜனாப் மீ.மெ. ஹாஜா கமால்

  • பொருளாளர் : ஹாஜி எம்.எஸ். குலாம் ஜெய்லானி மியான்

  • துணைப் பொருளாளர் : ஜனாப் இஜட். ஹபீபுல்லாஹ் மரைக்காயர்

ஆலோசனைக் குழு உறுப்பினர்கள்:

  • 1. ஜனாப் எஸ். முஹம்மது நூர்

  • 2. ஜனாப் பி.ஏ. அப்துர் ரஜ்ஜாக்

  • 3. ஜனாப் பி.ஏ. அப்துல் ஹமீது (அலீம்)

  • 4. ஜனாப் எஸ். கவுஸ் அலீ

  • 5. ஜனாப் யு. நிஸார் அஹ்மது

  • 6. ஜனாப் எம்.எச். அல்காஃப் ஹுஸைன்

  • 7. ஜனாப் என். சுல்தான் ஆரிஃப்

செயற்குழு உறுப்பினர்கள்:

  • 1. ஜனாப் எம். முஹம்மது இப்ராஹீம்

  • 2. ஜனாப் எஸ். கவுஸ் ஹமீது

  • 3. ஜனாப் ஏ.பி. அப்துல் நஜீர்

  • 4. ஜனாப் எஸ். பீர் முஹம்மது அலீ

  • 5. ஜனாப் எஸ். ஷர்ஃபுத்தீன்

  • 6. ஜனாப் எஸ். ஜெய்லான் மியான்

  • 7. ஜனாப் எஸ். யஹ்யா மரைக்காயர்

புதிய துணைச்செயலாளர் ஜனாப் மீ.மெ. ஹாஜா கமால் நன்றியுரையாற்ற, தலைவரின் துஆவுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றன.

இச்சிறப்பு மிகு நிகழ்ச்சியில் குவைத் வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் பெரும்பாலானோர் கலந்துகொண்டு தங்கள் வருகையை பதிவுசெய்து சிறப்பித்ததுடன் நகர வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்திற்கும் பேரவை எடுக்கும் முயற்சிகளுக்கு உதவியும் ஒத்துழைப்பும் வழங்குவதாக உறுதியளித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை(KPIA)யின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

ஞாயிறு, 21 ஜூன், 2009

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் சமத்துவபுரம் கட்டுவதற்கான இடத்தை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் சமத்துவபுரம் கட்டுவதற்கான இடத்தை மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு சமத்துவபுரம் கட்டிக்கொடுக்க தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கொத்தட்டை ஊராட்சியை சேர்ந்த தோப்பிருப்பு கிராமத்தில் சமத்துவபுரம் கட்ட தேவையான இடங்கள் உள்ளதாக கூறப்பட்டது.

அதை தொடர்ந்து தோப்பிருப்பில் சமத்துவபுரம் கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் தோப்பிருப்பு கிராமத்துக்கு வந்தார்.

பின்னர் தோப்பிருப்பு முள்ளா தோப்பு முதியோர் இல்லம் அருகில் உள்ள இடங்களை கலெக்டர் சீத்தாராமன் பார்வையிட்டார்.

அதைதொடர்ந்து சமத்துவபுரம் கட்ட தேவையான இடங்களை நில உரிமையாளர்களிடம் பேசி வாங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அவர்கள் ஒன்றியக் குழு தலைவர் முத்து. பெருமாளிடம், நிலத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் உடனடியாக வாங்குமாறு கேட்டுக்கொண்டனர்.

அவருடன் மாவட்ட வருவாய் அதிகாரி நடராஜன், திட்ட அதிகாரி ராஜஸ்ரீ, சிதம்பரம் ஆர்.டி.ஓ. ராமலிங்கம், தாசில்தார் தனவந்த கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் பழனி, ஆணையர்கள் நீலகண்டன், நடராஜன், கவுன்சிலர் ராஜாராமன், பொறியாளர் தரணி, வருவாய் அதிகாரி ஹேமா, கிராம நிர்வாக அதிகாரி முருகேசன் உள்பட அரசு அதிகாரிகள் உடன் வந்தனர்.

புவனகிரியில் தீ விபத்து! பரங்கிப்பேட்டை ஐக்கிய ஜமாஅத் உதவி!!

புவனகிரி, பவளக்காரத் தெருவில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 முஸ்லிம் குடும்பங்களூம் 5 மாற்று சமுதாய குடும்பங்களும் பாதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட இவர்களுக்கு MKMS காண்டிரக்டர் ஜனாப். பஷீர் அவர்கள் ஜமாஅத்தை முன்னிறுத்தி ரூ 10,000 உதவி வழங்கினார்.

ஜமாஅத் பைத்துல்மால் மூலம் ரூ5,000. ஜமாஅத் நிர்வாகிகள் மூலம் ரூ9,000 ஆக மொத்தம் ரூ14,000 பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

ஜமாஅத் செயலாளர் ஜனாப். நிஜாமுத்தீன் அவர்கள் தனிப்பட்ட முறையில் 10 சேலைகளையும் வழங்கினார்.

லயன்ஸ் கிளப் சார்பாக ஜனாப். கவுஸ் ஹமீது அவர்கள் 15 போர்வைகள் மற்றும் பாய்களை நிவாரணமாக வழங்கினார்.

வியாழன், 18 ஜூன், 2009

பரங்கிப்பேட்டை / முடசல் ஓடை வரை பஸ் இயக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை

சிதம்பரத்தில் இருந்து நக்கரவந்தன்குடி, கோழிப்பள்ளம் வழியாக பரங்கிப்பேட்டை / முடசல் ஓடை வரை அரசு பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து முடசல் ஓடை பகுதி பொதுமக்கள் கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

சிதம்பரத்தில் இருந்து நக்கரவந்தன்குடி, கோழிப்பள்ளம், உத்தம சோழமங்கலம், ராதா விளாகம் வழியாக கிள்ளை பிச்சாவரம் வரை கடந்த எம்.ஜி.ஆர்., ஆட்சியில் அரசு பஸ் இயக்கப்பட்டது.

சுற்றுப்பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் பயனடைந்தனர்.

சாலை சரியில்லாததால் கடந்த சில ஆண்டுகளாக ராதாவிளாகத்துடன் அரசு பஸ் சிதம்பரத்திற்கு திரும்பி விடுகிறது.

இதனால் உத்தமசோழமங்கலம், ராதாவிளாகம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கிள்ளை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வந்து செல்வதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.

அப்பகுதி மக்கள் முக்கிய அலுவலகங்களுக்கு பரங்கிப்பேட்டைக்கு செல்வதற்கு 20 கி.மீ., தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே கடந்த சில காலமாக பிச்சாவரத்திற்கு இயக்கிய அரசு பஸ்சை முடசல் ஓடை வரை இயக்க வேண்டும்.

புதன், 17 ஜூன், 2009

கூடுதல் பஸ் இயக்கக் கோரி மறியல் பரங்கிப்பேட்டை அருகே போக்குவரத்து பாதிப்பு

பரங்கிப்பேட்டை அருகே கூடுதல் அரசு பஸ் இயக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.

சிதம்பரத்தில் இருந்து நக்கரவந்தன்குடி, கொடிப்பள்ளம், மேலச்சாவடி, அண்ணாப்பாலம், வடக்குச்சாவடி வழியாக நஞ்சைமகத்து வாழ்க்கை உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

இப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சிதம்பரத்திற்கு வந்து செல்வதற்கு அரசு பஸ் இயக்கப்பட்டது.

பள்ளி, கல்லூரி மாணவர்களின் வசதிக்காக தற்போது இயக்கப்படும் பஸ் நேரத்தை மாற்றவும், கூடுதல் பஸ் இயக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரி வருகின்றனர்.

இப் பிரச்னையை வலியுறுத்தி ஏற்கனவே சாலை மறியல் நடத்தப்பட்டபோது, சிதம்பரம் தாசில்தார் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நஞ்சைமகத்து வாழ்க்கை பொதுமக்கள் நேற்று காலை 10 மணிக்கு சிதம்பரம்-கிள்ளை சாலையில் மேலச்சாவடி பஸ் நிறுத்தத்தில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

கிள்ளை போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மக்களை சிதம்பரம் அரசு போக்குவரத்து கழக டெப்போவிற்கு அழைத்து சென்று பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர்.

இந்த பகுதியில் நடந்த திடீர் மறியலால் சிதம்பரம்- கிள்ளை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

பரங்கிப்பேட்டையில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

கடலூர் மாவட்டத்தில் நேற்று வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

பரங்கிப்பேட்டையில் வக்கீல்கள் சங்க தலைவர் ஜெயசங்கர் தலைமையில் 9 பேரும், சிதம்பரத்தில் நடனம் தலைமையில் 120 பேரும், பண்ருட்டியில் ராதாகிருஷ்ணன் தலைமையில் 90 பேரும், நெய்வேலியில் மூவேந்தர் தலைமையில் 45 பேரும் கோர்ட் பணிகளை புறக்கணித்தனர்.

கடலூரில் வக்கீல்கள் சங்கத் தலைவர் லோகநாதன் தலைமையில் 250 பேரும், திட்டக்குடியில் தலைவர் மோகன்ராஜ் தலைமையில் 27 பேரும், காட்டுமன்னார்கோவிலில் செந்தில்குமார் தலைமையில் 15 பேரும் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம் கோர்ட் வளாகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பார் அசோசியேஷன் தலைவர் விஜயகுமார், அட்வகேட் அசோசியேஷன் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினர். செயலாளர் ரங்கநாதன், ஆனந்தக் கண்ணன் முன்னிலை வகித்தனர். பின் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

மதுரையில் வக்கீல்கள் அலுவலகம் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்தும், தாக்குதலுக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

செவ்வாய், 16 ஜூன், 2009

பரங்கிப்பேட்டை உட்பட கடலூர் மாவட்டத்தில் 17 எஸ்.ஐ.,க்கள் இட மாற்றம்

பரங்கிப்பேட்டை உட்பட கடலூர் மாவட்டத்தில் 17 சப் இன்ஸ்பெக்டர்கள், 37 போலீசாருக்கு இட மாறுதல் அளித்து எஸ்.பி., பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 9ம் தேதி ௩௬௫ போலீசாருக்கு பொது பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தற்போது மேலும் 37 போலீசாருக்கும் 17 சப் இன்ஸ்பெக்டர்களுக்கும் மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இட மாறுதல் பெற்றுள்ள சப் இன்ஸ்பெக்டர்கள் விவரம் வருமாறு:

  1. குமராட்சியில் பணியாற்றிய (கிரைம்) கருணாநிதி சிதம்பரம் தனிப் பிரிவிற்கும்,
  2. சிதம்பரம் (தனிப் பிரிவு) சிங்காரவேலு ரெட்டிச்சாவடிக்கும்,
  3. மனித உரிமை மற்றும் சமூக நீதி பிரிவு ஆசைத்தம்பி சோழத்தரத்திற்கும்,
  4. சோழத்தரம் மணிவாசகம் சிதம்பரம் தாலுகாவிற்கும் (குற்றப் பிரிவு),
  5. ரெட்டிச்சாவடி மதிவாணன் சிதம்பரம் டவுனுக்கும் (சட்டம் ஒழுங்கு),
  6. ரெட்டிச்சாவடி தீபா மனித உரிமை மற்றும் சமூக நீதி பிரிவிற்கும்,
  7. பரங்கிப்பேட்டை கவிதா கடலூர் துறைமுகத்திற்கும் (மகளிர் பிரிவு),
  8. கடலூர் துறைமுகம் மகேஸ்வரி பரங்கிப்பேட்டைக்கும்,
  9. சிதம்பரம் டவுன் சேக்கிழார் கடலூர் துறைமுகத்திற்கும்,
  10. சிதம்பரம் தாலுகா (ஓ.டி., சிறைத் துறை) அரங்கநாதன் காட்டுமன்னார்கோவிலுக்கும் (கிரைம்),
  11. கடலூர் (கட்டுப்பாட்டு அறை) சண்முகம் தனிப்பிரிவு தலைமையிடத்திற்கும்,
  12. கடலூர் தனிப்பிரிவு தலைமையிடம் ரத்தினவேல் புதுப்பேட்டைக்கும் (ஓ.டி., தனிப் பிரிவு கடலூர்),
  13. அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய கிருஷ்ணவேணி சிதம்பரத்திற்கும்,
  14. சிதம்பரம் கலாவதி கடலூருக்கும்,
  15. கடலூர் புதுநகர் வசந்தகுமாரி சிதம்பரத்திற்கும்,
  16. சிதம்பரம் சித்ரா கடலூருக்கும்,
  17. புதுச்சத்திரம் குணசேகரன் மாவட்ட குற்றப் பிரிவிற்கும்

இடம் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை எஸ்.பி,. பிரதீப்குமார் பிறப்பித்துள்ளார்.

Source: தினமலர்

திங்கள், 15 ஜூன், 2009

பரங்கிப்பேட்டையில் போலீஸ் பற்றாக்குறை

பரங்கிப்பேட்டையில் போலீஸ் பற்றாக்குறையால் குற்றங்களை தடுக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பரங்கிப்பேட்டை போலீஸ் சரகத்தில் உள்ள 36 கிராமங்களில் தினந்தோறும் அடிதடி தகராறு, விபத்துகள், தற்கொலை சம்பவங்கள் நடக்கிறது.

சமீப காலமாக திருட்டு, கொள்ளை சம்பவங்களும் அதிகரித்துள்ளது.

பரங்கிப்பேட்டை ஸ்டேஷனில் குறைவான அளவில் போலீசார் உள்ளதால் தினமும் வரும் பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

ஒரு இன்ஸ்பெக்டர், 4 சப் இன்ஸ்பெக்டர்கள், 8 ஏட்டுகள், 6 போலீசார் உள்ளனர்.

இவர்களில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் கடலூர் போலீஸ் பயிற்சி பள்ளிக்கும், மூன்று ஏட்டுகள் சிதம்பரம் டிராபிக், செக்போஸ்ட், ஒரு ஏட்டு ஏ.எஸ்.பி., அதிவிரைவுப்படை, ஒரு போலீஸ்காரர் கடலூர் சி.ஆர்.பி., டிரைவர், கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் ரைட்டர் என பல பணிகளுக்கு சென்றுவிடுகின்றனர்.

இது போக சிலை பாதுகாப்பு, கடலோர பாதுகாப்பு என பணி சுமைகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இவை போக ஐந்து போலீசாரே பணியில் இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதனால் தொடரும் திருட்டு சம்பவங்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்: முதல்வர் அமைச்சர் பன்னீர் செல்வம் பேச்சு

பரங்கிப்பேட்டை: பல்வேறு சாதனைகள் செய்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை முதல்வர் கருணாநிதி பிடித்துள்ளார் என சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார்.

பரங்கிப்பேட்டை அடுத்த சின்னகுமட்டியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார்.

இதில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் பன்னீர் செல்வம் பேசியதாவது:

தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் கருணாநிதி நிறைவேற்றி தந்துள்ளார்.

இதனால் ஏழை, எளிய மக்கள், பள்ளி மாணவர்கள், விவசாயிகள், கர்ப்பிணி பெண்கள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் அதிகளவில் பயனடைந்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் 628 பயனாளிகளுக்கு இலவச கலர் டிவி, 20 பயனாளிகளுக்கு மனைப்பட்டா, 27 பயனாளிகளுக்கு முதியோர் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.

ஜெ., ஆட்சி செய்த பத்து ஆண்டுகளில் அதிகாரிகளை தேடி அலைந்தும் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

முதல்வர் கருணாநிதி ஆட்சியில் மக்களை தேடி அதிகாரிகள் வந்து பல திட்டங்களை நிறைவேற்றி தருகின்றனர்.

கிராம சாலைகள் தற்போது தார்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது.

அனைத்து கிராமங்களிலும் இரவு நேரங்களில் நெய்வேலி போல் விளக்கு வெளிச்சம் பிரகாசமாக உள்ளது.

அனைத்து இடங்களிலும் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மக்களுக்காக பல திட்டங்கள் நிறைவேற்றுபட்டு வருவதால் முதல்வர் கருணாநிதி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

அதற்கு நன்றி கடன்பட்டவர்களாக நீங்கள் செயல்பட வேண்டும்.

நூறு நாள் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதால் வயதானவர்களுக்குகூட சம்பளம் கிடைக்கிறது.

தற்போது 80 ரூபாய் வழங்கப்பட்ட சம்பளம் நூறு ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.

பரங்கிப்பேட்டை அருகே சுனாமி குடியிருப்பு பணியை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு

பரங்கிப்பேட்டை அருகே சுனாமி குடியிருப்புகள் தரமின்றி கட்டப்படுவதாக கூறி கட்டுமான பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பரங்கிப்பேட்டை அடுத்த சின்னூர் கிராம மக்கள் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது பாதிக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பல்வேறு நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த 24 பயனாளிகளுக்கு அரசு சார்பில் சுனாமி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.

குடியிருப்புகள் சீலிங்போடும் நிலையில் உள்ளன.

குடியிருப்புகள் தரத்துடன் கட்டப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று வேலை செய்ய வந்தவர்களை கட்டட தொழிலாளர்களை வேலை செய்யக் கூடாது என பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

ஞாயிறு, 14 ஜூன், 2009

பரங்கிப்பேட்டை அருகே மின் மோட்டார் திருடிய 5 பேர் கைது

பரங்கிப்பேட்டை அருகே மின் மோட்டார் திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள பெரியகுமட்டியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 40).

இவர் தனக்கு சொந்தமான வயலில் மின் மோட்டார் மற்றும் இரும்பு பைப்புகளை வைத்திருந்தார்.

இதனை சம்பவத்தன்று யாரோ மர்ம ஆசாமிகள் திருடிச் சென்று விட்டனர்.

இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும்.

இது பற்றி சுந்தரமூர்த்தி பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின் மோட்டாரை திருடிச் சென்ற குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அதே ஊரை சேர்ந்த சுப்புராயன் மகன் காமராஜ் (20), ஜெயராமன் மகன் சத்தியராஜ் (18), ராமலிங்கம் மகன் அருள் குமார் (19), ராமையா மகன் ராம ஜெயம் (20) ஆகிய 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் 4 பேரும் சேர்ந்து சுந்தரமூர்த்திக்கு சொந்தமான மின்மோட்டார் மற்றும் இரும்பு பைப்புகளை திருடி, புதுச்சத்திரத்தில் உள்ள இரும்பு வியாபாரி கிருஷ்ணமூர்த்தியிடம் விற்பனை செய்ததை ஒத்துக்கொண்டனர்.

அதன்படி போலீசார் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

கடலூரில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்

கடலூரில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கூறினார்.

இலவச சீருடை

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் சார்பில் 9-வது ஆண்டாக பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடை மற்றும் தங்க, வெள்ளிப் பதக்கங்கள் வழங்கும் விழா பரங்கிப்பேட்டை மீரா பள்ளி தெருவில் உள்ள ஷாதி மகாலில் நேற்று நடந்தது.

விழாவுக்கு இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார்.

பேராசிரியர் சித்திக் அலி பாகவி முன்னிலை வகித்தார்.

முகமது இசாக் வரவேற்று பேசினார்.

விழாவில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு, 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தங்க, வெள்ளி பதக்கங்களையும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து தரப்பு மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடை மற்றும் நோட்டு புத்தகங்களையும் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ரூ.7 லட்சம்

இஸ்லாமிய சமுதாய மக்கள் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் கருணாநிதி செய்த சாதனைகளுக்காக ஒட்டு மொத்தமாக வாக்களித்து நமது சிதம்பரம் தொகுதி வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளனர்.

இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் அனைத்து சமுதாய மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.7 லட்சம் செலவில் இலவச சீருடை, நோட்டு, புத்தகம் வழங்கியது பாராட்டுக்குரியது.

இதற்காக மனமார நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த மாதம் இதே நாளில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது.

இந்த மாதம் 13-ந் தேதி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்.

முஸ்லிம் சமுதாய மக்கள் அதிக அளவில் படிப்பில் நாட்டம் செலுத்துவதில்லை.

அனைவரும் வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்த்தால் போதும் என்று இருந்து விடுகின்றனர்.

ஆகவே நீங்கள் அனைவரும் கட்டாயம் படித்து முன்னேற்றம் அடைய வேண்டும்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தவர் கருணாநிதி.

இதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மகளிர் கல்லூரி

பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் முகமது யூனுஸ், கடலூர் முதுநகரில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும்.

பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு இரவு நேரத்தில் கூடுதல் டாக்டர் மற்றும் காலி பணியிடத்தை நிரப்பவேண்டும்.

மகளிர் கல்லூரி அமைக்க வேண்டும்.

பரங்கிப்பேட்டையில் இருந்து பிச்சாவரம் காடு வரை சுமார் 1 கிலோ மீட்டர் தடுப்பணை கட்டி மணல் கொட்டி குடில் அமைத்து கொடுத்தால் சுற்றுலா தலமாக சிறப்புற்று விளங்கும் போன்ற கோரிக்கைகளை வைத்துள்ளார்.

அவர் கூறியபடி கடலூரில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மகளிர் கல்லூரி கட்டுவதற்கு 10 ஏக்கர் நிலமும், ரூ.1 கோடியும் அரசிடம் ஒப்படைத்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு மருத்துவமனைக்கு போதிய நோயாளிகள் வருவதில்லை.

இருந்தும் கூடுதல் டாக்டர் நியமிக்க பரிசீலனை செய்யப்படும்.

தடுப்பணை கட்டவும் உரிய முயற்சி எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.

விருது

முன்னதாக பரங்கிப்பேட்டை டாக்டர் சேஷாத்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், மாநில அளவில் நடந்த குத்து சண்டை போட்டியில் தங்க பதக்கம் பெற்ற அமீது கவுசை பாராட்டியும் அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் பரங்கிப்பேட்டை யூனியன் தலைவர் முத்துப் பெருமாள், பேராசிரியர் கதிரேசன், ஊராட்சி மன்ற தலைவி கஸ்தூரி, பெண்கள் அரபுக் கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் மதனி, தி.மு.க. நகர செயலாளர் பாண்டியன், மாவட்ட பிரதிநிதிகள் காண்டீபன், முனவர் உசேன், பேரூராட்சி மன்ற துணை தலைவர் செழியன், பொறியாளர் அருள் வாசகம், மாவட்ட காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஜெகநாதன், கவுன்சிலர்கள் காஜா கமால், வினோபா, கிள்ளை நகர செயலாளர் சாமி மலை, இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் எகையா சாகிப், அலாவுதீன், முகமது இலியாஸ், முகமது இஸ்மாயில், அபிபுல்லா, மீரா உசேன், சையது அபுபக்கர், அஸ்கர் அலி ஜித்தா, சையது சாகுல் அமீது உள்பட ஜமாத் நிர்வாகிகள், இஸ்லாமிய சமூக நல்வாழ்வு சங்கம், பைத்துல் மால் கமிட்டி, கல்விக் குழு, கல்வி வளர்ச்சிப் பணி, கிரசண்ட் நல்வாழ்வு சங்க நிர்வாகிகள், பள்ளி மாணவ-மாணவிகளும், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் 2 பேருக்கு தங்க பதக்கமும், 109 பேருக்கு வெள்ளி பதக்கமும், இலவச சீருடை 1000 பேருக்கும், 1200 பேருக்கு நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டது.

முடிவில் ஜமாத் கல்விக் குழு தலைவர் அமீது மரைக்காயர் நன்றி கூறினார்.

மூன்றரை சதவீத இடஒதுக்கீட்டை இஸ்லாமிய மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

இஸ்லாமிய சமூக மக்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தி இடஒதுக்கீட்டை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத், இஸ்லாமிய சமூக நல்வாழ்வு சங்கம் சார்பில் 1200 மாணவ, மாணவியர்களுக்கு இலவச சீருடை மற்றும் நோட்டு, புத்தகங்கள் வழங்கும் விழா மற்றும் அரசு பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பங்கேற்று பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவியர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களையும், மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்களையும் வழங்கினார்.

விழாவில் அவர் பேசியது:

நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் திமுக கூட்டணிக்குத்தான் வாக்களித்துள்ளார்கள்.

இதற்கு காரணம் கருணாநிதி ஆட்சியின் சாதனை மக்களைச் சென்றடைந்ததுதான்.

இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மூன்றரை சதவீதம் இடஒதுக்கீட்டை கருணாநிதி வழங்கியுள்ளார்.

ஆனால், இஸ்லாமிய சமுதாயத்தினர் கல்வியில் அதிக கவனம் செலுத்துவதில்லை.

எனவே அவர்கள் அதிக கவனம் செலுத்தி இடஒதுக்கீட்டை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

2004 ஆண்டு சுனாமி ஏற்பட்ட போது இப்பகுதியில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் சாதி, மத பேதமின்றி பாதிக்கப்பட்ட மக்களை மசூதியில் தங்க வைத்து உணவு அளித்து நிவாரண உதவிகளை வழங்கியது பாராட்டுக்குரியதாகும்.

கிராமமாக இருந்த பரங்கிப்பேட்டை திமுக அரசின் திட்டங்களால் நகரமாக ஜொலிக்கிறது என அமைச்சர் தெரிவித்தார்.

மூத்த மருத்துவர் டாக்டர் எஸ்.சேஷாத்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதையும், மாநில அளவில் பதக்கம் பெற்ற குத்துச்சண்டை வீரர் ஹெச். ஹமீது கவுஸிற்கு விருதையும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்

செல்வம் வழங்கி கெளரவித்தார்.

பேரூராட்சி தலைவரும், ஐக்கிய ஐமாஅத் தலைவருமான எம்.எஸ். முஹமது யூனுஸ் தலைமை வகித்தார்.

பேராசிரியர் ஏ. சித்திக் அலி பாகவி முன்னிலை வகித்தார்.

ஐ. முஹமது இசாம் வரவேற்றார்.

பரங்கிப்பேட்டை ஒன்றியத் தலைவர் முத்து பெருமாள், அண்ணாமலைப் பல்கலை. கடல்வாழ் உயிரின உயராய்வு மைய பேராசிரியர் கே. கதிரேசன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

எல். ஹமீதுமரைக்காயர் நன்றி கூறினார்.

மேலதிக செய்திகளுக்கும், புகைப்படங்களுக்கும்.... www.mypno.com

வியாழன், 11 ஜூன், 2009

பரங்கிப்பேட்டை அருகே சுனாமி பாதித்த மீனவர்களுக்கு கூடுதல் நிவாரண பொருட்கள்

பரங்கிப்பேட்டை அருகே சுனாமியால் பாதித்த கிள்ளை பகுதி மீனவர்கள் மற்றும் இருளர்கள் 1,088 பேருக்கு கூடுதல் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

சுனாமியின்போது பரங்கிப்பேட்டையை அடுத்த கிள்ளை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், இருளர்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகினர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டது.

தற்போது தமிழக அரசு மீன் வளத்துறை சார்பில் சுனாமி பாதித்த மக்களுக்கு கூடுதல் நிவாரண பொருட்களாக மீன் பதனிடும் ஐஸ் பெட்டி 50 லிட்டர், 70 லிட்டர் கொள்ளளவு கொண்ட தலா ஒரு பெட்டி முதற்கட்டமாக வழங்கும் நிகழ்ச்சி முடசல் ஓடை சூரியா நகரில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட மீன் வளத்துறை உதவி இயக்குனர் தமிழ்மணி தலைமை தாங்கினார்.

மேற்பார்வையாளர் புண்ணியராஜ் வரவேற்றார்.

மீன்துறை ஆய்வாளர் நாபிராஜ் முன்னிலை வகித்தார்.

இதில் முடசல் ஓடை, சூரியா நகர், நடு முடசல் ஓடை, எம்.ஜி.ஆர் திட்டு, முழுக்குத்துறை, சின்னவாய்க்கால், பட்டரையடி பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மற்றும் கிள்ளை எம்.ஜி.ஆர்., நகர், கலைஞர் நகர் பகுதிகளை சேர்ந்த இருளர்கள் உள்ளிட்ட 1,088 பேருக்கு ஐஸ் பெட்டிகளை தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி வழங்கினார்.

புதன், 10 ஜூன், 2009

பரங்கிப்பேட்டை அருகே கோவிலில் நகைகள் திருட்டு

பரங்கிப்பேட்டை அருகே கோவில் கதவை உடைத்து நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பம் கிராமத்தில் கோணேரியம்மன் கோவில் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு மர்ம ஆசாமிகள் கோவில் கதவை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த காசு மாலை, தாலி, குண்டு, பித்தளை குவளை உள்ளிட்ட 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து கோவில் பூசாரி தேவகி கொடுத்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

கடலூரிலிருந்து வந்த நிபுணர்கள் கைரேகைகளை சேகரித்தனர்.

பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து கோலிலில் புகுந்து நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

செவ்வாய், 9 ஜூன், 2009

கடல் கொந்தளிப்பு எதிரொலி: பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை

கடல் கொந்தளிப்பு எதிரொலியாக பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

தமிழகத்தில் சில இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது.

சூறாவளிக் காற்றும் பலமாக வீசி வருகிறது.

இதனால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு வருகிறது.

வழக்கத்தை விட கடல் அலையின் சீற்றம் அதிகமாக உள்ளது.

கடலூரில் கடந்த 2 நாட்களாக சூறாவளிக் காற்று வீசியது.

இதில் வாழைகள் சரிந்து விழுந்து பலத்த சேதமானது.

கடல் அலை சீற்றத்தால் கடற்கரையோரம் உள்ள மணல் திட்டுகள் அரிப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் செல்லும் நிலை ஏற்பட்டது.

பரங்கிப்பேட்டை அருகே உள்ள பெரியக்குப்பம் கிராமம் வரைகடல் தண்ணீர் சென்றது.

மணல் அரிப்பு ஏற்பட்டு தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
கடல் கொந்தளிப்பும் அதிகமாக இருந்தது.

மீன் இனப் பெருக்கத்திற்காக 48 நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்த மீனவர்கள் தடை முடிந்தும் மீன் பிடிக்க முடியாமல் உள்ளனர்.

கடல் அலையின் சீற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்து வருவதால் நேற்றும் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

பரங்கிப்பேட்டை பகுதி கடலில் அலைகள் 10 மீட்டர் உயரத்திற்கு சீறிப்பாய்கிறது.

இதனால் பரங்கிப்பேட்டை, சின்னூர், புதுப்பேட்டை, புதுக்குப்பம், வேளங்கிராயன் பேட்டை, சாமியார் பேட்டை, குமாரப்பேட்டை, மடவாப்பள்ளம், அய்யம்பேட்டை, அன்னப்பன் பேட்டை, பேட்டோடை, பெரியக்குப்பம் போன்ற மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தங்கள் படகுகளை கடற்கரையோரம் நிறுத்தி வைத்து, வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

அன்னங்கோவில் மீன்பிடி ஏலம் விடும் தளம் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது.

திங்கள், 8 ஜூன், 2009

இலவச பி.இ. புத்தகம் பெற விண்ணப்பிக்கலாம்

புத்தக வங்கியில் இருந்து பி.இ. புத்தகங்கள், கம்ப்யூட்டர் அறிவியல் புத்தகங்களை இலவசமாகப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக ஸ்ரீ சுமதி விஷால் ஜெயின் கல்வி அறக்கட்டளை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அனைத்து வகையான பி.இ. புத்தகங்களும், கம்ப்யூட்டர் அறிவியல் புத்தகங்களும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

புத்தகங்களைப் பெறுவதற்கு சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதற்கான விண்ணப்பங்கள், 'திருக்குமரன் அபார்ட்மென்ட்ஸ், புதிய எண் 12, ராமேஸ்வரம் சாலை (ரங்கன் தெருவில் இருந்து வர வேண்டும்), தி.நகர், சென்னை 17' என்ற முகவரியில் கிடைக்கும்.

விண்ணப்பங்கள் ஜூலை 25-ம் தேதி வரை வழங்கப்படும்.

வார நாட்களில் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும்.

தவிர, புத்தக வங்கிக்கு புத்தகங்களைத் தானமும் செய்யலாம்.

பெறுவதற்கும், புத்தக தானம் செய்வதற்கும் மேலும் விவரங்களை அறிவதற்கான தொலைபேசி எண்கள்: 044-2436 0675/98410-26268.EE

புத்தகக் கண்காட்சி குறும்படப் போட்டி

நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவும், தினமணியும் இணைந்து நடத்தும் குறும்படப் போட்டிக்கான படங்கள் வரவேற்கப்படுகின்றன.

12-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஜூலை 3 முதல் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இப்புத்தகக் கண்காட்சிக் குழு நடத்தும் குறும்படப் போட்டிக்கான குறும்படங்கள் கீழ்க்காணும் விதிகளுக்கு உட்பட்டு வரவேற்கப்படுகின்றன.

குறும்படங்கள், தமிழின் பண்பாட்டு மேன்மை, சமுதாயச்சிக்கல்கள், சமூக உணர்வுகள் போன்றவற்றை பிரதிபலிப்பவையாக இருக்கவேண்டும்.

டிவிடி அல்லது விசிடி-ல் 30 மணித்துளிகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரமும், ஏற்கெனவே பரிசு பெற்றிருந்தால் அவற்றின் விவரமும் இணைத்து அனுப்புதல் வேண்டும்.

போட்டியில் கலந்து கொள்வதற்கான ஒப்புதல் கடிதம் உரிமையாளரிடமிருந்து பெறப்பட்டு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

குறும்படங்கள் புத்தகக் கண்காட்சியின் போது திரையிடப்படும்.
குறும்படங்கள் 01-01-07-க்குப் பிறகு எடுக்கப்பட்டதாக இருப்பதோடு, போட்டிக்குக் குறும்படங்கள் இம்மாதம் 15-ம் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும்.

ஆவணப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

குறும்படத்தின் கதைச்சுருக்கம், முக்கியக் காட்சிகளின் ஒளிப்படங்கள் மற்றும் இயக்குநரின் ஒளிப்படம் வரவேற்கப்படுகின்றன.

ஞாயிறு, 7 ஜூன், 2009

கலை, அறிவியல் கல்லூரிகளில் வித்தியாசமான படிப்புகள்

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ., வரலாறு, பி.எஸ்சி., கணிதம் உள்ளிட்ட பலரது கவனத்தைக் கவர்ந்த பட்டப்படிப்புகள் மட்டுமின்றி, மாணவர்களின் தற்போதைய தேவைக்கு ஏற்ப பல புதிய படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என்றவுடன் அனைவரது ஞாபகத்திற்கும் வருவது பி.காம்., பி.ஏ., பி.எஸ்சி., படிப்புகள்தான்.

பி.காமில் பொது, விளம்பரம், விற்பனை மேலாண்மை, வங்கி மேலாண்மை, கார்ப்பரேட் செகரெட்டரிஷிப் என பல பிரிவுகள் உள்ளன.

பி.ஏ., படிப்பில் ஆங்கில மொழித் தொடர்புத் திறன், வர்த்தக பொருளாதாரம், பல மொழிக் கல்விப் படிப்புகளும் உள்ளன.

பி.எஸ்சி.,யில் நவீன விலங்கியல், தாவர உயிரியல், மைக்ரோ பயாலஜி உள்ளிட்ட பல பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

தற்போதைய நிலையில், மாணவர்களின் தேவைக்கு ஏற்ப பல கல்லூரிகளில் புதிய வகையான பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

அவற்றில் சில:

  • காது கேளாதோருக்கான பி.சி.ஏ., மற்றும் பி.காம்., படிப்பு:

இதற்கு முன், காது கேளாதவர்களுக்கு பிளஸ் 2 வரை மட்டுமே படிக்கும் வாய்ப்புகள் இருந்தன.

2007-08ம் ஆண்டு முதல் சென்னை மாநிலக் கல்லூரி உள்ளிட்ட சில கல்லூரிகளில், காது கேளாதோருக்கென தனி படிப்புகள் வழங்கப்படுகின்றன.

பிளஸ் 2 படிப்பில் தேர்ச்சி பெற்ற காது கேளாதவர்கள், இப்படிப்பில் சேரலாம்.

இந்த இரு படிப்புகளிலும் தலா 15 இடங்கள் உள்ளன.

  • பி.ஏ., சுற்றுலா மற்றும் போக்குவரத்து மேலாண்மை:

பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இப்படிப்பில் சேரலாம்.

இப்படிப்பை முடிக்கும் மாணவர்கள் டிராவல் ஏஜென்சிகள், டூர் ஆபரேட்டர் நிறுவனங்களில் வேலைக்குச் செல்லலாம்.

அரசு சுற்றுலாத் துறையிலும் பணிபுரிய முடியும்.

இதில் மேற்படிப்புகளும் உள்ளன.

  • பி.எஸ்சி., நியூட்ரிஷன், புட் சர்வீஸ் மேனேஜ்மென்ட் அண்டு டயடிக்ஸ்:

பிளஸ் 2வில் அறிவியல் பாடப்பிரிவில் படித்த மாணவர்கள் இப்படிப்பில் சேரலாம்.

இப்படிப்பை முடித்த மாணவர்கள் ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையில் பணிபுரியலாம்.

நியூட்ரிஷன் சிறப்பு நிபுணராகவும் பணியாற்றலாம்.

  • பி.எஸ்சி., ஹோட்டல் அண்டு கேட்டரிங் மேனேஜ்மென்ட்:

பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்படிப்பில் சேரலாம்.

இப்படிப்பை முடித்தவர்களுக்கு நம் நாட்டிலும், வெளிநாட்டிலும் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன.

கப்பல், விமானம், ராணுவம், ஹோட்டல் என பல துறைகளில், இப்படிப்பை முடித்தவர்களுக்கு பணி வாய்ப்புகள் உள்ளன.

  • பி.எஸ்சி., சாப்ட்வேர் இன்ஜினியரிங் பி.ஐ.எஸ்.எம்., (பேச்சுலர் ஆப் இன்பர்மேஷன் சிஸ்டம் மேனேஜ்மென்ட்):

சாப்ட்வேர் பொறியியல் படிப்பிற்கு இணையாக கலை, அறிவியல் கல்லூரிகளில் இப்படிப்பு வழங்கப்படுகிறது.

பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், கணிதம் படித்தவர்கள் இப்படிப்பில் சேரலாம்.

இப்படிப்பை முடித்தவர்கள், சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரியலாம்.

  • பி.எஸ்சி., இன்பர்மேஷன் சிஸ்டம் மேனேஜ்மென்ட்:

பிளஸ் 2வில் அறிவியல் மற்றும் கணிதம் அல்லது அக்கவுன்ட்ஸ் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை படித்தவர்கள் இப்படிப்பில் சேரலாம்.

இதில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் மேலாண்மை ஆகிய இரண்டும் இடம்பெற்றுள்ளன.

எனவே, இப்படிப்பை முடித்தவர்கள் இரு துறைகளிலும் பணிபுரிய முடியும்.

  • பி.எஸ்சி., இன்டீரியர் டிசைன் அண்டு டெகரேஷன்:

பிளஸ் 2 தேர்ச்சியுடன், படம் வரையத் தெரிந்தவர்கள் மற்றும் கற்பனை வளம் மிக்கவர்கள் இப்படிப்பில் சேரலாம்.

இதை முடிக்கும் மாணவர்கள், இன்டீரியர் டிசைனராக பணிபுரிய முடியும்.

மேலும், ஜவுளித் துறையிலும் டிசைன் வடிவமைப்பாளராக பணியாற்றலாம்.

  • பி.ஏ., லேபர் மேனேஜ்மென்ட்:

பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்படிப்பில் சேரலாம்.

இப்படிப்பை முடித்தவர்கள், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் பணிபுரியலாம்.

மேலும் அரசாங்கத்தில் பணியாளர் துறையிலும் பணிபுரிய முடியும்.

வியாழன், 4 ஜூன், 2009

குஜராத் கலவரம் நரேந்திர மோடியிடம் சிறப்புக்குழு விசாரணை

கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து குஜராத்தில் கலவரம் ஏற்பட்டது.

இதில் பலர் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை மாநிலத்தில் உள்ள பல கோர்ட்டுகளில் நடந்தது.

இந்த நிலையில் வழக்கு விசாரணையை விரைவில் முடிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

மேலும், அதில் அரசியல்வாதிள் மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு விரைவு கோர்ட்டுகள் அமைத்து வழக்குகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டது.

மேலும், சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், போலீஸ் அதிகாரிகள் உள்பட 62 பேரிடம் விசாரணை நடத்தவும் அறிவுறுத்தியது.

இதற்கான உத்தரவு கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி பிறப்பிக்கப்பட்டது.

சிறப்பு புலனாய்வு குழு சி.பி.ஐ. முன்னாள் டைரக்டர் ஆர்.கே. ராகவன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு அடுத்த மாதம் (ஜூலை) 26-ந்தேதிக்குள் விசாரணை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு தனது விசாரணை அறிக்கையை விரைவில் தொடங்க உள்ளது.

முதல்-மந்திரி நரேந்திரமோடியிடம் கேட்க வேண்டிய கேள்விகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடமும் கேட்க வேண்டிய கேள்விகளும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 இறுதி தேர்வு முடிவு வெளியீடு! இணையதளத்தில் பார்க்கலாம்!!

தமிழக அரசு பணியில் துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., வணிக வரி அதிகாரி, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர், பத்திரப்பதிவு மாவட்ட பதிவாளர், ஊராட்சி உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, கோட்ட தீயணைப்பு அதிகாரி ஆகிய பதவிகளில் 172 காலி இடங்களை நிரப்ப கடந்த ஆண்டு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

அதில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 26-ந் தேதி முதல் ஜனவரி 3-ந் தேதி வரையும், மேலும் மே மாதம் 22-ந் தேதியும் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது.

இந்த நிலையில், இறுதி தேர்வு முடிவு நேற்று மாலை வெளியிடப்பட்டது.

வெற்றி பெற்றவர்களின் பதிவு எண் பதவி வாரியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிவை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்திலும் (www.tnpsc.gov.in) பார்க்கலாம்.

அழகப்பா பல்கலை தொலைதூரக் கல்வி விண்ணப்பம் வினியோகம்

காரைக்குடி அழகப்பா பல்கலை தொலைதூரக் கல்வி மையங்களில் இளங்கலை, முதுகலை, சான்றிதழ், டிப்ளமா படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வினியோகிக்கப்படுகிறது.

அழகப்பா பல்கலை தொலைதூரக்கல்வி மையம் மூலம், 2009-2010ம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடக்கவுள்ளது.

இதில், இளங்கலையில் பி.ஏ., - பி.லிட்., - பி.எஸ்சி., - பி.சி.ஏ., முதுகலையில் எம்.பி.ஏ., - எம்.ஏ., - எம்.எஸ்சி., - எம்.எல்.ஐ.எஸ்சி., - முதுகலை சான்றிதழ் படிப்பில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், பிசினஸ் மேனேஜ்மென்ட், ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் உட்பட 55 பாடப்பிரிவுகளில், மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகிக்கப்படுகிறது.

இதுதவிர, லேட்டரல் என்ட்ரியில் பி.காம்., - பி.பி.ஏ., - பி.சி.ஏ., - பி.எஸ்சி., மற்றும் எம்.சி.ஏ., - எம்.ஏ., பாடத்திற்கான விண்ணப்பங்களும் வினியோகிக்கப்படுகின்றன.

விண்ணப்பக் கட்டணம்:

எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - முதுகலை டிப்ளமா கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், வேதியியல், இயற்பியல், விலங்கியல், எம்.எஸ்சி., தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடப்பிரிவுக்கு 300 ரூபாய், இதர பாடப்பிரிவுக்கு 100 ரூபாய்க்கு "இயக்குனர், தொலைதூரக்கல்வி இயக்ககம், அழகப்பா பல்கலை, காரைக்குடி'' என்ற முகவரிக்கு காரைக்குடியில் செலுத்தும் வகையில் டி.டி., எடுத்து விண்ணப்பம் பெறலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்க ஆகஸ்ட் 31ம் தேதி கடைசி நாள்.

இப்பல்கலையில் அங்கீகரிக்கப்பட்ட படிப்பு மையம், விண்ணப்பம் பெறுவது குறித்த விவரங்களை www.alagappauniversity.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

பி.வி.எஸ்சி., பட்டதாரிகளுக்கு வளாக வேலைவாய்ப்பு

சென்னை, தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக் கழகத்தில், இன்று முதல் நடக்கும் வேலைவாய்ப்பு முகாமில், பால் மற்றும் கோழிப்பண்ணைத் துறையில் பணிபுரிய 45 பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக் கழகத்தில் உள்ள சென்னை கால்நடை கல்லூரியில் பல்கலைக்கழக மாணவர் கவுன்சிலிங் மற்றும் வேலைவாய்ப்பு மையம் செயல்பட்டு வருகிறது.

இம்மையத்தின் சார்பில், பல்கலைக்கழக வளாகத்தில் இன்று, நாளை மற்றும் 8ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

கோலார் மில்க் யூனியன், கெவின்கேர், வி.கே.எஸ்., பார்ம்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் சார்பாக, பால் பண்ணை மற்றும் கோழிப் பண்ணைத் துறையில் பணிபுரிய மொத்தம் 45 பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

பி.வி.எஸ்சி., - எம்.வி.எஸ்சி., ஆகிய பட்டங்களைப் பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை கல்லூரிக் கருத்தரங்க அறையில் இன்று காலை 9 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் துவங்கும்.

மேலும் விவரங்களுக்கு, சென்னை கால்நடை கல்லூரி உதவிப் பேராசிரியர் சந்தீப்குமாரை, 044 - 2538 1506 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., விண்ணப்பம் வரும் 11ம் தேதி முதல் வினியோகம்

எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள், வரும் 11ம் தேதி முதல் 30ம் தேதி வரை வழங்கப்படுகின்றன.

தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் ஜெயக்கொடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டிற்கு வழங்கும் எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்பிற்கான இடங்களுக்கான விண்ணப்பங்கள் வரும் 11ம் தேதி முதல் 30ம் தேதி வரை வழங்கப்படுகின்றன.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரிகள் என, 37 மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

சென்னையில் கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்குனர் அலுவலகம், மாநிலக் கல்லூரி, மதுரையில் தியாகராயா பொறியியல் கல்லூரி, ஸ்ரீமீனாட்சி அரசு பெண்கள் கல்லூரி, கோவையில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, அரசு கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் 150 ரூபாய், இதர பிரிவினர் 300 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.

எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் ஜாதிச் சான்றிதழ் நகலை வழங்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

கல்லூரிகள் பற்றிய விவர புத்தகத்தை 75 ரூபாய் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு ஜெயக்கொடி கூறியுள்ளார்.

நடப்பாண்டில் மேலாண்மைக்கல்வி படிப்புகளில் சேர மாணவ, மாணவியரிடையே அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளதால், எம்.பி.ஏ., சீட்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இப்படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் இரு மடங்காக உயர்ந்துள்ளது.

ஐ.டி., துறை சரிவால், பி.இ., படித்த மாணவர்களும் எம்.பி.ஏ., படிக்க முடிவெடுத்ததே இதற்கு காரணம் என கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சாப்ட்வேர் ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி

சர்வதேச நிதி நெருக்கடி நிலையிலும், சாப்ட்வேர் பணிகள் ஏற்றுமதியில், ஆந்திராவைத் தமிழகம் பின்தள்ளியுள்ளது;

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஏற்றுமதி வர்த்தகம் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

சர்வதேச அளவில் நிதி நெருக்கடி அதிகரித்ததை அடுத்து, இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அளிக்கும் சாப்ட்வேர் பணிகளை, அமெரிக்கா உட்பட வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள் குறைத்துக்கொண்டன;

சில நிறுவனங்கள் நிறுத்தியே விட்டன.

இதனால், சாப்ட்வேர் பணிகள் ஏற்றுமதி வருவாய் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில், சென்னையில் சாப்ட்வேர் நிறுவனங்கள் ஏற்றுமதி வர்த்தகம் திருப்திபடத்தக்க வகையில் உள்ளன.

2001ம் ஆண்டிலிருந்தே, தமிழக சாப்ட்வேர் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரித்தபடி உள்ளது;

அதிலும், கடந்த இரண்டாண்டில் மிக அதிக வர்த்தகம் நடந்துள்ளது.

கடந்த 2001-02ம் ஆண்டில் 5,200 கோடி ரூபாயாக இருந்த சாப்ட்வேர் ஏற்றுமதி வர்த்தகம், 2007-08ம் ஆண்டில், 28 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டியது.

கடந்த மார்ச்சுடன் முடிந்த நிதி ஆண்டில், இந்த ஏற்றுமதி வர்த்தகம் 34 ஆயிரம் கோடியை தாண்டிவிட்டது.

அதாவது, 20 சதவீதம் அளவுக்கு சாப்ட்வேர் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரித்துள்ளது.



ஜெ., மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா மீதான தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு, ஜூலை 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அ.தி.மு.க., பொதுச்செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் கடலூர் மாவட்டம் புவனகிரி உள்ளிட்ட நான்கு சட்டசபை தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்தார்.

ஒரே நேரத்தில் நான்கு இடங்களில் போட்டியிட மனு தாக்கல் செய்ததாக அவர் மீது, பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு நடந்து வருகிறது.

இவ்வழக்கை விசாரிக்கக் கூடாது என ஜெ., சுப்ரீம் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரணை செய்த மாஜிஸ்திரேட் மீனாகுமாரி, ஜூலை 27ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

புதன், 3 ஜூன், 2009

T-10 கிரிக்கெட் போட்டி நிறைவு பெற்றது!

கடந்த ஒருவார காலமாக கிரசன்ட் நல்வாழ்வு சங்கம் சார்பாக நடைபெற்ற T-10 கிரிக்கெட் போட்டி நிறைவு பெற்றது.

இதில் சுமார் 32 டீம்கல் கலந்து கொண்டது.

அதில் முதல் பரிசை பெற்ற அணி Tiger-A அணியினர்.

போட்டி நிறைவு விழாவில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் ஹாஜி M.S.முஹமது யூனிஸ், ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

சிதம்பரம் அருகே சாலைபோடும் பணியால் புழுதி பறந்து பொதுமக்கள், மாணவர்கள் அவதி

சிதம்பரம் அடுத்த வண்டிகேட்டில் முட்லூர் வரை சாலை அகலபடுத்தும் பணியால் செம்மண் புழுதி பறந்து பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த வண்டிகேட்டில் இருந்து குருமாந்திட்டு, அழிஞ்சிமேடு, ஆசிரமம், மண்டபம், சி.முட்லூர் அரசு கல்லூரி வழியாக பி.முட்லூர் வரை என்.எச். 45எ,. சாலை அகலப்படுத்தும் பணியும், வெள்ளாற்றில் மேம் பாலம் கட்டும் பணியும் துரிதமாக நடக்கிறது.

இதனால் வண்டி கேட்டில் இருந்து சி.முட்லூர் அரசு கல்லூரி வரை எட்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு டி.ஆர்.எஸ்.பி,. திட்டத்தின் மூலம் சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது.

சாலையின் இருபுறமும் அகலப்படுத்தி, மணல் மற்றும் கிராவல் கொட்டி சாலை போடும் பணி நடந்து வருகிறது.

செம்மண் கொட்டியுள்ள மேடுகளில் வாகனங்கள் செல்வதால் அரசு அலுவலகத்திற்கு செல்பவர்கள் மற்றும் பள்ளிகள் துவங்கிய நிலையில் சீருடையில் செல்லும் மாணவர்கள் புழுதி படிந்து செம்மண் நிறத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் அவல நிலை தொடர்கிறது.

முக்கிய அலுவலகங்களுக்கு செல்லும் அரசு ஊழியர்களும் தினசரி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் பகல் வேளையிலும் வாகனங்களில் முகப்பு விளக்கை எரிய வைத்து செல்லும் நிலையில் உள்ளனர்.

இப்பகுதியில் லோடு கணக்கில் மணல் அடிக்க கூலி நிர்ணயிக்கப்படுவதால் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள லாரிகள் அளவுக்கு அதிகமான வேகத்தில் செல்வதால் மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க முறையாக மணல் மற்றும் கிராவல் கொட்டியதுடன் இல்லாமல் தண்ணீர் ஊற்றி சாலையை தரமாகவும், போக்குவரத்திற்கு பாதகமில்லாமல் அமைக்க சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிகளில் மனநல திட்ட வகுப்புகள் துவங்க முடிவு

தமிழகத்தில் பள்ளிகளில் விரைவில் மனநல திட்ட வகுப்புகள் துவங்கப்பட உள்ளது.

மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதத்தினர் தீவிர மனநோயினாலும், 10 முதல் 15 சதவீதத்தினர் மற்ற நோய்களினாலும், பள்ளி குழந்தைகள் மன அழுத்த நோயாலும் பாதிக்கப்படுகின்றனர் என மனநல ஆராய்ச்சியில் கணக்கிடப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் ஏற்படும் நட்பு, காதல் அதில் ஏற்படும் ஏமாற்றம் போன்றவைகளை தாங்கி கொள்ள முடியாமலும், யாரிடமும் கூறாமல் மனதுக்குள்ளேயே வைப்பதால் மனஅழுத்த நோய்க்கு ஆளாகின்றனர்.

இதனால் அவர்களது கல்வி தரம் பாதிக்கும் நிலை உருவாகி வருகிறது.

இதை தவிர்க்க பள்ளி குழந்தைகளுக்கு நல்லொழுக்கம் வகுப்புகள் நடத்தியது போல், மனநல திட்டம் குறித்த வகுப்புகள் விரைவில் பள்ளிகள் தோறும் துவங்கப்பட உள்ளன.

இது தொடர்பாக முதற்கட்டமாக பள்ளி ஆசிரியர்களுக்கு மனநல மருத்துவர்கள் மூலம் மனநல திட்டம் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

A H1N1 தொற்று நோய் - என்னதான் செய்யணும்?


மறு கலப்புக்குள்ளான வைரஸ் கிருமிகளால் உருவான A H1N1 தொற்று நோய் இப்போது 39 நாடுகளில் பரவி உள்ளது. இந்த நோயின் அடையாளங்கள் வெளி நாட்டிலிருந்து வரும் பயணிகளிடம் யாரிடமாவது காணப்படுகிறதா என்று அறிய entry Screening பரிசோதனையை அனைத்து பயணிகளிடமும் சர்வதேச விமான நிலையங்கள், துறைமுகங்கள், உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ள இந்திய அரசு ஆணை இட்டுள்ளது.


நீங்கள் சோதிக்க வேண்டியவை :


* இருமலுடன் கூடிய காய்ச்சல், மூச்சுத்தினரளுடன் தொண்டை வரட்சி ஆகிய அடையாளங்கள் காணப்படுகின்றனவா என்று கவனியுங்கள்.


* இந்த அடையாளங்கள் உள்ள நோயாளியை கண்டால் அவரின் பயண வரலாற்றை விசாரியுங்கள்.


* இன்ப்ளுவென்சா A H1N1 தொற்று நோய் என்பதனால் ஒரு குழுவினரிடமே இந்த அடையாளங்கள் காணப்படலாம்.


* இன்ப்ளுவென்சா மாதிரி உடல் சீர்கேடுகள் (காய்ச்சல், இருமல்) அல்லது நிமோனியா கண்டுபிடிக்கப்பட்டால் 1075 எண்ணை (இலவசம்) அல்லது 1800-11-4377 அழைத்து இன்டக்ரேட்டட் டிசீஸ் சர்வைலன்ஸ் ப்ராஜக்ட்டுக்கு தகவல் கொடுங்கள்.


* க்ளினிகல் மேனேஜ்மென்ட் நடைமுறைகள் பற்றிய விரிவான விபரங்களுக்கு என்ற http://www.mohfw.nic.in/ வலையை பாருங்கள்.

செவ்வாய், 2 ஜூன், 2009

நாளை முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். (பல் மருத்துவம்) படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பம் புதன்கிழமை (ஜூன் 3) வழங்கப்படுகிறது.

சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, கோவை, சேலம், தர்மபுரி உள்பட 15 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும் விண்ணப்பம் விநியோகிக்கப்படும்.


‘Secretary, Selection Committee’ என்ற பெயரில் சென்னையில் செலுத்தக்கூடிய வகையில் ரூ.500-க்கு வரைவுக் காசோலை அளித்து விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

சுகாதாரத் துறையின் www.tnhealth.org என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பம், தகவல் குறிப்பேட்டை ஜூன் 3-ம் தேதி காலை 10 மணி முதல் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.


மொத்தம் உள்ள 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,483 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.


மேல்மருவத்தூர் உள்ளிட்ட நான்கு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 251 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வரும் 17-ம் தேதி கடைசி நாளாகும்.

சென்னையில் வரும் ஜூன் 28-ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது.


ஜூலை 6-ம் தேதி முதல் கவுன்சலிங் தொடங்குகிறது.

குடிநீரின் தரம் பாதிக்கப்பட்ட பரங்கிப்பேட்டை- குமராட்சி பகுதியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம்: கடலூர் கலெக்டர் அறிவிப்பு!

குடிநீரின் தரம் பாதிக்கப்பட்ட பரங்கிப்பேட்டை, குமராட்சி பகுதியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இது குறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சுனாமிக்கு பின்னர் ஏற்பட்ட நில நீர் மாற்றங்களால் கடலூர் மாவட்டத்தில் குமராட்சி மற்றும் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 87 குடியிருப்புகளில் ஏற்கனவே இயங்கி வந்த குடிநீர் திட்டங்களின் நீர் ஆதாரங்கள் உவர்ப்பு தன்மையானதால் நல்ல குடிநீர் வழங்கும் பொருட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன் முடிவுகளின்படி கொள்ளிடம் ஆற்று நீரை நீராதாரமாக கொண்டு குமராட்சி மற்றும் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த குடிநீர் தரம் பாதிக்கப்பட்ட 54 குடியிருப்புகள் மற்றும் 67 வழியோர குடியிருப்புகள் மற்றும் கிள்ளை பேரூராட்சி சேர்த்து மிகப் பெரிய கூட்டு குடிநீர் திட்டத்தினை நிறைவேற்றிட அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை மற்றும் குமராட்சி ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த குடிநீர் தரம் பாதிக்கப்பட்ட 54 குடியிருப்புகளுக்கும் மற்றும் 67 வழியோர குடியிருப்புகளுக்கும் மத்திய, மாநில நிதியுதவியுடனும், கிள்ளை பேரூராட்சிக்கு 20 சதவீத மக்கள் பங்கு தொகையுடனும் இத்திட்டம் ரூ.1516 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பரங்கிப்பேட்டை மற்றும் குமராட்சி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வசிக்கும் 63,878 மக்கள் பயனடைவார்கள்.

மேலும் கடலூர் மாவட்டத்தில் குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீர் தரம் பாதிக்கப்பட்ட 33 குடியிருப்புகள் மற்றும் வழியோர குடியிருப்புகள் 20 உள்ளிட்ட 53 குடியிருப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் ரூ.478. லட்சம் மதிப்பீட்டில் மற்றும் கூட்டு குடிநீர் திட்டமும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதுவும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்படும்.

மேற்படி திட்டங்களின் மூலம் 174 குடிநீர் தரம் பாதிக்கப்பட்ட மற்றும் வழியோர குடியிருப்புகள் மற்றும் கிள்ளை பேரூராட்சி பகுதிகளுக்கு நல்ல குடிதண்ணீர் வழங்க மிகப்பெரிய இரண்டு கூட்டு குடிநீர் திட்டங்களை நடப்பாண்டில் செயல்படுத்திட அரசு உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சப் இன்ஸ்பெக்டருக்கு பிரிவு உபசார விழா

புதுச்சத்திரம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டருக்கு பிரிவு உபசார விழா நடந்தது.

புதுச்சத்திரம் சப் இன்ஸ்பெக்டராக இருந்த ரபியூதீன் ஓய்வு பெற்றதையடுத்து பிரிவு உபசார விழா நடந்தது.

பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன் (பொறுப்பு) தலைமை தாங்கினார்.

சப் இன்ஸ்பெக்டர் வீரமணி முன்னிலை வகித்தார்.

ஓய்வு பெற்ற சிறப்பு இன்ஸ்பெக்டர் ரபியூதீனுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

சப் இன்ஸ்பெக்டர் வள்ளி, ஏட்டுகள் வேணுகோபால், உலகநாதன், அருள்,முரளிராஜன், கவுரி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

திங்கள், 1 ஜூன், 2009

கணித பாடத்திற்கு ஆசிரியர் இல்லாததால் பரங்கிப்பேட்டையில் 30 மாணவர்கள் தோல்வி

பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியர் இல்லாததால் பிளஸ் 2 தேர்வில் கணிதப் பாடத்தில் 30 மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர்.

பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு கணிதப் பாடம் நடத்தி வந்த ஆசிரியர் ஆறுமுகம் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று வேறு பள்ளிக்கு மாறுதலில் சென்றுவிட்டார்.

கணிதப் பாடம் நடத்த ஆசிரியர் நியமிக்கப்படாமல் இருந்தது.

இதற்கிடையே பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கணிதப் ஆசிரியர் ரவிச்சந்திரன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணிதப் பாடத்திற்கும், பெண்கள் பள்ளி தாவரவியல் ஆசிரியர் சிவராஜ் பெண்கள் பள்ளியில் தாவரவியல் பாடத்திற்கும் (டெப்டேஷனாக) சென்று வந்தனர்.

இவர்கள் ஒரு வாரத்திற்கு மேல் பணியை தொடரவில்லை.

கடந்த எட்டு மாதமாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணித பாடத்திற்கு ஆசிரியர் பணி காலியாகவே இருந்தது.

ஒரு சில மாணவர்கள் வெளியில் டியூஷன் படித்து வந்தனர்.ஏழை, எளிய மாணவர்களால் டியூஷனுக்கு செல்ல முடியவில்லை.

இப்பள்ளியில் 119 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதியதில் 67 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

இயற்பியல், வேதியியல், வரலாறு, கணக்கு பதிவியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களில் குறைவான மாணவர்களும், கணித பாடத்தில் மட்டும் 30 மாணவர்களும் தோல்வியடைந்துள்ளனர்.

இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விமானம் ஓட்ட பயிற்சி!

விமானம் ஓட்டும் பயிற்சி பால்கன் விமானப் பள்ளியில் அளிக்கப்படுகிறது.

இது தொடர்பாக அந்தப் பள்ளி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பால்கன் பள்ளி பதிவு செய்யப்பட்ட பயிற்சிப் பள்ளி.

மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இந்தப் பள்ளியில் உள்ளன.

இந்தப் பள்ளியில் விமானத்தில் இருப்பது போன்ற உணர்வுள்ள (சிமுலேட்டர்) வசதியுடன் கூடிய வகுப்பு அறை, பயிற்சி உபகரணங்கள் ஆகியவை இருக்கின்றன.

தவிர, விடியோ நூலக வசதி, கம்ப்யூட்டர் உதவியுடன் தகவல் பரிமாறிக் கொள்ளும் வசதி போன்றவையும் உண்டு.

விமானப் பயிற்சிக்குத் தேவையான தொழில்திறன், தரம், பாதுகாப்பு அவசியம். அத்தகைய வசதியை பால்கன் பள்ளியில் உண்டு.

மாணவர்களுக்கு தரைவழி பயிற்சி, தனியார், வணிக விமானம் ஓட்டுநர் உரிமம், இன்ஸ்ட்ருமென்ட் ரேடிங், மல்டி இன்ஜின் ரேடிங், சான்றளிக்கப்பட்ட விமான பயிற்சியாளர் ஆகியவை பற்றி பயிற்சியில் சொல்லித்தரப்படுகிறது.

இதில் விமானம் ஓட்டும் பயிற்சி முதல் வேலைக்கான நேர்காணல் வரை எல்லாவற்றுக்கும் சிறப்பாக வழிகாட்டப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு: 044-43534312, 43534484/85/86.

அந்நிய மொழி கற்றால் ஆயிரக்கணக்கில் வேலை வாய்ப்பு!

தாய்மொழியை மட்டும் படிக்காமல் அந்நிய நாட்டு மொழிகளையும் கற்று புலமை பெற்றவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் மொழி பெயர்ப்பாளர் வேலை ஆயிரக்கணக்கில் கொட்டிக்கிடக்கிறது.

குறிப்பாக ஃபிரெஞ்ச், ஜெர்மன், ரஷ்ய மொழிகளைக் கற்றால் வேலைவாய்ப்பு குறித்து சற்றும் கவலை கொள்ளத் தேவையில்லை.

மொழிபெயர்ப்பாளரின் பணி:

பொது நிர்வாகம், அறிவுரைகள், தொழில்நுட்ப விவரங்கள், அரசியல் பேச்சுகள் மற்றும் புத்தகங்கள் போன்றவற்றை மொழிபெயர்க்க வேண்டியிருக்கும்.

பணி இடம்:

பல மொழிகளைக் கற்றவர்களுக்கு பல இடங்களில் வாய்ப்புகள் இருந்தாலும் ஹோட்டல்கள், சுற்றுலாத்துறை, தகவல் தொடர்பு, சினிமா போன்ற பொழுதுபோக்கு, வணிகம், தொழில் நிறுவனங்கள், தூதரகங்களில் அதிக அளவில் மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

இதற்காக வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு சுலபமாக பாஸ்போர்ட் கிடைக்கிறது.

பாடத்திட்ட வகைகள்:

அந்நிய மொழிகள் குறித்து கற்க மூன்று வகையான படிப்புகள் உள்ளன.

  1. சான்றிதழ் படிப்பு
  2. டிப்ளமோ
  3. டிகிரி படிப்புகள்.

சான்றிதழ் மற்றும் டிகிரி படிப்புகளில் சேர பனிரெண்டாம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது.

எனினும் டிப்ளமோ படிப்பில் சேர பெரும்பாலான இடங்களில் நாம் சேர விரும்பும் மொழியில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

இப்படிப்புகளில் அந்தந்த மொழிகளில் பேசுவதற்கும், செய்தித்தாள்கள், புத்தகங்களை படிப்பதற்கும் நேரடியாக பயிற்சி அளிக்கப்படுவதால் அஞ்சல் வழியில் இப்படிப்புகள் சொல்லித்தரப்படுவதில்லை.

எங்கெங்கு பயிலலாம்?:

  • சென்னைப் பல்கலைக் கழகம், சேப்பாக்கம், சென்னை - 2 வருட டிப்ளமோ (ஜப்பான் மொழி)
  • ஹைதராபாத் பல்கலைக் கழகம், ஹைதராபாத் - 1 வருட டிப்ளமோ (சீன மொழி)
  • மொழிப்பள்ளி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், புதுதில்லி - பிஏ (சீனம் மற்றும் ஜப்பான் மொழிகள்)
  • டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மரத்வாடா பல்கலைக் கழகம், அவுரங்காபாத் - 1 வருட டிப்ளமோ (சீன மொழி)
  • பஞ்சாபி பல்கலைக் கழகம், பாட்டியாலா- சான்றிதழ் மற்றும் டிப்ளமோ (சீன மொழி)
  • உத்கல் பல்கலைக் கழகம், வாணி விஹார், புவனேஸ்வர் - 2 வருட டிப்ளமோ (சீன மொழி)
  • தில்லி பல்கலைக் கழகம், தில்லி - 1 வருட சான்றிதழ் (சீன மொழி)
  • லக்னௌ பல்கலைக் கழகம், லக்னௌ - சான்றிதழ் மற்றும் டிப்ளமோ (சீன மொழி)
  • பனாரஸ் இந்து பல்கலைக் கழகம், வாரணாசி - 2 வருட டிப்ளமோ (சீன மொழி), 1 வருட சான்றிதழ் படிப்பு (ஜப்பான் மொழி)
  • தில்கா மஞ்ஜி பாகல்பூர் பல்கலைக்கழகம், பாகல்பூர் - பிஏ (சீனம் மற்றும் ஜப்பான் மொழிகள்)
  • மும்பை பல்கலைக் கழகம், எம்ஜி சாலை, மும்பை - பிஏ (சீனம் மற்றும் ஜப்பான் மொழிகள்)
  • விஷ்வ பாரதி, சாந்தி நிகேதன் - சீனம் மற்றும் ஜப்பான் மொழிகளில் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகள்
  • புணே பல்கலைக் கழகம், கல்லூரிச் சாலை, கோல்கத்தா - சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகள் (ஜப்பான் மொழி), பிஏ (ஹீப்ரு மொழி)
  • காலிகட் பல்கலைக் கழகம், மலப்புரம், கோழிக்கோடு - பிஏ (ஹீப்ரு)

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...