வியாழன், 30 ஏப்ரல், 2009

முகவரி சான்று அட்டை சேவை அஞ்சலகங்களில் அறிமுகமானது

இந்திய அஞ்சல் துறையில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் "முகவரி சான்று அட்டை (Address Proof Card)" வழங்கும் புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

இது குறித்து அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் கனகராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்திய அஞ்சல் துறையின் பல்வேறு பரிணாம வளர்ச்சியின் ஒரு அங்கமாக முகவரி சான்று அட்டை எனும் புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொது மக்கள் தமது சொந்த இருப்பிடத்தை விட்டு வெளி இடங்கள், ஊர்களுக்கு செல்ல நேரிடும் சந்தர்ப்பங்களில் அவர்தம் முகவரியை சான்று அடையாள அட்டையாக இந்த முகவரி சான்று அட்டை விளங்குகிறது.

கடலூர் அஞ்சல் கோட்டத்தில் கடலூர் தலைமை தபால் நிலையத்தில் இந்த சேவை வழங்கப்படுகிறது.

முகவரி சான்று அட்டை பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் 10 ரூபாய் விலையில் கடலூர் தலைமை தபால் நிலையத்தில் கிடைக்கும்.

பொதுமக்கள் விண்ணப்படிவத்தை நிரப்பி ஒரு அஞ்சல்தலை அளவு வண்ணப் புகைப்படத்தை கடலூர் தலைமை தபால் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி சான்று அட்டை தரம் நிறைந்த அழகிய வடிவத்தில் தயார் செய்யப்பட்டு கொடுக்கப்படும்.

இந்த முகவரி சான்று அட்டை 18 வயது நிரம்பிய இந்திய குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

கடலூர் தலைமை அஞ்சலகத்தில் தற்போது விண்ணப்பங்கள் வழங்கும் பணி துவங்கியுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பரங்கிப்பேட்டையில் திருமாவளவனை ஆதரித்து பிரசாரம்

சிதம்பரம் தொகுதியில் தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிடும் வி.சி., வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி., காதர் மொய்தீன் பிரசாரம் பரங்கிப்பேட்டையில் பிரசாரம் செய்தார்.

முத்துப்பெருமாள் தலைமை தாங்கினார். தி.மு.க., நகர செயலாளர் பாண்டியன், பேரூராட்சி தலைவர் முகம்மது யூனுஸ் முன்னிலை வகித்தனர்.

தெரு, சின்னக்கடை தெரு, பெரியத்தெரு இடங்களில் எம்.பி., காதர் மொய்தீன் பிரசாரம் செய்தார்.

.மு.க., இளைஞரணி முனவர் உசேன், பிரதிநிதி காண்டீபன், காங்., ஜெகநாதன், இளையபெருமாள், செய்யது அலி, கிஷார், பஷீர் அகமது பங்கேற்றனர்.

சுகத்தை அனுபவித்துவிட்டு ஓடியவர் ராமதாஸ் - காதர் மொய்தீன் கடும் தாக்கு!

உள்ள 11 ஆயிரம் ஜமாத்தில் உள்ள முஸ்லிம்கள் தி.மு.க கூட்டணிக்கு ஓட்டுப் போட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பேசினார்.

மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த ஆயங்குடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவனை ஆதரித்து பொதுக் கூட்டம் நடந்தது.

அலி தலைமை தாங்கினார். அப்துல் வதூது, முகமது ஹனீப், முகம்மது ஷரீப் முன்னிலை வகித்தனர்.

யூனியன் முஸ்லிம் லீக் காதர் மொய்தீன் பங்கேற்று பேசுகையில்,

தமிழகத்தில் உள்ள 11 ஆயிரம் ஜமாத் முஸ்லிம்கள் தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும். நமது கட்சியில் ஐந்து வால் நட்சத்திரம் உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியிலும் ஐந்துவால் நட்சத்திரம் உள்ளது. விரல்களை விரித்தால் சூரியன் சின்னம். சேர்த்தால் கை சின்னம். ஆகவே நாம் இயற்கை கூட்டணியாகும். சேது சமுத்திர திட்டம் நமது மூதாதையர் திட்டமாகும். அதனை நாம் நிறைவேற்ற துணை நிற்க வேண்டும். ராமதாஸ் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு ஓடியவர். ஆகவே தி.மு.க கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும் என்றார்.

இம்முறை தமிழகத்தைச் சேர்ந்த 15 பேர் கேபினட் அமைச்சர்கள் - மொய்தீன் மிகுந்த ஆசை!


தமிழகத்தை சேர்ந்த 15 பேர் மத்திய கேபினட் அமைச்சர் ஆகவுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் கூறினார்.
நெல்லிக்குப்பத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர தலைவர் அப்துல் ஷாதி தலைமை தாங்கினார். முகமது இப்ராஹிம் முன்னிலை வகித்தார். ராஜா ரஷிமுல்லா வரவேற்றார். மாநில தலைவர் எம்.பி., காதர்மொய்தீன் சிறப்புரை ஆற்றினார்.

.மு.க., நகர செயலாளர் மணிவண்ணன், காங்கிரஸ் நகர தலைவர் திலகர், சேர்மன் கெய்க்வாட்பாபு, விடுதலை சிறுத்தை முல்லைவேந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

எம்.பி., காதர்மொய்தீன் பேசியதாவது:

, ஐரோபிய நாடுகள் பொருளாதார சிக்கலில் உள்ளன. பிரதமர் மன்மோகன்சிங் திறமையால் இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது.

ஒதுக்கப் பட்ட ஜெ., அரசியல் நாகரீகம் தெரியாதவர். வயதுக்கு கூட மரியாதை தராமல் கருணாநிதியை பற்றி தரம் தாழ்ந்து பேசுகிறார். பிறரை மதிக்க வேண்டுமென்ற பண்பாடுகூட தெரியவில்லை.

மக்கள் தான் பிரதமரை தேர்வு செய்ய வேண்டும். நாற்பது தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். இம்முறை தமிழகத்தை சேர்ந்த 15 பேர் மத்திய கேபினட் அமைச்சர் ஆவர். தமிழகம் முன்னேற தி.மு.க., கூட்டணி வெற்றி பெற வேண்டுமென கூறினார்.

Source: தினமலர்

வெள்ளாற்றுப் பாலம்

நம்மூர் வெள்ளாற்றுப் பாலம்... பணிகள் தற்போது....

புதன், 29 ஏப்ரல், 2009

ஆசிரியர் பயிற்சி சேர்க்கை 20க்கு பின் விண்ணப்பம்

ஆசிரியர் பயிற்சி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், மே 20ம் தேதிக்குப்பின் வழங்கப்பட உள்ளன.

தமிழகத்தில் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் உட்பட 750 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இதில், 40 ஆயிரம் இடங்கள் உள்ளன. 50 சதவீத இடங்கள் கவுன்சிலிங் மூலம் தமிழக அரசு நிரப்புகிறது. மீதமுள்ள 50 சதவீத இடங்களை, பள்ளி நிர்வாகங்கள் நிரப்புகின்றன.

வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 8 அல்லது 9ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு வாரத்திற்குப் பின் மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்.

எனவே, 20ம் தேதிக்குப் பின் ஆசிரியர் பயிற்சி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

பிளஸ் 2 தேர்வில் 45 சதவீத மதிப்பெண்கள் எடுப்பவர்கள், ஆசிரியர் பயிற்சிப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர்கள் 250 ரூபாய் செலுத்தியும், இதர பிரிவு மாணவர்கள் 500 ரூபாய் செலுத்தியும் விண்ணப்பிக்க வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.

இதற்கிடையே, வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த விரும்பவில்லை என, 15க்கும் மேற்பட்ட தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் ஒப்புதல் கடிதம் வழங்கியுள்ளன.

மே 6ம் தேதி இன்ஜினியரிங் விண்ணப்பம்

"பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள், மே மாதம் 6ம் தேதி முதல் வழங்கப்படும்" என சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்தார்.

சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

  • பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங், இந்த ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கவுள்ளது.

  • இதற்கான விண்ணப்பங்கள் மே மாதம் 6ம் தேதி முதல் வழங்கப்படும்.

  • தமிழகம் முழுவதும் 58 மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

  • எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 250 ரூபாய், இதர பிரிவினர் 500 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

  • விண்ணப்பத்தைப் பெறும் மாணவர்களுக்கு 450 பக்கங்கள் கொண்ட பொறியியல் கல்லூரிகள் பற்றிய விவரக் குறிப்பு வழங்கப்படும்.

  • விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் டவுன்லோடு செய்தும் விண்ணப்பிக்கலாம்.

  • மே மாதம் 31ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

  • ஜூன் 20ம் தேதிக்குள் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

  • மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் முடிந்த பின், பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் நடக்கும்.

இவ்வாறு மன்னர் ஜவஹர் கூறினார்.

மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள் மே மாதம் மூன்றாம் வாரத்தில் வழங்கப்படும் என மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் ஷீலா தெரிவித்தார்.

செவ்வாய், 28 ஏப்ரல், 2009

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஓராண்டு நர்சரி பள்ளி ஆசிரியர் டிப்ளமோ படிப்பு அறிமுகம்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு கால நர்சரி பள்ளி ஆசிரியர் டிப்ளமோ படிப்பு நடப்பு கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து நர்சரி பள்ளிகளிலும் தற்போது பிளஸ் 2 மற்றும் ஏதேனும் பட்டப்படிப்பு படித்தவர்களே வகுப்பு ஆசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.

நர்சரி மாணவர்களுக்கு எவ்வாறு பாடங்கள் போதிப்பது, எவ்வாறு மாணவர்களைக் கையாள்வது, என்னென்ன வகையில் அவர்களை ஒழுங்குபடுத்துவது போன்ற புதிய கல்வி முறையை பயிற்றுவிக்கும் விதமாக இந்த டிப்ளமோ படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் படிப்பை படிப்பதன் மூலம் ஆசிரியர்கள் தகுதியுள்ளவர்களாக ஆகின்றனர். தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்களும், பிளஸ் 2 படித்தவர்களும் இந்தப் பட்டயப் படிப்பில் சேரலாம். இந்தப் படிப்பை முடித்தவர்களுக்கு ப்ரி-பிரைமரி பள்ளிகளில் பணியில் முன்னுரிமை வழங்கப்படும்.

பிளஸ் 2 அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்புக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.

முதலில் வரும் 50 மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவர்.

இதில் சேர விரும்புவோர் கோரிப்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக கல்வி மையத்தை அணுகி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு "0452-6522013' என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தகவலை பல்கலை. மதுரை கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் பாலன் தெரிவித்துள்ளார்.

மத்திய தேர்தல் பார்வையாளர் பரங்கிப்பேட்டையில் ஆய்வு

பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளை மத்திய தேர்தல் பார்வையாளர் உமேஷ்குமார் கோயல் பார்வையிட்டார்.

லோக்சபா தேர்தல் வரும் மே 13ம் தேதி நடக்கிறது.

அதையொட்டி தேர்தல் ஏற்பாடுகளை வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

பரங்கிப்பேட்டை, பு.முட்லூர், பெரியப்பட்டு, புவனகிரி ஆகிய பகுதிகளில் ஓட்டுச்சாவடிகளை தேர்தல் பார்வையாளர் உமேஷ்குமார் கோயல் நேரில் பார்வையிட்டார்.

மாவட்ட வழங்கல் அதிகாரி மோகிஸ்தன், ஆர்.டி.ஓ., ராமலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர்.

சிதம்பரம் (தனி) தொகுதி வேட்பாளர் இறுதி பட்டியல்

தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதி வேட்பாளர் இறுதி பட்டியல்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
மொத்தம் 824 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அதிக பட்சமாக, தென் சென்னை தொகுதியில் 44 பேர் போட்டியிடுகிறார்கள்.
இறுதியாக 824 பேர் போட்டி



தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில், பரிசீலனைக்குப்பின் 931 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அவற்றில் 107 பேர், தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து, 40 தொகுதிகளுக்கும் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது.

40 தொகுதிகளிலும் மொத்தம் 824 வேட்பாளர்கள் இறுதியாக களத்தில் உள்ளனர்.

அதிகபட்சமாக, தென் சென்னை தொகுதியில் 44 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

நாகப்பட்டினம் (தனி) தொகுதியில் மிக குறைவாக 7 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

சிதம்பரம் (தனி) - 13

1. திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி)

2. பொன்னுசாமி (பா.ம.க.)

3. சபா.சசிக்குமார் (தே.மு.தி.க)

4. என்.ஆர்.ராஜேந்திரன் (பகுஜன் சமாஜ் கட்சி)

5. செல்வகுமார் (ராஷ்டிரீய கிராந்திகாரி சமாஜ்வாடி கட்சி)

6. சுசீலா (அனைத்து மக்கள் விடுதலை கட்சி)

மற்றும் 7 சுயேச்சைகள்.

திங்கள், 27 ஏப்ரல், 2009

பரங்கிப்பேட்டையில் அனுமதியின்றி பிரசாரம் செய்த டாடா சுமோ கார் பறிமுதல்

பரங்கிப்பேட்டை தேர்தல் அதிகாரி அனுமதியின்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளருக்கு பிரசாரம் செய்த இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

பிரசாரத்திற்கு பயன்படுத்திய டாடா சுமோ கார் பறிமுதல் செய்யப்பட்டது.

சிதம்பரம் லோக்சபா தொகுதி பரங்கிப்பேட்டை பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் கட்சி சார்பில் டாடா சுமோ காரில் மைக் மூலம் பிரசாரம் செய்யப்பட்டது.

பரங்கிப்பேட்டை போலீசார் டாடா சுமோ காரை நிறுத்தி விசாரித்தபோது தேர்தல் அலுவலர் அனுமதியின்றி பிரசாரம் செய்வது தெரிய வந்தது.

அதையடுத்து மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சலீம்முதீன் (45), சுமோ டிரைவர் சதீஷ் (25) இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து, பிரசாரத்திற்கு பயன்படுத்திய டாடா சுமோ காரை பறிமுதல் செய்தனர்.

கோடை கால சிறப்பு ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை

கடலூர் மாவட்டத்தில் கோடை கால சிறப்பு ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை வரும் 29ம் தேதி நடக்கிறது.

கடலூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்கத்தின் கூட்டம் நடந்தது.

சங்கத் தலைவர் ராமலிங்கம், செயலாளர் சந்திரமோகன் பவுள் ராஜ், பொருளாளர் சங்கர நாராயணன்,மாவட்ட விளையாட்டு அலுவலர் பத்மநாபன், ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், துணைத் தலைவர் கருணாகரன், பயிற்சியாளர் அமரேளதர் குமார் பிரிச்சா பங்கேற்றனர்.

  • கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் முறையாக ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி வகுப்பு துவங்க முடிவு செய்யப்பட்டது.

  • இதில் 3 வயதிற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுவர்.

  • பயிற்சிக்கான சேர்க்கை வரும் 29ம் தேதி முதல் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

  • ஸ்கேட்டிங் விளையாட்டினை பள்ளிகளில் அறிமுகப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

Source: தினமலர்

ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

விளையாட்டு பள்ளி, விடுதிகளில் சேர கடலூரில் 28ம் தேதி உடல்திறன் தேர்வு

அரசு சார்பிலான விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகளில் சேர்க்கைக்கான மாணவ, மாணவிகள் உடல் திறன் தேர்வு அண்ணா விளையாட்டரங்கில் வரும் 28ம் தேதி நடக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் 13 ஒன்றியத்திற்கான வீரர்கள் உடல் திறன் தேர்வு நடக்கிறது. வரும் 28ம் தேதி கடலூர் ஒன்றிய அளவில் வீர்கள் தேர்வு அண்ணா விளையாட்டரங்கில் காலை 8 மணிக்கு நடக்கிறது.

அண்ணாகிராமம் ஒன்றியத்திற்கு புதுப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், பண்ருட்டி ஒன்றியத்திற்கு பண்ருட்டி அரசு மேல்நிலை பள்ளியிலும் வீரர்கள் தேர்வு நடக்கிறது.

அதே போல் 29ம் தேதி பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் பி.முட்லூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியிலும், புவனகிரி ஒன்றியத்தில் புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கீரப்பாளையம் ஒன்றியத் திற்கு சிதம்பரம் நந்தனார் அரசு ஆண்கள் ஆதிதிராவிடர் மேல் நிலை பள்ளியிலும் நடக்கிறது.

வரும் 30ம் தேதி நல்லூர் ஒன்றியத்தில் எறையூர் அருணா மேல்நிலைப் பள்ளியிலும், மங்களூர் ஒன்றியத்தில் திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கம்மாபுரம் ஒன்றியத்திற்கு மந்தாரக்குப்பம் என்.எல்.சி., மேல்நிலைப் பள்ளியிலும் வீரர்கள் தேர்வு நடக்கிறது.

மே 1ம் தேதி விருத்தாசலம் ஒன்றியத்தில் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் குறிஞ்சிப்பாடி எஸ்.கே.வி., மேல்நிலைப் பள்ளியிலும், 2ம் தேதி குமராட்சி ஒன்றியத்தில் லால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்தில் காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது.

ஒருவர் இரண்டு விளையாட்டில் சேர இரண்டு விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.

ஊராட்சி ஒன்றிய அளவு, மண்டல அளவு, மாநில அளவு என மூன்று கட்டமாக தேர்வு நடக்கிறது.

உயரமானவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

7, 8, 9, 11 வகுப்பு மாணவ, மாணவிகள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்திலும், உடல் திறன் தேர்வு நடக்கும் அந்தந்த பள்ளிகளிலும் கிடைக்கும்.

புதன், 22 ஏப்ரல், 2009

விளையாட்டுப் பள்ளிகளில் சேர இலவச விண்ணப்பம் வினியோகம்

தமிழகத்தில் உள்ள 18 விளையாட்டுப் பள்ளிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், அப்பள்ளிகளில் இலவசமாக வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழகத்தில் 18 இடங்களில் விளையாட்டுப் பள்ளி விடுதிகள் மூலம் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்கப்படுத்தி வருகிறது.

இவற்றில் 860 மாணவ-மாணவிகள் கல்வியுடன் நவீன விளையாட்டுப் பயிற்சியும் பெற்று வருகின்றனர்.

வரும் 2009-10ம் ஆண்டிற்கான புதிய மாணவ-மாணவிகள் தேர்வு, 385 ஊராட்சி ஒன்றியங்களில் வரும் 27ம் தேதி முதல் அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடக்கிறது.

இதற்கான விண்ணப்பங்கள், அனைத்து விளையாட்டுப் பள்ளிகளிலும் இலவசமாகக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மாவட்ட விளையாட்டு அலுவலர்கள் இடம் மற்றும் கால அட்டவணையை வெளியிட்டுள்ளனர்.

ஊராட்சி ஒன்றிய அளவில் தேர்வுபெறும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் வரும் மே மாதம் 9, 10ம் தேதிகளில் மண்டல அளவிலான தேர்வுகள் திருச்சி, திருவண்ணாமலை, மதுரை, ஈரோடு ஆகிய இடங்களில் நடக்கும்.

மாணவர்களுக்கு மாநில அளவிலான தேர்வுகள், திருச்சியில் மே மாதம் 18ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கும்.

மாணவிகளுக்கு எல்லா விளையாட்டுகளுக்குமான மாநில அளவிலான தேர்வுகள், திருவண்ணாமலையில் மே மாதம் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடக்கும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வேலையற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பம் வினியோகம்

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மனுதாரர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மனுதாரர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

  • இந்த தொகை பெறுவதற்கு எஸ்.எஸ்.எல்.சி., - பி.யூ.சி., பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 31.3.2009 அன்று ஐந்து ஆண்டுகள் கடந்திருக்க வேண்டும்.

  • எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 45 வயதும் மற்றவர்களுக்கு 40க்குள்ளும் இருக்க வேண்டும்.

  • தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும்.

  • அரசு அல்லது தனியார் துறையில் வேலையில் இருப்பவராக இருத்தல் கூடாது.

  • ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் படித்துக் கொண்டிருக்க கூடாது. அஞ்சல் வழிக் கல்வி அல்லது தொலைதூரக் கல்வி பயில்வோர் விண்ணப்பிக்கலாம்.

  • மனுதாரர் தனது கல்வியை தமிழ்நாட்டிலேயே பயின்றவராக இருத்தல் வேண்டும்.

  • மேலும் அவரது பெற்றோர், பாதுகாவலர் தொடர்ந்து 15 ஆண்டுகள் தமிழகத்தில் வசித்தவராக இருக்க வேண்டும்.

  • குடும்ப ஆண்டு வருமானம் 24 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்

போன்ற தகுதியுள்ளவராக இருக்கும் மனுதாரர்கள் அவர்களது கல்விச்சான்றுகளின் அசல் மற்றும் வேலைவாய்ப்பக அடையாள அட்டையுடன் அலுவலகத்திற்கு வந்து விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

  • ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.

  • பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்தோர் மட்டும் புதிதாக விண்ணப்பிக்கலாம்.

  • விண்ணப்பம் 1.4.2009 முதல் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வழங்கப்படுகிறது.

  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தினமும் இதே நேரத்தில் திரும்ப பெற்றுக் கொள்ளப்படும்.

  • இந்த காலாண்டுக்குரிய விண்ணப்பத்தை மே 31ம் தேதிக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

  • வேலைவாய்ப்பு அடையாள அட்டை புதுப்பித்தல், இதுவரை பயன் பெற்ற வங்கி புத்தகத்தில் பணம் அனுப்பிய விவரங்களின் நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source: தினமலர்

கோடைக்கால தீனிய்யாத் பயிலரங்கம் துவக்கம்

பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை ஏற்பாடு செய்திருக்கும் ஐந்தாம் ஆண்டு கோடைக்கால தீனிய்யாத் பயிலரங்க தொடக்க நிகழ்ச்சி பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பேரவையின் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் காஜா முய்னுத்தீன் மிஸ்பாஹி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆலிம்கள், நகர பெரியோர்கள், பெற்றோர்கள் மற்றும் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த பயிலரங்கத்தில் அரபு பேச்சு பயிற்சி, மார்க்கச் சட்டங்கள், தஜ்வீத் முறையில் திருக்குர்ஆன் ஓதுதல், துஆ மற்றும் ஹதீஸ் மனப்பாடம், கிராஅத் பயிற்சி, நடைமுறை ஸுன்னத்துகள், நாற்பது நபிமொழிகள் மற்றும் ஆலிம் பெருமக்களின் சொற்பொழிவுகள் என மார்க்கம் சம்பந்தமான அனைத்து கல்வியையும் சிறப்பான முறையில் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேற்கொண்டு விபரங்கள் பெற பேரவையின் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம்.

திங்கள், 20 ஏப்ரல், 2009

சாதனை மாணவர்

இவர் ஒரு வகையில் முக்கியமான நபர்.
இறைவன் நாடினால் மேலும் முக்கியத்துவம் பெறப்போகும் நபர்.

தற்போது பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருக்கும் நம் மாணவ செல்வங்களுக்கு ஒரு முன்னுதாரண நபர்.

நூர் முஹம்மது நைனா-
இந்த மாணவரின் பெயர்.

பெரிய தெருவை சேர்ந்த இந்த மாணவர், தனது விடா முயற்சிக்கு ஒரு திடமான அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டார்.

இன்று மேற் கல்வி துறையின் அடையாளமாக கருதப்படும் அண்ணா பல்கலை கழகத்தில் நமதூரில் இருந்து சென்று பயிலும் முதல் மாணவர். நாமறிந்தவரை இதற்க்கு முன் நம்தூரை சேர்ந்த ஜனாப். ஷாபி (பொறியியலாளர்) அவர்கள் தான் அண்ணா பல்கலை கழகத்தில் சென்று படித்த ஒரே ஒருவர். அவருக்கு பின் இவர் தான். இந்த மாணவரின் முன்னாள் ஆசிரியர் என்ற வகையில் சிறு வயது முதலே கல்வியில் இவரின் ஆர்வத்தினையும், கேள்வி ஞானத்தையும் நான் மிக அறிவேன்.

ஊருக்கு ஒரு டாக்டர் , வக்கீல் என்ற கணக்கில் இவரது சாதனை இல்லாவிட்டாலும், (இன்ஷா அல்லாஹ் அதைவிட மேலும் சாதிப்பார்) கல்வியில் காலம் காலமாய் பின்தங்கி இருக்கும் ஒரு சமுதாயத்தில் இருந்து icon of education என்று கருதப்படும் ஒரு வாயிலுக்கு சென்று தனது கல்வி தேடலை தொடரும் இந்த சாதனை மாணவனை சாதாரணமாக கை குலுக்கி பாராட்டியவர்கள் கூட குறைவே. கல்விக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கும் நமது மக்களின் மனோபாவம் பூரிக்க செய்கிறது.

மிகவும் முயன்று சாதித்திருக்கும் இவரை மேலும் சாதிக்க வலைப்பூ சார்பாக்வாழ்த்துகிறோம்.

சீனா உள்ளிட்ட அயல் நாடுகளில் இலவச பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு!

இரான், பிலிப்பைன்ஸ், நேபாளம், சீனா, மலேசியா மற்றும் கொரிய நாடுகளில் மே, ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள பல்வேறு பயிற்சி முகாம்களில் பங்கேற்க விரும்புபவர்களிடமிருந்து திருச்சி உற்பத்தித் திறன் குழு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

இதுபற்றி குழுவின் கெளரவப் பொதுச் செயலர் ராஜ முத்திருளாண்டி தெரிவித்திருப்பது:

"நிகழாண்டில் இரானில் ஜூலை 11-16 ஆம் தேதிகளில் வேளாண்மையில் நீர் வள மேலாண்மை பற்றிய பயிலரங்கம், பிலிப்பைன்சில் ஜூன் 15-19 ஆம் தேதிகளில் உணவு பதப்படுத்துதல் தொழிலில் தர மேலாண்மை பற்றிய ஆய்வரங்கம் ஆகியவை நடைபெறவுள்ளன.

நேபாளில் மே 25-29 ஆம் தேதிகளில் சமுதாய அடிப்படையில் சுற்றுச்சூழல் சுற்றுலா மேம்பாடு மற்றும் மேலாண்மை பற்றிய ஆய்வரங்கம், சீனாவில் ஜூன் 22-26 ஆம் தேதிகளில் தொழில்முனைவோரியல், வேளாண் தொழில்நுட்பம், வேளாண் தொழில் வளர்ப்பகம் பற்றிய ஆய்வரங்கம் ஆகியவை நடைபெறவுள்ளன.

மலேசியாவில் ஜூன் 15-18 ஆம் தேதிகளில் சேவைத் துறையில் அறிவு மேலாண்மை பற்றிய ஆய்வுக் கூட்டம், கொரியாவில் மே 19-22 ஆம் தேதிகளில் பொதுத் துறை உற்பத்தித் திறன் பற்றிய ஆய்வுக் கூட்டம் ஆகியவை நடைபெறவுள்ளன.

தேர்ந்தெடுக்கப்படும் பங்கேற்பாளர்கள் பணியாற்றும் இடத்துக்கு அருகில் உள்ள விமான நிலையத்திலிருந்து பயிலரங்கம், ஆய்வரங்கம், கூட்டம் நடைபெறும் நாடுகளுக்குச் செல்லும் செலவுகள் அனைத்தையும் ஆசிய உற்பத்தித் திறன் அமைப்பு ஏற்றுக் கொள்கிறது.

பயிலரங்கம், ஆய்வரங்கம், கூட்டம் நடைபெறும் இடத்தில் தங்குவதற்கான விடுதி செலவையும் இந்த அமைப்பு ஏற்கிறது.

திருச்சி உற்பத்தித் திறன் குழுவால் பரிந்துரைக்கப்படும் விண்ணப்பங்களை புது தில்லியில் உள்ள தேசிய உற்பத்தித் திறன் குழு இறுதி செய்யும்.

குறைந்தபட்ச தகுதியாகப் பட்டப்படிப்பும், சம்பந்தப்பட்ட துறையில் 3 முதல் 5 ஆண்டுகள் முன்அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

இந்தத் தகுதியுடையோர் திருச்சி உறையூர் நாச்சியார் கோயில் சாலையில் உள்ள திருச்சி உற்பத்தித் திறன் குழு செயலகத்தை 0431 - 2762320 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது tpcsecretariat@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் அணுகலாம்" என ராஜ முத்திருளாண்டி தெரிவித்தார்.

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பரங்கிப்பேட்டை ஒன்றியம் மீதிக்குடி கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் சுய உதவிக் குழுவினர் பங்கேற்றனர்.

கூடைப்பந்து முகாம்

சென்னையில் பச்சையப்பாஸ் காஸ்கோ கூடைப்பந்து பயிற்சி மையம் மே 1 முதல் 23-ம்தேதி வரை கோடைகாலப் பயிற்சி முகாமை நடத்துகிறது.

ஷெனாய் நகர் கிரசென்ட் பூங்காவில் அமைந்துள்ள மாநகராட்சி மைதானத்தில் முகாம் நடைபெறும்.

7 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறுவர், சிறுமியர் கலந்து கொள்ளலாம்.

முன்னாள் சர்வதேச வீரர் ஆர். சிவசுப்பிரமணியன் நேரடியாகப் பயிற்சி அளிக்கிறார்.

விவரங்களுக்கு 98405 03044 செல்பேசியில் தொடர்பு கொள்ளலாம்.



ஞாயிறு, 19 ஏப்ரல், 2009

தொலைதூரக் கல்வி மைய விண்ணப்ப விற்பனை நாளை தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் வரும் 2009-10 ஆண்டிற்கான விண்ணப்ப விற்பனை திங்கள்கிழமை (ஏப். 20) காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

இந்நிகழ்ச்சியில் துணைவேந்தர் டாக்டர் எம். ராமநாதன் பங்கேற்று முதல் விண்ணப்பத்தை வழங்கி விற்பனையை துவக்கி வைக்கிறார்.

பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, தொலைதூரக் கல்வி மைய இயக்குநர் முனைவர் எஸ்.பி. நாகேஸ்வரராவ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர். மீனாட்சிசுந்தரம் மற்றும் பல முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.

பரங்கிப்பேட்டை நடுக்கடலில் கூலி தொழிலாளி பலி

பரங்கிப்பேட்டை அருகே நடுக்கடலில் தனியார் எண்ணை நிறுவன கூலி தொழிலாளி பலி!கப்பலில் இருந்து பொருட்களை இறக்கிய போது படகில் இருந்து தவறி விழுந்தார் .

பரங்கிப்பேட்டை அருகே நடுக்கடலில் கப்பலில் இருந்து பொருட்களை இறக்கிய போது தனியார் எண்ணை நிறுவன கூலி தொழிலாளி பலியானார்.

கூலி தொழிலாளி

கடலூர் முதுநகர் அருகே உள்ள சோனாங்குப்பத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மகன் கந்தன் (வயது 40). இவர் புதுச்சத்திரம் அருகே உள்ள பெரியக்குப்பம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் எண்ணை நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வந்தார்.

நேற்று கந்தன் கப்பலில் எண்ணை நிறுவனத்திற்கு வந்த பொருட்களை இறக்கி கொண்டு வருவதற்காக படகில் கடலுக்கு சென்றார். பின்னர் நடுக்கடலுக்கு சென்றதும் கப்பலில் உள்ள பொருட்களை பாட்ஜி (கொக்கி) போட்டு இறக்கிக் கொண்டிருந்தார்.

பலி

அப்போது திடீரென படகில் இருந்து தவறி கடலில் விழுந்தார். வெகுநேரமாகியும் அவரை காணவில்லை. உடன் அவருடன் சென்றவர்கள் கடலில் குதித்து தேடினர். இருப்பினும் அவரை காண வில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து பெரியக்குப்பம் கடற்கரையோரம் கந்தன் உடல் கரை ஒதுங்கியது.

இது பற்றி தகவல்அறிந்த புதுச்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்த கந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது பற்றி புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளி, 17 ஏப்ரல், 2009

மெய்ப்பட்டு வரும் கனவு

வெள்ளாற்றுக்கு குறுக்கே பாலம் சமைக்கும் பரங்கிமா நகரின் பெருமக்களின் மிக நீண்ட கால கனவு மெய்படப்போகும் காட்சி இதோ. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து கொஞ்சம் விரைவாகவே நடைபெற்று வருகின்றன பால கட்டுமான பணிகள்.
வெள்ளாற்றைமுற்றிலுமாக தடுத்து மண் பாலம் கட்டப்பட்டு அதில் ஆங்காங்கே பில்லர் எழுப்பப்பட்டு வருகிறது. நாம் நடந்தே அக்கரை வரை சென்றதை முதலில் நம்பவே முடியவில்லை. ஏராளமான வெளி மாநில வேலையாட்க்களும், பிரம்மாண்டமான இயந்திரங்களும், அவைகளின் அசத்தலான இயக்கமும் அங்கு வரும் சிறு பிள்ளைகளை விழி விரிய காண வைக்கின்றன.
நமதூர் பக்கமிருந்து தான் கட்டுமான பொருட்க்கள் வரவேண்டும் என்பதனால் அக்கரை பக்கம் முதலில் பில்லர் போடப்பட்டு வருகிறது. அவை போடப்பட்டு முடிந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக நீர் போக்கு திறந்து விடப்படும். முழு கட்டுமானப்பணியும் முடிவடைய இன்னும் ஒரு வருடமாவது ஆகும் என்று அங்கு இருந்த கட்டுமான பொறியாளர் ஒருவர் தெரிவித்தார். ஹ்ம்ம்ம்ம் பார்க்கலாம்.

இந்த தற்காலிக மண் பாலத்தையும் அதன் மேல் வெகு மும்முரமாக இரவும் பகலும் நடைபெரும் வேலைகளையும் "பார்வையிட" திருவாளர் பரங்கிப்பேட்டை பொது ஜனம் குறிப்பாக தாய்மார்கள் தினமும் வருகை புரிவது வாடிக்கையாகிவிட்டது.
a


இப்போதும் தோணியில் வந்து இறங்கும் மக்களை காணும் போது, இதெல்லாம் இன்னும் கொஞ்ச நாள்தான் என்று தோன்றியது.

வியாழன், 16 ஏப்ரல், 2009

அரபி மொழி கற்க ஓர் அரிய வாய்ப்பு..!

முற்றிலும் இலவசம்!!!
அரபி மொழி கற்க ஓர் அரிய வாய்ப்பு..!
  • ஏப்ரல் 14 முதல் மே 31 வரை நாற்பது நாள்களில் அரபி மொழியில் சரளமாகப் படிக்கவும் பேசவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

  • சென்னை அண்ணாசாலையில் உள்ள மதரஸே ஆஜம் பள்ளிவாசலில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

  • 2 தேநீர், நண்பகல் உணவு, சிறு ஓய்வு.

  • குர்ஆனையும், நபிமொழி நூல்களையும் அரபியில் தாமே படித்துப் புரிந்து கொள்ளும் அளவுக்கு முறையான பயிற்சிகள்.

  • ஆர்வமுள்ளவர்கள் உடன் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.

  • விவரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்: 9841870710 – (044) 65151001


Source: சமரசம்

பரங்கிப்பேட்டையில் பாம்புடன் பூனை சண்டை: போலீசார் ஓட்டம்

பரங்கிப்பேட்டை: புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் நல்ல பாம்புடன் பூனை சண்டை போட்டதை பார்த்த போலீசார் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் வாடகை ஓட்டு கட்டடத்தில் இயங்கி வருகிறது.

அவ்வப்போது பூனை, பாம்பு சகஜமாக போலீஸ் ஸ்டேஷனுக்குள் வந்து செல்லும்.

நேற்று அதிகாரிகள் மற்றும் போலீசார் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர்.

எழுத்தர் அறை அருகே திடீரென நல்ல பாம்பு ஒன்றுடன், பூனை சண்டை போட்டு கொண்டிருந்தது.

சத்தம் கேட்டு எட்டி பார்த்தபோது, பாம்பு தலையை தூக்கியவாறு நின்று கொண்டிருந்ததை கண்டு போலீசார் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதையடுத்து பரங்கிப்பேட்டையில் இருந்து இருளரை வர வழைத்து பாம்பை பிடித்து அப்புறப்படுத்தினர்.

அதன்பிறகே போலீசார் நிம்மதியடைந்தனர்.

புதன், 15 ஏப்ரல், 2009

பரங்கிப்பேட்டை பாபா பள்ளி ஆண்டு விழா - எம்.எல்.ஏ., பங்கேற்பு

பரங்கிப்பேட்டையில் பாபா பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை பாபா வித்யாலயா பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

எம்.எல்.ஏ., செல்வி ராமஜெயம் தலைமை தாங்கினார்.

பள்ளி நிர்வாகி வைரமணி சண்முகம் வரவேற்றார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் ஞான அம்பலவாணன் விளையாட்டு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி தலைவர் மணிவண்ணன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

தலைமை ஆசிரியர் பாக்கியலட்சுமி நன்றி கூறினார்.

மீனவர்களுக்கு கடலூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

மீன்களின் இனவிருத்தியை மேம்படுத்த விசைப்படகு, இழுவலைகளை கொண்டு மீன்பிடிக்க வேண்டாம் - மீனவர்களுக்கு கடலூர் கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வேண்டுகோள்!

மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க விசைப்படகு மற்றும் இழு வலைகளை கொண்டு மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டாம் என்று கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மீன்பிடிக்க தடை

ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15-ந் தேதி முதல் மே 29-ந் தேதி வரை 45 நாட்கள் கடலில் மீன் பிடிக்க மீனவர்களுக்கு அரசு தடை விதித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு இன்று (புதன் கிழமை) முதல் மே 29-ந் தேதிவரை மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

இது குறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மீன்வளத்தை பாதுகாக்க

கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் தமிழக கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள பகுதி முழுவதிலும் (திருவள்ளூர் மாவட்ட எல்லையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் மே 29 முடிய 45 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன்பிடிப்பதை தடை செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த தடை ஆணையின் படி இந்த ஆண்டும் விசைப்படகுகள் மற்றும் இழு வலைப்படகுகள் மூலம் தடை செய்யப்பட்ட 45 நாட்களுக்கும் கடலில் சென்று மீன் பிடிக்க வேண்டாம் என மீனவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

45 நாட்களுக்கு...

கடலில் மீன்கள் இனவிருத்திக்கு ஏற்ற காலமான மேற்கண்ட 45 நாட்கள், மீனவர்கள் கடலில் மீன் பிடிப்பதை நிறுத்தி வைப்பதன் மூலம் இடையூறு இல்லாத இனவிருத்தி மேம்பட்டு, மீன்வளம் பெருக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் நலன் கருதி அரசு வகுத்துள்ள இத்தடை ஆணையின்படி இந்த 45 நாட்கள் முடியும்வரை கடலூர் மாவட்ட மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவலைப் படகுகளைக் கொண்டு மீன்பிடிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

செவ்வாய், 14 ஏப்ரல், 2009

தமிழக அரசு தருகிறது இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள்

சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு அளிக்கும் பயிற்சித் திட்டத்தைத் தமிழக அரசின் பல்வேறு துறைகள் மேற்கொண்டு வருகின்றன. இப்பயிற்சிகள் இலவசமாகவே அளிக்கப்படுகின்றன.

எலெக்ட்ரிகல் டெக்னீஷியன், ஃப்ரெண்ட் ஆபிஸ் ஆபரேஷன், டி.டி.பி., டேட்டா என்ட்ரி ஆகிய பிரிவுகளில் பயிற்சிகள் தரப்படுகின்றன.

யாரெல்லாம் இப்பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம்?

எலக்ட்ரிகல் டெக்னீஷியன் பயிற்சி:

  • எலக்ட்ரிகல் டெக்னீஷியன் பயிற்சிக்கு 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.
  • 32 வயதுக்கு உள்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • பயிற்சிக்கான கால அளவு ஓராண்டு ஆகும்.

ஃப்ரெண்ட் ஆபிஸ் ஆபரேஷன் பயிற்சி:

  • இப்பயிற்சிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 25 வயதுக்கு உள்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.
  • இப்பயிற்சியின் கால அளவு 6 மாதங்கள் ஆகும்.

டி.டி.பி. (டெஸ்க் டாப் பப்ளிஷிங்), டேட்டா என்ட்ரி பயிற்சிகள்:

  • டி.டி.பி., டேட்டா என்ட்ரி ஆகிய பயிற்சிகளுக்கு 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • வயது வரம்பு 32.
  • இது மூன்று மாதப் பயிற்சி ஆகும்.

விண்ணப்பிக்க என்ன நடைமுறை?

விண்ணப்பதாரர்கள் தங்களது மதிப்பெண் பட்டியல்கள், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் ஆகியவற்றின் மூலச் சான்றிதழ்கள், நகல்கள் ஆகியவற்றை ரூ.5 தபால் தலை ஒட்டிய சுய முகவரி இட்ட உறையையும் கொண்டு வரவேண்டும்.

தொடர்பு கொள்ள வேண்டிய இடம் எது?

மேற்கண்ட பயிற்சிகளை நடத்தும் தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் சென்டர், 42/25, ஜி.ஜி. காம்ப்ளெக்ஸ் இரண்டாவது தளம் (வி.ஜி.பி. அருகில்), அண்ணா சாலை, சென்னை -600 002. தொ.பே.: 044- 2852 7579, 2841 4736, 98401 16957.

சி.ரங்கநாதன், இயக்குநர், தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் சென்டர், 93822 66724.

ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி

ஆதி திராவிடர்கள், பழங்குடியினத்தவருக்காக இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சியை மத்திய தொழிலாளர் நலத் துறை நடத்துகிறது. மேல்நிலைப் படிப்பை முடித்தவர்கள், 27 வயதுக்கு உள்பட்டோர் இதில் பங்கு பெறலாம்.

தொடர்புக்கு:
ஆதிதிராவிட, பழங்குடியின பயிற்சி வழிகாட்டு மையம், மாவட்ட வேலைவாய்ப்பக வளாகம், 56, சாந்தோம் நெடுஞ்சாலை, மூன்றாவது மாடி, சென்னை -600 004. தொலைபேசி: 2461 5112.

விமானப் பணிப்பெண் ஆவதற்குப் பயிற்சி

விமானப் போக்குவரத்தில் தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு விமான சேவைகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், நாளுக்கு நாள் விமானப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இத்தொழிலில் இப்போது லாபம் அதிகரித்து வருவதே இதற்குக் காரணம். இந்நிலையில், இத்தொழிலில் வேலைவாய்ப்பும் விரிவடைந்து கொண்டே வருகிறது. விமானப் பணிப் பெண் வேலையில் சேர்ந்தால், நல்ல ஊதியமும் உண்டு.

இந்நிலையில், ஆதி திராவிட பெண்களுக்கு தமிழ்நாடு ஆதி திராவிடர் -வீட்டுவசதிக் கழகம் (தாட்கோ) மூலம் விமானப் பணிப்பெண் வேலைக்கான பயிற்சி தரப்படுகிறது.

  • ஓராண்டுக்கான இப்பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.
  • பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள் இதில் சேரலாம்.
  • 18 வயது முதல் 24 வயது வரையில் இருக்க வேண்டும்.
  • 157 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். சரளமாகப் பேச வேண்டும்.
  • அழகான தோற்றம் தேவை.

இது குறித்து அவ்வப்போது விளம்பரங்களைத் தாட்கோ நிறுவனம் வெளியிடும். விமானப் பணிப்பெண் பணியில் சேருவதற்குத் தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன.

ஏர் ஹோஸ்டஸ் அகாதெமி (ஆஹா) என்ற கல்வி நிறுவனம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சார்பில் சர்வதேச அளவில் தேர்வுகளை நடத்தும் சி.ஐ.இ. நிறுவனத்துடன் இணைந்து 'ஆஹா' ஓராண்டு டிப்ளமோ படிப்பை நடத்துகிறது.

இந்நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 9 நகரங்களில் மொத்தம் 18 கிளைகள் இதற்கு உண்டு. அவற்றில் படித்து ஆண்டுதோறும் 4 ஆயிரம் பேர் பயிற்சி பெறுகின்றனர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச தேர்வு மையம் நடத்தும் படிப்புகளுக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு உள்ளது.

150 நாடுகளில் இப்படிப்பின் சான்றிதழ்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி. ஏவியேஷன், ஹாஸ்பிடாலிட்டி, டிராவல்ஸ் அண்ட் டூர் என்ற துறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பிற்பட்ட வகுப்பினருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி:

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வேலை வாய்ப்புக்கான இலவச பயிற்சித் திட்டத்தைத் தமிழக அரசு அளிக்கிறது.

வேலை தேடும் பிற்பட்ட இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் திறன்களை வளர்ப்பதற்கு இப்பயிற்சிகள் பெரிதும் உதவும். இதன்படி எலெக்டிரிகல் டெக்னீசியன், டிடிபி, டேட்டா என்ட்ரி உள்ளிட்ட பிரிவுகளில் பயிற்சி தரப்படும்.

எலெக்ட்ரிகல் டெக்னீசியன் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 32 வயதுக்குள்பட்ட பிற்படுத்தப்பட்ட பிரிவைச்சேர்ந்தவர்கள் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். டிடிபி, டேட்டா என்ட்ரி உள்ளிட்ட பயிற்சிகளுக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் மூலச் சான்றுகளையும் அவற்றின் நகல்களையும் ரூ. 5 அஞ்சல் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட உறையையும் எடுத்து வர வேண்டும்.

முகவரி:
தமிழ்நாடு இன்டஸ்ட்ரியல் டிரெய்னிங் சென்டர், 42/25, ஜிஜி காம்ப்ளக்ஸ், 2-வது தளம் (விஜிபி அருகில்), அண்ணா சாலை, சென்னை-2. தொலைபேசி : 2852 7579, 2841 4736. செல்: 98401 16957.

பரங்கிப்பேட்டை பகுதியில் தொல்.திருமாவளவன் சுற்றுப்பயணம்

சிதம்பரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான தொல்.திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

சிதம்பரத்தில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார்.

பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில் பகுதியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டங்களிலும் அவர் பங்கேற்றார். இக் கூட்டங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வமும் பங்கேற்றார்.

எள்ளேரி, லால்பேட்டை, புவனகிரி ஆகிய பகுதிகளில் கூட்டணிக் கட்சி பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கேட்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அவருடன் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் நெய்வேலி சென்றார்.

சென்னையில் ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளன்று விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.

ஏப்ரல் 15-ம் தேதி மீண்டும் சிதம்பரம் தொகுதியில் பிரசாரத்தை தொடங்குகிறார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - திருமாவளவன் பேச்சு

வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று திருமாவளவன் கூறினார்.

ஆதரவு திரட்டினார்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளராக அக்கட்சியின் அமைப்பாளர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அவர் பரங்கிப்பேட்டை, புவனகிரி ஆகிய பகுதிகளில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தலைமையில் திருமாவளவன் கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க.கூட்டணியில் போட்டி

சிதம்பரம் தொகுதிக்கு நான் நன்கு அறிமுகமானவன். உங்களை நம்பி தான் நான் மீண்டும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன். இந்த தொகுதியில் என்னை வெற்றிபெற செய்ய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடுமையாக உழைத்து வருகிறார். கடந்த தேர்தலில் தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்திருந்தது. அப்போது பா.ம.க.சார்பில் போட்டியிட்ட பொன்னுசாமியிடம் நீங்கள் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் என்று அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.

அதன்படி அவர் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன், சிறுத்தைகள் கட்சி கூட்டணி வைத்துள்ளது. அதே அமைச்சர் என்னிடம் நீங்கள் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் என்று கூறியுள்ளார். அமைச்சரின் இந்த பேச்சு சரியாக இருக்கும்.

40 தொகுதிகளிலும் வெற்றி

விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு சேர்ந்து தேர்தல் களப் பணியாற்றி சிதம்பரம் உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் திருமாவளவன் கூறினார்.

நிகழ்ச்சிக்கு தி.மு.க.ஒன்றிய செயலாளர் முத்து. பெருமாள் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற முகமது யூனுஸ் வரவேற்று பேசினார். இதில் ரவிக்குமார் எம்.எல்.ஏ., சிதம்பரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் தாமரைச் செல்வன், புவனகிரி தொகுதி பொறுப்பாளர் ரவிச்சந்திரன், மண்டல பொறுப்பாளர் காவியச் செல்வன், மாவட்ட ஊடக மைய செயலாளர் முடி கொண்டான், காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகநாதன், வட்டார தலைவர் சேதுமாதவன், இளைய பெருமாள், தமிழ்வளவன், ரமேஷ், காஜாகமால், நகர செயலாளர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் புவனகிரியிலும் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் திருமாவளவன், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டணிகட்சி முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல் நாசர், தி.மு.க.பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர் மதியழகன், மாவட்ட மகளிரணி செயலாளர் அமுத ராணி தனசேகரன், ஒன்றிய செயலாளர் ஜெயராமன், நகர செயலாளர் கந்தன், டாக்டர் மனோகர், முன்னாள் யூனியன் தலைவர் பழனிச்சாமி, பிற்படுத்தப்பட்டோர் பிரிவு காங்கிரஸ் மாவட்ட தலைவர் குமார், வட்டார தலைவர் சிவக்குமார், சவுந்திர பாண் டியன், பேரூராட்சி மன்ற துணை தலைவர் ராம் குமார், மாவட்ட துணை செயலாளர் செல்லப்பன், ஒன்றிய செயலாளர் சுதாகர், நகர அமைப்பாளர் செந்தில், ராமர், முத்து, எழில்வேந்தன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

திங்கள், 13 ஏப்ரல், 2009

நம்பினால் நம்புங்க!

இந்திய நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் 552. (மாநிலங்களிலிருந்து 530, யூனியன் பிரதேசங்களிலிருந்து 20, ஆங்கிலோ இந்திய நியமன உறுப்பினர்கள் 2)
  • பட்ஜெட், மழைக்காலம், குளிர் காலம் என்று வருடத்துக்கு மூன்று முறை சபை கூடியாக வேண்டும்

  • நாடாளுமன்றம் செயல்படும் ஒவ்வொரு நிமிடமும் ஆகும் செலவு ரூ.26 ஆயிரம். (எம்.பி.க்கள் செயல்பாடுகள் வேறு)

  • ஒரு எம்.பி.யின் மாதச் சம்பளம் 16 ஆயிரம் ரூபாய், மாதாந்திர தொகுதி செலவு 20 ஆயிரம் ரூபாய், அலுவலக செல்வு 20 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 56 ஆயிரம் ரூபாய் ஆகிறது கணக்கு.

  • எம்.பி. சும்மா இருக்க முடியுமா? தொகுதியை சுற்றி பார்க்க வேண்டாமா? அதற்கான பயணப்படியாக ஒரு கி.மீ.க்கு 8 ரூபாய் கிடைக்கும்.

  • நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டால் ஆயிரம் ரூபாய் தருவார்கள். (கூட்டத்தில் பேசினாலும் பேசா விட்டாலும் கவலையில்லை)

  • டெல்லி எம்.பி. ஹாஸ்டலில் அறை வாடகை இலவசம். அதற்கான மின்சாரக்கட்டணம் ஆண்டுக்கு 50 ஆயிரம் யூனிட் வரை இலவசம்.

  • செல்போனில் 1 லட்சத்து 50 ஆயிரம் அழைப்புகள் வரை பேசிக்கொள்ளலாம்.

  • இந்தக் கணக்குகள்படி எம்.பி. ஐந்து முழு வருடங்கள் பதவியில் இருந்தால் சம்பாதிக்கும் தொகை 1 கோடியே 60 லட்சம் ரூபாய்.

  • மொத்தமுள்ள 534 எம்.பி.க்களுக்கான ஐந்தாண்டு செலவு, கிட்டத்தட்ட 855 கோடி ரூபாய்.

தமிழ் வழியில் வெளிநாட்டு மொழிகள் கற்கலாம்

பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய வெளிநாட்டு மொழிகள் தமிழ் வழியில் கற்பிக்கப்பட உள்ளது.

சென்னை லயோலா கல்லூரியின் ‘ரேஸ்’ அமைப்பு சான்றிதழ் படிப்பாக இதனை வழங்குகிறது.

இது குறித்து ‘ரேஸ்’ இயக்குனர் பிரான்சிஸ் பீட்டர் கூறுகையில்,

மூன்று பிரிவுகளாக வெளிநாட்டு மொழிகள் கற்பிக்கப்படுகிறது.

அடிப்படை பிரிவில் 48 மணிநேரமும், அடுத்த பிரிவில் 60 மணிநேரமும், மூன்றாவது பிரிவில் 90 மணிநேரமும் வகுப்புகள் இருக்கும்.

இதற்கான கற்பிக்கும் முறை கலந்துரையாடல் முறையில் இருக்கும்.

அடிப்படை பிரிவு மாணவர்களின் கலந்துரையாடல் திறனை மேம்படுத்துவதாகவும், இரண்டாவது பிரிவு இலக்கணம் மற்றும் வாசிக்கும் திறனையும், மூன்றாவது பிரிவு மாணவர்களின் ஒட்டுமொத்த மொழித் திறனை மேம்படுத்துவதாகவும் இருக்கும்.

வெளிநாட்டு மொழிகளை கற்றுக்கொள்வதில் ஆங்கில மொழியில் புலமையில்லாதவர்களுக்கும், பள்ளித் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கும் இப்படிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.

பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளை அடுத்து, ஜப்பானிய, ஸ்பானிய மொழிகளும் தமிழ் வழியில் கற்றுக்கொடுக்க இந்த அமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

பரங்கிப்பேட்டை - 150 பேர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தனர்

சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை வாத்தியாப்பள்ளி பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் 150 பேர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சனிக்கிழமை இணைந்தனர்.

அக் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் பா.தாமரைச்செல்வன் முன்னிலையில் இவர்கள் இணைந்தனர். மண்டல பொறுப்பாளர் ரா. காவியச்செல்வன், பா. ரவிச்சந்திரன், தேர்தல் மேற்பார்வையாளர் திலீபன், நீதிவளவன், தடா சி. கதிரவன், கோவி. பாவானன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Source: தினமணி

பகுஜன் சமாஜ் கட்சி சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறது

பகுஜன் சமாஜ் கட்சி 11 தொகுதிக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது.

பகுஜன் சமாஜ் கட்சியின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் நேற்று விழுப்புரத்தில் வெளியிடப்பட்டது.

லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

கடந்த 3ம் தேதி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாயாவதி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட 23 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

இரண்டாம் கட்டமாக 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை விழுப்புரத்தில் நேற்று நடந்தக் கூட்டத்தில் மாநில பொதுச் செயலர் விஜயன் வெளியிட்டார்.

தொகுதி வாரியாக வேட்பாளர் விவரம் வருமாறு:

  • கிருஷ்ணகிரி-மூர்த்தி,
  • சிதம்பரம் (தனி)-ராமலிங்கம்,
  • நீலகிரி (தனி) -கிருஷ்ணன்,
  • காஞ்சிபுரம் (தனி) - உத்ராபதி,
  • திருவண்ணாமலை - கோவிந்தசாமி,
  • விழுப்புரம் (தனி) - பொய்யாது (எ) அன்பின் பொய்யாமொழி,
  • நாமக்கல் - ஹரிகரசிவம்,
  • ஈரோடு - சிவகுமாரி,
  • திருப்பூர் - பாலகிருஷ்ணன்,
  • கடலூர் - ஆரோக்கியதாஸ்,
  • தஞ்சாவூர் - டாக்டர் சரவணன்.

பின் நடந்தக் கூட்டத்தில், விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி) தொகுதி வேட்பாளர்களை மாநில பொதுச் செயலர் விஜயன் அறிமுகம் செய்து வைத்து பேசுகையில், 'புதுச்சேரி உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வரும் 15ம் தேதி வெளியிடப்படும்' என்றார்.

ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் 5 பவுன் தங்கசங்கிலி பறிப்பு; பரங்கிப்பேட்டையை சேர்ந்த 3 பெண்கள் கைது

கூட்ட நெரிசலை பயன்படுத்தி பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் 5 பவுன் தங்கசங்கிலி பறிப்பு
பரங்கிப்பேட்டையை சேர்ந்த 3 பெண்கள் கைது

அருகே சத்தியவாடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மனைவி செல்வி (வயது 40). இவர் நேற்று விருத்தாசலத்தில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். பின்னர் மாலை சொந்த ஊருக்கு செல்ல விருத்தாசலம் கடைவீதியில் நின்று பஸ்சில் ஏறினார்.

பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவருக்கு பின்னால் நின்று பயணம் செய்த 3 பெண்கள் செல்வி கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கசங்கிலியை பறித்து அபேஸ் செய்ய முயன்றனர். உடனே சுதாரித்துக் கொண்ட செல்வி சத்தம் போட்டார். உறவினர்கள் மற்றும் பயணிகள் உதவியுடன் அந்த 3 பெண்களிடம் சோதனை நடத்தி அவர்களிடம் இருந்து தங்கசங்கிலியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் விருத்தாசலம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

சப்-இன்ஸ்பெக்டர் உஸ்மான், ஏட்டு குணசேகரன் ஆகியோர் அந்த பெண்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் பரங்கிப்பேட்டை அருகே மரியாங்குப்பத்தை சேர்ந்த சுந்தரம் மனைவி நிர்மலா (41), மணி மனைவி காமாட்சி (35), ராமச்சந்திரன் மனைவி பிரேமா (45) என்பதும், இவர்கள் அக்காள் - தங்கைகள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் வேறு எங்கேனும் இதுபோன்று கைவரிசை காட்டி உள்ளனரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Source : மாலை மலர்

விடுதலைப்புலிகள் ஊடுருவலா? பரங்கிப்பேட்டை, கடலூர் கடற்கரை கிராமங்களில் கியூ பிராஞ்ச் போலீஸ் சோதனை

தமிழகத்தில் அகதிகள் பெயரில் விடுதலைப்புலிகள் ஊடுருவ இருப்பதாக மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் தமிழகத்தில் கடலோரத்தில் உள்ள 13 மாவட்டங்களில் தீவிர சோதனை நடத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து இந்த மாவட்டங்களில் கடலோர காவல் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கடலோர சோதனை சாவடிகளான வல்லம்படுகை, பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், ரெட்டிச்சாவடி, ஆலப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் கடலோர காவல் படை தீவிர சோதனை நடத்தி வருகிறது.

இது தவிர கடற்கரையோர கிராமங்களில் கியூ பிராஞ்ச் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் மாவட்ட கடற்கரை கிராமங்களான தேவனாம்பட்டினம், சிங்காரதோப்பு, அக்கரை கோரி, ராசாப்பேட்டை, சித்திரைப்பேட்டை, பரங்கிப்பேட்டை, கிள்ளை, எம்.ஜி.ஆர். திட்டு, முழுக்கு துறை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, தைக்கால் தோணித்துறை ஆகிய இடங்களில் இந்த சோதனை நடந்தது.

மேலும் விருத்தாசலம் குள்ளஞ்சாவடி, அம்பலவாணன் பேட்டை, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார் கோவில் ஆகிய இடங்களில் உள்ள அகதிகள் முகாம்களிலும் கியூ பிராஞ்ச் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Source : மாலை மலர்

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...